Friday, 11 March 2016

தாய்மார்களே உஷார்..!!! குழந்தையின் உயிரை பறித்த சாக்லெட் அதிச்சி தகவல்கள்



தாய்மார்களே உஷார்..!!! குழந்தையின் உயிரை பறித்த சாக்லெட்
அதிச்சி தகவல்கள்,
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பானியம் கிராமம் பி.சி.காலனியைச் சேர்ந்தவர் உசேன். இவரது மனைவி ஹசினா. இந்த தம்பதிக்கு தனா (வயது 3) என்ற பெண் குழந்தையும், ரிஹான் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
ஹசினா, அழுதுகொண்டு இருந்த தனது மகளுக்கு சாப்பிட சாக்லெட் கொடுத்தார். அதை சாப்பிட்ட தனா சிலவற்றை தரையில் கொட்டினாள்.
அருகில் தவழ்ந்து கொண்டு இருந்த 10 மாத குழந்தையான ரிஹான் சாக்லெட்டை எடுத்து விழுங்கியது.
இதில் சாக்லெட் தொண்டையில சிக்கி கொண்டது. இதனை கவனித்த தாய் ஓடிவந்து வாயில் விரலை விட்டு எடுக்க முயன்றார். ஆனால் சாக்லெட் தொண்டையில் சிக்கி ஒட்டிக் கொண்டது மூச்சுதிணறிய குழந்தையை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்து போனது. குழந்தையின் பிணத்தை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர்.
#சில தாய்மார்களுக்கு இந்த விடயம் தெரிவதில்லை, முடிந்தவரை ஷேர் செய்யவும்.

 

Best regards,