ஒரு உண்மை சம்பவம்.
சமீபத்தில் நமது கட்சியை சார்ந்த எனது உறவினர் புதிதாக இரு சக்கர வாகனத்தை மதுரையில் உள்ள ஒரு ஷோரூமில் வாங்கியிருந்தார்...வண்டி டெலிவரி எடுத்து நமது கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார்...நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து விட்டு அதன் விலை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்...அப்போது அவர் ஆன் ரோடு விலை rs 58500/- ஆகி விட்டது என கூறி பையில் இருந்த invoice யை காட்டினார்...அதில் வண்டியின் அடக்க விலை வரி உட்பட ரூ 41000/- என போட்டு இருந்தது..மீதம் ரூ 17500/ க்கு கணக்கு கேட்டேன்...அவர் 8700/ ரூபாய் இன்சூரன்ஸ் எனவும், சாலை வரி 6800/- எனவும் மீதம் extra fitting க்காக எனவும் சொன்னார்....
நான் உடனடியாக RTO அலுவலகம் அழைத்து புதிய வாகன பதிவு பற்றி விசாரித்தேன், அவர்கள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது...அதாவது நாமே நேரடியாக வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம் அதற்கான சாலை வரி மற்றும் பதிவு தொகையை ஆன்லைனில் செலுத்த முடியும் மேலும் அந்த தொகை வாகனத்தின் இன்வோய்ஸ் தொகையில் வெறும் 8 சதம் செலுத்தினால் போதும் மேலும் பதிவு தொகை வெறும் 300 ரூபாய் மட்டும் தான் என்பதை அறிந்தோம்...அடுத்த படியாக இன்சூரன்ஸ் பற்றி நண்பர்களிடம் விசாரித்தோம் அவர்கள் சொன்னதும் வியப்பாக இருந்தது...அதாவது நாம் வாகனம் வாங்கும் போது நம்மை ஷோரூமில் இருக்கும் விற்பனை பிரதிநிதிகள் அவர்களிடம் tie-up யில் இருக்கும் இன்சூரன்ஸ் கம்பெனியை வலுக்கட்டாயமாக பரிந்துரைத்து அதிக பணத்தை பெற்று வருவதும், அதே காப்பீட்டு திட்டத்தை குறைந்த விலையில் பிற நிறுவனங்கள் கொடுப்பதையும் அறிந்தோம்....
இந்த பகல் கொள்ளையை தடுக்கும் பொருட்டு புதிய வாகனம் வாங்கிய அந்த உறவினரையும் அழைத்துக்கொண்டு நேராக அந்த இரு சக்கர விற்பனை மையத்தை அடைந்தோம்...
அங்கிருந்த விற்பனை மேலாளரிடம் மேற்படி அதிக தொகை வசூலித்த விபரத்தை தெரிவித்து, அதனை திரும்ப தர கூறினோம்...அவரும் rules எல்லாம் சொல்லி பார்த்தார்...பிறகு நாங்கள் நமது கட்சியின் ஊழல் ஒழிப்பு பாசறை பற்றி தெரிய படுத்தி அங்கு நடக்கும் insurance முறைகேடு RTO பதிவிற்கு அதிக தொகை வசூலிக்கும் அந்த நிறுவனத்தின் மீது எடுக்க போகும் நடவடிக்கை பற்றி இதமாக தெரிவித்து விட்டு அலுவலகம் வந்துவிட்டோம்....
அரைமணி நேரத்தில் அந்த மேலாளர் தொலை பேசியில் எனது எண்ணிற்கு அழைத்து வருத்தம் தெரிவித்ததுடன் அதிக படியாக பெற்ற ரூபாய் 6800/- பெற்று செல்லுமாறு கூறினார்...
பணம் திரும்ப கிடைத்தது எனது உறவினருக்கு மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது...
இது அனைத்து இடங்களிலும் நடக்கிறது...யாரும் கண்டு கொள்வதில்லை..புதிய வாகனம் வாங்கும் பரவசத்தில் அல்லது எப்படி முறையிடுவது என்ற பயத்தில் கடந்து விடுகிறோம்....
இதை படிக்கும் அனைவரும் நண்பர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்...நாம் தமிழர் கட்சியில் பயணித்தாலும் பயணிக்க வில்லை என்றாலும் பரவா யில்லை...யாருக்கேனும் உதவி தேவை என்றால் அழைக்கவும்..7708966452
மாற்றம் என்பது சொல் அல்ல செயல்.
நாம் தமிழர்.
Best regards,

Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com