Friday, 16 November 2018

பகிர்தலும்_சுகமே_18

மத்யமரில் பதிவிட்டது
    #மணநாள்

எத்தனை பேசுவாய்
இந்தக் கடற்கரை மணலில்!
மோடியின் அரசியல்
பாரதியின் கவிதைகள்
பக்கத்துவீட்டு நட்புகள்
வாட்ஸ்அப் கதைகள்
லேட்டஸ்ட் மொபைல்கள்
ருசித்த உணவுகள்
பள்ளியில் பண்ணிய குறும்புகள்...

பத்திரமாய் வைத்திருக்கிறேன்
நீ பரிசாய்த் தந்த
கைக்குட்டைகளையும்
காதல் சின்னம் கொண்ட
கீ செயின்களையும்
அதி முக்கியமாய்
உன் பேச்சுக்களையும்

நேற்று நடந்ததைப் போல ஞாபகம்...
முதல் திருமணநாள் இன்று...

கடலை வெறித்துக் கொண்டிருக்கும்
தலைவன் உன் தோளில்,
காதலின் அடையாளச் சின்னமாய்
எட்டு மாதக் கருவைச் சுமந்தபடி
சாய்ந்திருக்கும் இப்பொழுதுகளில்......

நினைத்துக்கொள்கிறேன்
கடைசி வரை உன் காதலியாகவே
இருந்திருக்கலாமோ என .

தொலைந்து போன உன் பேச்சுகள்
விட்டுச்சென்ற
பாதச்சுவட்டின்
மௌனம் புரியாமல் ....

Best regards,