Thursday 15 November 2018

மீள்_பகிர்வு....

#மீள்_பகிர்வு....

1⃣ தொழிற்சங்கம் என்றால் என்ன .?
              தொழிலாளர்கள் தங்களுக்குள் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு தனி நபராக இல்லாமல் கூட்டாக இணைந்து சரி செய்வது, நமக்கான உரிமைகளைத் தர மறுக்கும் போது கூட்டாக இணைந்து உரிமைகளைப் பெறுவது, வேலை நேரத்தை உறுதி படுத்துவது, நமது தாய்/தந்தை சுகமில்லாமல் இருக்கும் காலத்தில் நாம் அருகில் இருந்து கவனிக்க நேருவது, இது போன்ற பல விசயங்களுக்கு தனி நபர் கோரிக்கையாக இல்லாமல் ஒட்டுமொத்த தொழிலாளர் தரப்பு கோரிக்கையாக நிர்வாகத்திடம் முன்வைப்பது என்பனவாகும்.
2⃣ எனக்கு தற்பொழுது எந்த பிரச்சனையும் இல்லை எனவே எனக்கு தொழிற்சங்கம் தேவை இல்லை
நாம் வேலை பார்த்து சம்பாரிப்பது, இன்றைக்கு சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, எதிர்காலத்திற்கும் சேர்த்து தான். குறைந்த பட்சம் எதிர்காலத்திற்கு சேர்த்து வைக்கனும் இல்லைனா ஊதாரினு சொல்லப்படுவோம். குறைந்த பட்சம் நாம் தொழிற்சங்கமாய் இணைந்து செயல்பட்டால் தான் இக்காலமும்,எக்காலமும் பிரச்சனை வராமல் இருக்கும். இன்றைக்கு பிரச்சனை இல்லை எனவே தொழிற்சங்கம் தேவையில்லை என்றெண்ணுபவர்களுக்கு எதிர்காலம் கேள்விக்குறியே.?
3⃣ எனக்கு இப்பொழுது தான் திருமணம் ஆனது/ஆகப்போகிறது, எதுக்குங்க பிரச்சனை.
              உங்களுக்கு திருமணம் ஆனது/ஆகப்போவது மகிழ்ச்சியான விசயம். இந்த வேலை கிடைத்தப் பிறகு தான் திருமணம் உங்களுக்கு நடந்திருக்கிறது. இந்த வேலையை தக்க வைக்கணும்னா தனது வாழ்க்கையின் பகுதியை சங்கத்திற்கு ஒதுக்குவது, திருமண வாழ்க்கைக்கு ஒதுக்குவது,சமூகத்திற்கு ஒதுக்குவது என்று இதையெல்லாம் ஒன்றிணைத்து வாழ வேண்டும். இதில் ஏதாவது ஒன்றிற்காக மட்டும் நாம் வாழ்வோமேயானால் இவ்வணைத்தையும் இழக்க நேரிடும்.
4⃣ நான் ஒரு casual ஆன ஆள். நான் என் வாழ்க்கையில் எந்த வித commitment ம் வைத்துக் கொள்ள மாட்டேன்.எனவே தொழிற்சங்கம் என்பது என்னைப் பொருத்த வரையில் ஒரு சுமை,எனக்கு அது தேவையில்லை
            நம் வாழ்க்கை எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றால் நம் உழைப்பு, அதனால் ஈட்டப்படும் பொருள்(eg.சம்பளம்). இது தான் அடிப்படை(base). இந்த அடிப்படையில் ஒரு விரிசல் விழுந்தால் கூட ஒட்டுமொத்த வாழ்க்கையும் சுமையாகி விடும். இந்த அடிப்படை பலமாக அமைய தொழிற்சங்கமே தீர்வு..


Best regards,