Saturday, 28 December 2013

மரணம் பற்றிய மா்மங்கள்



உடலும் உயிரும்

நமது உடம்புக்குள்ளே உயிர் இருக்கிறது. இந்த உயிரைச் சுற்றியே ஐந்து உடம்புகள் மூடிக் கொண்ருக்கின்றன. அவற்றை 1. தூல சரீரம் 2. சூக்கும சரீரம் 3. குண சரீரம் 4. கஞ்சுக சரீரம் 5. காரண சரீரம் என்பா். இவற்றை 1. அன்னமய கோசம் 2. பிராணமய கோசம் 3. மனோமய கோசம் 4. விஞ்ஞானமய கோசம் என்றும் சொல்வது உண்டு. கோசம் என்றால் உறை என்று பொருள்.

1. அன்னமய கோசம்
நம் கண்களுக்குத் தெரிகிற உடம்பைத் தூல சரீரம் அல்லது அன்னமய கோசம் என்பா். இந்த உடம்பு உணவினால் கட்டப்பட்ட வீடு. தோல், மாமிசம், இரத்தம், எலும்பு ஆகியவற்றின் தொகுதி இது! பிறப்புக்கு முன்போ, இறப்புக்குப் பின்போ இந்த உடம்பு கிடையாது. இது நிலையற்றது. இதற்கு உறுதியான குணம் இல்லை. அறிவும் இல்லை. இந்த உடம்பையே பலா் “நான்” என்று அறியாமையால் கருதிக் கொண்ருக்கிறார்கள்.

2. பிராணமய கோசம்
வாக்கு, கைகள், கால்கள், எருவாய், கருவாய் என்ற ஐந்த தொழிற்கருவிகளுடன் பிணைக்கப்பட்ட காற்று மயமான உடம்பு பிராணமய கோசம் எனப்படும். இது காற்றால் அமைந்த உருவம். இது போவதும், வருவதுமாய் இருப்பது. காற்றைப் போல உள்ளும் புறமுமாய் இருப்பது இந்தக் காற்றுடம்பை ஆட்டி வைப்பது மனம்.

3. மனோமய கோசம்
ஐம்புலன்களுடன் மனம் என்ற மேலும் ஒரு கருவியுடன் கூடிய உடம்பு மனோமய கோசம். எண்ணங்களை உற்பத்தி செய்வது இந்த உடம்பே! உலகப் பொருள்களில் ஆசையைத் தூண்டி பாவ புண்ணியங்களைச் செய்ய வைத்து மீண்டும் பிறவியில் வந்து விழுவதற்குக் காரணம் இந்த மனமாகிய உடம்பே. இந்த மனம் அழிந்தால் எல்லாம் அழியும்.

பிறவிக்குக் காரணமாயும், பிறவியிலிருந்து விடுபடக் காரணமாயும், இருப்பது இந்த மனமே. இந்த மனம் இராஜசரம், தாமசரம் என்னும் குணங்களால் அழுக்கு அடையும். சத்துவ குணத்தால் தூய்மை அடையும்.

4. விஞ்ஞானமய கோசம்
ஐம்புலன்களுடன் புத்தி என்ற கருவியும் கூடியது விஞ்ஞான மய கோசம். ஒரு பொருளை அறிவதும், செயல் புரிவதும், இதற்கு நான்தான் கா்த்தா என்று சொல்லிக் கொள்ள வைப்பதும் இந்த உடம்பே ஆகும்.

5. ஆனந்தமய கோசம்
பரமாத்மாவின் பிரதி பிம்பமாய் இருப்பது ஆனந்தமய கோசம் ஆகும். தனக்குச் சுகம் கிடைக்கும்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் சலனமற்றுத் தூங்கும் போதும், அனைத்துப் புலன்களும் அடங்கிய நிலையில் பேரானந்த நிலை ஒன்று உள்ளது அல்லவா? அந்த ஆனந்தத்தை அனுபவிப்பது ஆனந்தமய கோசமே ஆகும்.

யோகிகளும், ஞானிகளும் எப்போதும் தியானத்தில் தன்னை மறந்த லயத்தில் இருப்பார்கள். அவர்களின் மற்ற உடம்புகள் எல்லாம் அடங்கிய நிலையில்இந்த ஆனந்த மய கோசம் என்ற உடம்போடுதான் இருப்பார்கள்.

வேதாந்திகள் சொல்வது

மனிதனுக்கு இருப்பது மூன்று உடம்புகள்தான். அவை 1. தூல சரீரம் 2. சூக்கும சரீரம் 3. காரண சரீரம். இந்த மூன்றையும் சுற்றிப் போர்வை போல அமைந்தவை ஐந்து கோசங்கள் என்பது வேதாந்திகள் கருத்து.

தூல சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது அன்னமய கோசம். சூக்கும சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது 1. பிராணமய கோசம் 2. மனோமய கோசம் 3. விஞ்ஞான மய கோசம்

காரண சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது ஆனந்தமய கோசம்.

விஞ்ஞான மருத்துவம் மேற்கண்ட பாகுபாட்டை இன்று வரை உணரவில்லை.

மரணத்துக்குப் பிறகு உயிர் தூல சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரம், காரண சரீரம் என்ற இரண்டுடன் பயணத்தைத் தொடா்கிறது. பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி பல்வேறு பிறவிகளையும், உலகங்களையும் அடைந்து அலைகிறது.

உயிர் என்றைக்குக் காரண சரீரத்தை உதறுகிறதோ அப்போதுதான் நிரந்தர விடுதலை!

அதுவரை மீண்டும் பிறப்பு! மீண்டும் இறப்பு! இப்படிச் செத்துச் செத்துப் பிறப்பதுதான் உயிரின் பயணம். இது ஒரு நீண்ட நெடிய பயணம்.

எண்ணங்களாலும், ஆசைகளாலும் நிரம்பியது காரண சரீரம்.

மனம் மற்றும் உணா்ச்சிகளின் இருப்பிடம் சூக்கும சரீரம்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாலும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற புலன்களின் அறிவாலும் செயல்படுவது தூல சரீரம்.

மனிதன் ஒன்றை ருசிக்கும் பொழுது, முகரும் பொழுது, தொடும் பொழுது, கேட்கும் பொழுது, பார்க்கும் பொழுது தூல சரீரத்தினால் செயல்படுகிறான்.

கனவு காணும் பொழுது, கற்பனை செய்யும் பொழுது, ஒன்றைத் தீா்மானிக்கிற பொழுது சூக்கும சரீரத்தினால் செயல்படுகிறான்.

ஒருவன் யோகம், தியானம், தவம் போன்ற ஆன்மிகப் பயிற்சிகளில் இருக்கும் போதும், எண்ணும்போதும் காரண சரீரத்தில் செயல்படுகிறான்.

கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மட்டுமே காரண சரீரம் பற்றி உணர முடியும். காரண சரீரம் மிக மிக மெல்லியது. மிக அதிகமான படைப்பாற்றல் கொண்டது.

காரண சரீரம் இறைவனது படைப்புக்குத் தேவையான 35 எண்ணங்களின் சோ்க்கையால் ஆனது என்பா்.

சூட்சும சரீரம் 19 மூலப் பொருள்களால் ஆனது என்பா்.

தூல சரீரம் 16 மூலப் பொருள்களால் ஆனது என்பா்

மரணத்தின்போது, இந்த உயிர் தூல சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரத்தோடும் காரண சரீரத்தோடும் வெளியேறுகிறது.

அவ்வாறு வெளியேறும் போது பந்தபாசம், ஆசைகள், ஆழ்ந்த நினைப்புகள், நட்பு, காதல், பழிவாங்கும் உணா்ச்சி, நிறைவேறாத ஆசைகள் முதலிய வாசனைகளோடுதான் வெளியேறுகின்றது.

சூக்கும சரீரம் – விளக்கம்

தூல சரீரத்திலிருந்து சூக்கும சரீரம் பிரிந்து செல்லும் ஆற்றல் பெற்றது. அது மின்சாரம் போல அதி வேகத்துடன் செல்லும் சக்தி படைத்தது. சூக்கும சரீரம் வெளியில் உலவுகிறபோது தூல சரீரத்தின் உருவத்துடனும் அமைப்புடனும் உலவக் கூடியது என்கிறார் மறைமலைஅடிகள்.

ஆனால் ஒரு வித்தியாசம். சூக்கும சரீரத்தின் கால்கள் மட்டும் நிலத்தில் படாது. அதனால்தான் பேய்களின் கால்களும், தேவா்களின் கால்களும் நிலத்தில் படுவதில்லை என்கிறார் அவா்.

அருள்திரு அடிகளார் அனுபவம்

ஒரு முறை தனக்கு இளமைக் காலத்தில் ஏற்பட்ட அனுபவம் ஒன்றினை அருள்திரு அடிகளார் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் அவா்களிடம் சொன்னார்கள்.

அடிகளார் தியானத்தில் இருக்கும்போது, தன் சூக்கும சரீரம், தூல சரீரத்தை விட்டுப் பிரிந்தது. நேரே அன்னையின் கருவறை நோக்கிச் சென்றது. அப்போது பூட்டியிருந்த கதவுகள் தானே திறந்து கொண்டன. சூக்கும சரீரம் அங்கிருந்த ஒரு தட்டில் கற்பூரம் வைத்துத் தீபாராதனை செய்து விட்டு மீண்டும் திரும்பி வந்து தூல சரீரத்துடன் இணைந்து கொண்டது.

இது போன்ற அனுபவம் ஞானியா்களுக்கு மட்டுமில்லாமல் சாதாரண மனிதா்கள் சிலருக்கும் நோ்வது உண்டு.

புலவா் சொக்கலிங்கம் அனுபவம்

ஒருமுறை புலவா் சொக்கலிங்கம் அது போன்ற அனுபவம் தனக்கும் கிடைத்தது என்று என்னிடம் சொன்னார்.

“ஒரு விடியற்காலம் நான் படுத்திருந்தபோது என்னிடமிருந்து என்னைப் போலவே ஒரு உருவம் உடம்பிலிருந்து வெளியேறியது. எங்கள் காந்திநகரைச் சுற்றி வந்தது. வீடு திரும்பும்போது பால்காரன் வந்துவிட்டான். அவன் உடம்பு பட்டுவிடுமோ என்ற அந்த உருவம் அஞ்சியது. என் உடம்பும் அஞ்சியது. இரண்டு சரீரத்திலும் ஒரே விதமான உணா்ச்சி! இது சற்றே வித்தியாசமான அனுபவம்” என்றார்.

பரமஹம்சர் யோகானந்தா் இதுபோன்ற அனுபவங்களை ஒரு யோகியின் சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.

உடலில் இருந்து வெளிப்படும் உயிர் அல்லது ஆன்மா அல்லது ஆவி எந்த உடலிலிருந்து பிரிந்ததோ அந்த உடம்பின் உருவத்துடனேயே இருக்கும். இரண்டாவதாக உடலிலிருந்து பிரிகிற உயிர் அல்லது ஆத்மா அல்லது அந்த ஆவி குறிப்பிட்ட எந்த வடிவும் பெறாமலும் இருக்கும்.

இரண்டாவது நிலையில் அந்த ஆவி பனிப்படலம் போலவோ, மின்சாரப் பொறி போலவோ தோற்றம் அளிக்கும் என்கிறார்.

இந்தத் தோற்றங்கள் புவியீா்ப்பு சக்தியால் பாதிக்கப்படுவதில்லை. பூதஉடல் எங்கே இருக்கிறதோ அதற்கு அருகாமையிலேயேதான் சுற்றிச் சுற்றி வரும் என்று சொல்கிறார்கள்.

இந்தச் சூக்கும சரீரங்கள் காலத்தையும், தூரத்தையும் வென்று வேகமாகச் செல்லும் சக்தி படைத்தவை. சுவா்கள் போன்ற தடுப்புகளை ஊடுருவிக் கொண்டு உள்ளே நுழையக் கூடியவை. இந்த சூட்சும சரீரங்களிலிருந்து தானாகவே ஒளி கசியும் என்கிறார்கள்.

இன்னும் சிலா் சூட்சும சரீரம் தூல சரீரத்திலிருந்து பிரிந்து எங்கே சென்றாலும் ஒரு நூலிழையினால் தூல சரீரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் என்றும் இது குழந்தை தாயுடன் நஞ்சுக் கொடியினால் இணைக்கப்பட்டிருப்பது போல இருக்கும் என்று சொல்கிறார்கள்.

உடல் மரணம் அடையாமல் சூட்சும சரீரம் பிரிந்து செல்கிறபோது மட்டும்தான் இந்த இணைப்பு இருக்கும். ஆனால் மரணத்தின் போது சூட்சும சரீரம் பிரிந்து செல்கிறபோது இந்த இணைப்பு முற்றிலுமாக அறுந்து போகும் என்று சொல்கிறார்கள்.

இவை மேனாட்டு அறிஞா்கள் தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ள சில கருத்துக்கள் ஆகும்.
fax:
your@email.com
http://www.yoursite.com

Friday, 27 December 2013

உடல் மொழி


உடல் மொழி

1.மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது.
2.மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
3.மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
4.நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.
5.நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.
6.பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.
7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.
8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.
9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.
10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

fax:
your@email.com
http://www.yoursite.com

Saturday, 21 December 2013

இதற்கு பதில் தர முடியுமா..?

இதற்கு பதில் தர முடியுமா..?

தமிழ் பெண்களுக்கு மட்டும் இந்த நிலைமையா..?

அமெரிக்கா அரசு "தேவ்யாணி " ஆடை அகற்றி சோதனை செய்த அமெரிக்கா மீது "காங்கிரசு" (மத்திய அரசு) இவ்வளவு அதிரடி நடவடிக்கை எடுக்க முடியும்.

எனது ஈழ சகோதரியை இலங்கை இராணுவம் ஆடை கழற்றி கற்பழித்தது.இதற்கு இலங்கை மீது கண்டனம் கூட இல்லை.

காங்கிரசு அரசே..! மனம் கொதிக்கராது.ஐம்பது மயிலில் இருக்கும் இலங்கையில் இருந்து எனது சகோதரி கதறல் மட்டும் உனக்கு கேட்க வில்லை.ஆயிரம் மயிலில்அமெரிக்காவில் இருக்கும் தேவ்யாணி கதறல் கேட்கிறாதா..?

இந்த பதிவு எனது குமுறல் " எனது தமிழ் சகோதரிகளுக்கு உயிர்களுக்கு மதிப்பு இல்லையா..? "

எனது தமிழ் சகோதரின் நிலைமை நினைத்து எனது "கண்ணீர் உடன் " இந்த பதிவு.

காங்கிரசு அரசே..! உனக்கு காலம் தான் பதில் தரும்.

Friday, 20 December 2013

ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை இப்படியும் பெண்களா? உறவுக்கு அழைத்து கொலை செய்த கொடூரம் !!

ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை இப்படியும் பெண்களா? உறவுக்கு அழைத்து கொலை செய்த கொடூரம் !!
நியூசிலாந்தில் இந்திய வாலிபர் ஒருவரை உறவுக்கு அழைத்துச் சென்ற இரு இளம் பெண்கள் அவரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் கிஸ்போர்ன் நகரில் வசித்து வருபவர் அமந்தீப்சிங்(22). திருமணமான இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் திகதி கிஸ்போர்ன் நகரின் வழியாக காரில் சென்றுக் கொண்டிருந்த போது சாலையோரமாக நடந்து சென்ற கிரிஸ்டல் போக்(25) என்ற பெண் அமந்தீப் சிங்கிடம் லிப்ட் கேட்டுள்ளார்.

அவரும் சம்மதித்து அந்த பெண்ணை காரில் ஏற்றிக் கொண்டார். போகும் வழியில் இருவருக்கும் இடையில் நடந்த பேச்சில் கிரிஸ்டலை, அமந்தீப் சிங்குக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. இருவரும் கைப்பேசி எண்களை பரிமாறிக் கொண்டனர்.

அதன் பின்னர் குறுஞ்செய்தி மூலமாக இருவரின் நட்பு மேலும் நெருக்கமானது. ஒரு கட்டத்தில், கிரிஸ்டல் போக்கை, அமந்தீப் சிங் உறவுக்கு அழைத்தார். முதலில் மறுப்பது போல் பாவனை காட்டிய கிரிஸ்டல், திடீரென்று அமந்தீப் சிங்கிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளளார்.

அதில், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவும் தனது வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் கிரிஸ்டல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29ம் திகதி நள்ளிரவில் அமந்தீப் சிங் தனது காரில் கிரிஸ்டல் வீட்டிற்கு தனியாக சென்றுள்ளார். கிரிஸ்டலின் வீட்டில் இன்னொரு இளம் பெண்ணும் உடன் இருந்தார். “கெய்ட்டி கடற்கரைக்கு சென்று நாம் 3 பேரும் உல்லாசமாக இருக்கலாம்” என்று அமந்தீப் சிங்கிடம் கிரிஸ்டல் கூறவே அமந்தீப் சிங், 2 பெண்களையும் காரில் ஏற்றிக் கொண்டு கடற்கரைக்கு சென்றுள்ளார்.

இதற்கிடையில் அமந்தீப் சிங்கை காணவில்லை என அவரது குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திவந்த பொலிசார், கெய்ட்டி கடற்கரையில் உள்ள ஒரு புதர் மறைவில் இருந்து அமந்தீப் சிங்கின் அழுகிப்போன பிரேதத்தை கடந்த ஜனவரி மாதம் 24ம் திகதி கண்டுபிடித்தனர். பிரேத பரிசோதனையில் அமந்தீப் சிங் அடித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

அவரை கிரிஸ்டலும், அவரது தோழியும் அடித்து கொன்றுவிட்டு, அமந்தீப் சிங்கின் கிரெடிட் கார்டு மற்றும் காரை இருவரும் திருடிச் சென்றதையும், அந்த கிரெடிட் கார்ட் மூலம் ஏ.டி.எம்.மில் இருந்து 2 பெண்களும் பணம் எடுக்க முயன்றதையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த பொலிசார், கிஸ்போர்ன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பொலிஸ் தரப்பு சாட்சியாக அமந்தீப் சிங் மற்றும் கிரிஸ்டல் ஆகியோருக்கு இடையில் நிகழ்ந்த 166 குறுஞ்செய்திகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விபச்சாரத்திற்காக அந்த வாலிபரை ஆசைகாட்டி வரவழைத்து, பணம் பறிக்கும் நோக்கத்தில் அடித்துக் கொன்றுவிட்டு, காரையும், கிரெடிட் கார்டையும் திருடிய குற்றத்திற்காக 2 பெண்களுக்கும் தலா 8 ஆண்டு 8 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி முர்ரே கில்பர்ட் தீர்ப்பளித்துள்ளார்

Thursday, 19 December 2013

ஒபாமாவத் தாக்கறோம்... தேவ்யானியத் தூக்கறோம்!

ஒபாமாவத் தாக்கறோம்... தேவ்யானியத் தூக்கறோம்!
**********************************************
Aatika Ashreen's photo.
அமெரிக்காவால் கைது செய்யப்பட்டுள்ள தேவ்யானியை மீட்டு, இந்திய நாட்டிற்குத் திரும்ப அழைத்து வருவேன். தேவ்யானியை மீட்காமல் நான் மீண்டும் பார்லிமெண்டுக்குத் திரும்பி வர மாட்டேன். - சல்மான் குர்ஷித்.

# அமெரிக்கா போறோம்.... ஒபாமாவத் தாக்குறோம்..... தேவயானியத் தூக்குறோம்...... அசால்ட் ஆறுமுகம் அடுத்த ஆப்பரேசனுக்கு ரெடி ஆகிட்டான். எல்லாம் வழிவிட்டு நில்லுங்கப்பா.... ஆவேசத்தைப் பாத்தா, அவங்களே வரலைன்னு சொன்னாலும் இவுரு தரதரன்னு புடிச்சு இழுத்துக்கிட்டு வந்துருவாருபோல.....

# திடீர்னு என்னங்க சார் இவ்வளவு ரோசம்? இந்த ரோசம், ஆத்திரம், வேகம், சபதம் எல்லாம்..... எல்லையில் நமது ராணுவத்தினரின் தலையை வெட்டிப் போட்டபோது வரவில்லை, அந்நிய நாடுகள் அத்து மீறும் போது வரவில்லை, ஒரு இனனமே ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டபோது வரவில்லை, எங்களின மீனவர்களுக்காக வரவில்லை..... இப்போது மட்டும் ஏன்.... அமெரிக்கா சோனியாவுக்கு சம்மன் அனுப்பியதுதான் காரணமா?

# கச்சத்தீவை மீட்காமல் வரமாட்டேன் என்று சபதம் எடுத்திருந்தால்.... வெளியுறவுத்துறைக்கு வீரம் பொங்கி விட்டது எனலாம். தேவயானியை மீட்காமல் வரமாட்டேன் என்றால்?....

எலக்சனுக்கு அப்புறமா அந்த நாட்டில போய் செட்டில் ஆகிறதுக்காக.... இப்பவே வீடு பாக்கப் போகிறார் போல!
செம ஐடியா தான்... கலக்குற சந்துரு!

Wednesday, 18 December 2013

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும்! ! ! !

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும்! ! ! !
காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும்.நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும்கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.

இனி அப்படி ஏமாற்ற முடியாது.

ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

>எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:

குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக
PDS 01 BE014
என்ற தகவலை
9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால்உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக்குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.

அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும்.

உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும்.

இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்குமேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள்பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது சம்பந்தப்பட்ட கருத்துக்கள்ஏதேனும் இருப்பின் jrpds1chennai@yahoo.co.in என்ற மின் அஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

நண்பர்களே இதை அதிகம் ஷேர் செய்யுங்க...!

Friday, 13 December 2013

திருநங்கைகள் பற்றி தெள்ளத்தெளிவோம்!


காவல் பணிக்கு சிறப்பான தகுதியுடையவர்கள் திருநங்கைகளே என்ற முடிவுக்கு வந்து, பணி நியமணம் செய்திட அரசுக்குப் புரிந்துரை செய்கிறேன்.

திருநங்கைகளின் சிறப்பு தகுதிகள்!

பிறப்பால் ஆண் என்பதால் உடல் வலிமை மிக்கவர்கள்.

மனதளவில் பெண்களின் குணம் என்பதால் ஓரளவுக்காவது இரக்கக்குணம் இருக்கும்.

காவல் பணியில் உள்ளோருக்கு ஆணைப் போல உடல் வலிமையும், பெண்ணைப் போலவே இரக்கக் குணமும் அவசியம்தானே!

தகுதியின் அடிப்படையில் அனைத்து திருநங்கைகளுக்கும் காவல் பணி என்னும் போது வாரிசு, சொந்த பந்தங்களுக்காக வருவாய்க்கு மிஞ்சிய சொத்தைக் கையேந்தி பிச்சை எடுத்து சேர்க்க வேண்டிய அவசியமேதும் இல்லை.

இதனால், பணத்தைக் கொடுத்து அல்லது பாசத்தைக் காட்டி பணிய வைப்பதும் சாத்தியமல்ல.

திருநங்கைகளுக்கு ஆண், பெண்ணுக்குரிய குடும்ப பொறுப்பு என்னும் சுமை இல்லாததால், காவல் கடமையில் முழு கவனமாய், திறம்பட செயல்பட முடியும்.

சாதி, மத உணர்வுகள் இருக்காது. இன உணர்வு இருக்கும். ஆனாலும், அதனால் ஆபத்து எதுவும் இல்லை.

காவல்துறை உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி. இல்லையென்றால்…?

பெண் காவலர்களைப் போல, இவர்களைப் பாதுகாக்க ஆண் காவலர்கள் தேவையில்லை.

மனைவி, வாரிசு போன்ற பந்தங்கள் இல்லாததால், திருநங்கைகளின் இறப்புக்குப் பிறகு பெருமளவிலான ஓய்வூதியம் அரசுக்கு மிச்சம்.

காவலர் என்பதால் சட்ட அங்கீகாரமும், சமூக அங்கீகாரமும் கிடைத்து விடும். பணத்திற்காக பாலியல் தொழிலுக்குப் போக வேண்டிய அவசியமில்லை.

இதனால், திருநங்கைகளால் ஏற்படும் பாலியல் தொழில் முற்றிலும் ஒழிந்து விடும். ஒட்டு மொத்தத்தில் பாலியல் தொழில் உடனடியாக பாதியாக குறைந்து விடும்.

Saturday, 23 November 2013

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
--------------------------------------------------------------------------------------

*பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.

* வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.

*சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.

*பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.

* கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.

*கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.

*கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.

* நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.

*தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.

*ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.

*மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.

* கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.

* கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.

* பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.

* கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.

* அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.

* ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.

* தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது.

* கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.

* சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.

* கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்

* கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.

* கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.

* ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.

* கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.

* நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது.

பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

Friday, 22 November 2013

உங்கள் வீட்டின் நிதி அமைச்சர் யார்?

உங்கள் வீட்டின் நிதி அமைச்சர் யார்?


இல்லற வாழ்க்கையைப் பற்றிப் பெரியவர்கள் அறிவுறுத்தும்போது அன்பும், அறனும் சேர்ந்தால்தான் வாழ்க்கை பண்பும் பயனுமாக இருக்குமென்று சொல்வார்கள். பண்பும் பயனுமான இல்வாழ்க்கையில் இன்றைய காலத்தில் பொருளாதாரமும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கணவனோடு சேர்ந்து மனைவியும் பொருளீட்டுவது தவிர்க்க முடியாததாகிவிட்ட அளவுக்கு இன்றைக்கு வாழ்க்கைச் சூழல்கள் சிக்கலாக மாறி வருவதை கண்கூடாகக் காண்கிறோம். இந்தச் சூழலில் அன்றாட வாழ்வில் அவசியமாகிவிட்ட பொருளாதாரச் சுமையை ஒருவராகவே சமாளிப்பதென்பதும் சிரமமானதாகி வருகிறது. - எப்படி ஒரு கை ஓசை எழுப்பி ஒலியை உருவாக்க முடியாதோ அது போல.. இந்நிலையில் குடும்பத்தின் பொருளாதாரத் திட்டங்களில் கணவனுக்கு மனைவி பக்கபலமாக இருந்து உதவுதலும், தேவையான பொழுதுகளில் கணவனுக்கு அறிவுறுத்துவதும் மிக மிக அவசியமாகும்.

இரண்டு மாடு சேர்ந்து இழுக்கும் வண்டியைப் போலத்தான் குடும்ப வாழ்க்கையும். கணவனும் மனைவியும் எல்லா விஷயங்களிலும் விட்டுக் கொடுத்து புரிந்து சேர்ந்து முடிவெடுத்து திட்டமிட்டால்தான் வாழ்க்கைச் சக்கரம் சீராகச் சுழலும்.

ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு தனியாக இருக்கும்போது தன் தேவையை மட்டும் கவனித்துக்கொள்வது, அனாவசியச் செலவுகள் செய்வது என்று பழக்கப்பட்டு விடுகிறான். அவனுக்குத் திருமணமென்று நேர்ந்து குடும்பப் பொறுப்புகள் கூடும் போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டதாக புது பொறுப்புகளை கடிந்துக் கொள்கிறான். என்னதான் படித்திருந்தாலும் குடும்பத்தை நிர்வாகம் செய்வது எப்படி என்பதை ஒரு தனிப்பாடமாக இன்னும் கட்டாய கல்வியில் கொண்டு வரவில்லைதானே?! ஆனால் பெண்கள் அப்படி இல்லாமல் திருமணத்திற்கு முன்பிருந்தே தன் தாய்- தந்தையின் வாழ்வை கூர்ந்து கவனிப்பவளாக இருந்து, தந்தைக்கு கணக்கு வழக்குகளிலும், தாயாருக்குக் குடும்ப நிர்வாகத்திலும் உதவியாகப் பங்கேற்று பொறுப்புடன் தலைப்பட தொடங்கிவிடுகிறாள். அவளுக்குத் திருமணமாகி போன பிறகு தன் கணவன் ஈட்டி வரும் வருமானத்திற்குள்ளாக செலவு செய்து செவ்வனே குடும்பம் நடத்த இந்த அனுபவம் அவளுக்குத் துணையாக இருக்கிறது. ஆனால், இது மட்டுமே போதுமா என்றால் போதாது? அடிப்படைச் செலவுகளைக் குறைப்பதில், தேவையறிந்து செலவு செய்வதில் மட்டுமே ஒரு மனைவியின் பங்கு இருந்தால் மட்டும் போதாது. மாறாக ஒட்டுமொத்தமாகக் குடும்பப் பொருளாதாரத் திட்டமிடுதலில் மனைவியும் ஈடுபடும்போதுதான் அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாக வளம் பெறுவதோடு, இந்த பங்கிடுதல் குடும்பத்தில் பாசப்பிணைப்பையும் அதிகமாக்குகிறது. எப்படி என்று பார்க்கலாமா?


பொதுவாகவே கணவன் - மனைவி இருவரில் ஏதேனும் ஒருவருக்குச் செலவு செய்ய அலாதிப் பிரியமிருக்கும் மற்றொருவருக்கோ வருங்காலத்திற்காகக் சேமிப்பதே நோக்கமாயிருக்கும். இப்படி இருவேறு துருவங்களாக இருவரும் இருந்தால் அதன் மூலம் ஏற்படப் போகும் விளைவுகள் என்னவென்பது நமக்குத் தெரிந்ததுதானே?! இதைத் தவிர்க்க வேண்டுமானால் ஒரு கூட்டு முயற்சியும், அதற்காக இரண்டு மூளைகளும் சேர்ந்து செயல்படுவதும் அவசியமாகிவிடுகிறது.

உலகமயமாக்கல் காரணமாக திறந்த சந்தை வெளி பெருகி விட்ட இந்தக் காலத்தில் நுகர்வோரின் எதிர்பார்ப்புகளைத் தூண்டி ஏதேனும் பொருளை எப்படியாகிலும் விற்றுவிடும் முயற்சிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. இந்த நுகர்வோர் சந்தை வெகு இலகுவாக செலவுகளை அதிகரிக்க வைக்கும் தன்மை கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது இருவரின் கடமையாகிறது. கணவன் - மனைவி இருவருமே வேலைக்குப் போக வேண்டிய தேவை இருப்பதால் இருவருமே மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டியதிருக்கிறது. முட்டையிடும் வாத்துக்குதான் வலி தெரியுமென்று ஒரு சொலவடை உண்டு அதன்படி வருமானத்தின் அருமை புரிந்து எந்தப் பொருள் தேவையோ அந்தப் பொருளை வாங்குவது, அந்தப் பொருளை எங்கு வாங்கினால் நியாயமான விலைக்கு கிடைக்கும் என்று மிகுந்த கவனத்துடன் செயல்படுவதும், குழந்தைகளுக்கு எந்த உணவுப் பண்டத்தில் சத்து அதிகம், தூய்மையான நல்ல தரமுள்ள பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பது எங்கே என்று பார்த்துப் பார்த்து வாங்குவதும், அவசரமயமான பணிச்சூழல் காரணமாக உணவகத்தில் அன்றாடமாகவோ அடிக்கடியோ வாங்கிச் சாப்பிடுவதினால் உடலுக்குக் கேடு வராமலும் வரவு- செலவில் துண்டு விழாமலும் பாதுகாப்பதில் பெண்கள் இயல்பாகவே கெட்டிக்காரர்கள். எனவே, இந்த இயல்பை குடும்பப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தினால் அதனால் நன்மைகள் மட்டுமே விளையும்.

வரவு- செலவு கணக்கை தீர்மானித்து அதற்கேற்ப செலவு செய்து இந்த மாதம் இந்த பொருட்கள் வாங்குதல் கட்டாயம், இந்த பொருள் வீண் அல்லது வாங்குவதை தள்ளிப் போடலாம் என்று கூட்டுத் தீர்மானங்களை எடுத்து தேவைக்கேற்ற செலவுகளுடன் சிக்கனமாக வாழலாம். ஒருவருடைய கருத்தை மற்றவர் காது கொடுத்து கேட்பதென்பது மிக அவசியம். அப்போதுதான் ஆலோசித்து முடிவும் எடுக்க முடியும்.

சிலர் இரகசியமாக வைப்பு நிதியை மனைவியறியாமல் சேமிப்பார்கள். ஏதேனும் காரணத்தால் அவருக்கு திடீர் மரணம் நிகழ்ந்தால் அப்படியொரு சேமிப்பு இருப்பதே தெரியாமல் 'நாய் பெற்ற தேங்காயாக' அது யாருக்கும் பயன்படாமல் போய்விடுவதையும் நாம் உலகில் பார்க்கத்தானே செய்கிறோம்? அப்படி நிகழாமல் இருக்க கணவருடைய கடன், வரவு, வைப்பு நிதி, காப்பீடு இவற்றையெல்லாம் பற்றி மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அறிந்து கொண்டால் அதற்கேற்ப வரவு- செலவைக் கையாளலாம். வேறு வருமானம் இல்லாதபட்சத்திலும் மனைவி கணவருடைய கடனையும் வருமானத்தையும் தெரிந்து வைத்திருந்தால் விரலுக்கேற்ற வீக்கமாக சிக்கனமாகச் செலவிடலாம்.

தண்ணீர், மின்சாரம், தொலைபேசி, பள்ளிக் கட்டணம் என்று மாதா மாதம் வரும் பட்டியலை தயார் செய்து எப்போது செலுத்த வேண்டுமென்று அறிந்தும் வைத்துக் கொண்டு பணத்தை உரிய நேரத்தில் கட்டிவிடலாம். விலைப்பட்டியல்களையும், ரசீதுகளையும், வங்கியிலிருந்து வரும் கணக்கு விபரங்களையும் சரி பார்த்து ஒழுங்காக ஒரு கோப்பில் அடுக்கிவைத்தால் இந்த மாதத்திற்கும் போன மாதத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறியலாம். இவ்வகையான சின்ன விஷயமாகத் தெரியும் வேலைகளை பகிர்ந்துக் கொள்வதன் மூலம் கணவருக்கும் தன்னாலான உதவிகளை மனைவிக்கு செய்ய உந்துதல் வரும்.

என்னதான் ஞாபக சக்தி இருந்தாலும் தினப்படி நடக்கும் செலவுகளை எழுதி வைக்க வேண்டும். இதன் மூலம் இது தேவையற்ற செலவு வரும் நாட்களில் இது இருக்கக் கூடாது என்பதை கண் கூடாகப் பார்த்து புத்திசாலித்தனமாக கையிருப்பை எப்படி புது முதலீட்டில் செலுத்தலாம் என்பதைப் பற்றியும் யோசிக்க அது உதவும். செலவு செய்யும் போது கஞ்சத்தனத்திற்கும் சிக்கனத்திற்குமான வேறுபாட்டை மனைவி கணவருக்கு எடுத்துச் சொல்லலாம். தேவையான பொருட்களையும் வாங்காமல் மிச்சப்படுத்துவது சிக்கனமல்ல லோபித்தனம், அதே போல் ஆடம்பரமென்று ஊதாரித்தனமும் கூடாது செலவு செய்வதை ஒரு கலையாக எண்ணி நடைமுறைப்படுத்தினால் எதுவும் கடினமாகவே இருக்காது என்பதை பொருளாதாரத் திட்டமிடுதலின் மூலமாக ஒரு மனைவியால் உணர்த்த முடியும்.

அன்றாடச் செலவுகளைத் தவிர மற்ற திடீர் செலவான மருத்துவ செலவு, விடுமுறை கொண்டாட்டம், பண்டிகை நாட்களுக்கான விசேஷ செலவு, எதிர்பாராமல் கார் பழுதடைந்தாலோ, விபத்து நேர்ந்தாலோ ஆகும் உபரி செலவு என்று எல்லாவற்றையும் கணக்கில் வைக்காமலிருந்தால் 'பட்ஜெட்'டில் துண்டென்ன வேட்டியே விழும். வரவு- செலவு பட்டியலிடாமல் இருந்தால் செலவுகள் கணக்கில்லாமல் போய்விடும். வரவு- செலவு எழுதிய படி செயல்பட முடியவில்லை என்று கைவிட்டுவிடாமல் அதற்கென்று ஒவ்வொரு வார இறுதியிலும் கணவர்- மனைவி இருவரும் நேரம் ஒதுக்கி சரியாக திட்டம் தீட்டினால் முடிவு பலன் தரும், சேமிப்பும் கூடும். இப்படி அடிக்கடி செலவுகளை விவாதிப்பதில் மனைவி முன்கையெடுப்பதன் மூலம் கணவருக்கும் குடும்பச் செலவுகள் குறித்த பூரணமான நிலை தெரிய வரும். இப்படி செய்வதனால் 'ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் திண்டாட்டம்' என்றெல்லாம் பாடத் தேவையே இருக்காது.. இப்படி அடிக்கடி விவாதிப்பதும், குடும்பம் தொடர்பான செலவுகளைப் பகிர்ந்து கொள்வதும் குடும்பச் செலவுகளுக்கு ஒரு வெளிப்படையான அணுகுமுறையை ஏற்படுத்துவதோடு, பகிர்ந்துகொள்ளுதலும், புரிந்துணர்வும் கணவன் மனைவியிடையே அதன் மூலம் அதிகமாகிறது.

Thursday, 21 November 2013

உபயோகித்த எண்ணெயா..? உஷார்!

உபயோகித்த எண்ணெயா..? உஷார்!

பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால், ‘டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்’ அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும். புற்றுநோய்க்குக்கூட காரணமாகலாம் என்கிறார்கள். அதனால், கொதிக்க வைத்த எண்ணெயை, அதற்கடுத்த 2 நாள்களுக்குள் தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தித் தீர்க்கலாம் அல்லது கொட்டி விடலாம். பொரிப்பதற்கு எப்போதும் குறைவான எண்ணெயே உபயோகிக்கவும். இந்த விஷயத்தில் மிச்சம் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு, ஆரோக்கியக் கேட்டை விலைக்கு வாங்க வேண்டாம்!

ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய்?

ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம். அந்த 30 சதவிகிதமும் நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும். அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது. மற்றபடி எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதத்தை மிஞ்சாமலிருப்பதுதான் சரி.

எப்படி உபயோகிக்க வேண்டும்?

நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் - இந்த 3 எண்ணெய் களையும் சம அளவில் கலந்து உபயோகிக்கலாம் அல்லது 2 மாதங்களுக்கு ஒரு எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஒரே எண்ணெயை வருடக்கணக்கில் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

கிழங்கு சமைப்பதென்றால், லிட்டர் லிட்டராக எண்ணெயைக் கொட்டி வறுத்தும் பொரித்தும்தான் செய்ய வேண்டும் என்றில்லை. உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என எல்லாவற்றையும் மசியலாகச் செய்து சாப்பிடலாம். நான்ஸ்டிக் கடாயில் செய்தால் எண்ணெய் செலவு குறையும். லேசாக தண்ணீர் தெளித்துச் செய்தாலும் அதிக எண்ணெய் குடிக்காது.

எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்து விட்டு, பிறகு தாளிப்பதற்கு மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம்.

தோசை ஊற்றும் போது அந்தக் காலத்தில் செய்தது போல கல்லை, துணியால் துடைத்து விட்டு செய்தால் எண்ணெய் செலவு குறையும்.தோசை ஊற்றியதும், அதை மூடி வைத்து வேக விட்டாலும் எண்ணெய் அதிகம் தேவைப்படாது.

Tuesday, 19 November 2013

சபரிமலை போறீங்களா.. முதல்ல இதப்படிங்க!

சபரிமலை போறீங்களா.. முதல்ல இதப்படிங்க!

1. ஐயப்ப விரதத்தில், மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை.

2. ஐயப்ப பூஜை என்ற பெயரில், ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூறாக இருப்பது விரும்பத்தக்கதல்ல!

3. தங்களுக்கு இது எத்தனையாவது மலை என்று வினவுவதும், தான் இத்தனை தடவை மலைக்குச் சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்ள வேண்டாம்.

4. மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம் ஆகும். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

5. இருமுடி கட்டும் நாளை ஒரு விழாவாக எண்ணி, உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களிடம் அன்பளிப்பாகப் பணம் பெறுதலும் ஐயப்ப பக்தி விதிமுறைக்குப் புறம்பானது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருள்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பதுதான் முறை.

6. இருமுடி தாங்குபவர்களுக்கு பூமாலை அணிவித்து, அடுத்த நிமிடமே அந்தப் பூக்கள் மற்றவர்கள் காலில் பட்டுச் சீரழிவது விரும்பத்தக்க செயல் அல்ல.

7. சபரிமலை யாத்திரையின்போது, கன்னி சாமிகள்தான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோருக்கும் பொதுவானது.

8. ஐயப்ப பக்தர்கள் வெளி ஸ்தலங்களுக்கு வழிபடச் செல்லும்போது, அங்குள்ள நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடத்தலும் அவசியமானது. உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமெனில், குருவாயூரப்பன் சன்னதியில் மிக சப்தமாக சரண கோஷம் சொல்லாமல், அமைதியாக வழிபடுதல்.

9. சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும், ஒரு ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும்.

10. சபரிமலை யாத்திரையின்போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லா வகையிலும் நல்லது.

11. சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிந்து அந்தப் புண்ணிய நதியை அசுத்தப்படுத்துதல் மிகவும் தவறான செயலாகும். மாறாக, ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைக்கலாம்.

12. பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை, மற்றவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், அமைதியாக, ஆடம்பரமின்றி தங்கும் தாவளத்திலேயே (இடத்திலேயே) கொண்டாடுதல் மிக சிறப்பான செயல்.

13. சன்னிதானத்தில், கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எந்தவித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோருக்கும் நல்லது.

14. கண்ணாடி பாட்டில்களையும் உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்திலும் போட்டு, மற்ற ஐயப்பன்மார்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தைச் செய்ய வேண்டாம்.

15. ஐயப்பன் வழிபாட்டை, ஆவேசத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல், அமைதியாகவும் சாத்விகமாகவும் மேற்கொண்டால் அனைவருக்கும் நன்மையே.

16. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!

thanks to dinamalar...

Monday, 18 November 2013

திரு நங்கைகள் என்பவர்கள் யார் ??

யார் திரு நங்கைகள்? அறிகுறிகள் என்ன? (ட்ரான்ஸ்கேந்தெரெட்) – ஒரு பார்வை!

திரு நங்கைகள் என்பவர்கள் யார் ??

சமூகத்தில் 9, அலி, அரவாணி என பல பெயர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் இவர்களை ஆணா, பெண்ணா என்று வகைக்குறிப்பது கடினம் அல்லது முடியாது. அவர்களின் சமூக நடத்தைகளை விடுத்து ஆரம்பத்தில் விஞ்ஞான மருத்துவ ரீதியில் ஆராய்வோம்.

23 ஜோடி குறோமோசோம்களில் ( தாயிடம் இருந்து 23 தந்தையிடம் இருந்து 23) இருந்து உருவாகும் ஒரு குழைந்தையின் உடலில் பல்வேறு ஹோர்மோன்கள் தொழிற்படுகின்றன.

அவற்றில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்பவை ஆண் பெண் தன்மையைத் தீர்மானிக்கும் ஹோர்மோன்களாக இருக்கின்றன.
ஒரு ஆணிற்கு டெஸ்டோஸ்டிரோன் ஹோர்மோன் அதிக அளவில் சுரக்கும் அதேவேளை சிறிய அளவில் ஈஸ்ட்ரோஜனும் இருக்கும்.
பெண்ணாக இருப்பின் ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன் அதிகமாகவும் குறைந்த அளவில் டெஸ்டோஸ்டிரோனும் இருக்கும்.
( சிசு உருவாகி 6-7 வாரங்களின் பின்னரே ஆண் பெண் ஹோர்மோன்கள் உற்பத்தியாகின்றன, எனவே ஆணிற்கு பெண்ணின் அடையால உறுப்புக்களும் பெண்ணிற்கு ஆணின் அடையால உறுப்புக்களும் வளர்ச்சியடையாத நிலையில் அமைந்திருக்கும். )

குழந்தை பிறந்ததும் பிறப்புறுப்புக்களைக் கொண்டு ஆண்,பெண் என தீர்மானித்து விடுகிறார்கள். எனினும் 4-5 வயதிலேயே அந்த குழந்தை எந்த வகுப்பை சார்ந்தது என்பதை தீர்மானிக்க முடியும்.
உடல் ரீதியாக ஆணாக இருக்கும் ஒரு குழந்தை மனரீதியாகவும் நடத்தையிலும் பெண்ணாக நடக்கும் பட்சத்திலும் அதற்கு அறிவு எட்டி தான் ஆண் அல்ல பெண் தான் என்பதை உணரும் பட்சத்திலும் அந்த பிள்ளை பெண்ணாகவே கருதப்பட வேண்டும் என சமீபத்திய மருத்துவசட்டங்கள் கூறுகின்றன. ( ஆணாக உணரும் பெண் பிள்ளை; ஆணாக கருதப்படவேண்டும் என்பதும் உள்ளடங்குகிறது. )

ஒரு குழந்தை “அரவாணி/ திரு நங்கை”யாக வளர்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே அறிந்து அந்த குறையைப் போக்ககூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.

*ஆண் பிள்ளையொன்று எந்நேரமும் பெண்பிள்ளைகள் விளையாடும் பொம்மைகளுடன் (பார்பி உள்ளடங்களான பொம்மைகள்.) விளையாடுமாயின் சற்று கவணமாக இருக்கவேண்டும். அந்த பிள்ளைக்கு அதே வயது ஆண் பிள்ளைகள் விளையாடும் மொம்மைகளை ( உதாரணமாக, ஸ்பைடர்மான் (அக்ஷன் பொம்மைகள்) கொடுத்துப் பழக்கவேண்டும்.
அதுக்கு அக்குழந்தை பழகமறுக்கும் பட்சத்தில் (6 மாதங்களுக்கு மேலும்) உடனடியாக மருத்துவரிடம் அழைத்துசென்று ஹோர்மோன் டெஸ்ட் செய்யவேண்டும். பிறகு மருத்துவர் குறையிருப்பின் ஹொர்மோன் சிகிச்சையளிப்பார்.
( இந்த நடத்தை விதி, பெண் குழைந்தைகளுக்கும் பொருந்தும்.)

* பெண்பிள்ளையொன்று எந்நேரமும் ஆண் பிள்ளைகளுடன் மட்டும் விளையாடிக் கொண்டு தன் வயது பெண் பிள்ளைகளுடன் சேராமல் இருந்தால் அதுவும் கவணத்திற்குரியது, பிற்காலத்தில் திரு நங்கையாக அல்லது லேஸ்பியனாக வாய்ப்புண்டு. ( இத்தகவல் இன்னமும் விஞ்ஞான ரீதியில் உறிதியானதல்ல, கருத்துக்கணிப்பு ரீதியில் மாத்திரமே உறுதியாகியது.)
( இவ் நடத்தை விதி, ஆண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.)

—-
நம்ப கடினமானதாக இருப்பினும் இன்னொரு உண்மை, உலகில் உள்ள சில ஆண்களுக்கு க்ஷ்க்ஷ் குறோமோசோம்களும், சில பெண்களுக்கு க்ஷி குறோமோசோம்களும் மாறுதலாக இருக்கும். உலகின் 4% ஆனவர்கள் இப்படியுள்ளார்கள்.
( சாதாரணமாக ஆண்களுக்கு க்ஷி உம் பெண்களுக்கு க்ஷ்க்ஷ் என்றும் குறோமோசோம் அமைந்திருக்கும்.)

‪#‎இந்த‬ தகவல் பலரை சென்றடைய உதவுங்கள். ( திரு நங்கைகள் பற்றிய விழிப்புணர்வும், அடிப்படையும் சமுதாயத்திற்கு தேவையாக உள்ளது.)

Thursday, 14 November 2013

குழந்தைகள் தினம் உனக்கு ஒரு கேடா..!

குழந்தைகள் தினம்
உனக்கு ஒரு கேடா..!

ஈழம் குழந்தைகளை
துடிக்க துடிக்க அழிக்க
நினைத்த காங்கிரசு துரோகிளே
உனக்கு குழந்தை தினம் உனக்கு கேடா..!

நேரு மாமா என்று கூறும்
காங்கிரசு கயவர்களே
இந்தியா-இலங்கை உறவுக்கு
மாமா காங்கிரசு தானா..!

இந்தியா அரசே...!
பிஞ்சு குழந்தை பாலசந்திரனை
நரபலி கொடுத்த
உனக்கு குழந்தை தினம் ஒரு கேடா..!

சிங்களான் உறவு நாடு என
எங்கள் தொப்புள் கொடியான உறவான
குழந்தைகளை கருவறையில் அறுக்க
உதவிய காங்கிரசு கயவர்களே உங்கள்
உறவு இது தானா..!

பல ஆண்டு காங்கிரசு ஆட்சியில்
குழந்தை கற்பழிப்பு வறுமை
உனது கேவலமான பொருளாதார கொள்கை
இது தான் வெட்கமான ஆட்சியா..!

உண்மை தமிழன்

Wednesday, 13 November 2013

உப‌யோக‌முள்ள‌‌ வீட்டுக்குறிப்புகள்

உப‌யோக‌முள்ள‌‌ வீட்டுக்குறிப்புகள்

1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.

2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.

3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.

4. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

5. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.

6. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.

7. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.

8. தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.

9. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.

10. மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.

Tuesday, 12 November 2013

திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:

திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:
=============================

திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம்.மணம் மலரினின்று தோன்றுவது.திரு என்பது
இங்கு அடைமொழி.மணத்தை நுகர்வோன் மணமகன்.மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு.

தாலி:
=====

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன்
மணமகள் கழுத்தில் கட்டி
வந்தபடியால் இதற்கு தாலி என்ற பெயர் வந்தது.தாலமாகிய பனை ஓலையினால்
செய்தது என்பது இதன்
பொருள்.பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க
உலோகத்தால் ஆன தாலி செய்து
பயன்படுத்தினர்.பின்னாளில் அதனைப்பொன்னால் செய்து பொற்றாலி க்கினர்.

அருகு-மணை எடுத்தல்:
==================

தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு
நல்வாழ்த்துக் கூறுவர்.முற்காலத்தில் அருகம்புல்லை மணமக்கள்மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம்சூழ
வாழ்வீர் என்று வாழ்த்துவர்.

"அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம்.இதன் உட்பொருள்
அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும்
வேரூன்றி நிலைபெறும்.மழையின்றி மேல்பாகம் வரண்டாலும் மழைபெய்தால் மீண்டும் தழைத்து
வளரும்.இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்து
போகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும்.

பிற்காலத்தில் அருகுதூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத்தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள்
அரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர்.

ஆயினும் மணமக்கள் மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும்.

முகூர்த்தக்கால் நடுதல்:
========================

முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர்.ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

அரசாணிக்கால் நடுதல்:
========================

மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல்.அதாவது அரச மரத்தின் கிளையையும்
பேய்க்கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய
இந்திரனை அதில் எழுந்தருளச்செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும் மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு
கசப்புடையது. நம் வாழ்வில் இன்பமும் துன்பமும்,விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும்
சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்துபோய்விடாமல் கடமைகளைப் பற்றின்றிச்
செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும்.

மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்:
============================

கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன.உலக வாழ்விற்கு இரு
கண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள்
வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும்.

திருமண வேள்வி:
==============

அத்தி,ஆல்,அரசு,மா,பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல்
வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல்
வேண்டும்.மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத்
தாம் எரிந்து மறையும்போதுகூடத் தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக்கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள்
சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

பாலிகை இடுதல்:
=============

நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று.அதில் நவ தானியங்களும் நன்கு
வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக
இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும்.

ஆறு குணங்கள்:
=============

1.உண்மை உரைத்தல்.
2.தர்மம் செய்தல்.
3.சோம்பல் தவிர்த்தல்.
4.பொறாமை விடுதல்.
5.பொறுமை கொளல்.
6.தைரியம் பேணல்.

பதினாறு பேறுகள்:
===============

1.நன்மக்கள்.
2.செல்வம்.
3.அழகு.
4.நோயின்மை.
5.இளமை.
6.கல்வி.
7.வாழ்நாள்.
8.நல்வினை.
9.பெருமை.
10.துணிவு.
11.வலிமை.
12.வெற்றி.
13.நல்லுணர்வு.
14.புகழ்.
15.நுகர்ச்சி.
16.நல்ல நண்பன்.

மஞ்சள்,மருதாணியின் சிறப்பு:
=======================

1.குளிக்கும்போது தாலிச்சரட்டில் மஞ்சள் பூசுவதால் கழுத்து மற்றும் மார்புப்பகுதியில் மஞ்சள்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
2.மருதாணி மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். எனவே அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்ளலாம்.
3.மஞ்சளுடன் மருதாணியும் கலந்து உள்ளங்கையில் பூசுவதால் கருச்சிதைவு ஏற்படாது.
4.கை,கால்களில் மஞ்சள் பூசுவதால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை வராது.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்:
==========================

இது மிகத் தொன்மையான பழக்கமாகும்.கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன்
வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானாலும் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள்
என்பதே இதன் பொருள்.

அருந்ததி காணக்கிடைப்பதற்கரிய அருமையான நட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல்
போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும்.

சங்குமோதிரம் எடுத்தலின் ரகசியம்:
============================

மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரமும் இட்டு மணமக்களை எடுக்கச்
சொல்வார்கள் பெரியவர்கள். அப்போது மணமகன் பொன்னால் ஆன மோதிரத்தையும்
மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும். மக்களைப் பாலூட்டி
வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள். நீர் நிறைந்த மட்பானை நீரால் சூழப்பட்ட இப்பூவுலகைக் குறிப்பதாகும்.

வெற்றிலைபாக்கு மாற்றுதல்:
=======================

மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் கிழக்கு மேற்காக அமர்ந்து
வெற்றிலை பாக்கு வைத்து மூன்று
தலைமுறையினரைச் சொல்லி இன்னார் மகளை இன்னார் மகனுக்கு கொடுக்கின்றோம் என
இருவீட்டாரும் கூறி ஏழு
பாக்கும் ஏழு வெற்றிலையும் வைத்து மாற்றுதல். எழுவகைப் பிறப்பிலும் இன்று
சொன்ன சொல் தவறுவதில்லை
என்று பலர் முன்னிலையில் உறுதியளிப்பதாகும்.

உறவின்முறை விளக்கம்:
====================

கணவன், கொழுநன்:
-------------------------------

கண் அவன்.பெண்ணுக்கு கண் போன்றவன் என்பதாகும்.நம்மை நல்வழி நடத்திச்
செல்லும் கண்ணைப் போல்
பெண்ணை நல்வழிப்படுத்திச் செல்லும் கட்டுப்பாடு உடையவன் கணவன் என்பதாகும்.

கொழுநன் பெண்ணுக்குக் கொழு கொம்பு போன்றவன் என்பதாகும். கொடி படர்ந்து உயர்வதற்குக் கொழு கொம்பு எப்படி இன்றியமையாததோ அதே போல் பெண்மைக்குப் பாதுகாவலுக்குரிய ஆண்மகன் என்பதாகும்.

மனைவி:
--------------

மனைவி,துணைவி,இல்லாள் இச்சொற்கள் இல்லறநெறி காப்பவள் என்பதைக் குறிப்பிடுவனவாகும். மனைக்கு உரியவள் மனைவி என்பதாகும்.

Monday, 11 November 2013

உடல் உறுப்பு தானம் செய்யும்,பெறும் வழிமுறைகள்...!

குருதி கொடை மட்டுமே கேள்விபட்ட நாம் சமீபமாக உடல் தானம், உடலின் உறுப்புகள் தானம் பற்றி பேசி வருகிறோம், கேட்க பெறுகிறோம் இதை பற்றி நிறைய பேருக்கு சரியான விவரம் தெரியாததால் தெரிந்து கொள்ளுங்கள். இது போக உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்த அல
்லது தெரிந்தவர்களுக்கோ இதயம், சிறுநீரகம், கண்கள், லிவர், லங்க்ஸ்,எலும்பு, இதயவால்வுகள், தோல் போன்ற பல குறைபாடுகள் இருந்தால் இந்த லின்க்கில் உள்ள அரசு அப்ருவ் செய்த மருத்துவமனைகளில் நீங்கள் பதிவு செய்தால் உங்களுக்கு இந்த உறுப்புகள் புக்கிங் அடிப்படையில் இலவசமாக கிடைக்க பெறூம். இதற்க்கு புரோக்கர்கள் தேவை இல்லை.

அது மட்டுமல்ல உங்கள் அல்லது உங்களது மைனர் மற்றும் தெரிந்தவர்களின் உடம்பை மருத்துவ ஆய்வுக்கு கூட நீங்கள் கொடுத்து உதவலாம். அதற்க்கான தகவல் அரசானை மற்றும் ஃபார்மாலிட்டிஸ் இனைத்துள்ளேன்.

இந்தியாவிலே தமிழ் நாட்டில் தான் அதிக உடல் மற்றும் உறுப்பு தானம் செய்யும் நெ 1 மானிலமாக திகழ்கிறது. தானம் செய்யும் அட்டை படிவம் மற்றூம் மற்ற எல்லா அப்ளிகேஷனும் இனைத்துள்ளேன் பலன் பெருங்கள். ஒன்றும் பெறாத பேப்பர் கூட ரீசைக்கிள் ஆகி இன்னொரு வாழ்வை கொடுக்கும்போது நம் கூட நம்மின் உடலையோ அல்லது உடல் பாகங்கலையோ இல்லாதவர்களுக்கு வழங்கலாம்.

Hyper Links

To Donate your body after death & Government Order - http://www.dmrhs.org/tnos/orders-of-tn-govt/donation-of-body-after-death-procedure-for-donation

FAQ about Each and Every Organ Donation and how it is used - http://www.dmrhs.org/tnos/faq-for-public

Organ Waiting List Details - http://tnos.org/

Approved Hospitals for Organ Donors & Organ Transplants by Govt - http://www.dmrhs.org/tnos/notifications/list-of-approved-hospitals-for-kidney-transplantation-as-on-13-02-2012 (Please follow the same link for all organs)

Please fill your form and send it by email OR post.

Cadaver Transplant Program,
165 A, Tower Block I, 6th Floor, [Next to Bone Bank],
Government General Hospital
Chennai – 600 003

E-Mail :
organstransplant@gmail.com

Phone :
(91)44 25305638

Fax :
(91)44 25363141

Friday, 8 November 2013

முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் ....

முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் ....

முருக பெருமான் சூரபத்மனை அழித்து உலகுக்கு அருள் புரிந்த நாள் கந்தசஷ்டி திருநாளாகும்.

சூரனை அழித்த நிகழ்ச்சியை நினைவூட்ட சூரசம்ஹாரம் அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று நடைபெறுகிறது.

சூரன் தான் பெற்ற வரத்தால் நன் மக்களுக்கும் தேவர்களுக்கும் துன்பங்கள் பல செய்தான்.

அவன் நீண்ட காலம் இவ்வுலகில் வாழ்ந்தால் ஆயிரக்கணக்கான பாவ செயல்களை செய்து, நரகத்திற்கு ஆளாவான். தவத்தால் வரம் பலபெற்ற இவன், பெரும்பாவியாகி விடக்கூடாது என்ற கருணையால் நினைந்து இறைவன் குமாரனாக தோன்றி வேலாயுதத்தால் அவனுடைய உடலை இரு துண்டுகளாக்கினார்.

அதில் ஒன்றினை மயில் வாகனமாகவும், மற்றொன்றினைச் சேவல் கொடியாகவும், தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

இதனை விளக்கவே சூரசம்ஹாரம் முடிந்த உடன் முருகனை மயில்வாகனத்தில் ஏற்றுகின்றனர். அப்போது அவனுக்கு “சேவல்’’ கொடியாகிறது. இதில் இருந்து முருகன் சூரனைக் கொல்லவில்லை என்பதுவும் மறக்கருணையால் ஆட்கொண்டான் என்பதுவும் குறிப்பிடப்படுகின்றது.

“சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம்’’ என்பது பழமொழி. திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடந்ததால் திருச்செந்தூரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

முருகன் புராணங்களின்படி தன்படைகளுடன் முருகன் திருச்செந்தூர் வந்து தங்கியதாகவும் அங்கு விஸ்வகர்மாவால் அமைக்கப்பட்ட தேவகுருவாகிய குரு என்ற வியாழபகவானால் பூஜிக்கப்பட்டு அசுரர்களின் வரலாறு பற்றி அறிந்ததாக கூறப்படுகிறது. வியாழபகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருச்செந்தூர் சிறப்பு பெற்ற குரு தலமாகவும் போற்றப்படுகிறது.

இங்கிருந்து குமரபெருமான் வீரபாகு தேவரை சூரபத்மனுக்கு அறிவுரை கூறும்படி தூது அனுப்பினார். வீரபாகு தேவரின் தூது பயனற்று போகவே முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரனை வெற்றிக்கொண்டார். இந்நகர் வெற்றி மாநகர் என பொருள்படும்படி ஆரம்பத்தில் வடமொழியில் ஜெயந்திபுரம் என அழைக்கப்பட்டு பின்னர் சயந்தி, செந்தில், திருச்செந்தூர் என்றெல்லாம் தமிழில் பெயர்கள் பெற்றுள்ளது.

திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு புனிதமும் வளமும் நிறைந்த வெற்றி நகர் என்றும் செல்வமும் வெற்றியும் அருளவல்ல தலம் என்று பொருள் கூறுவர்.

மாமரமாக நின்ற சூரபத்மன் பிளவுபட்ட இடம் திருச்செந்தூரில் இருந்து 6 மைல் தூரத்தில் கடல் கரையோரமாக உள்ள மாப்பாடு என்ற தலம். தற்போது மணப்பாடு என்றும் அழைக்கப்படுகிறது.

அங்கு இன்றளவும் மாமரங்கள் தழைப்பதில்லை என்று கூறப்படுகிறது. கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார லீலைக்காக இறைவனின் திருவிக்கிரகத்தை கடற்கரை ஓரமாக உலா செய்யும் போது இப்போதும் கடல் தற்போது பின்வாங்கி கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகபெருமான் சிவபூஜை புரிந்த இடமும் அபிஷேகத்திற்காக தன்கைவேலினால் கந்தபுஸ்கரணி தீர்த்தத்தை தோற்றிவித்த இடமும் திருச்செந்தூரே ஆகும்.

இதனை விளக்கும் வகையில் கோவிலின் கற்பகிரகத்தில் சூரசம்ஹாரமூர்த்தியான பாலசுப்பிரமணியர் சிவபூஜை புரியும் வகையில் தன்னுடைய நான்கு திருக்கரங்களில் இரண்டு அபயவரத ஹஸ்தங்களாகவும் (ரட்சிப்பதாகவும்), ஒரு கையில் ருத்ரட்சமாலையும் மற்றொரு கையில் புஷ்பம் ஏந்தி அர்ச்சனை செய்யும் திருக்கோலத்தில் காட்சி அருள்கின்றார்.

மூலவருக்கு பின்னால் முருகப்பெருமானால் பூஜிக்கப்பட்ட பஞ்சலிங்கங்கள் உள்ளன.

கோவிலின் தெற்கே கடற்கரை ஓரமாக சிறிது தூரத்தில் கந்தபுஸ்கரணி அமைந்துள்ளது. இத்தீர்த்தம் நாளி கிணறு என்று அழைக்கப்படுகிறது. இப்புனித கிணற்று நீர் இனிமையாக இருப்பதுடன் நோய்களை திர்க்கும் குணம் படைத்ததாகவும் இருக்கிறது.

“கந்தசஷ்டி திருநாளில் என்னவரம் கேட்டாலும் அந்த வரம் தந்திடுவான் முருகன்’’ என்று கூறப்படுகிறது. திதிகளில் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருகிறது. செல்வத்தை தரும் சுக்கிரனின் எண் 6, சுக்கிரனின் அதிதேவதை மகாலெட்சுமி.

மற்ற நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட 6–வது திதியான சஷ்டியில் விரதம் இருப்பதன் மூலம் மகாலெட்சுமியின் அருளையும் பெறலாம், மனத்திற்கு அகம் என்ற பொருள் உண்டு. ஞானமான அறிவை பெற்று மனதளவில் உள்ள குழப்பங்கள் அகன்று உடல், நலம் மனநலம் கிடைக்க திருச்செந்தூரில் சூரசம்ஹார விழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிப்படுவது சிறப்பாகும்.

உபயோகமான வேலைவாய்ப்பு வெப் தளங்கள் !!

www.employmentnews.gov.in
www.bestjobsindia.in
www.google.co.in/jobs
www.compilerjobs.com
www.miscojobs.com
www.erp-jobs.com
www.careersindia.com
www.egurukool.com
www.educationinfoindia.com
www.vidyainfo.com
www.delhi4students.com
www.admissionguru.com
www.indiaeducation.info
www.indiaedunews.net
www.indiaparenting.com
www.askmeyourproblem.com
www.helpteens.com
www.expage.com
www.10minuteresume.com
www.provenresumes.com
www.resume.com
www.resumezapper.com
www.nipccd.nic.in
www.dget.nic.in/nco
www.jobsahead.com
www.naukri.com
www.jobsadead.com
www.humanlinks.com
www.careerfinance.com
www.careerbuilder.com
www.monsterindia.com
www.careerspan.com
www.careerplanning.com
www.groovyjobs.com
www.timejobs.com
www.clickjobs.com
www.careerindia.com
www.bixee.com
www.softwarejobs.com
www.devnetjobs.org


Thursday, 7 November 2013

‘தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி’ - பாதிரி யார்கள்


தமிழகத்தில் முதன் முறையாக பாதிரி யார்கள் உள்பட நெல்லை, தூத்துக் குடி மாவட்டத்தை சேர்ந்த 185 தலித் கிறிஸ்துவ குடும்பத்தினர் ‘தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி’ அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் நடந்தது. இதில் ஆயிரம் பேர் புனித நீர் தெளித்து இந்துக்களாக மாற்றப்பட்டனர். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நாங்குநேரி, சாத் தான்குளம், திசையன் விளை, வள்ளி யூர், ராதா புரம் உள்ளிட்ட பல பகுதி களைச் சேர்ந்த 185 தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்த சுமார் 1000 பேர் தாய் மதமான இந்து சமயத்திற்கு திரும்ப முடிவு செய்தனர். இதையடுத்து இந்து மக்கள் கட்சி சார்பில் அவர்கள் தாய் மதம் திரும்புவதற்கான சட்டப் பூர்வ நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டன. இந்நிகழ்ச்சி முதலில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் கடந்த மகா சிவராத்திரி நாளன்று நடைபெறு வதாக இருந்தது. ஆனால் கோயில் சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே கோயில் கலையரங்கில் வைத்து நடத்த முடியும் என்றும் தனியார் நிகழ்ச்சி கள் ஏதும் கோயிலுனுள் நடத்த அனுமதிக்க முடியாது என்று கோயில் நிர்வாகம் தடைவிதித்தது. இதனை தொடர்ந்து அம்பேத்கர் பிறந்தநாளான தாய்மதம் திரும்பும் நிகழ்ச்சி நெல்லை ஜங்ஷன் சங்கீத சபாவில் இன்று காலை நடந்தது. காலை 6மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் தாய்மதம் திரும் புபவர்களுக்காக வேங்கட சாஸ்திரிகள் தலைமையில் பிராயச்சித்த யாகம் நடத்தப்பட்டது. பின்னர் தாய்மதம் திரும்புபவர்கள் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தலைமையில் நெல்லையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியயதை செலுத்தினர்.அதைத்தொடர்ந்து கங்கை, தாமிர பரணி, காவரி, கிருஷ்ணா, பிரம்ம5-ம் பக்கம் பார்க்க புத்திரா, நர்மதா, கோதா வரி, சிந்து, சேது சமுத்திரம் ஆகிய புனித நீர் தெளித்து புனிதப்படுத்தும் சடங்கு நடந்தது. பின்னர் சைவம், வைணவம், சக்தி வழிபாடுகளை விரும்புபவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற் கேற்ற சமய சின்னங்கள் இடப்பட்டன.

பின்னர் அவர்களின் விருப்பப்படி இந்து பெயர்கள் சூட்டப் பட்டன. இதில் பெரும்பாலும் அவரவர் ராசி பலன்கள் மற்றும் முன்னோர்களின் நினைவுப் பெயர்கள் சூட்டப்பட் டன. பின்னர் அவர்களுக்கு துறவிகள், சமய பெரியோர்கள் தீட்சை வழங்கினர். மதமாற்றும் சடங்கு சட்டப்பூர்வமான முறை யில் நடைபெற்றது. குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் உள்பட 2 பாதிரியார்களும் இந்துக்களாக மதம் மாறினர்.மதம் மாறியவர்களுக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் பெறு வதற்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த செங் கோல் மடத்திடம் இருந்து மதம் மாறியதற்கான சான்றிதழ் பெற்று பின்னர் அரசிதழில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து இந்து சமயம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இதுவரை கிறிஸ்தவ மத சடங்குகள் மற்றும் கோட்பாடுகளை மட்டுமே தெரிந்திருந்தவர்களுக்கு இந்து மதம் குறித்தும் அதன் சமய, நம்பிக்கை சடங்குகள், வழிபாடு முறைகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆன்மீகவாதிகள், மடாதிபதிகள் விளக்கமளித்தனர். இதையடுத்து மாலை 4 மணிக்கு சுவாமி சங்கரானந்தா தலைமையில் தாய் மதம் திரும்பியவர்கள் அனைவரும் வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று நெல்லையப்பர் கோயிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியில் தமிழக துறவியர் பேரவை அமைப்பாளர் சதாசிவானந்தா சுவாமிகள், ராகவானந்தா சுவாமிகள், சங்கரானந்தா சுவாமிகள், ஏழை கிறிஸ்து மக்கள் இயக்க மாநில செயலாளர் நரேஷ் அம்பேத்கர், இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம், தேவர் பேரவை மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். தலித் கிறிஸ்தவர்கள் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியை முன்னிட்டு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா உத்தரவின் பேரில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராமர் பெயருடன் ஆரம்பம் நெல்லை சங்கீத சபாவில் இன்று தலித் கிறிஸ்தவர்கள் மீண்டும் இந்து மதம் திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டனர். இன்று ராமநவமி என்பதால் முதலில் மதம் மாறியவருக்கு ‘ஸ்ரீராமன்’ பெயர் சூட்டப்பட்டது

Tuesday, 5 November 2013

இசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது ?

இசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது ?

வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கென்றே சிறிலங்கா படையினரின் ஒரு பிரிவினர் தனியாக களமிறக்கப்பட்டிருந்தனர் என்று யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.நேற்று 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொளி மூலமாக இது அம்பலத்திற்கு வந்துள்ளது என்றும் மேற்படி பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகம் உடனடியாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேற்படி பேரவை வலியுறுத்தியுள்ளது.

இசைப்பிரியா கொடுமையான முறையில் வல்லுறவுக்குட்படுத்த பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில் நேற்று சனல்௪ வெளியிட்டுள்ள மற்றொரு காணொளியில் இசைப்பிரியா மேலாடைகள் அற்ற நிலையில் சதுப்பு நிலமொன்றில் இருக்கின்றார். அவரை படையினர் இழுத்து வருகின்றனர். மேலாடை அற்ற நிலையில் அவர் வர மறுத்த போது வெள்ளைத் துணி ஒன்றினால் அவரின் உடம்பை மறைத்து அவரை அழைத்துச் செல்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வெறுமனே உள்ளாடை மட்டும் அணிந்த ஒரு நபர் காணப்படுகின்றார். யுத்த களத்தில் படையினன் ஒருவன் வெறுமனே உள்ளாடையுடன் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், குறித்த நபர் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த களமிறக்கப்பட்ட அணியினனாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. உலகில் யுத்தம் நடைபெறுகின்ற பல நாடுகளில் ஒரு இனத்தை அடக்கியொடுக்குவதற்கு பாலியல் வல்லுறவு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது சிறிலங்காவிலும் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக பாலியல் வல்றுறவு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பினரை உடனடியாகத் தலையிடுமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் விசாரிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும். இதன் மூலமே சர்வதேச நாடுகளின் நேர்மைத்தன்மை வெளிப்படுத்தப்படும்.

நன்றி - அதிர்வு

Thursday, 31 October 2013

சேலை

 
- பெண்கள் சேலை கட்டும் விதம் அவர்களின் சமூக கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது..
-முதலில் கட்டிய சேலையையும் முதன்முதலாக கணவன் வாங்கி கொடுத்த சேலையையும் பத்திரமாக எடுத்து வைத்து பாதுகாக்கும் பெண்களின் மனதிற்குள் வலம் வந்துக் கொண்டு இருக்கும் மகிழ்ச்சியை அடையாளம் கொள்ள முடிகிறது..
- பிறந்த வீட்டில் எடுத்துக் கொடுக்கும் சேலைக்கு புகுந்த வீட்டில் கிடைக்கும் தனிப்பட்ட அங்கீகாரத்தால் பெருமிதம் கொள்ள முடிகிறது..
- கணவன் வாங்கி கொடுத்து கட்டும் சேலையை உடன்பிறந்த சகோதரிகளிடம் காண்பித்துக் கொள்ளும் போது பெருமை கொள்ள முடிகிறது..
- மத்தியதர குடும்பத்தில் படித்த பெண்கள் கட்டும் சேலை அவர்களின் தரத்தை மேன்மைப்படுத்துகிறது..
- விழாக்களுக்கு தகுந்தாற்போல திருமணமான பெண்கள் கட்டும் சேலை அவர்கள் கணவரின் மதிப்பிற்கு மரியாதை கூட்டுகிறது..
- வேறு கடைகளில் கிடைக்காத டிசைன்களில் தேடிக் கண்டுபிடித்து வாங்கிய சேலைகளைப் பற்றி மற்ற பெண்கள் விசாரிக்கும் போது விருது பெற்ற சந்தோசம் அடைய முடிகிறது..
- எந்த வயதாக இருந்தாலும் அம்மாவின் சேலையை கட்டி பார்ப்பதில் மகள்கள் ஆனந்தம் அடைய முடிகிறது..
-ஒரு மனிதன் பிறக்கும் போது படுத்து உறங்கும் தொட்டில் முதல் இறந்தபின் சுடுகாட்டுக்கு செல்லும் பாடை வரை முக்கிய பங்கு வகிப்பது சேலைதான் என்று சொல்லிக் கொள்ள முடிகிறது..!

சேலை பற்றிய பதிவை வெளியிட்ட பின் நிறைய விஷயங்கள் புரிந்துக் கொள்ள முடிந்தது...

இந்தியாவை பின்னுக்கு தள்ளும் அந்த ஆறு -->



1. சாலையில் எச்சில் துப்புதல் :

இதில் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அது சூவிங் கம் முதல் குட்கா வரை. இவற்றை கணக்கெடுத்தால் நான்கு ஜென்மம் எடுக்கும்.

2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :

இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விடயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.

3. குப்பைகளை கொட்டுவது :

நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்க்கு படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும் நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.

4. வரிசையை முந்தியடித்தல் :

இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம், பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.

5. விட்டுகொடுக்காத பழக்கம் :

அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எங்கனம். அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.

6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :

நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல்.. இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான். இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.

- நவீனா மதி