நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் பத்திரிக்கை இவ்வளவு ஆர்வம் அவசரம் காட்டுவது ஏன்? உண்மை தான் என்ன? ஆளுநர் மாளிகை தான் காரணமா?{கேள்வி: பாலா முருகன்}
1.காமராஜர் யுனிவெர்சிட்டி , MGRயுனிவெர்சிட்டி என்று தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் கடந்த 15 வருடங்களில் நீங்கள் எடுத்துப் பார்த்தால் ஒன்று அதிமுக இல்லை திமுக அனுதாபிகள் தான் பதவியில் இருந்திருப்பர். பொதுவாகவே இது ஆளுநர் அதிகார வட்டத்தில் வந்தாலும் - ஆளும் அரசுகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது.
2.உதவி பேராசிரியர் வேலைக்கு 15-20லட்சம் வரை லட்சம் கொடுக்க வேண்டும் , லேப் கிளர்க் வேலை என்றால் கூட 3-4லட்சம் லட்சம் கொடுத்து தான் வேலையைக் கைப்பற்றுகிறார்கள் - பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவிக்கு 2கோடி , 4கோடி என்று பேரம் பேசி தான் விற்பனை செய்யப்படுகிறது. இது தான் உண்மை. இதைத் தாண்டி பேப்பர் சேசிங்க் ஆரம்பித்துக் கூடுதல் மதிப்பெண் வரை அனைத்திற்கும் இங்கே வழியுண்டு. {காசு இருந்தால் என்ன வேண்டுமானாலும் இங்கே சாதிக்கலாம் என்ற ஒரு கேடுகெட்ட நிலை உருவாக்கிய பெருமை திராவிட கட்சிகளை சாரும்.}
இப்போது விசயம் "நிர்மலாதேவி இரண்டாம் ஆண்டு படிக்கும் பெண்களைத் தவறான வழிக்கு அழைத்தார் என்பது".
3.நிர்மலா தேவி விவகாரமான ஆடியோ வெளியானது 2018 மார்ச் மூன்றாவது நான்காவது வாரங்களில் - அவர் கைது செய்யப்பட்டது 2018 ஏப்ரல் 16ஆம் தேதி. இன்று ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றது 2017 அக்டோபர் 6ஆம் தேதி - அதை அடுத்து அவர் இங்கே வந்து செட்டில் ஆகி நிர்வாகத்தைத் தொடங்க டிசம்பர் ஆகிவிட்டது. {பொதுவாக 30-45 நாட்கள் தேவை ஆளுநர் மாளிகையில் புதிய ஆளுநர் குடியேறி பணிகளை முழுமையாகத் தொடங்க. ரோசய்யா அவர்கள் பதிவு விலகி சுமார் 1.5ஆண்டுகள் கழித்து தான் தமிழகத்திற்கு முழு நேர ஆளுநர் வருகிறார் என்பதால் அது இன்னும் வேலைப் பழு அதிகம்.}
4.இந்த நிலையில் வந்து 2 மாதங்களில் இதை ஆளு நர் செய்கிறார் என்று கூச்சமே இல்லாமல் விசயத்தை அப்படியே தூக்கி அந்த 79 வயது மனிதர் மீது போட்டு எதோ அவர் தான் ஆள் நியமனம் செய்து இந்த வேலையைச் செய்வது போல் தொடர்ந்து அவசரமாக , ஆர்வமாக நக்கீரன் பத்திரிக்கை எழுதுவது எனக்குத் தெரிந்து உண்மையான குற்றவாளியை காப்பாற்ற வேலை செய்வது போல் தான் தோன்றுகிறது. பல்கலைக்கழகத்தின் அனைத்துக் குற்றங்களுக்கும் காரணமே திராவிட கட்சிகள் நியமனம் செய்யும் இந்த Vice Chancellors தான் முக்கிய காரணம்.{Vice Chancellors தான் அனைத்து ஊழல்களில் கிடைக்கும் பணத்தையும் கொண்டு போய் திராவிட கட்சி தலைமைக்கு கொடுத்து அதை பங்குபிறிப்பவர்கள். இவர்களுக்குத் தெரியாமல் நிர்வாகத்தில் எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை என்பது ஊர் அறிந்த ரகசியம்.}
5.இந்தக் காமராஜர் பலகலைக்கழகத்தின் Vice Chancellors யார் ???? கடந்த பத்து வருடங்கள் யார் என்று கொஞ்சம் தேடுங்கள்
இப்போது ஆளுநர் நியமனம் செய்த செல்லதுரை நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது Vice Chancellors பதவி காலியாக உள்ளது. இதற்கு முன் இருந்தது யார்??? கல்யாணி மதிவாணன் அவர்கள் - இவர் திமுக உருவாகக் காரணமான 5ம் பெரும் தலைவர்களில் முக்கியமானவரான இரா. நெடுஞ்செழியன் அவர்களின் சொந்த மருமகள். அவருக்கு முன் யார் Vice Chancellors??? கற்பக குமாரவேல் இவர் யார் ? இவர் சின்னக் கலைஞர் என்று திமுக கட்சி ஆட்களால் அழைக்கப்பட்ட கோசி மணி அவர்களின் மருமகன். அதற்கு முன் Vice Chancellors இருந்தவர் யார்??? மருதமுத்து இந்த ஆள் யார் தெரியுமா???? திமுகவில் அழகிரி அவர்கள் உச்சத்தில் இருந்த போது நேரடியாகச் சென்று காலில் விழுந்து ஆசி வாங்கிவிட்டு வந்த உத்தமன்.
Vice Chancellors தாண்டி நிர்வாகத்தில் எவர் உள்ளே வரமுடியாத அளவு பலமான இந்தப் பதவிக்கு கடந்த வரலாறுகளில் ஏறக்குறைய திமுக அடிமைகள் தான் பதவிக்கு வந்து சென்றனர். {இதில் கல்யாணி மதிவாணன் அதிமுக திமுக இரண்டுமே கூட ஆதரவு உண்டு என்பது போல் தான் செய்தி} இப்போது என்ன செய்வது???? இவ்வளவு காலம் ஒரு பல்கலைக்கழகத்தை அதன் நிர்வாகத்தை இஞ் இஞ்சாக கொள்ளை அடித்து நாசம் செய்த திராவிட கட்சிகள் எவருக்கும் இங்கே நடக்கும் இந்த நிர்மலாதேவி விவகாரத்தில் பங்கு இல்லை - 2 மாதம் முன் வந்த 79 வயது மனிதர் தான் நேரடியாகக் காரணம்????
இதெல்லாம் கேட்க நகைச்சுவையாக இல்லையா??? பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் என்றால் என்ன என்று தெரியாதவனுக்கு வேண்டுமானால் நக்கீரன் எழுதிவரும் நிர்மலாதேவி தொடர்கதைகள் உண்மை போல் தோன்றலாம் ஆனால் நக்கீரன் பத்திரிக்கை எவரையோ காப்பாற்ற மொத்த விவகாரத்தையும் மக்கள் மத்தியில் வலுக்கட்டாயமாக்க திசைமாற்ற முயற்சிக்கிறது என்பது தான் எனக்குத் தெரிந்து உண்மை. {எழுதும் அனைத்துமே வட்டாரங்கள் சொன்ன தகவல் என்ற அடிப்படையில் நக்கீரன் எழுதி வருகிறது. இது கருத்து சுதந்திரம் என்று பெயரில் அப்படி நடக்கிறது என்று தகவல் வருகிறது இப்படி நடக்கிறது என்று தகவல்கள் வருகிறது என்று இவர்கள் இஷ்டத்திற்கு எழுதி பரப்புவது இங்கே நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளுக்கு மிக சர்வசாதாரணம்.}
நிர்மலாதேவி அவர்கள் ஜாமினில் வெளியே ஏன் வரவில்லை என்று கவலைப்படும் ஒரே கட்சி தலைமை யார்???? திமுக தலைமை தான் நிர்மலாதேவிக்கு ஏன் பிணை கிடைக்கவில்லை என்று கருத்து கூறியவர். இப்போதைக்கு நிர்மலாதேவி வெளியே வந்தால் அவர் தற்கொலை தான் செய்யவேண்டும். அந்த அளவுக்கு ஒரு கூட்டம் வெளியில் காத்திருக்கிறது. எனவே பாதுகாப்பாக அவர் உள்ளேயே இருந்து எந்த வெறிபிடித்த ஓநாய் அந்த வேலையைச் செய்ய சொன்னது என்ற உண்மையை உடைத்து மொத்த பல்கலைக்கழகங்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் CBCID .
ஒரு பெரும் குற்றத்திற்கு முக்கிய சாட்சி சிக்கிவிட்டது - ஒன்று அந்தச் சாட்சி கொலை/தற்கொலை செய்யவேண்டும். இல்லை வழக்கை மக்கள் மத்தியில் திசைதிருப்ப தேவையான ஏற்பாடுகள் செய்யவேண்டும். இது திராவிட கட்சிகளின் பொதுவான அரசியல்பாணி. என்னைக் கேட்டால் இந்த நக்கீரன் விடும் கதைகளை எல்லாம் நம்புவதை விடக் கொஞ்சம் CBI வழக்கை முடிக்கும் வரை நீங்கள் அனைவரும் அமைதியாக இருக்கலாம். வேண்டுமானால் பாருங்கள் இந்தத் திராவிட கட்சிகள் எவனாது மாட்டுவான் - அப்போது இதே நக்கீரன் அதை "பிஜேபி உதவியுடன் ஆளுநர் மாளிகை தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தப்பிக்கபார்க்கிறது என்று எழுதுவார்கள்" பொறுத்திருங்கள்.
அப்படி குற்றவாளி ஆளுநர் மாளிகையாக இருந்தால் கட்டாயம் கடும் தண்டனை கொடுக்கப்படவேண்டும். இல்லை என்றால் நக்கீரன் பத்திரிக்கை குழுமத்தை முழுவதும் தடை செய்ய வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொய் செய்திகள் குறிப்பிட்ட கட்சிக்காகக் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகப் பரப்பியதற்காக.
இந்த பல்கலைக்கழகத்தின் நடந்த நடக்கும் ஊழல்கள் முறைகேடுகள் அனைத்தும் வெளியே வந்தால் திராவிட கட்சிகள் பெரிய அவப்பெயரை கொண்டு சேர்க்கும் என்பதால் - ஆளுநர் மாளிகை பத்திரிக்கை பத்திரிக்கையாளர்கள் மூலம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மிரட்டப்படுவதாகவே நான் கருதுகிறேன். ஆய்வுக்குப் பல அரசு நிர்வாகிகளுடன் செல்லும் ஆளுநர் பாத்ரூம் எட்டிப் பார்த்தார் என்று எழுதும் அளவுக்கு இங்கே பத்திரிக்கை தரம் இருக்கு என்றால் இங்கே எதுவும் சாத்தியம்.
பல்கலைக்கழகங்கள் பற்றி நிர்வாகம் பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன் "தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகமும் கெட்டு நாசம் ஆனதற்கு முழுகாரணம் திராவிட கட்சிகள் - ஒரு தவறு இங்கே நடக்கிறது என்றால் கட்டாயம் இவர்கள் பங்கு இல்லாமல் இருக்கவே இருக்காது என்பது என் நம்பிக்கை".
-மாரிதாஸ்
Best regards,
Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com