Monday, 27 April 2020

மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து பெற்ற தகவல் ...

"முக்கிய தகவல் "

மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து பெற்ற தகவல் ...

 தினமும்::
  1. Vit C-1000 mg எடுத்துக் கொள்ளுங்கள்
  2. வைட்டமின் ஈ
  3. 10:00 - 11:00 சூரிய ஒளி 15-20 நிமிடங்கள் அல்லது வைட்டமின் டி 3
  4. முட்டை ஒன்று
  5. தூக்கம் -7-8 மணி நேரம்
  6. தினமும் 1.5 lit சூடான நீரை குடிக்கவும்
  7. ஒவ்வொரு உணவுப்பொருளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக இருக்க கூடாது ).

 ☆☆☆ அதைத்தான் நாங்கள் மருத்துவமனையில் செய்கிறோம்.

  கொரோனா வைரஸின் PH அளவு 5.5 முதல் 8.5 வரை மாறுபடும்.

 வைரஸைத் தோற்கடிக்க நாம் செய்ய வேண்டியது எவை என்றால், வைரஸின் PH அளவை விட அதிகமான காரத்தன்மை (Alkaline) உள்ள உணவுகளை உட்கொள்வதுதான்.

   அவற்றில் சில:
  * எலுமிச்சை - 9.9 பி.எச்
  * சுண்ணாம்பு - 8.2 பி.எச்
  * வெண்ணெய் - 15.6 பி.எச்
  * பூண்டு - 13.2 pH *
  * மா - 8.7 பி.எச்
  * டேன்ஜரின் - 8.5 பி.எச்
  * அன்னாசிப்பழம் - 12.7 பி.எச்
  * டேன்டேலியன் - 22.7 பி.எச்
  * ஆரஞ்சு - 9.2 பி.எச்

 Corona உங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது எப்படி அறிய முடியும்?

  1. தொண்டையில் அரிப்பு
  2. உலர் தொண்டை
  3. உலர் இருமல்
  4. அதிக வெப்பநிலை
  5. மூச்சுத் திணறல்
  6. வாசனை மற்றும் சுவை இழப்பு

 ♡♡ எனவே இந்த அறிகுறிகளில் கவனம் செலுத்துங்கள், எலுமிச்சை மற்றும் பானத்துடன் வெதுவெதுப்பான நீரை விரைவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
----------------------/-/--------------
  இந்த தகவலை உங்களிடம் வைத்திருக்க வேண்டாம்.  உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.  பாதுகாப்பாக இருக்கவும்.


Best regards,

Saturday, 25 April 2020

ஒரு சளியின் சபதம்!

ஒரு சளியின் சபதம்!

அய்யா என் பேரு சளிங்க...இது என் புள்ள இருமல்ங்க... அது என் பொண்ணு பேரு காய்ச்சல்ங்க......டாக்டரை  பார்க்கணும்...

எது? அறிவிருக்கா ஒனக்கு... இது எங்களை மாதிரி பணக்கார வியாதிங்க வந்து போற ஏரியா.. இங்கெல்லாம் ஒன்னை உள்ற விட மாட்டாங்க... போ போ.....

இல்லீங்க ரொம்ப நாளா என் மனசுல ஒரு ஆசைங்க.. இந்த மாதிரி பெரிய பெரிய ஆசுபத்திரில வைத்தியம் பார்த்துக்கணும்... டாக்டருங்க மூஞ்சில துணி கட்டிட்டு எனக்கு ஆபரேஷன் பண்ணணனும் ... ஒங்களை மாதிரி பெரிய வியாதிங்களுக்கு வர்ற ஆம்புலன்ஸல ராஜ மரியாதையோட வந்து அட்மிட் ஆகணும்!

ஹே ஹே.... அடேய் கேன்சரு ... இந்த கூத்தை பார்த்தியா?

என்னடா ஹார்ட் அட்டாக்?

அந்த பசங்க பிளட் பிரஷரையும் சர்க்கரை வியாதியையும் கூப்பிடு....

இதோ வந்துட்டோம்.... என்னடா ஹார்ட் அட்டாக்கு?

இவரு பேரு சளியாம்...இவரை பார்த்து எல்லோரும் அலர்றணுமாம்... ஏய்....நாங்கள்லாம் டெர்ரர் பாய்ஸ்... அடேய்....சளி  ...
ஒன்னால எங்களை மாதிரி ஒரு உயிரை எடுக்க முடியுமா? ... ஓடிடு... அந்தா மெடிக்கல்ஷாப்ல ஒரு சூரணம் விப்பான் வாங்கி குடிச்சிட்டு செத்துடு ....

ஹே ஹே ஹே ஹே .....

ஹூம்.... பெரிய வியாதிங்கற ஆணவத்துல ஆடாதீங்க.. இதோ என்புள்ளைங்க இருமல் காய்ச்சல் மேல சத்தியம்...இந்த நாளை குறிச்சி வச்சிக்கங்க... நானும் பெரிய ஆளாகி ஒலகமே அஞ்ச ஆம்புலன்ஸ்ல வருவேன்... ஒரு லட்சம் பேரை போட்டு தள்வேன்...அப்ப ஹார்ட் அட்டாக் கேன்சர் பிபி டயாபடீஸ் ஒங்களைலாம் வாசல்லயே நிக்க வைக்கல? ....பணக்கார வியாதின்னு எடப்பாடி வாயாலயே சொல்ல வைப்பேண்டா.....!

சளி அம்மா நீ பாட்டுக்கு சபதம் போட்டுட்டு வந்துட்டே? நாம எப்படி மா பெரியாளாக முடியும்?

முடியும் பிள்ளைங்களா... நாம ஒடனே சீனாவுக்கு போறோம்... அவனுங்கதான் பாம்பு பல்லி தேளு நட்டுவாக்கிளி பூரான்லாம் திம்பானுங்க அதுல நாம போய் குடியேர்றோம்... ஒலகத்தையே கால்ல விழ வைக்கிறோம்.....

ஹலோ நாங்க ஹார்ட் அட்டாக்,பி பி, கேன்சர் பேசறோம்யா...அர்ஜண்ட்யா ஒரு ஆம்புலன்ஸ் அனுப்புங்கய்யா.... எந்த ஆஸ்பத்திரிக்கு போனாலும் கேட்டோட நிறுத்திடறானுங்க...எங்களை உள்ள விட மாட்றானுங்க!

அந்தோ மூலைல மருந்து கடைல நாட்டு மருந்து வாங்கி தின்னுட்டு நேரா போய் சுடுகாட்ல படுத்துக்கங்க...

யாருங்க பேசறது?

ஹாஹாஹா! நான்தான் கொரோனா பேசறேன்... ஞாபகம் இருக்கா? எனக்கு இன்னொரு பேரு இருக்கு....அதான் சளி.....சபதம் போட்டேனே? இப்ப எனக்கு மட்டும்தான் ஒலகம் பூரா ராஜ மரியாதை.... வேற எந்த வியாதி பயலுக்கும்  எங்கேயும் எடமில்லை... என்ன ஆட்டம் போட்டீங்க? நீங்கள்லாம் வியாதி வந்தவனைத்தானே போடுவீங்க? நான் வியாதிக்கு வைத்தியம் பார்க்கற டாக்டரையே போட்டு தள்வேன்....ஒங்களுக்கெல்லாம் டாக்டருங்க மட்டும்தான் முகமூடி போட்டு வைத்தியம் பார்த்தாங்க... எனக்கு பயந்து ஒலகமே மூடிட்டு திரியறானுங்க... இப்ப தெரியுதா? யாரு டெர்ரரனு? யாரையுமே கொறைச்சலா எடை போடாதீங்கடா? வர்ட்டா?

அதனால எல்லோரும் வீட்டிலேயே இருங்க.

பாதுகாப்பு தான் முக்கியம்.வெளியில வராதீங்க.

சுபம்!.     அன்புடன்


Best regards,

"அரசமுத்திரை"

அரண்மனை அந்தப்புரம்.  அரசி, இளவரசி, சேடியர் தவிர வேறுயாரும் உள்ளே செல்ல முடியாது.  அவ்வளவு பாதுகாப்பு.   வேறுயாரேனும் உள்ளே தெரிந்தால் உடனடியாகத் தூக்கில் போட்டுவிடுவார்கள். அவ்வளவு கடுமையான தண்டனை.  இராமநாதபுர சமஸ்தானத்தின் இளவரசி பருவமடைந்து அந்தப்புரத்தில் இருந்தாள். மறவர் குல மாணிக்கம் அவள்.   அழகு என்றால் அழகு அவ்வளவு அழகு. பார்த்தோரைப் பரவசப்படுத்தும் அழகு.  மக்களுக்கு மகாலெட்சுமி போல் காட்சியளிப்பாள்.

இதனால், சமஸ்தான மன்னர்களுக்குள் கடும் போட்டாபோட்டி.  அவளை மணந்து கொண்டால்,  இராமநாதபுர சமஸ்தானத்திற்கு மன்னனாகி விடலாம், வீரமிக்க மறவர்
குலத்திற்குச் சொந்தமாகிவிடலாம். ஆளுக்கு ஆளும் ஆச்சு, பேருக்குப் பேரும் ஆச்சு, ஊருக்கு ஊரும் ஆச்சு.
அதனால் "நான் நீ" என்று போட்டி போட்டுக் கொண்டு, பெண் கேட்டுத் தூது
அனுப்பிக் கொண்டிருந்தனர்.  அரசனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி.  நல்லவனாக,
வல்லவனாக ஒருவனைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்
என்று எண்ணியிருந்தான்.  பெண்கேட்டுப் போட்டாபோட்டி போட்டதால்,
அரசனுக்குக் கொஞ்சம் பெருமையும் கூடியது.
தன் பெண்ணை எண்ணிப் பூரிப்படைந்திருந்தான். ஆனால், விதி வேறுவகையாக வேலை செய்தது!  ஒருநாள் மாலை, அமைச்சர்களுடன் ஆலோசனையில் இருந்த அரசனுக்கு, அவசரமாக அந்தப்புரத்தில் இருந்து அழைப்பு வந்தது!
என்ன அவசரம் என்று எவருக்கும் தெரியவில்லை.  அரசனும்  அவசர அரசாங்க
ஆலோசனைகளை நிறுத்திவைத்துவிட்டு அந்தப் புரத்திற்கு விரைந்து சென்றான்.
அங்கே அதிர்ச்சி காத்திருந்தது!
இளவரசியின் கழுத்தில் இருந்த "அரசமுத்திரை"மாலையைக் காணவில்லை.  எங்கு தேடியும் கிடைக்கவில்லை,  அந்த மாலை யார் கழுத்தில் உள்ளதோ அவர்களே
அந்நாட்டின் இளவல் ஆவர்,  அந்த மாலையைக் கையில் வைத்திருப்போரே இளவரசியை
மணந்து கொள்ளும் அதிகாரம் பெற்றவர் ஆகிவிடுவர்.
கழுத்தில் இருந்த மாலை காணாமல் போனது எப்படி? காணாமல் போனதைக் கண்டுபிடிப்பது எப்படி?
மன்னனுக்கு மகளைப் பற்றி ஒரே கவலை. நல்லவனாக வல்லவனாக அமைந்தால், மகளைக் கட்டிக் கொடுப்பதற்குத் தயாராய் இருந்தார்.  ஆனால், இப்போது நிலைமை வேறு,
மாலையை எவன் எடுத்திருந்தாலும், எதுவும் செய்ய முடியாது!  பேசாமல்
கொள்ளாமல் மாலையை வைத்திருப்பவனுக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட
வேண்டியதுதான்.  வேறு என்ன செய்யமுடியும்!
யார்கையிலாவது கிடைத்து ஏதாவது ஏடாகூடமாக நடந்து விட்டால் என்ன செய்வது!
அந்தப்புரத்திற்குள் நுழைந்த அந்தக் கலவாணி யார்?   ஆயிரத்தெட்டு விசாரணைகள்.   இளவரசிக்குப் பதில் சொல்வதே ஒருபெரும் தொல்லையாய் போய்விட்டது!
"யாரிடமும் நான் மாலையைக் கொடுக்கவும் இல்லை.  யாரும் மாலையை எடுக்கவும்
இல்லை" என்று எத்தனையோ சத்தியம் செய்தாள். இது சத்தியம் சத்தியம் என்று!,
ஆளே புகமுடியாத அந்தப்புரத்தில் அரசமுத்திரை பதித்த நகையைக் காணோம்.
மக்களிடம் மரியாதை குறைவதை உணர ஆரம்பித்தான் அரசன்,  என்ன செய்வதென்று எப்போதும் ஒரே நினைப்பு!.  நாடுபோனாலும் போகட்டும், நகரம் போனாலும் போகட்டும்,  மானம் போய் விடக் கூடாதே!
எத்தனைபேர் பெண் கேட்டுத் தூதுஅனுப்பியுள்ளனர்.  அத்தனைபேர் முகத்திலும்
எப்படி இனி நான் முழிப்பேன்.  இரவு முழுவதும் இதை மட்டுமே எண்ணியிருந்தான்.  எண்ணி எண்ணி உருக்குலைந்திருந்தான்.
எப்போதும் சரியாய் ஓடுவது காலம் மட்டுமே!
விடியற்காலம் வந்துது! அவையைக் கூட்டி ஆலோசனை கேட்டான் அரசன்.
ஆளாளுக்கு ஆள், ஆயிரத்தெட்டு யோசனை சொன்னார்கள்.  ஒன்று கூட உறுப்படியாய் இல்லை. என்ன செய்வது? யாருக்கும் எதுவுமே தெரியவில்லை யாருக்கும்!. அரசன், யோசனைகள் ஒவ்வொன்றையும், ஒவ்வொன்றாகச் செய்து பார்க்க முடிவுசெய்தான் .
அரண்மனை அந்தப் புரத்தில் இருந்த அனைவரையும் ஆயிரத்தெட்டு கேள்விகள்
கேட்டு துளைத்தெடுத்தனர் அரசு அதிகாரிகள்.  யாருக்கும் எதுவும் தெரியவில்லை.
முத்திரைமாலை போன இடத்தை அறியமுடியவில்லை.  அதிகாரிகள் விசாரணை விபரங்களை
மன்னனிடம் கூறினர்.
அரசனுக்குத் தாளமுடியாத வருத்தம்.  மானம் போகிறதே என்று கண் கலங்கினான்.
என்ன செய்வது?
முத்திரை மாலை கிடைக்கும்வரை அத்தனை பேரையும் அரண்மனையிலேயே அடைத்து
வையுங்கள்! என்று உத்தரவு போட்டான்.
அரண்மனையிலிருந்து யாரும் உள்ளே செல்ல முடியவில்லை.  உள்ளே யிருந்த
யாரும் வெளியே வரமுடிய வில்லை. எல்லா இடமும் தேடியாச்சு. அத்தனைபேர்
தேடியும் அதுமட்டும் அகப்படவே இல்லை. என்ன செய்வது?  அரண்மனையே ஸ்தம்பித்து இருந்தது.
எனவே என்ன ஆலோசனை என்றாலும் ஏற்கத் தயாராக இருந்தான் அரசன்.  ஆலோசனை மேல் ஆலோசனை.  அதில் ஒன்றுதான் குறிகேட்பது. குறிசொல்வோர் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்து வரச் செய்தான் அரசன்.
குறிசொல்வோர் சொன்ன குறியெல்லாம் கூறுவாறு இல்லாமல் இருந்தன.   யார் எது
சொன்னாலும் சரி,  அரசுமுத்திரைமாலை கிடைக்காமல் யாரையும் வெளியே விடுவாத
இல்லை.  தவாறகக் குறி சொன்னவர்களையும் சிறையில் அடைத்தான் அரசன். ஒருவர் இருவர்
அல்ல,  ஒருஊருக்கு இரண்டு மூன்று என்று குறிசொல்பவர்கள் இருந்தனர்.
எத்தனை பேர் இருந்து என்ன செய்ய?  அரசமுத்திரை மாலை  இருக்கும்
இடத்தையும் சொல்ல முடியவில்லை!
அரசனது கோபத்துக்கு அஞ்சி,  நாட்டிலிருந்த குறிசொல்வோர் எல்லாம்
அண்டைநாடு அயலார்வீடு என ஓடி ஒலிந்து கொண்டனர்.  குறிசொல்வோரில் ஒருவன் மட்டுமே துணிந்து அரசன் முன் சென்று நின்றான்.  "என்ன? சொல்!" என்றான் மன்னன்.
"எனக்குச் சரியாகச் குறி சொல்லத் தெரியாது! ஆனால் சரியாகக் குறிசொல்பவனைத் தெரியும்" என்றான்.  அவன் ஒருவனை அழைத்து வந்தால், தேடும் பொருள் கிடைத்துவிடும்" என்றான்,
குறிசொல்பவன் சொன்ன சொல் மன்னனின் கதில் வீழ்ந்தது. நீ சொல்வதுபோல் நடந்து விட்டால், உங்கள் அனைவரையும் விடுதலை செய்து விடுகிறேன் என்று மன்னன் வாக்களித்தான்.  மந்திரியை அழைத்தான், "இவன் யாரைச் சொல்கிறானோ அவனை இங்கே அழைத்து வாருங்கள்" இது நமது ஆணை என்றான் மன்னன், யார் அந்த குறி சொல்பவன்?
அவன்தான், "மாரநாடு கோடாங்கி". "அவன் கோடாங்கி எடுத்து அடித்தால், கருப்பணசாமி வரும்.  மாரநாடு கருப்பணசாமி வந்து சொல்லும்" என்றனர் அறிந்தவர் அனைவரும்.
            அரசு அதிகாரிகள் விரைந்தனர், மாரநாடு கிராமத்திற்கு. இராமநாதபுரத்திலிருந்து, பரமக்குடி, மானாமதுரை, திருப்பாச்சேத்தி வந்து மாரநாடு கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.  ஊரின் உள்ளே நுழையும் முன்பு, முகப்பு வாயிலிலேயே, கண்மாய்க்கரை ஓரமாகக் கருப்பணசாமி கோயில் இருந்தது. கோயில் உள்ளே சென்று கருப்பணசாமியைக் கும்பிட்டனர்.  வழிபாடு முடிந்ததும், கோயில் பூசரியிடம், "கோடாங்கியைப் பார்க்க வந்திருக்கிறோம்"  என்றனர்.
இப்படி மண்டபத்தில் உட்காருங்கள் என்று சொல்லி பிராசாதத் தட்டை கோயில்
கருவறையில் வைத்து விட்டு அங்கே வந்து பூசாரியும் சேர்ந்து உட்கார்ந்து
கொண்டார்.  சொல்லுங்கள், நான்தான் அந்தக் கோடாங்கி, உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்  என்று கேட்டார் கோடாங்கி.  வந்தர்களுக்கு ஒரே ஆச்சரியம்.  ஆஜாகுபான உடம்பைத் தேடிவந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.  ஒல்லிப்பச்சா மாதிரியான ஒருவன் வந்து நான்தான் கோடாங்கி என்று கூறுகிறானே, கோடாங்கி, நாங்கள் வந்த நோக்கம், என்ன என்றால், "நீங்கள் இராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து குறி சொல்ல வேண்டும்", இது அரச உத்தவரவு என்றனர்.
"நான் குறி சொல்வது இல்லை, இந்தக் கருப்பணசாமிதான் வந்து குறி
சொல்லுவான்,  உங்களுக்கு யார் வேண்டும்?" என்று கேட்டார் ​கோடாங்கி. எங்களுக்குக் குறி சொல்ல வேண்டும்,  கருப்பணசாமிதான் குறிசொல்லும் என்றால், சாமியைத்தான் அழைத்துச் செல்ல வேண்டும் என்றனர்,
கருப்பணசாமி வருவது என்றால், சும்மாவா? ஒட்டு மச்சம்கூட இல்லாத வெள்ளைக்குதிரையில்தான் கருப்பணசாமி வருவார். முடிந்தால் அந்தமாதிரிக்குதிரையுடன் வாருங்கள்.  அல்லது வரும் மாசிமாதம் மகாசிவராத்தி அன்றுதான் திருவிழாபற்றிப் பேசி முடிவு செய்வார்கள். பங்குனிமாதம் திருவிழா நடைபெறும், சாமிபுறப்பாடு இருக்கும், அப்போது
வந்து குறிகேளுங்கள் என்று கூறிமுடித்தார். கோடாங்கி சொன்ன சொற்கள், சொல்மாறாமல் இராமநாதபுர மன்னனிடம் கூறப்பட்டன.
மானம் போகிற பிரச்சனை ஆயிற்றே.  எனவே உடனடியாகக் கோடாங்கி கூறியது போல்
குதிரை ஒன்றை அனுப்பி வைத்து அழைத்து வாருங்கள் என்று சொன்னான், அனைவரும் தயங்கி நின்றனர். மன்னனுக்குக் கோபமான கோபம் வந்தது! "ஏன் நிற்கின்றீர்கள் என எரிந்து விழுந்தான்" மன்னன்.
மந்திரி கூறிய காரணம் கேட்டு அதிர்ச்சி அடைந்தான் மன்னன்,
மன்னனுக்குப் பேச்சு மூச்செல்லாம் அப்படியே நின்று போனது.  மாரநாடு கோடாங்கி மட்டும் "ஒருமச்சம்கூட இல்லாத வெள்ளைக்குதிரை வேண்டும்" என்று என்றான்! கோடாங்கி சொன்ன சொற்கள், சொல்மாறாமல் மன்னனிடம் கூறப்பட்டன.  உடனடியாகக் கோடாங்கி கூறியது போல் குதிரை ஒன்றை அனுப்பி வைத்து அழைத்து வாருங்கள் என்றான் மன்னன்,  அனைவரும் தயங்கி நின்றனர். மன்னனுக்குக் கோபமான கோபம் வந்தது!  எரிந்து விழுந்தான்!
மந்திரி மன்னனிடம் சொன்னான்.  "மன்னா!  கோடாங்கி சொல்லியபடி, ஒட்டுமச்சம்கூட இல்லாமல் வெள்ளைவேளேர் குதிரை ஒன்றே ஒன்றுதான் உள்ளது,  அதுதான் ஒரே யோசனை" என்றான்.
ஒன்று இருக்கிறதல்லவா?  அந்தக் குதிரையைக் கூட்டிச் செல்வதற்கு ஏன்
இத்தனை தயக்கம்? என்று மன்னன் கேட்டான், அது பட்டத்துக் குதிரை மன்னா!  பட்டத்துக் குதிரையில் யார் ஏறி வருகிறாரோ அவரே அந் நாட்டின் மன்னன் ஆவான், பட்டத்துக் குதிரையில் கோடாங்கி ஏறியவுடன், ("ஒருநாள் முதல்வன் ரேஞ்சில்") ஏடாகூடமாக ஏதாவது செய்தால், என்ன செய்வது? ஒரே நாளில் ஓராயிரம் கட்டளைகளைப் பிறப்பித்தால் என்ன செய்வது? பட்டத்துக் குதிரையைத் தவிர்த்து, மற்றொரு குதிரைக்கு எங்கே போவது! மற்றொரு குதிரை வாங்கிவரும் வரை இன்னும் எத்தனை நாள் காத்திருப்பது! இருக்கும் மானத்தைக் காத்தாக வேண்டுமே!  என்ன விலையும் கொடுக்கத் தயாராய் இருந்தான் மன்னன், மன்னனுக்குப் பட்டத்துக்குதிரையை அனுப்பிவைப்பதைத்  தவிர வேறு வழியும் தெரியவில்லை,
இன்னொரு முக்கியமான தகவல் என்று மந்திரி மன்னனின் காதருகே சென்று சொன்னான், "மாரநாடு கோடாங்கி ஒரு தாழ்த்தப்பட்டவன்" என்று. "என்மக்கள் அனைவரும் எனக்குச் சமமே"! "குலத்தாழ்ச்சி உயர்ச்சி ​சொல்லல்
பாவம்" என்றான்,
மன்னன் பட்டத்துக் குதிரையை மாரநாட்டிற்கு அனுப்பி வைத்தான்,
மாரநாடு கருப்பணசாமி கோயில் பூசாரியான கோடாங்கி, வந்திருந்த பட்டத்துக்
குதிரைக்கு மாலை அணிவித்தான், மரியாதை செய்தான். உடுக்கையையும் விபூதிப்
பையையும் எடுத்துக் கொண்டான், கோயிலை வலம் வந்தான், கருப்பணசாமியை
வணங்கினான்,
அனைவரும் இராமநாதபுரம் நோக்கிப் புறப்பட்டனர், ஆனால் கோடாங்கி குதிரையில் ஏறவில்லை!  கேட்டபடி குதிரைதான் வந்துவிட்டதே கோடாங்கி ஏன் குதிரையில் ஏறவில்லை?
ஏன்? ஏன்? ஏன்?
மந்திரி, கோடாங்கியிடம் ​சென்று, "குதிரையில் ஏறவில்லையே"? என்று ​கேட்டான்! பட்டத்துக்குதிரையில் கருப்பணசாமிதான் ஏறி வரும்.  நான் சாமிகூட ஓடியே வந்துவிடுவேன் என்றான் ​கோடாங்கி.  மற்றொரு குதிரையை ஏற்பாடு ​செய்கிறேன்,  அதில் ஏறி வாருங்கள் என்றான் மந்திரி,  கோடாங்கி மறுத்துவிட்டான்.  சாமி பாதத்துக்கு ​மேலே நான்
இருக்கக்கூடாது.  எனவே நான் இப்படியே சாமிகூட ஓடியே வந்துவிடுவேன் என்றான், மந்திரிக்கு, பட்டத்துக்குதிரையில் ஒரு மனிதன் ஏறிவராமல் ஒரு ​தெய்வம் ஏறிவருவது பெருமையாய் இருந்தது.   தான் நினைத்தபடி ஏதுவும் ஏடாகூடமாக
நடக்க வாய்ப்பு இல்லை என்பதையும் எண்ணி மனநிறைவடைந்தான் ​மந்திரி, பட்டத்துக்குதிரை,  கோடாங்கி ​போட்டுவிட்ட மாலையுடன் முன்னே ​சென்றது.
அதனுடன் ​"ஒல்லிப்பச்சா" கோடாங்கியும் ஒன்றாக ஓடத் துவங்கினான்.
மந்திரியும் மற்றோரும் அவரவர் குதிரையில் ஏறிப் புறப்பட்டனர்.  மாரநாடு
ஊரே ஒன்றாக இணைந்து ஓடத் துவங்கியது.
வழி​நெடுக, அலையலையாய் மக்கள் கூட்டம், வழியெல்லாம் தண்ணீர் தெளித்து,  பாதைஎங்கும் மாக்கோலம் ​போட்டுத் தோரணம் கட்டி, ​கொம்பு ஊதி வரவேற்பு ​செய்தனர் மக்கள். தெய்வத்திற்கும் அரசனுக்கும் ​செய்யும் மரியாதை அத்தனையும் செய்து,
பட்டத்துக்குதிரையுன் ஓடிவரும் ​கோடாங்கியுடன் ஒன்றாய் ​சேர்ந்து
ஓடிவரத் துவங்கினர் மக்கள்.
மாரநாட்டிலிருந்து கிளம்பி, திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி வழியாக இராமநாதபுரம் அரண்மனை வந்தது சேர்ந்தது  பட்டத்துக் குதிரை. குதிரையின் பின் நாடே ஒன்று திரண்டு ஓடி வந்து சேர்ந்தது.
ஏறத்தாழ எழுபதுகல் தூரம், மாரநாடு கோயிலில் துவங்கிய ஓட்டம் இராமநாதபுரம்
அரண்மனை வாயிலில் வந்துதான் நின்றது, அரண்மனை வாயிலுக்கு வந்து வரவேற்றான் மன்னன், உள்ளே சென்ற கோடாங்கி மன்னனிடம், சாணம் கரைத்துத் ​தெளித்து அதில்
மாக்கோலம் ​போட்டு​வைக்க ​வேண்டும் என்று ​​கேட்டுக் ​கொண்டான்,
கோடாங்கி மாக்கோலத்தின் நடுவே உட்கார்ந்து ​கொண்டான்.  மன்னனும்
சிம்மாசனத்திலிருந்து கீழே இறங்கிக் ​கோடாங்கி எதிரே, அவனுக்குச் சமமாக
உட்கார்ந்து ​கொண்டான்,
உடுக்கையை எடுத்து அடித்து  கருப்பணசாமியை வரவழைத்தான் கோடாங்கி,
"என்னை எதுக்கு இங்கே அழைக்கிறாய்?  உனக்கு என்ன வேண்டும்? " என்று
மன்னனிடம் கேட்டது கருப்பணசாமி,
"சாமி, மன்னனான எனக்கு ஒரு மானப்பிரச்சனை, பிரச்சனைக்கு உரிய பொருள்
எங்கே இருக்கிறது என்று கண்டறிய முடியவில்லை"  அதனால் குறி சொல்ல
வேண்டும் என்றான் மன்னன்.
"மன்னன் கேட்டால், மறுக்கக்கூடாது!  உன்னைக் காத்து அருளுவோம்,  இரண்டு
குறிக்குமேல் கேட்கக் கூடாது!, கேள், சொல்கிறேன்" என்றது கருப்பணசாமி,
"வந்திருப்பது கருப்பணசாமிதான் என்று எப்படி இந்த மன்னனும் இங்குள்ள
மக்களும் நம்புவது?" என்று கேட்டான் மன்னன்,
முதற்குறி கேட்டுள்ளாய், "கருப்பணன் வந்த குதிரையில் மற்றொருவன்
ஏறக்கூடாது, எனவே நான் வந்த வெள்ளைக்குதிரை  நின்றபடியே இறந்திருக்கும்
பார்" என்றது கருப்பணசாமி,
எல்லோரும் ஒடிச் சென்று பார்த்தனர்.  மன்னன் முன்வந்து, நின்ற குதிரையைத்
தொட்டுப் பார்த்தான், அவ்வளவுதான் சடமாய் நின்ற குதிரை செத்துப் பிணமாய்
விழுந்தது,
மன்னனின் உள்ளம் பதைபதைத்தது! பட்டத்துக்குதிரை பரிதாபமாய் இறந்துகிடப்பது கண்டு மன்னன் உள்ளம் பதைபதைத்தது! இருப்பினும் கருப்பணசாமியே அரண்மனைக்கு வந்து குறி​சொல்லிக் கொண்டிருப்பதை நினைத்துப் ​பெருமை ​கொண்டான் மன்னன், ஓடோடி உள்ளே சென்றான்,  கருப்பணசாமியின் காலில் விழுந்து வணங்கினான், "சாமி என்பிழையைப் பொருத்தருள வேண்டும்,  குறிசொன்ன எல்லோரையும் போல் இங்கே குறிசொல்வது மனிதன் ஒருவன் கோடங்கியுடன் வந்து குறி ​சொல்வதாகத் தவறாக நினைத்துவிட்டேன். குறிசொல்வது மாரநாடு கருப்பணசாமி என்பதை அறியாமல் செய்த பிழையைப் பொருத்தருள வேண்டும்" என்று கருப்பணசாமியிடம் வேண்டிக் ​கொண்டான், "என்மகள் கழுத்தில் அணிந்திருந்த அரசமுத்திரைமாலையைக் காணவில்லை?", "கருப்பணசாமி தான் எங்களைக் காத்தருள வேண்டும்" என்றான் மன்னன்.
"இரண்டாவது குறி கேட்கிறாய்,  மன்னனே, காணாமல் போன அரசமுத்திரைமாலை,
அரண்மனை அந்தப்புரத்தில் அரசியார் குளிக்கும் அறையில் தண்ணீர் வெளியேறும்
தூம்பின் உள்ளே கிடக்கிறது, போய் எடுத்து வரச் ​சொல்" என்றது
கருப்பணசாமி,
மன்னனும் "எடுத்துவாருங்கள்" எனக் கட்டளை யிட்டான், அவ்வளவுதான்,  மன்னன் இட்ட கட்டளையை மக்கள் அனைவரும் ஏற்றுக் ​கொண்டனர், கோடாங்கியையும் மன்னனையும் தவிரக் கூடியிருந்தோர் அனைவரும் அரண்மனை
அந்தப்புரம் நோக்கி ஒடினர்.
மன்னன் மட்டும் கருப்பணசாமியின் அருகிலேயே நின்றான்,  கருப்பணசாமியின்
காலில் விழுந்து விபூதி பிராசதம் ​பெற்றுக் ​கொண்டான், ஓடிய மக்கள்கூட்டம் அரண்மனை அந்தப்புரம்  என்பதை எல்லாம் மறுத்து உள்ளே சென்று தேடிப்பார்த்தது. தூம்பாக்குழியைத் தோண்டியே எடுத்துவிட்டது,  உள்ளேகிடந்த அரசமுத்திரைமாலையை அப்படியே கையில் அள்ளி எடுத்துவந்தார் மந்திரி.
மந்திரி, மக்கள் என அனைவரும் கருப்பணசாமி காலில் கும்பிட்டுவிழுந்தனர்.
கோடாங்கி அவர்களைக் கும்பிட்டு விழாமல் தடுத்துவிட்டான். "மன்னனுக்குப் பிரசாதம் ​கொடுத்துவிட்டு கருப்பணசாமி மலையேறிப் போய்விட்டது,  என்காலில் நீங்கள் யாரும் விழுந்து கும்பிடிக்கூடாது" என்றான் ​கோடாங்கி.
மன்னனின் மானம் மட்டுமல்ல, நாட்டு மக்களின்மானமும் காக்கப்பட்டுள்ளது.  காத்தவன் அந்த மாரநாடு கருப்பணசாமி என்றான் ​​கோடாங்கி.
"எங்கள் மானத்தைக் காத்த, கருப்பணசாமிக்கு நாங்கள் எல்லாம் அடிமை" என்றனர் மன்னனும் மக்களும்.  தங்கக்காசுகள் உட்பட, தாம்பாலம் தாம்பலமாய் பரிசுப் ​பொருட்களைக்
கொண்டு வந்து மன்னன் ​கையில் ​கொடுத்தனர் அரண்மனை அலுவலர்கள், மன்னன், அவற்றை அப்படியே வாங்கிக் ​கோடாங்கி ​கையில் ​கொடுக்க முயன்றான்,  ஆனால், ​கோடாங்கி அவற்றைத் ​தொட்டுக்கூடப் பார்க்கவில்லை,  "மானம் காத்த கருப்பணசாமிக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யுங்கள்"  என்றான்.  "நான் உண்பது நாழி உடுப்பது இரண்டு" என்றான்.
அப்படியே செய்வதாக வாக்களித்தான் மன்னன்,
சிறை​வைக்கப்பட்டிருந்த அரண்மனை அந்தப்புறத்தில் பணியாற்றி​யோர் மற்றும்
குறி​சொன்ன அனைவரும் விடுவிக்கப்பட்டனர்,  அவரவர் ​செய்து வந்த ​தொழிலை
அப்படியே ​தொடர்ந்து ​செய்துவருமாறு மன்னன் ​ஆணையிட்டான், சமபந்தி ​போஜனத்திற்கு ஏற்பாடு ​செய்தான். மன்னனும், ​​கோடாங்கியும் மந்திரியும் மக்களும் ஒன்றாய் உட்கார்ந்து
உணவருந்தினர்.  ​கோடாங்கிக்கு ஒரு ​வேட்டியும் துண்டும் ​பரிசாகக் கொடுத்தான் மன்னன்,
இதுநடந்து இருநூற்றைம்பது முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இருந்தாலும், இன்றும் ஒருகுறையும் இல்லாமல், மரபு மாறாமல் ​செய்து வருகின்றனர் மன்னர் குடும்பத்தினர். பங்குனித் திருவிழாவில் கருப்பணசாமி புறப்பாடு ஆரம்பித்தவுடன், முதல் மரியாதையாகக் கருப்பணசாமிக்கு இராமநாதபுரஅரண்மனை மாலை
அணிவிக்கப்படுகிறது. அரண்மனை மாலையைத் தொடர்ந்து மக்கள்அனைவரும் சாமிக்கு மாலை அணிவித்து வணங்கி வழிபட்டு வாழ்க்கையில் உய்வடைகின்றனர்,
இரவு முழுவதும் கருப்பணசாமி ஆட்டம், மாலை என்றால் மாலை,  மலைபோல் குமிந்து விழும், அதை அப்படியே குவித்து வைத்திருப்பர்.
இரவு முடிந்து சூரியன் உதிப்பதற்கு முன் கருப்பணசாமி ஆடி குறிசொல்லி
முடித்துவிடும்.  விடிந்தால், சாமியும் இருக்காது.  மலைபோல் குவிந்த மாலையும் இருக்காது.
கருப்பணசாமி கோயிலுக்குள் சென்ற மறுவினாடியே அத்தனை மாலையையும் அவரவர் பிரசாதமாக எண்ணிப் பக்தர்கள் எடுத்துச் சென்று விடுவர்,
பங்குனி மாதம் வெள்ளிக்கிழமை இரவு மாரநாடு கருப்பணசாமி கோயிலில் திருவிழா, குறிகேட்க விளைவோர் எல்லாம் வந்து  சாமிக்கு மாலையணிவித்து மரியாதை செய்து வேண்டிய குறி கேட்டு உய்யலாம்.
இத்த உண்மைக் கதையைக் ​படித்தோரும், படித்ததைப் பிறருக்குச் சொன்னோரும், அதைக் ​கேட்டோரும் மாரநாடு கருப்பணசாமியின் திருவருளாள் இன்னல்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர். 🙏🙏🙏🐴🦄



Best regards,

Friday, 24 April 2020

இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அடங்கி விடும். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த ஊரடங்கு.

இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அடங்கி விடும். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த ஊரடங்கு.

1. மக்களே  நீங்கள் நிச்சயம் வேலைக்கு செல்ல வேண்டும் குடும்பத்துக்காக வருமானம் ஈட்ட வேண்டும். இன்று முதல் ஒரு வருடத்திற்கு சிக்கனமாக இருக்கவும் தேவையற்றவைகளுக்கு செலவு செய்ய வேண்டாம்.

2. கூடிய வரையில் சிறு வியாபாரிகள் கடையில் பொருள்களை வாங்குங்கள். மால் மற்றும் சூப்பர்மார்கெட்களை தவிர்த்து விடுங்கள்.

3. Amazon /flip cart போன்ற online நிறுவனங்கள் செய்தித்தாள்களில் 5 அல்லது 6 பக்கங்களை ஆக்கிரமித்து விளம்பரம் கொடுத்தார்கள் வியாபாரத்தை பெருக்கினார்கள் ஊரடங்கு சமயத்தில் எல்லாம் காணாமல் போனார்கள் ஒரு வருடத்திற்கு நாம் அவர்களைத் தவிர்த்தால் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.

4. நகைக் கடைகளை புறக்கணியுங்கள் இன்று சவரன் 5000 ரூபாய்களைத் தொட்டு உள்ளது. ஒரு கிராம் வாங்க வேண்டும் என்றால். நீங்கள் புற்றீசல் போல நகைக் கடைகளை ஆக்கிரமித்தால் லாபம் நகை கடைக்காரர்களுக்கே. இந்த 2 மாத நஷ்டக் கணக்கை உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் ஜாக்கிரதை. ஒரு வருடத்திற்கு நீங்கள் நகைகள் வாங்கவில்லை என்றால் ஊரில் பாதி நகைக்கடைகள் காணாமல் போய் விடும்.

5. திரை அரங்குகளை புறக்கணியுங்கள். எந்த ஹீரோவும் நமக்கு ஒரு சிறு நன்மை கூடச் செய்யவில்லை. இந்த ஊரடங்கு முடிந்த  நேரத்தில். மனைவியின் தாலியை அறுத்து ஹீரோவின் 70 அடி cut out வைக்க வேண்டாம். அதற்குப் பால் ஊற்றவும் வேண்டாம். ஏன் என்றால் அந்தத் தகுதி அவர்களுக்கு இல்லை. 2000 ரூபாய் கொடுத்து பிடித்த நாயகன் படத்தை முதல் ஷோ பார்ப்பதினால் உங்கள் குடும்பங்களில் மங்களம் பெறப் போவதில்லை. ஒரு மூன்று மாதங்கள் பொறுங்கள் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்த சில நாட்களே ஆன படம் என்று தொலைக்காட்சிகளில் நீங்கள் காணலாம். 

6. பெரும் குடிமகன்களுக்கு ஒரு வார்த்தை 2 மாதம் rehabilitation center செல்லாமல் குடியை நிறுத்திய இந்த ஊரடங்கிற்கு நன்றி சொல்லுங்கள். படிப்படியாக குடியை நிறுத்தி உங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்.

7. வாகனம் மற்றும் கார் வாங்குவதை அறவே தவிர்த்து விடுங்கள். ஏன் அரசாங்கம்  விதித்த BS 4 வாகனங்கள் நிறைய உள்ளன. அதை விற்பதற்கு வாகன உற்பத்தியாளர்கள் நீதிமன்றம் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ discount என்கிற பெயரில் RTO ஆபீஸ் மூலமாக உங்கள் தலையில் கட்டி விடுவார்கள் ஜாக்கிரதை. அவர்களைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில் zero inventory Management என்கிற கொள்கையில் BS 4 வாகனங்களை கழித்துக் கட்டி விடுவார்கள் நீங்கள் ஏமாற வேண்டாம்.

8. 35000 ரூபாய் பெறுமான AC இன்று 10000 ரூபாய்க்கு விற்பனை என்று கூவிக் கூவி விற்பார்கள். இதனால் நஷ்டம் நமக்கே. ஏன் என்றால் Quality Compromise strategy will be adopted. அதே போல சீனாவில் இருந்து வரும் மொபைல் போன்றவைகளை online shop மூலமாக ஏகப்பட்ட discount கொடுத்து உங்கள் கைகளை அரிப்பு எடுக்கச் செய்வார்கள் ஜாக்கிரதை. ஒரு வருடம் மொபைல் வாங்கவில்லை என்றால் நமது குடி முழுகிப் போயிடாது.

9. மக்களே வாழ்விற்கு இது தேவை என்கிற நிலை வந்தால் மட்டுமே அந்தப் பொருள்களை வாங்குங்கள். அகலக்கால் அல்லது ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நிரந்தர கடன்காரனாக அல்லது குடிகாரனாக மாறி விடாதீர்கள்.

10. கடன் அட்டை (Credit Card ) உபயோகத்தை கூடிய அளவு தவிர்த்து விடுங்கள். வரவு எட்டணா செலவு பத்தணா என்கிற பாடல்களை நினைவு கொள்ளுங்கள்.

11.குழந்தைகளே தயவு செய்து உங்கள் பெற்றோர்களை வருத்தாதீர்கள். என் friend I Phone 12 லேட்டஸ்ட் மாடல் வைத்து இருக்கிறான் அதே போல எனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். விரலுக்கு தகுந்த வீக்கம் வேண்டும்.

இன்னும் ஒரு ஆண்டு நமக்கு சோதனையான காலம். அதைக் கடந்து விட்டால் இன்று புறநகரில் 70 லட்சம் விற்கும் வீடு 50 லட்சத்திற்கு வந்து விடும் பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஒரு வருட பொறுமை உங்களை 20 லட்சம் வரை சேமிப்பிற்கு வழி வகுத்து இருக்கிறது. அதே போல தங்கம் விலையும் நீங்கள் ஒரு வருடம் வாங்க வில்லை என்றால் அடுத்த வருடம் பாதி விலையில் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தயவு செய்து காத்திருக்கவும்.

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே என்கிற எம்ஜிஆர் ன் பாடல் வரிகள்  இன்னும் வருடத்திற்கு நமக்குத் தேவை என்பதை மறந்து விடாதீர்கள்.

சிக்கனமும் சேமிப்பும் நமக்கு சோறு போடும். ஊதாரித்தனம் நமது வம்சத்தை அழித்து விடும் ஜாக்கிரதை.

கலியுகத்தின் கொடுமைகளை இன்னும் ஒரு வருடம் நாம் கண் முன்னே காணப் போகிறோம் ஜாக்கிரதை. விலை உயர்ந்த நகைகளையோ அல்லது வேறு ஏதாவதோ போட்டுக் கொண்டு சாலையில் செல்ல வேண்டாம். ஏன் என்றால் பஞ்சத்தின் கொடுமை நமது நாட்டில் உள்ள சட்டத்தை திருடர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு திருட்டுச் செயலில் அல்லது அதை விட கொடுமையான செயல்களில் ஈடுபடுவார்கள். ஒரு ரூபாய்க்காக கொலை செய்யும் கயவர்கள் உண்டு இந்த நாட்டிலே.

மக்கள் விழிப்புணர்வு பாதையில் என்றும் என்றென்றும்...

நாளைய தீர்ப்பு களம்...


Best regards,

இராஜா மேல் நிலைப் பள்ளி, இராமநாதபுரம்

இராமநாதபுரம், இராஜா மேல் நிலைப் பள்ளியில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் மேற்கண்ட இணைப்பை பயன்படுத்தி தகவல்களை வழங்கி சேர்க்கையினை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  கல்விக்கட்டணம் கிடையாது.  சீருடைகள் இலவசமாக வழங்கப்படும். முற்றிலும் இலவசமாக கல்வி போதிக்கின்றோம்.
தொடர்புக்கு: R.அருண்மொழி தலைமையாசிரியை தொலைபேசி எண்: 9486559975

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf2mKajoiulBwpkvAZ3eCld7tlaXi1E_JBNpEyehvSVkYCD2Q/viewform?vc=0&c=0&w=1


Best regards,

ரேஷன் கடை ஊழியர்கள் எவ்வாறு மக்களுக்கு பொருட்களை கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள் முழுவதும் படிக்கவும்

ரேஷன் கடை ஊழியர்கள் எவ்வாறு மக்களுக்கு பொருட்களை கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள் முழுவதும் படிக்கவும்

சமூக இடைவெளி பின்பற்றி நோய் பரவலை தடுப்போம்



வணக்கம் நண்பர்களே ரேஷன் கடை ஊழியர்களால் மக்களுக்கு சமூக இடைவெளியுடன் ரேஷன் பொருட்களை கொடுப்பதில் சில சிக்கல்களை சந்திக்கின்றனர் கீழ்கண்ட முறையில் அவர்கள் ரேஷன் பொருட்களை விநியோகிக்க கூட்டுறவு துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்  சிலர் இதனை பின்பற்றுவதில்லை,சிலரால் பின்பற்ற  முடிவதில்லை எனவே ரேஷன் கடை ஊழியர்களுக்கு கீழ் கண்ட முறையில் பொருட்களை விநியோகம் செய்ய தங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். ரேஷன் கடை ஊழியர்கள் பின்பற்ற தவறினாலும் கீழ்க்கண்ட முறையினை பின்பற்ற வலியுறுத்துங்கள்...


1) ரேஷன் கடைகளின் குடும்ப அட்டைதார்களுக்கு  விற்பனையாளர் 24 மற்றும் 25.4.20 தேதிகளில் கடையில் உள்ள இருப்பு மற்றும் பொருள் வரும் நாட்களை கணக்கிட்டு டோக்கன் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.

2) டோக்கன் கூட்டுறவு அச்சகத்தில் உள்ளது. கூ.சா.ப / மே.இ. ஐ தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

3) 27.4.20 க்குள் ம.எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும்

4) 27.4.20 முதல் நகர்வு வரப்பெற்ற கடைகளில் அரிசி உட்பட அனைத்து பொருட்களையும் ஒரே நேரத்தில் விநியோகம் செய்ய வேண்டும்

5) PHH. &. AAY கு.அட்டைக்கு வழக்கமாக வழங்க வேண்டிய அரிசியுடன் கூடுதலாக  PMGKAY திட்டத்தின் கீழ் குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி  வழங்க வேண்டும்.

(உம்) ஒரு PHH கார்டில் 4 நபர்கள் இருப்பின் ஏற்கனவே 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு தற்போது கூடுதலாக 20 கிலோ அரிசி, ஆகமொத்தம் 40 கிலோ அரிசி வழங்க வேண்டும்.

ஒரு AAY கார்டுக்கு எத்தனை நபர்கள் இருப்பினும் ஏற்கனவே 35 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அக்குடும்ப அட்டைக்கு கூடுதலாக ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 25 கிலோ ஆக மொத்தம் 60 கிலோ அரிசி வழங்க வேண்டும். POS machine ல் தனித்தனியாக option உள்ளது. விற்பனையாளர் எந்த கணக்கும் செய்ய வேண்டாம். NPHH கார்டுக்கு வழக்கமாக வழங்கும் அரிசி மட்டும் வழங்க வேண்டும்.

6) PMGKAY திட்ட அரிசி கடையில் இருப்பிலிருந்தால் உடன் விநியோகம் செய்ய வேண்டும்.இருப்பு இல்லையென்றால் விரைவில் வந்துவிடும், வந்ததும் விநியோகம் செய்யப்படும் என விற்பனையாளர் தெரிவிக்க வேண்டும்.

7)  மலிவு விலை பலசரக்கு உடன் விற்பனை செய்ய வேண்டும். 19 பொருட்களுக்காக காத்திருக்க வேண்டாம். இருக்கின்ற பொருட்களுக்குரிய பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு பொருளை வழங்க வேண்டும்.

8) தொழிலாளர் நிவாரண பொருட்கள் புதிய பட்டியல் படி பொருட்களை எடுத்து விநியோகத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

அனைத்து மக்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இவ்விஷயத்தை தெரியப்படுத்தி அரசின் திட்டம் நல்ல முறையில் செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

Best regards,

Thursday, 23 April 2020

கொரோனா வைரஸ் கிருமி பற்றி உயிர்தொழில் நுட்ப துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரின் அருமையான விளக்க பதிவு!!

கொரோனா வைரஸ் கிருமி பற்றி உயிர்தொழில் நுட்ப துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரின் அருமையான விளக்க பதிவு!!

நான் Dr.P.மணி.
நான் உயிர்தொழில் நுட்ப துறை (Biotechnology )ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.

இப்போது கும்பகோணம்அன்னை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறேன்.

என்னிடம் என் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் ஏன் இன்னும் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை? இந்த கொரோனா வைரஸ் கிருமி தொற்றிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது?என விளக்கம் கேட்டனர்.

கொரோனா வைரஸ் கிருமி தொற்று பற்றி எனக்கு தெரிந்த அறிந்த உயிரியல் விளக்கத்தை கீழ்கண்டவாறு பதிவிடுகின்றேன்.

முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ் .

ஒரு ஆர்என்ஏ
(நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA)
அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறைதான் கொரோனா வைரஸ்  (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கரைந்து வைரஸ் அவுட்).

அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இது தான் கொரோனா வைரஸ்.

இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்ளவதே.

இந்த முட்களும் புரதத்தால் ஆனவையே.

கொரோனா வைரசில் இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரீடத்தில் (Crown) இருக்கும் வேலைப்பாடு போல இருப்பதால் இந்த வைரசுக்கு கொரோனா வைரஸ் எனப் பெயர்.

இதை ஏன் அரைகுறை உயிரி என்கிறோம்.

இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது.

இது ஒரு முழுமையான
ஒட்டுண்ணி.

ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த
செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுவது தான் வைரஸ்களின் வேலை.

செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில நாட்களோ தான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும்.

இந்த வைரஸ் மூக்கு, வாய்
அல்லது கண் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில்
தொண்டை பகுதியை தாக்குகிறது.

தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப் பெருகியவுடன் தான் தொண்டை வலியும் இருமலும் தொடங்குகிறது.

இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி (Immune system)உடனே மோதலை தொடங்குகிறது.

அந்த மோதலின் அறிகுறி தான் காய்ச்சல்.

பெரும்பாலான வைரஸ்கள்
அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி வைரஸ்களை காலி செய்ய நமது உடலின் எதிர்ப்பு சக்தி முயற்சிக்கிறது.

இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை
நமது உடல் கொன்று விடுகிறது,
கொரோனா வைரஸ் உள்பட.

நமது உடலின் Immune system ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண்.

வைரஸோ, பாக்டீரியாவோ
அல்லது வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன் அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது.

முதலாவது அந்த நுண்ணுயிர் வெளியிடும் வேதியியல் பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணுயிரின் உருவம்.

இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டுபிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன.

வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் வேலைக்கு Macrophages, Neutrophils போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள் அனுப்புகின்றன.

ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ
உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கட்ட அரண்கள் வேலையில் இறங்கும்.

அதில் ஒன்று Innate lymphoid cells.

இதன் ஒரு பிரிவான T- Killer cellகளின் வேலை வைரஸ்களால் பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது.

மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் செல்களின் எண்ணிக்கையை குறைப்பது.
இது தான் இதன் வேலை.

அதே நேரத்தில் Macrophages, Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும் பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும் வைரஸ்களை தாக்கும் செல்கள்.

இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம் கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச் சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு வைரஸ்களை கொல்லும்.

இந்த உடல் எதிர்ப்பு சக்தி
ஒரு பக்கம் இருக்க, தொண்டைப்பகுதியை
அடைந்த கொரோனா
வைரஸ்கள் அடுத்ததாக
நமது உடலை பாதிப்பது நுரையீரலை.

நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள்.

இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, துளை போட்டு தனது ஆர்என்ஏவை உள்ளே நுழைக்கும்.

இந்த ஆர்என்ஏ செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில் தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி எடுக்கும்.

இந்த ஒவ்வொரு ஆர்என்ஏவும் ஒரு வைரசாக மாறும்.

அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது, அந்த செல்லே வெடித்து மடியும்.

அந்த வெடிப்பில் இருந்து கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களை இதே போல தாக்கி அழித்து,பல்கிப் பெருகும்.

10 நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை
இந்த வைரஸ் ஆக்கிரமிக்கும்.

இதுவரையும் கூட பிரச்சனை அதிகமில்லை.

ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல் செல்கள் நுரையீரலில் நுழைந்து தாக்க ஆரம்பிக்கும்போது தான் பிரச்சனையே துவங்குகிறது.

மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கே தான் மாறுபடுகிறது.

இந்த கொரோனா வைரஸ்,
நமது உடலின் எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும் சேதப்படுகின்றன.

சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின் ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.

நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம் தான்.

ஜீன்கள் பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான சைட்டோகைன் தகவல்கள் அனுப்ப, நுரையீரலை பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள், கொரோனா வைரஸ்களுக்கு பதிலாக உடலின் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும்.

அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள் வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் நுரையீரல் செல்களை அழியச் சொல்லி தகவல் தரும்.

இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

இந்த இடத்தில் தான் மரணங்கள் நிகழ்கின்றன.

இப்படி உடலின் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு
எதிராக திருப்பி விடுவதில் தான் கொரோனா வைரசின் முழு சக்தியும் அடங்கியுள்ளது.

வைரசின் உருவத்தை வைத்து அடையாளம காணும் B- cellகள் கூட கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை ஈட்டவில்லை.

இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள் (Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை.

அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால் இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை.

இது தான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிபது.

நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல் தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும் கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன,அல்லது உடலின் Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை உடலையே தயாரிக்க வைக்கின்றன.

 ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவது தான் இந்த வைரசுக்கு எதிராக எந்த மருந்தை வைத்து போராடுவது என்ற குழப்பத்தில் மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால் குழம்பிப்போன T-killer cells,
B cells-களும் ஏற்கனவே
கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும்
பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில் தான் இந்த உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.

நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை குறைவாகவே உள்ளது.

உடலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பெரும் குழப்பத்துக்கிடையிலும் பெரும்பாலான நேரங்களில்
நமது உடல் எதிர்ப்பு சக்தி
சிஸ்டம் கொரோனா வைரஸை தோற்கடித்துவிடுகிறது.

 நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையால் உடலின் எதிர்ப்பு சக்தி முடக்குகிறது.

அதே போல இதயக் கோளாறு,
பி.பி உள்ளவர்களின் உடலில் நுண்ணிய ரத்தக் குழாய்கள் போதிய ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் வருவதால், உடலின் எல்லா பகுதிக்கும்
போதிய சக்தி கிடைப்பதில்லை,
நோய் எதிர்ப்பு சக்தி உள்பட.

ஆனால், சர்க்கரை அளவும் பிபியும் மருந்துகள், உடற்பயிற்சி மூலம் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை.

இங்கேயும் உடலின் எதிர்ப்பு
சக்தி கொரோனாவை தோற்கடித்துவிடுகிறது என்பது தான் நல்ல செய்தி.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவார்களா? என்பது தெரியவில்லை.

35 ஆண்டுகளுக்கு முன் வந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்த எச்ஐவி வைரசும் கொரோனா வைரஸ் ரகத்தை சேர்ந்தது தான்.

அதுவும் நமது உடலின் எதிர்ப்பு சக்தியை கதிகலங்க வைக்கும் வைரஸ் தான்.

ஆனால், கொரோனா மாதிரி
எச்ஐவி வைரஸ் மூலம் இவ்வளவு சாதாராணமாக இருமல், தும்மல் மூலம் எல்லாம் பரவவில்லை.

அந்த வகையில் கொரோனா தான் கொடூரம்.

அதற்குத் தான் வீட்டிலேயே
முடங்க சொல்கிறார்கள்.

இன்னும் மருந்து கண்டுபிடிக்க இயலாத நிலையில், இந்த நோயில்
இருந்து தப்பிப்பதே உசிதம்.

இந்த நோய் தாக்குதலை தவிர்ப்பதே இதற்கான இப்போதையே ஒரே மருந்து!

தனித்திருப்போம்!விழிப்புடன் இருப்போம்!!வீட்டிலேயே இருப்போம்!!!கொரோனாவை ஒழிப்போம்!!!!

Best regards,

Monday, 20 April 2020

நல வாரிய உறுப்பினராக இல்லாதவர்கள் உடனே உறுப்பினராவதற்கு இந்த பதிவு உதவும் என்று கருதுகிறேன்..

நல வாரிய  உறுப்பினராக இல்லாதவர்கள் உடனே உறுப்பினராவதற்கு இந்த பதிவு உதவும் என்று கருதுகிறேன்..


தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் பற்றி  ஒரு பார்வை?

தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 17 நல வாரியங்கள்

1. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்
2. தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம்.
3. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம்,
4. தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம்
5. தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம்.
6. தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியம்
7. தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியம்
8. தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம்.
9. தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம்.
10. தமிழ்நாடு ஓவியர் நல வாரியம்
11. தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்
12. தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்
13. தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நல வாரியம்.
14. தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நல வாரியம்.
15. தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நல வாரியம்
16. தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம்,
17. தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நல வாரியம்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் 30.11.1994 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாரிய நலத்திட்டத்தின் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தொழில் இனங்கள் ஆகிய 53 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
53 வகையான கட்டுமானத் தொழில்கள்

1. கல் உடைப்பவர் (அ) கல் வெட்டுபவர் (அ) கல் பொடி செய்பவர்.
2. கொத்தனார் (அ) செங்கல் அடுக்குபவர்.
3. தச்சர்
4. பெயிண்டர் அல்லது வார்னிஷ் பூசுபவர்
5. கம்பி வளைப்பவர் உட்பட பிட்டர்
6. சாலை குழாய் பதிப்பு பணியாளர்
7. எலக்ட்ரிஷியன்
8. மெக்கானிக்
9. கிணறு தோண்டுபவர்
10. வெல்டர்
11. தலைமை கூலியாள்
12. கூலியாள்
13. தெளிப்பவர் மற்றும் கலப்பவர் (சாலை பரப்பும் பணி)
14. மரம் அல்லது கல் அடைப்பவர்
15. கிணற்றில் தூர் எடுப்பவர்
16. சம்மட்டி ஆள்
17. கூரை வேய்பவர்
18. மேஸ்திரி
19. கருமான், கொல்லன்
20. மரம் அறுப்பவர்
21. சந்துகள் அடைத்து நீர் உட்புகாமல் செய்பவர்
22. கான்க்ரீட் மிக்ஸர் அப்ரேட்டர் உட்பட கலப்பவர்
23. பம்ப் ஆபரேட்டர்
24. மிக்ஸர் டிரைவர்
25. ரோலர் டிரைவர்
26. கனரக இயந்திர கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள கலாசிஸ் மற்றும் சுரங்க பணியாளர்
27. காவலாளி
28. மொசைக் பாலீஸ் செய்பவர்
29. சுரங்க வழி தோண்டுபவர்
30. பாறை உடைப்பவர் குவாரி வேலையாள்
31. சலவைக்கல் / கடப்பாக்கல் வேலையாள்
32. சாலை பணியாளர்
33. கட்டுமானப் பணி தொடர்பான மண் வேலை செய்பவர்
34. சுண்ணாம்பு பதப்படுத்துவோர்
35. கடல் அரிப்பு தடுப்பு பணியில் ஈடுபடும் வேலையாள்
36. அணைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, பாலங்கள், சாலை அல்லது மற்ற கட்டுமானப் பணிகளில் உள்ளபடியாக ஈடுபட்டுள்ள மற்ற வகையான தொழிலாளர்கள்
37. அணைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, பாலங்கள், சாலை அல்லது மற்ற கட்டுமானப் பணிகளில் உள்ளபடியாக ஈடுபட்டுள்ள மற்ற வகையான தொழிலாளர்கள்
38. தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வராத செங்கல் சூளை தொழிலாளர்கள்
39. பந்தல் கட்டுமானம்
40. தீயனைப்பு கருவிகளை பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல்
41. குளிரூட்டுதல் மற்றும் சூடுபடுத்துதல் கருவிகளை பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல்
42. மின்தூக்கி மற்றும் மின்படி பொருத்துதல்
43. பாதுகாப்பு கதவுகள் மற்றும் கருவிகள் பொருத்துதல்
44. இரும்பு மற்றும் உலோக கிராதி ஜன்னல் கதவுகள் புனைத்து கட்டுதல் மற்றும் பொருத்துதல்
45. நீர் எடுக்கும் கட்டமைப்பு தொடர்பான கட்டுமானம்
46. கார்பெட்டிங், பொய்கூரை விளக்கு அமைத்தல், மேற்பூசுதல் தொடர்பான உள்ளலங்காரம்
47. கண்ணாடி வெட்டுதல், இழைத்தல் மற்றும் கண்ணாடி பேனல்கள் பொருத்துதல்
48. சோலார் பேணல் போன்ற மின்மிகை சாதனங்கள் பொருத்துதல்
49. சமையல் கூடம் போன்ற இடங்களில் நவீன அறைகள் அமைத்தல்
50. முள் புனைத்து அமைக்கப்பட்ட கான்கிரீட் பொருட்கள் பொருத்துதல்
51. கோல்ப் மைதானம், நீச்சல் குளம் உட்பட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளை கட்டுதல்
52. கல்பெயர் பலகை, தெரு அறைகலன்கள், பேருந்து நிழற்கூரை, பணிமனைகள் நிறுத்தங்கள் மற்றும் அறிவிப்பு குறி போன்ற கட்டுமானம் மற்றும் நிறுத்துதல்
53. ரோட்டரி மற்றும் செயற்கை நீருற்று போன்ற கட்டுமானம்
54. பொது பூங்கா நடைபாதை போன்ற கட்டுமானம் மற்றும் இயற்கை நிலைக்காட்சி அமைத்தல்

2. தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம்
மற்றும் 15 நல வாரியங்கள்
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் 17,03,1999 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது, இவ்வாரியங்கள் மூலம் நலத்திட்டங்களில் பட்டியல் இடப்பட்ட தொழில் இனங்கள் ஆகிய 60 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
60 வகையான அமைப்புசாரா தொழில்கள்

1. சுமை ஏற்றுதல், இறக்குதல், அடுக்குதல், சிப்பம் கட்டுதல், தூக்கிச் செல்லுதல், எடைபோடுதல், அளவிடுதல் அல்லது இத்தகைய வேலைகளுக்கான ஆயத்த அல்லது இது தொடர்பான பணி உள்ளிட்ட உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுதல்.
2. சந்தை அல்லது கடை அல்லது டிப்போ அல்லது தொழிற்சாலை அல்லது சேமிப்புக் கிடங்கு அல்லது கிடங்கு அல்லது இதர நிறுவனம்.
3. 1948-ஆம் வருட துறைமுகத் தொழிலாளர்கள் சட்டத்திற்குட்படாத துறைமுகங்கள்,
4. இரயில்வே நிர்வாகத்தால் பணியமர்த்தப்படாத உடலுழைப்புத் தொழிலாளர்கள் பணிபுரியும் இரயில்வே யார்டுகள் மற்றும் குட்ஸ்ஷெட்டுகள்.
5. 1959- ஆம் வருட தமிழ்நாடு வேளாண் விளை பொருள் சந்தைகள் சட்டத்தால் அமைக்கப்பட்ட சந்தைக் குழுக்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட சந்தை.
2. பொது போக்குவரத்து வாகனங்களில் சுமை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் அது தொடர்பான இதர வேலைகள்.
3. உணவு தானியங்கள் ஏற்றுதல், இறக்குதல் மற்றும் கிடங்குகளுக்கு கொண்டு செல்லுதல், உணவு தானியங்களை பிரித்தல் மற்றும் சுத்தம் செய்தல், உணவு தானியங்களை பைகளில் நிரப்புதல் மற்றும் அந்த பைகளை தைத்தல் மற்றும் இதன் தொடர்புடைய இதர வேலைகள்,
4. உப்பளங்களில் வேலை செய்தல்
5. கள் இறக்கும் தொழில்
6. படகு பணி
7. மரத்தொழில்
8. கயிறு தொழில்
9. தோல் பதனிடுதல் மற்றும் தோல் உற்பத்தி
10. தானியங்கி பணிமனையில் (ஆட்டோ மொபைல் ஒர்க்ஷாப்) பணிபுரிதல்)
11. அப்பளம் தயாரித்தல்
12. வெளுத்தல் மற்றும் சாயத் தொழில்
13. மாட்டு வண்டி ஓட்டுதல்
14. உணவு சமைத்தல்
15. தேங்காய் உரித்தல்
16. வனப்பொருட்கள் சேகரித்தல்
17. உணவு நிறுவனங்களில் பணிபுரிதல்
18. முந்திரி தொழில்
19. ஆட்டோ, டாக்சி, வேன், டெம்போ, லாரி மற்றும் பேருந்து ஓட்டுதல் (அரசுத் துறை வாகனங்கள் நீங்கலாக)
20. எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகித்தல்
21. சைக்கிள் ரிக்ஷா ஓட்டுதல்
22. பொறியியல் தொழில்
23. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்
24. துணி மடிக்கும் தொழில்
25. காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரித்தல்
26. சாக்குத் தொழில்
27. தங்க, வெள்ளி ஆபரணங்கள் தயாரித்தல்
28. கைத்தறி மறறும் கைத்தறி பட்டு நெய்தல்
29. அகர்பத்தி தயாரித்தல்
30. துணி துவைத்தல் மற்றும் சலவை இடுதல்
31. பதநீர் இறக்குதல்
32. பேனா எழுதுமுனை தயாரித்தல்
33. மாவு ஆலை, எண்ணெய் ஆலை, பருப்பு ஆலை மற்றும் அரிசி ஆலையில் பணிபுரிதல்
34. அச்சகங்களில் பணிபுரிதல்
35. விசைத்தறித் தொழில்
36. தனியார் பாதுகாவல் பணிகள்
37. பிளாஸ்டிக் தொழில்
38. மண்பாண்டத் தொழில்
39. குப்பைகள் சேகரித்தல்
40. முடித்திருத்துதல் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரிதல்
41. தெரு வியாபாரம்
42. ஜவ்வரிசி தொழில்
43. செயற்கை வைரம் வெட்டுதல்
44. பட்டுப்புழு வளர்த்தல்
45. கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிதல்
46. தையல் தொழில்
47. மரம் ஏறுதல்
48. தகர அடைப்பான்கள் தயாரித்தல்
49. பாத்திரங்கள் தயாரித்தல்
50. மரவேலைக் கூடங்களில் பணிபுரிதல்
51. வீட்டுவேலைகளில் பணிபுரிதல்
52. சைக்கிள் பழுது பார்த்தல்
53. கல் மற்றும் பிற பொருட்களில் சிற்ப வேலைகள் செய்தல்
54. களிமண், காகித கூழ் உட்பட பிற பொருட்களில் கைவினைப் பொருட்கள் செய்தல்
55. சுருட்டு தயாரித்தல்
56. ஓவியர்கள்
57. ஒலி மற்றும் ஒளி அமைத்தல்
58. எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உபகரணங்களை பழுது பார்த்தல் மற்றும் சீர் செய்தல்
59. வார்த்து வடித்தல்

வாரியங்களில் பதிவு செய்வதற்கான தகுதிகள் / வழிமுறைகள்:-

1. விண்ணப்பதாரர் 18 முதல் – 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
2. தொழிலாளி தனது புகைப்படம் ஒன்றை விண்ணப்பத்தில் ஒட்டி, மற்றொரு புகைப்படத்தை ஒரு உறையில் வைத்து விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் அளித்து ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
3. பதிவு கட்டணம் ஏதும் இல்லை.
4. பதிவு விண்ணப்பத்தில் சம்மந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர் என்பதற்கான சான்று கீழ்க்கண்ட எவரேனும் ஒருவரால் அளிக்கப்பட வேண்டும்.
1. வேலையளிப்பவர்,
2. பதிவு பெற்ற ஒப்பந்ததாரர் (கட்டுமான வாரியம் மட்டும்).
3. கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் அரசு அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் (கட்டுமான வாரியம் மட்டும்).
பதிவு பெற்ற தொழிற் சங்கம்.
4. கிராம நிர்வாக அலுவலர்
(வருவாய் ஆய்வாளர் – சென்னை மாவட்டத்தில் மட்டும்),
5. தொழிலாளர் உதவி ஆய்வாளர் அல்லது உதவி இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் இதர 15 நல வாரியங்களுக்கு மட்டும்).
5. பதிவு விண்ணப்பத்தில், தொழிலாளர் செய்யும் வேலை குறித்த பணிச்சான்றினை தொழிற்சங்கம் வழங்கியிருந்தால், தொழிற்சங்கப் பதிவு எண் மற்றும் முகவரியுடன் கூடிய முத்திரை இடம் பெற்றிருக்க வேண்டும்.
6. வயது/ இருப்பிடம் தொடர்பாக கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் சான்றொப்பமிட்ட நகலினை (Attested Copy) விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
7. பிறப்பு / இறப்பு பதிவாளரின் சான்று.
8. பள்ளி அல்லது கல்லுரிச்சான்று
9. வாகன ஓட்டுநர் உரிம நகல்,
10. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை,
11. சான்றொப்பமிட்ட குடும்ப அடையாள அட்டை
12. அரசு மருத்துவரிடமிருந்து
(சிவில் சர்ஜன் தரத்திற்கு குறையாதவரிடம் பெறப்பட்ட வயது குறித்த சான்று – அசலில்)
13. தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு.
பதிவினை புதுப்பித்தல்
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பதிவினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும், புதுப்பித்தலுக்கு கட்டணம் ஏதும் இல்லை, 60 வயது நிறைவடைந்த தொழிலாளியின் பதிவினை புதுப்பிக்க இயலாது, உறுப்பினரால் அளிக்கப்படும் புதுப்பித்தல் விண்ணப்பம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் பெறப்பட்டு, உரிய சரிபார்த்தலுக்குப் பின் புதுப்பிக்கப்பட்டு அடையாள அட்டை உறுப்பினருக்கு திரும்ப அளிக்கப்படும்.
இரண்டாம்படி அடையாள அட்டை (Duplicate I.D.Card)
இரண்டாம்படி அடையாள அட்டை வழங்கக் கோரும் மனு தொழிலாளரின் விண்ணப்பத்தின் மீது விசாரணை மேற்கொண்டு இரண்டாம்படி அடையாள அட்டை (Duplicate ID. Card) கோரும் நபர் அவர்தானா என உறுதி செய்து தொழிலாளர் உதவி ஆணையரால் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இரண்டாம்படி அடையாள அட்டை வழங்கப்படும். (இரண்டாம்படி அடையாள அட்டை பெற ரூ.20/- கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்).
பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
திருமணம்
(குடும்பத்திற்கு இருமுறை மட்டும்) தொழிலாளர் (அ) தனது மகன் (அ) மகள் திருமணத்திற்கு 3,000/-
(ஆண்)
5,000/-
(பெண்)
மகப்பேறு
பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு
(முதல் இரு குழந்தைகளுக்கு மட்டும்) 6,000/-
கருக்கலைப்பு/ கருச்சிதைவு (பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு இரு முறை மட்டும்) 3,000/-
 கல்வி
(ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும்)
 அ) 10-ம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்)  1,000/
 ஆ) 11-ம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்)  1,000/
 இ) 12-ம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்)  1,500/-
 ஈ) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி  1,000/-
 உ) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி  1,500/-
ஊ) பட்டப்படிப்பு
முறையான பட்டப்படிப்பு 1,500/-
விடுதியில் தங்கிப் படித்தால்  1,750/-
எ) பட்ட மேற்படிப்பு
முறையான பட்டமேற்படிப்பு  4,000/-
விடுதியில் தங்கிப் படித்தால்  5,000/-
ஏ) தொழிற்நுட்பப் பட்ட படிப்பு
சட்டம், பொறியியல்,
மருத்துவம், கால்நடை
மருத்துவம் போன்ற
தொழிற்நுட்பப் பட்ட படிப்பு 4,000/-
விடுதியில் தங்கிப் படித்தால் 6,000/-
ஐ) தொழிற்நுட்பப் பட்டமேற்படிப்பு 6,000/-
விடுதியில் தங்கிப் படித்தால் 8,000/-
ஒ) ஐ.டி.ஐ. அல்லது
பாலிடெக்னிக் படிப்பு 1,000/-
விடுதியில் தங்கிப் படித்தால் 1,200/
கண் கண்ணாடி
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதலில் விண்ணப்பிக்கும் 65 தொழிலாளர்களுக்கு மட்டும். 500/-க்கு மிகாமல்
ஓய்வூதியம்
60 வயது நிறைவு செய்த பதிவு பெற்ற தொழிலாளியாக இருக்க வேண்டும் அல்லது 60 வயதினை நிறைவு செய்யாதிருந்தாலும் பதிவு செய்திருந்து நோயின் காரணமாக வழக்கமான பணி செய்ய இயலாமல் முடக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.  1.000/- மாதம் ஒன்றிற்கு
குடும்ப ஓய்வூதியம்
ஓய்வூதியம் பெறும் கட்டுமானத் தொழிலாளி இறந்துவிட்டால் அவரது கணவர்/ மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம்
 400/- மாதம் ஒன்றிற்கு
விபத்து மரணம் –
(கட்டுமானத் தொழிலாளி 11.12.2014-க்கு பிறகு
பணியின்போது பணியிடத்தில் விபத்து மரணம் நிகழ்ந்தாலும், 01.03.2016-க்கு பிறகு பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளி பணியிடத்தில் இறந்தாலும்) 5,00,000/-
01.03.2011-க்கு பிறகு பணியிடம் அல்லாத இடத்தில் விபத்தில் இறந்தாலும்  1,00,000/-
விபத்து ஊனம்
உடல் உறுப்பு இழப்பு அல்லது உடல் உறுப்பு துண்டிக்கப்படுதல் அல்லது நிரந்தரமாக உடல் உறுப்பு செயல் இழப்பு ஏற்பட்டால் ஊனத்திற்கு தகுந்தாற்போல் இழப்பீட்டுத் தொகை 1,00,000/-
வரை
விபத்து ஊன உதவித் தொகையினை தவிர ஊனத்தின் தன்மைக்கேற்ப செயற்கை உறுப்புகள் / சக்கர நாற்காலி தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும்,
இயற்கை மரணம்
நியமனதாரருக்கு மட்டும் (17.11.2017 க்கு பிறகு) 20,000/-
ஈமச்சடங்கு
நியமனதாரருக்கு மட்டும் (17.11.2017 க்கு பிறகு) 5,000/-

நல உதவி விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
பொதுவான ஆவணங்கள்
அசல் அடையாள அட்டை
வங்கி கணக்கு, ஆதார் அட்டை
திருமணம்
திருமண அழைப்பிதழ்
திருமணம் நடைபெற்றதற்கான சான்று
திருமணம் செய்து கொள்பவர்
ஆண் எனில் 21 வயதும், பெண் எனில் 18 வயதும் நிறைவு செய்தார் என நிரூபிக்கும் வயது சான்றிதழ்,
மகப்பேறு
அசல் பிறப்பு சான்றிதழ்
குறைப்பிரசவம்/ கருக்கலைப்பு எனில் பதிவு பெற்ற மருத்துவரின் சான்று. (உதவி சிவில் சர்ஜன் தரத்தில்)

கல்வி
1. கல்வி பயிலும் ஆண்டிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
2. பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும் படிப்பு சான்றிதழ் பதிவு பெற்ற தொழிலாளியின் மகள் என்றும் கல்வி பயிலும் ஆண்டினையும் குறிப்பிட வேண்டும்.
3. சான்றொப்பமிட்ட தேர்ச்சி பெற்ற மதிப்பெண் பட்டியல் / பள்ளி மாற்று சான்றிதழ்.
4. கல்லுரி படிப்பில் சேர்ந்து பயில்வது குறித்தான கல்வி நிலைய முதல்வரிடமிருந்து பெறப்பட்ட அசல் சான்றிதழ்.
5. விடுதியில் தங்கி படிப்பவர் முதல்வரிடம் அல்லது விடுதி காப்பாளரிடம் இருந்து பெறப்பட்ட சான்று.
கண் கண்ணாடி
கண் மருத்துவரின் பரிசோதனைச் சான்று கண் கண்ணாடி வாங்கியதற்கான அசல் பற்றுச் சீட்டு
ஓய்வூதியம்
இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ.
முடக்க ஓய்வூதியம்
இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ, மருத்துவச் சான்று அரசு சிவில் சர்ஜனால் வழங்கப்பட்டது, (முடக்க ஓய்வூதியத்திற்கு மட்டும்)
குடும்ப ஓய்வூதியம்
இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ ஓய்வூதியதாரரின் அசல் இறப்பு சான்றிதழ், வாரிசு உரிமைச் சான்றிதழ்
விபத்து மரணம்
அசல் இறப்பு சான்றிதழ், முதல் தகவல் அறிக்கை (FIR), பிரேதப் பரிசோதனை அறிக்கை.
விபத்து மரணம்
(உதவித் தொகை, உதவி உபகரணம்) மருத்துவச்சான்று பணித்திறன் இழப்புச் சான்று (உதவி சிவில் சர்ஜனால் வழங்கப்பட்டது) ஹாஸ்பிடல் டிஸ்சார்ஜ் சம்மரி முதல் தகவல் அறிக்கை (FIR)
இயற்கை மரணம், ஈமச்சடங்கு
அசல் இறப்பு சான்றிதழ்.
நலத்திட்ட உதவிகள் வங்கி கணக்கில் செலுத்துதல் (ECS)
அரசாணை எண்.102, நாள் – 08.11.2011 (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை)-ன்படி இவ்வாரியங்களின் நலத் திட்ட உதவிகளுக்கான பணப்பயன்கள் நேரடியாக பதிவு பெற்ற தொழிலாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்:-
இந்த காப்பீட்டு திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு வருடம் ரூ.1,00,000/- வீதம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.1,50,000/- வரை வழங்கப்படும். இத்திட்டத்தில் 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 23 நோய் பரிசோதனை கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் இதர 16 அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களும் இத்திட்டத்தில் நிபந்தனைகளுக்குட்பட்டு பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நற்பெயர் பெற்ற தனியார் பள்ளிகளின் மூலம் உயர் கல்வி வழங்கும் திட்டம்:-
அரசுப் பள்ளியில் கல்வி பயின்று, அறிவுக்கூர்மையான கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அந்தந்தப் பகுதியில் சிறந்த தனியார் பள்ளிகள் மூலம் தரமான கல்வி வழங்கும் வகையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறந்த தனியார் பள்ளிகளின் மூலம் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தரமான கல்வி வழங்க தமிழக அரசு ஆணை எண்.14 தொ.வே,(ஐ1) துறை நாள் :31.01.2017 வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கட்டணம் தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக்குழுவால் நிர்ணயக்கப்படும் கட்டணத்தையும், விடுதிக் கட்டணம் ரூ.15,000/- மற்றும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும்.
அலுவலக முகவரிகள் :-
1. தொழிலாளர் ஆணையர்,
டி.எம்.எஸ். காம்பவுண்ட்,
தேனாம்பேட்டை, சென்னை – 600 006.
தொலைபேசி எண். 044-28216529.
மின்னஞ்சல் முகவரி : comlabtn@gmail[dot]com.
2. கூடுதல் தொழிலாளர் ஆணையர்,
எண்.8, ஹாஜா மியான் தெரு,
காஜா நகர், திருச்சி.
தொலைபேசி எண். 0431-2421433
மின்னஞ்சல் முகவரி : jcl_trichy@yahoo[dot]in
3. தொழிலாளர் இணை ஆணையர்,
26, 3வது தெரு,
காஜா நகர், திருச்சி.
தொலைபேசி எண். 0431-2420600
மின்னஞ்சல் முகவரி : dclssstryrn@gmail[dot]com
4. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்,
8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை,
சென்னை – 34.
தொலைபேசி எண். 044-28216527, 28216529
மின்னஞ்சல் முகவரி : tncwwbhead@gmail[dot]com
5. தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம்,
ஜி/133, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்,
சிந்தாமணி சூப்பர்மார்க்கெட் வணிக வளாகம், அண்ணாநகர் (கிழக்கு), சென்னை – 102. தொலைபேசி எண். 044-26631147/48/49/50
மின்னஞ்சல் முகவரி : manualboard@gmail[dot]comBest regards,

Sunday, 19 April 2020

மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து பெற்ற தகவல் ...

மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து பெற்ற தகவல் ...

 தினமும்::
  1. Vit C-1000 எடுத்துக் கொள்ளுங்கள்
  2. வைட்டமின் ஈ
  3. 10:00 - 11:00 சூரிய ஒளி 15-20 நிமிடங்கள் அல்லது வைட்டமின் டி 3
  4. முட்டை ஒன்று
  5. தூக்கம் -7-8 மணி நேரம்
  6. தினமும் 1.5 lit சூடான நீரை குடிக்கவும்
  7. ஒவ்வொரு உணவும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக இருக்க கூடாது ).

 ☆☆☆ அதைத்தான் நாங்கள் மருத்துவமனையில் செய்கிறோம்.

  கொரோனா வைரஸிற்கான PH அளவு 5.5 முதல் 8.5 வரை மாறுபடும்.

 வைரஸைத் தோற்கடிக்க நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், வைரஸின் PH அளவை விட அதிகமான கார உணவுகளை உட்கொள்வதுதான்.

   அவற்றில் சில:
  * எலுமிச்சை - 9.9 பி.எச்
  * சுண்ணாம்பு - 8.2 பி.எச்
  * வெண்ணெய் - 15.6 பி.எச்
  * பூண்டு - 13.2 pH *
  * மா - 8.7 பி.எச்
  * டேன்ஜரின் - 8.5 பி.எச்
  * அன்னாசிப்பழம் - 12.7 பி.எச்
  * டேன்டேலியன் - 22.7 பி.எச்
  * ஆரஞ்சு - 9.2 பி.எச்

 Corona உங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது எப்படி தெரியும்?

  1. தொண்டையில் அரிப்பு
  2. உலர் தொண்டை
  3. உலர் இருமல்
  4. அதிக வெப்பநிலை
  5. மூச்சுத் திணறல்
  6. வாசனை மற்றும் சுவை இழப்பு

 ♡♡ எனவே இந்த அறிகுறிகளில் கவனம் செலுத்துங்கள், எலுமிச்சை மற்றும் பானத்துடன் வெதுவெதுப்பான நீரை விரைவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
----------------------/-/--------------
  இந்த தகவலை உங்களிடம் வைத்திருக்க வேண்டாம்.  உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கொடுங்கள்.  பத்திரமாக இருக்கவும்.
Best regards,

இனி சலூனுக்குப் போறவங்க மிகக் கவனம்!

இனி சலூனுக்குப் போறவங்க மிகக் கவனம்!

சர்வதேச சமூகத்திற்கு எதிரியாக மாறும் சலூன் கடைகள்..? அமெரிக்காவில் 50% பாதிப்புக்கு காரணம் சலூன்கள்

18-4-2020

கொரோனா தொற்றுள்ளவரிடமிருந்து தும்மல், இருமல் மூலமான வெளிவரும் எச்சில் மூலமாகவோ, கொரோனா தொற்றுள்ளவர்கள் தொட்ட பொருட்களை தொட்டு, அப்படியே மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளில் வைப்பதன் மூலமாகவோ என அந்த தொற்றுள்ளவரிடமிருந்து எந்த வகையிலும் கொரோனா பரவ வாய்ப்பிருக்கிறது என்பதால்தன, சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுவதுடன் தனிமைப்படவும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் கடுமையான தடுப்பு நடவடிக்களை எடுக்கப்பட்டும் கூட, அங்கு பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது கொரோனா.

அமெரிக்காவில் இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கும் நிலையில், அவர்களில் 50%க்கும் அதிகமானோருக்கு சலூன் கடைகளின் மூலம்  கொரோனா பரவியிருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உயிரிழந்தவர்களில் 50% இறப்புக்கு சலூன் கடைகள் பொறுப்பு என அந்நாட்டு சுகாதாரத்துறை தலைவர் ஜே ஆண்டனி தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சலூன் கடைகளில் கத்தரிக்கோல்கள், டிரிம்மர்கள், துணிகள் மற்றும் ஹேர்ஸ்டைலிங் செய்ய பயன்படும் மற்ற கருவிகளை அனைவருக்கும் அதே கருவிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே பாதுகாப்பற்ற இந்த முறையில், கொரோனா தொற்றுள்ள ஒருவரிமிடருந்து நிறைய பேருக்கு பரவும் அபாயம் இருக்கிறது.

இப்படித்தான் அமெரிக்காவில் அதிகமாக பரவியிருக்கலாம் என்று சந்தேகிப்பதால் 50% இறப்புக்கு சலூன் கடைகள் தான் காரணம் என ஆண்டனி தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவிலிருந்து சர்வதேச சமூகம் மீண்டவுடன் இது முடிந்துவிடக்கூடிய விஷயம் அல்ல. இது ஒரு நீண்டகால சிக்கல். ஏனெனில் கொரோனாவிலிருந்து மீண்டபின்னர், சலூன் கடைகளுக்கு செல்வதிலும் அபாயம் உள்ளது.

எனவே கொரோனாவிலிருந்து சர்வதேச சமூகம் மீண்டுவிட்ட பின்னர், மனித குலத்தின் நலனுக்காக, சலூன் கடைக்காரர்கள், பழைய உபகரணங்களை தூக்கிப்போட்டு புதிய உபகரணங்களை வாங்கி பயன்படுத்துவது அவர்களுக்கும் சமூகத்திற்கும் நல்லது.

ஆனால் அது நடக்குமா என்பது தெரியவில்லை. எனினும் இப்படியொரு அபாயம் இருக்கிறது என்ற தகவல் வெளிவந்திருப்பது, மனித சமூகத்தை அலெர்ட் செய்யும் விஷயமாக அமைந்துள்ளது.

நன்றி ஜமீல் கல்குடா
Best regards,

Saturday, 18 April 2020

உயிர் காக்கும் மருத்துவர்களைக் காப்போம்!

உயிர் காக்கும் மருத்துவர்களைக் காப்போம்!

வைகோ அறிக்கை

கொரோனா எனும் கொடிய கொள்ளை நோயை எதிர்த்து உலகம் முழுவதும் மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், பசி நோக்காமல், கண் துஞ்சாமல் உயிரையே பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்புடன்  மனித சமூகத்திற்குச் சேவை அளித்து வருகிறார்கள்.

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, சத்ருகன் பாஞ்வாணி என்ற மருத்துவர் சிகிச்சைப் பலன் இன்றி ஏப்ரல் 9 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

மேகாலாயா மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் உயிர்ப் பலி ஆனவர், 69 வயது மருத்துவர் என்று அம்மாநில முதல்வர் கன்ராட் சங்மா தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சை அளித்து வரும் எட்டு மருத்துவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை கூறி இருக்கிறது.

கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த இரு முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இருவருக்கும் சரியான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று புகார் வந்ததும், கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளருக்கு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நேற்று (17.04.2020) நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உயிரிழந்த இரண்டு மருத்துவர்கள் உடலை நல்லடக்கம் செய்வதற்குக்கூட நவநாகரீக மனித சமூகம் தடைகள் ஏற்படுத்தியுள்ள செய்தி வேதனை தருகிறது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் முப்பது ஆண்டுகளாக எலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணராக சேவை செய்து வந்த மருத்துவர் லெட்சுமி நாராயண் ரெட்டி, கொரோனா தொற்று ஏற்பட்டு, சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏப்ரல் 5 ஆம் தேதி உயிரிழந்தார்.

அவரது உடலை எரியூட்டுவதற்காக சென்னை அம்பத்தூர் மின் மயானத்திற்குக் கொண்டு சென்றபோது, அங்கு உடலை எரியூட்ட அனுமதிக்க மாட்டோம் என்று மக்கள் கூடி நின்று எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார்கள்.

மருத்துவரின் குடும்பம் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டு தவிக்கும் நிலையில், மருத்துவர் லெட்சுமி நாராயண் ரெட்டியின் உடல் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்ய முடியாமல், இறந்த பின்னரும் அவரை அவமதித்து இருக்கின்றது இந்தக் கொடூர சமூகம்.

இதைப் போலவே இன்னொரு துயர நிகழ்வும் நம் நெஞ்சைப் பிளக்கிறது.

நீலகிரி மாவட்டம், தெங்குமரஹாடா எனும் மலை கிராமத்தில் அரசு மருத்துவராக பணியாற்றிய டாக்டர் ஜெயமோகன், கொரோனா சிறப்பு மருத்துவராகவும் பணியாற்றினார். உடல்நிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறை எடுத்த அவர், காய்ச்சல் அறிகுறி இருந்ததால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகனின் மரணச் செய்தி கேட்டு துயரம் தாளாமல், மருத்துவர் ஜெயமோகனின் தாய் தற்கொலைக்கு முயன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெளிநாட்டில் வசிக்கும் தமக்கையும் வரமுடியாத சூழல். ஜெயமோகனின் தந்தையும், நண்பர்களும் அவரது இறுதிச் சடங்கு நடத்த சொந்த ஊரான மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ரேயான் நகரில் ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.

கொரோனா தொற்றால் டாக்டர் ஜெயமோகன் இறந்தார் என்று செய்தி பரவியதால், அவரது உடலை ஊருக்குள் எடுத்துவர மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மருத்துவர் ஜெயமோகன் டெங்கு காய்ச்சலால் இறந்தார் என்ற மருத்துவ அறிக்கையை ஊர் மக்களுக்குக் காட்டிய பிறகுதான், மருத்துவரின் உடல் வீட்டிற்கு கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டு, மின் மயானத்தில் எரியூட்டப்பட்டு உள்ளது.

மனிதநேயம் மரித்துப்போய்விட்ட இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடைபெறக் கூடாது.

மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கொரோனா தடுப்புச் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் நலனில் மத்திய - மாநில அரசுள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
18.04.2020
Best regards,

Sen Talks English

Sen Talks English
Youtube Channel
Updated புது வீடியோக்கள்.

இரண்டு விதமான கேள்விகள் Englishல்
https://youtu.be/s0J68Fl0k7A

English word game
https://youtu.be/QfGigLG-cw4

Betweenக்கும்
Amongக்கும் உள்ள
வித்தியாசங்கள்
https://youtu.be/xQLyhjN8frE

English Game
Interesting
https://youtu.be/KTmXVQyQfpY
https://youtu.be/NBl3qGo1fhA
https://youtu.be/_P8NDdSDj8I
https://youtu.be/MZ9gLX7guUQ

அடிக்கடி use பண்ணும் Tenses...Present Continuous Tense
https://youtu.be/ary6J-7k_sE

Should have
எங்கெல்லாம் use பண்ணனும்
https://youtu.be/XWHak1-tWXw

சமையல் செய்வோம்.
Englishல் பேசலாம்
https://youtu.be/HGyXLmKOJ30

However... In order to
எப்படி use பண்ணலாம்
https://youtu.be/g9v6uazr378

எப்படி வாசிச்சா English புரியும்
https://youtu.be/o-9dMbV03sU

போயிருக்கலாம்
எடுத்திருக்கலாம்
Englishல் எப்படி சொல்றது
https://youtu.be/KjGlV926TTw

English Quiz
https://youtu.be/QSYVdV5clK8

படம் பார்த்து Englishல் பேசலாம்
https://youtu.be/iD1yf0Hdvgs

யாரோட...யார்ட்ட
யாருக்காக
Englishல் சொல்லுங்க
https://youtu.be/s84ffba89fk
https://youtu.be/sNRQ94WQeOs

Select Correct Question
https://youtu.be/CyP3ppWjDfo

புறா எறும்பு கதை Englishல் சொல்லலாமா
https://youtu.be/o4NSYeh9jnw

Meaningல் வேறுபட்ட வார்த்தையை கண்டுபிடிங்க
https://youtu.be/CkuIODfoF2g

கொரோநோ பற்றி Englishல் பேசலாம்
https://youtu.be/37gTBXlCALo

Tenses Practice Test
https://youtu.be/pUaV1ZX3wggBest regards,

Wednesday, 15 April 2020

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே மே மாதத்துக்கான பொருள்கள் இலவசம்

அரிசி பெறும் குடும்ப  அட்டைதாரா்களுக்கு மட்டுமே மே மாதத்துக்கான பொருள்கள் இலவசம்


நியாயவிலைக் கடைகளில் மே மாதத்துக்கான பொருள்கள் அனைத்தும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே விலையில்லாமல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

காலையில் 75 பேருக்கும் மாலையில் 75 பேருக்கும் என நாளொன்றுக்கு 150 பேருக்கு பொருள்களை விநியோகிக்க வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கு.கோவிந்தராஜ், அனைத்து மண்டல இணைப் பதிவாளா், சென்னை மண்டல கூடுதல் பதிவாளா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:-

தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மே மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

அதாவது, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், கோதுமை, எப்போதும் வழங்கப்படும் அரிசி ஆகியன அளிக்கப்படும்.

ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருள்களை புதன்கிழமைக்குள் (ஏப்ரல் 15) ஒதுக்கீட்டு அளவில் 100 சதவீதம் நகா்வு செய்து முடிக்க வேண்டும். வரும் 16-ஆம் தேதி முதல் மே மாதத்துக்குரிய பொருள்களை நியாயவிலைக் கடைகளுக்கு பெறும் நடவடிக்கையைத் தொடங்கி ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருள்கள் அந்தந்த நியாயவிலைக் கடையின் ஒதுக்கீடு அளவுக்கு இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

தரமான பொருள்கள்: நியாயவிலைக் கடைகளில் தரம் குறைந்த அத்தியாவசியப் பொருள்கள் பெறப்பட்டிருப்பின், அதனை குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்யாமல் சம்பந்தப்பட்ட கிடங்குக்கு திருப்பி அனுப்பி தரமான பொருள்களை பெற்று விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தகுதியுள்ள அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் எந்தவித புகாருக்கும் இடமின்றி விநியோகம் செய்ய வேண்டும். சரியான எடையில் அனைத்துப் பொருள்களும் அளிக்கப்படுவதை உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

சமூக இடைவெளி கட்டாயம்: நியாயவிலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரா்கள் ஒருவரோடு ஒருவா் நெருங்கி நிற்பதைத் தவிா்க்கும் விதமாக சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்கள் தினசரி அத்தியாவசியப் பொருள்கள் பெற்றுச் செல்ல வருவதால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளைத் தொடா்பு கொண்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கிருமி நாசினி தெளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

டோக்கன்கள் விநியோகம்: அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அவா்கள் நியாயவிலைக் கடைக்கு வந்து பொருள் பெற வேண்டிய நாள், நேரம் ஆகியன குறித்து டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். டோக்கன்களை இளம்பச்சை நிறத்தில் அச்சிட்டு முன்னதாகவே வைத்துக் கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு 150 டோக்கன்கள் வழங்கி, காலை 75 பேருக்கும், மாலை 75 பேருக்கும் வழங்கப்பட வேண்டும். டோக்கனில் நாள் மற்றும் நேரம் குறிப்பது குறித்து பின்னா் அறிவுரை வழங்கப்படும் என்று தனது கடிதத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளாா்.Best regards,

அடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி!

அடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி!
⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔
ஒரே நபர் கொள்கை: அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியே போகும் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்... வீட்டின் ஒவ்வொரு தேவையின்போதும் அவர் ஒருவரே வெளியே செல்ல வேண்டும். மற்றவர்களை அவர் உடன் அழைத்துச் செல்வதையோ, அவருக்குப் பதிலாக மற்றவர்கள் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.

ஒரே ஆடை: அப்படி வெளியே செல்லும் நபர், ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் ஒரே ஆடையை அணிவதை வழக்கமாகக் கொள்ளலாம். அது முழுமையான ஆடையாக இருக்க வேண்டும். இந்த ஆடைகளை மற்ற ஆடைகளுடன் கலந்துவிட வேண்டாம்.

ஒரே வாலெட்: வெளியே செல்லும் நபர், ஒரே வாலெட்டைப் பயன்படுத்த வேண்டும். அதில் இருக்கும் பணம், மீதி சில்லறை போன்றவற்றை வீட்டில் இருக்கும் மற்ற பணம், மற்றும் சில்லறைகளுடன் கலந்துவிடக்கூடாது!

ஒரே பை: ஒவ்வொரு முறை கடைகளுக்குச் செல்லும்போதும் ஒரே பையை எடுத்து செல்லலாம். வீட்டுக்கு வந்த பின்னர் அந்தப் பையை தனியே வைத்துவிடலாம். வீட்டுக்கு வெளியே வைப்பதற்கு வாய்ப்பு இருந்தால், அங்கேயே வைத்துவிடுவது நல்லது!

ஒரே வாகனம்: இன்று பல வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கும் சூழல் இருக்கிறது. ஆனால், இந்த காலகட்டத்தில் வாகனங்களில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் செல்பவர்கள், ஒரே வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும்

ஒரே `ஒருமுறை’: அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்லலாம் என்பதால், ஒவ்வொன்றுக்காகச் செல்லாமல், முறையான திட்டமிடுதலுடன் ஒரே ஒருமுறை மட்டும் வெளியே சென்று வரலாம். அந்த ஒரே பயணத்தில், அனைத்து விதமான பணிகளையும் செய்து முடிக்கும்படி செய்யலாம்!

வெளியே செல்பவர்கள் மொபைல் போனை எடுத்துச் செல்ல வேண்டாம். ஒருவேளை எடுத்துச் சென்றாலும், வெளியே அதைப் பயன்படுத்த வேண்டாம்.

நாம் அதிகம் பயன்படுத்தாத கை அல்லது கை முட்டி கொண்டு கதவுகளைத் திறப்பது, பொத்தான்களை அழுத்துவது போன்ற செயல்களுக்குப் பயன்படுத்துவது சிறந்தது. அந்த கையைக்கொண்டு நம் முகத்தைத் தொடுவதற்கான வாய்ப்பு குறைவு... இதனால் பாதிப்பை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும்.

வெளியே செல்லும்போது, அத்தியாவசியம் என்றாலும்கூட கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். விரைவாகப் பணியை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிட வேண்டும்.

வீட்டுக்கு வந்ததும் செய்ய வேண்டியது: வெளியே செல்ல பயன்படுத்தப்பட்ட ஆடை, பை, சாவி, வாலெட் முதலிய பொருள்களைத் தனியாக வைக்க வேண்டும். கட்டாயம் மற்ற பொருள்களுடன் கலக்கக் கூடாது. வீட்டில் எந்தப் பொருளையும் தொடுவதற்கு முன்பாக கை மற்றும் முகத்தை நன்றாகக் கழுவிவிட வேண்டும். முன்னரே சொன்னது போல், வெளியே செல்லும்போது மொபைல் போனை தவிர்ப்பது நல்லது. மீறி பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டால், அதை வீட்டுக்கு வந்ததும் சானிடைஸரால் துடைத்துவிட்டுப் பயன்படுத்துவது சிறந்தது.


🌹🌹🌹🌹🌹🌹🌹
பகிர்வதில்
 மகிழ்ச்சி.
🌹🌹🌹🌹🌹🌹🌹
Best regards,

Sunday, 12 April 2020

வளைகுடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் கொரோனா சூழலில் 24 மணி நேர உதவி மையத்தை துவங்கியுள்ளது:

வளைகுடாவில் உள்ள இந்திய தூதரகங்கள்  மற்றும் துணை தூதரகங்கள் கொரோனா சூழலில் 24 மணி நேர உதவி மையத்தை துவங்கியுள்ளது:

#IndiaGoverment

குவைத் இந்திய தூதரகம்: + 965 22530600, + 965 66976128
மின்னஞ்சல்: pol1.kuwait@mea.gov.in

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம்: +971 508995583

துபாய் இந்திய துணைத் தூதரகம்: + 971 543090575, + 971 565463903

சவுதி அரேபியா இந்திய தூதரகம்: + 966 546103992, + 966 8002440003
மின்னஞ்சல்:covid19indianembassy@gmail.com

ஓமன்  இந்திய தூதரகம்: + 968 24695981
மின்னஞ்சல்: cons.muscut@mea.gov.in

பஹ்ரைன் இந்திய தூதரகம்: + 973 39415772
மின்னஞ்சல்: cons.bharain@mea.gov.in

கத்தார் இந்திய தூதரகம்: + 974 44255747,
+ 974 55667569, + 974 55647502

இந்திய வெளியுறவு அமைச்சக தொடர்பு எண்:
+ 91 1123012113, + 91 1123014104
 மின்னஞ்சல்: covid19@mea.gov.in
Best regards,

Saturday, 11 April 2020

e-Pass :*(திருமணம்,மருத்துவம்,துக்க நிகழ்வு செல்ல)

*#COVID19

e-Pass :*(திருமணம்,மருத்துவம்,துக்க நிகழ்வு செல்ல)

8099914914 என்ற கைபேசி எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் மின்நுழைவுச் சீட்டிற்கான சம்பந்தப்பட்ட இணைப்பு உங்கள் அழைபேசி எண்ணிற்கு குறுந்தகவலாக வரும் அல்லது நீங்கள் நேரடியாக https://epasskki.in/ என்ற இணைப்பிற்கு செல்லலாம். 

1 . இணைப்பினை கிளிக் செய்து கைபேசி எண்ணை உள்ளிடவும்.
2 . உங்கள் கைபேசியில் வரப்பெறும் ஒருமுறை ரகசிய குறியீட்டு எண்ணை ( OTP ) உள்ளீடு செய்யவும் .   
3 . மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.                     
4 . விண்ணப்ப  படிவத்தினை பூர்த்தி செய்யவும் .
5 . பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.

மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Best regards,

Friday, 10 April 2020

மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்; சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை

 மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்; சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை


புதுடில்லி: நாடு முழுதும் 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டியவை குறித்தும், செய்யக்கூடாத விஷயங்கள் குறித்தும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில வழிமுறைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால், இங்கு, 5,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை, 160ஐ தாண்டி சென்றுகொண்டிருப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள், பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.


இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். எனினும், வைரஸ் மீதான அச்சத்தின் காரணமாக, இவர்களை மக்கள் புறக்கணிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது. இத்தகைய நடத்தைகள், சமூகத்தில் இடையூறுகளை ஏற்படுத்தும்.இந்த இக்கட்டான சூழலில், மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

* பொது சேவைகளில் ஈடுபடுவோரை பாராட்டி, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருக்கவேண்டும்.

* உலக சுகாதார அமைப்பு அல்லது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ தகவலை மட்டுமே பிறருக்கு பகிரவேண்டும்

* சமூக ஊடகங்களில், ஒரு செய்தியை பகிர்வதற்கு முன், அந்த தகவல் உண்மையானதா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும்

* கொரோனா வைரசில் இருந்து மீண்டு வந்தவர்களின் கதைகள் போன்ற நேர்மறையான செய்திகளை பகிரவேண்டும்

* அதே நேரத்தில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிடக்கூடாது

* மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிடக்கூடாது

* மருத்துவ, சுகாதார ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து எந்த விமர்சன பதிவுகளையும் பகிரக்கூடாது

* இந்த வைரஸ் பரவலுக்கு, குறிப்பிட்ட சமூகத்தினர்தான் காரணம் என முத்திரை குத்தக்கூடாது

* சிகிச்சைப் பெற்று வருவோரை, 'கொரோனால் பாதிக்கப்பட்டோர்' என அழைக்கக்கூடாது; 'கொரோனாவில் இருந்து மீண்டு வருவோர்' என அழைக்கவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.Best regards,

Thursday, 9 April 2020

வாட்ஸ்அப்: மூன்று சிவப்பு டிக் இருந்தால் அரசாங்கம் உங்களை கைது செய்யுமா?

வாட்ஸ்அப்: மூன்று சிவப்பு டிக் இருந்தால் அரசாங்கம் உங்களை கைது செய்யுமா?


பிற முக்கிய சமூக ஊடக தளங்களைப் போலவே பலருக்கும் செய்தி மற்றும் பிற தகவல்களின் ஆதாரமாக வாட்ஸ்அப் மாறியுள்ளது. ஆனால், பிற சமூக ஊடக தளங்களைப் போலவே தவறான தகவலும் போலி செய்திகளும் வாட்ஸ்அப் செயலியிலும் பரவலாக உள்ளன.

வாட்ஸ்அப்பில் உள்ள செய்திகளில் ரெட் டிக் இருந்தால் அந்த செய்திகளை அரசாங்கம் கவனித்து வருவதாக ஒரு வைரல் மெசேஜ் வலம் வருகிறது. இந்த தகவலை பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மறுத்துள்ளது.

PIB என்பது அரசாங்க திட்டங்கள், கொள்கைகள் மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களை ஊடகங்களுக்கு பரப்பும் ஒரு அரசு நிறுவனம் ஆகும்.

பயனர்கள் தாங்கள் அனுப்பும் செய்திகளை அரசாங்கத்தால் கவனிக்கப்படுகிறதா அல்லது அனுப்புநருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை பயனர்கள் கண்டறியக் கூடிய புதிய முறையை வாட்ஸ்அப் செயல்படுத்தியுள்ளதாக அந்த வைரல் மெசேஜில் கூறப்பட்டுள்ளது.


மூன்று நீல டிக் - அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது .

இரண்டு நீலம் மற்றும் ஒரு சிவப்பு டிக் - அனுப்புநருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியும் .

ஒரு நீலம் மற்றும் இரண்டு சிவப்பு டிக் - அனுப்புநரின் தரவை அரசாங்கம் திரையிடுகிறது .

மூன்று சிவப்பு டிக் - அரசாங்கம் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது மற்றும் நீதிமன்றத்தில் இருந்து விரைவில் சம்மன் அனுப்பப்படும்.

ஆனால் இது போலியான தகவல் எனவும் , அரசாங்கம் இதுபோன்று கண்காணிப்பு எதையும் செய்யவில்லை எனவும் பி.ஐ.பி மறுத்துள்ளது.

வாட்ஸ்அப் எண்ட்-டு-எண்ட் குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது . எனவே அரசாங்கத்திலோ அல்லது வாட்ஸ்அப்பிலோ உண்மையில் மெசேஜிங் பயன்பாட்டில் அனுப்பப்படும் எந்த செய்திகளையும் படிக்க முடியாது.

குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பில் இருக்க வாட்ஸ்அப் ஒரு சிறந்த இடம் என்றாலும், செய்தி மற்றும் பிற முக்கியமான தகவல்களைப் பெற இது எப்போதும் சிறந்த இடமாக இருந்ததே இல்லை.

வாட்ஸ்அப்பில் பகிரப்படும் செய்திகளில் 80 சதவீதம் போலியாக இருக்கவே வாய்ப்பிருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்ததுBest regards,

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்.....படிக்கும் போது பாருங்கள், உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...

Interesting read......

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்.....படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...

சம்பவம்-1 ......

24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"....மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...

இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"....அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார்...
"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம். சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம். உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை போடவேண்டாம்.

சம்பவம்-2.....

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..

தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....

நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.

சம்பவம்-3.....

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.

வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."

ஒரு கட்டு கீரை என்ன விலை....?""

 "ஐந்து ரூபாய்".....ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான்  தருவேன்.

மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"....."இல்லம்மா வராதும்மா"

அதெல்லாம் முடியாது......மூன்று ரூபாய் தான்

பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு

"மேல ஒரு ரூபாய் போட்டு கொடுங்கம்மா" என்கிறாள்"

முடியவே முடியாது. கட்டுக்கு  மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்......கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு

"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு  பன்னிரண்டு ரூபாயை  வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க" இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்"

"சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..
திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"
என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்.."ஏம்மா ஐந்து ரூபாய்க்கு பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னுவச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு முப்பது ரூபாய் வருதும்மா.....?
என்று கேட்கஅதற்கு அந்த தாய்,

"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.....இது தான் உண்மையில் மனித நேயம் ......

சம்பவம் 4.......

மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.....சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...

திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத்தொடங்கினர். ...கணவர் வேகமாக ஓடினார்.....கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.

மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.....அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...
இருட்டில் எதுவும் தெரியவில்லை...மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது......தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை அழைத்தாள்.....கணவன் திரும்பிப பார்க்கவில்லை. ....அவளுக்கு அழுகையாய் வந்தது.

இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.
பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...
கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்...

அங்கு.... கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு எதுவும் செய்யாமல் மௌனமாக இருப்பதாக தோன்றும்...ஆனால் உண்மையிலேயே அவர் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார். ....தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?....நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்......அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.

வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம். ....எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.

"  Be Positive Always"படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:
படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...Best regards,

COVID19 e-Pass :

COVID19 e-Pass :
8099914914 என்ற கைபேசி எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் மின்நுழைவுச் சீட்டிற்கான சம்பந்தப்பட்ட இணைப்பு உங்கள் அழைபேசி எண்ணிற்கு குறுந்தகவலாக வரும் அல்லது நீங்கள் நேரடியாக https://epasskki.in/ என்ற இணைப்பிற்கு செல்லலாம். 

1 . இணைப்பினை கிளிக் செய்து கைபேசி எண்ணை உள்ளிடவும்.
2 . உங்கள் கைபேசியில் வரப்பெறும் ஒருமுறை ரகசிய குறியீட்டு எண்ணை ( OTP ) உள்ளீடு செய்யவும் .   
3 . மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.                     
4 . விண்ணப்ப  படிவத்தினை பூர்த்தி செய்யவும் .
5 . பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.

மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.Best regards,

பாசப் போராட்டம்

சிறுகதை

பாசப் போராட்டம்

என்னங்க மூட்டை

ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன்

ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார்

ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு

ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க

இதுவே 1400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன்

அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல அதானே

வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன்

அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. 1000 வா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க

எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி போவீங்க.

சைக்கிள் ல போவேன்

ஏன் பாதிலேயே வெய்யில்ல சுருண்டு விழுந்து சாகுறதுக்கா

நல்ல வார்த்தையே பேச மாட்டியா நீ

இப்ப போக வேணாம் நாளைக்கு காலைல போய் குடுத்துக்கலாம்

இல்லல்ல நான் இப்பவே கிளம்புறேன்

போங்க. போலீஸ்காரன் சாமானையும் சைக்கிளையும் புடுங்கி வச்சுகிட்டு, உங்களை தோப்புக்கரணம் போட சொல்லுவானோ, குட்டிக்கரணம் போட சொல்லுவானோ. நடந்து தான் வரப் போறீங்க

நல்ல வார்த்தையே பேச மாட்டியா

அய்யய்யோ துரை போருக்கு போறாரு. நல்ல வார்த்தை சொல்லி அனுப்பனும்.

சரி கிளம்பனும் பழைய சோறு இருந்தா கொடு

அதான் மக வீட்டுக்கு போறீங்கள்ள. உங்க மக சமைச்சு வச்சிருப்பா. அங்கே போய் சாப்பிட்டு வாங்க

சரி நான் கிளம்புறேன்

சொன்னா கேக்க மாட்டீங்க. பட்டா தான் உங்களுக்கு புத்தி வரும்.போலீஸ்காரன் உங்கள அடிச்சு உதைச்சு அனுப்பும்போது தான் நான் சொன்னது ஞாபகத்துக்கு வரும்

அவர் சைக்கிளில் எல்லா மளிகை சாமான்களையும் மூட்டையாக கட்டி, பின்பக்கம் வைத்துக் கொண்டு கிளம்பினார்

ஒரு ஐந்து கிலோமீட்டர் வந்திருப்பார்.அங்கே சாலையில் தடுப்பு அமைத்து ஜிப்போடு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
மனைவி சொன்னது போல் போலீஸ்காரர்கள் சாமானையும் சைக்கிளையும் பிடிங்கி கொள்வார்களோ. தோப்புக்கரணம் போடச் சொல்லி போட்டோ எடுத்து டிவியில் போடுவார்களோ.தெரியாமல் வந்து விட்டோமோ.
பயம் தொற்றிக் கொண்டது.

அவர் அருகில் சென்றபோது ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார்

என்னா பெருசு எங்க கிளம்பிட்டே

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. மக வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

சைக்கிளை ஓரமாக நிறுத்து.  அந்த மூட்டைய தூக்கிட்டு வா

அவ்வளவுதான் 1,400 ரூபாய் மளிகை சாமான் போக போவுது

மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு, மளிகை சாமான் மூட்டையை இறக்கி கீழே வைத்தார்

யோவ் பெருசு அந்த ஜீப்புக்குள்ள இன்ஸ்பெக்டர் உக்காந்திருக்காரு அவரை போய் பாரு

அவர் போலீஸ் வண்டியை நோக்கி நடந்தார். வண்டியில் வாட்டசாட்டமாய் கூலிங் கிளாஸ் போட்ட பெரிய மீசை வைத்திருந்த அந்த இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார்

என்ன பெரியவரே எங்க கிளம்பிட்டீங்க

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. பொண்ணு அங்க இருக்கு.  மாப்பிள்ளை டிரைவரா இருக்காரு. வேலை இல்ல. அதான் கவர்மெண்ட் கொடுத்த ஆயிரம் ரூபாயில கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

ஊர்ல தடை போட்டுருக்காங்க தெரியாதா பெரியவரே

தெரியுங்கய்யா. ஆனா நாலு உசுரு அங்க சோத்துக்கு இல்லாம கஷ்டப்படுமே. அதனாலதான் இத போயி கொடுத்துட்டு வந்துடலாம்னு கெளம்பினேய்யா

என்ன வயசு ஆகுது பெரியவரே உங்களுக்கு

63 வயசு ஆகுதுங்கய்யா

அருகில், நடு சாலையில் பத்துப் பதினைந்து இளைஞர்கள் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இவருக்கு மனசு பிசைந்தது. நடுக்கம் வந்தது.

கான்ஸ்டபிள் வந்தார்.

சார் இந்த ஆள் கொண்டு வந்த மூட்டைய சீஸ் பண்ணிட்டேன் சார்

உன் வயசென்னை அவரு வயசு என்ன ஆளுன்ற

சாரி சார்

அந்த கான்ஸ்டபிள் தள்ளி போய் நின்று கொண்டார்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

இல்லீங்க சார்

கான்ஸ்டபிள் அந்த சாப்பாடு பொட்டலத்துல ஒண்ணு  எடுத்து குடு

ஐயா எனக்கு வேண்டாய்யா. நான் மகள் வீட்டுல போய் சாப்பிடுகிறேன்

 சாலையில் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன் ஏதோ சொல்ல,

சட்டமா பேசறே என்று ஒரு கான்ஸ்டபிள் அவனை முதுகில் அடித்தார்

அங்க போய் கறியும் சோறும் தின்னுங்க.  இது சும்மா பிரிஞ்ஜி தான்.  சாப்பிட்டுக்கங்க. வெயில்ல எப்படி சைக்கிள் மிதிப்பீங்க

சாப்பிட்ட பின் தோப்புக்கரணம் போட சொல்வார்களோ

ஜீப் மைக் கர கரவென்று பேசிக்கொண்டே இருந்தது.

நாளைக்கு காலையில் சீக்கிரமா கிளம்பி போயிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்.
கான்ஸ்டபிள் எடுத்து வந்து கொடுத்த ஒரு பொட்டலத்தையும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் வாங்கிக்கொண்டார்.

பெரியவரே அதோ ரூம் இருக்குல்ல. அங்க உக்காந்து சாப்பிடுங்க.
இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்

பெரியவரே நல்லா சாப்பிடுங்க இன்னொரு பொட்டலம் வேணுமா

இன்ஸ்பெக்டர் கேட்க, அவர் வேண்டாம் என்று தலையாட்டினார்.

சாப்பிட்டு தண்ணீர் குடித்து கை கழுவினார். பரவாயில்லை வயிறு ரொம்பிடுச்சி. இப்ப முட்டி போடலாம். தோப்புக்கரணம் போடலாம்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

சாப்பிடங்கய்யா

ஜீப்ல கொண்டு வந்து உங்க மகள் வீட்டுல விடட்டுமா

ஐயா வேண்டாங்கய்யா நான் போயிடுவேங்கய்யா

சரி இந்த பனியனை போட்டுக்கோங்க. இந்த தொப்பிய போட்டுக்கோங்க. இது வாலண்டியர்ஸ்  போட்டுக்கறது. அரசாங்கம் கொடுக்கிற பணத்தை வாங்கினமா தண்ணி அடிச்சமா தலைகுப்புற விழுந்தமான்னு இல்லாம, நாலு உசுருக்கு சோறு போட சாமான் வாங்கிட்டு போறீங்களே. நீங்க தான் உண்மையான வாலண்டியர்.
 இந்த பனியனை  போட்டுக்கோங்க. பத்திரமா போயிட்டு வாங்க.

அது கனவா நனவா என்று நம்ப முடியாமல் பனியனை வாங்கி மாட்டிக்கொண்டார்.

இன்ஸ்பெக்டருக்கு இரண்டு கை குவித்து வணக்கம் வைத்தார்.
 சைக்கிளில் ஏறி, மகள் வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்.
*
அப்பா எப்படி வந்தீங்க. எதுக்குப்பா சைக்கிள்ல வந்தீங்க. கை கழுவுங்க.

பேரன்கள் ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள்.

பேரன்களை அணைத்து உடனே தள்ளிப் போகச் சொன்னார்.

மகள், அவர் வாங்கி வந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு

என்னப்பா தனியா வந்துருக்கீங்க அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல

இல்லம்மா. இன்னொரு நாளைக்கு  கூட்டிட்டு வரேன். நான் கிளம்பட்டுமா. இங்க இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லம்மா. நான் வீட்டுக்கு போயிடுறேன். உங்க அம்மா தனியா இருக்கும்.

அப்பா சாப்பிட்டு போங்கப்பா. சாப்பாடு ரெடியா இருக்குப்பா

நான் சாப்பிட்டேன்மா

ஏதுப்பா இந்த பனியன் நீங்க வாலண்டியரா இருக்கீங்களா

நடந்த எல்லா விஷயங்களையும் மகளிடம் சொன்னார்

பேரன்களை அழைத்து அவர்களுக்கு காசு கொடுத்து விட்டு கிளம்பினார்

மகள் ஒரு பையோடு வந்தாள்.

அப்பா  பையில கொஞ்சம் பழங்கள் இருக்கு. எடுத்துட்டு போயி அம்மாகிட்ட கொடுங்கப்பா. அம்மாவுக்கு ரோட்ஹெலர் மெஷின் வாங்கினேன். அத கொடுத்துடுங்கப்பா.  அம்மாவுக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கி இருக்கேன் அதையும் மறக்காம குடுத்துடுங்கப்பா.

பையை வாங்கிக்கொண்டார்.

மாப்பிள்ளை எங்கம்மா

அப்பா அரசாங்கத்துல  காய்கறி எல்லாம் வண்டியில் போய் விக்க சொல்லியிருக்காங்க. அதான் ஒரு காய்கறி வண்டியில டிரைவரா போயிருக்காருப்பா

இந்த ஆஸ்துமா மெஷினுக்கும்,'ஆஸ்துமா மாத்திரைக்கும் ஏதும்மா காசு

போன மாசம் சம்பளத்திலேயே இது இரண்டும் வாங்கி வச்சுட்டேன் பா

அவர் சைக்கிளை எடுக்க வீட்டை விட்டு வெளியே வந்தபோது மகள் ஓடிவந்து அவர் சட்டைப்பையில்  இரண்டு ஐநாறு ரூபாய் நோட்டுகளை வைத்தார்

அப்பா எங்களுக்கும் நேத்துதான் அரசாங்கத்திலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. நேத்து நைட்டு உங்க மாப்பிள்ளை சொல்லிட்டாரு, உங்க அப்பா அம்மாக்கு கொடுத்துடு. நம்ம ஏதாவது வேலை செஞ்சி சம்பாரிச்சுக்கலாம். வயசானவங்க என்ன பண்ணுவாங்கன்னு சொன்னாருப்பா.

சரிம்மா. மாப்பிள்ளைய கேட்டேன்னு சொல்லு. பத்திரமா இருங்கம்மா.

அவர் உயிரை தன் மகள் வீட்டில் வைத்து விட்டு மிதிவண்டியில் ஏறி தன் வீட்டை நோக்கி மிதிவண்டியை இயக்க ஆரம்பித்தார்.
- புஷ்பா ராஜ்குமார்

Best regards,