/// அவரவர் சாதிக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது....
- பொன். ராதாகிருஷ்ணன், பாஜக.... \\\
.
.
அது என்ன பாரம்பரியம்....?!
எல்லா சாதி பயலும்,
கல்லு சிலைய தான் கும்பிடுறான்....
அந்த சிலைக்கு வாழைபழம் தேங்காய்
வச்சு தான் கும்பிடுறான்....
மஞ்சள் நூலை தான் தாலியா கட்டறான்....
டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ல தான்
மளிகை சாமான் வாங்குறான்....
ஒரே மாதிரி தான் வீடு கட்டறாங்க...
.
எல்லா சாதி பொம்பளையும்,
பட்டு சேலை தான் கட்டறா....
சுடிதார், லெக்கிங்க்ஸ், ஜீன்ஸ் போடுறா.....
சரவணாஸ், போத்திஸ் சென்னை
சில்க்ஸ் தான் துணி எடுக்கறா...
கல்யாண், அலுக்காஸ், கஸானால
தான் நகை எடுக்கறா...
.
எல்லா சாதி ஆணும் பெண்ணும் ,
ATM ல தான் பணம் எடுக்கறாங்க....
28, 29,30,31, 1 தேதிகள்ல தான்
எல்லாருக்கும் சம்பளம் கிடைக்குது....
.
எல்லா சாதி ஜனங்களும்,
ஒரே ஒட்டு தான் ...
ஓட்டு போடற மெஷின் ஒன்னு தான்...
ஒரே பஸ்ல தான் போறாங்க...
ஒரே ரயில்ல தான் போறாங்க...
ஒரே விமானத்துல தான் பறக்குறாங்க....
ஒரே தியேட்டர்ல படம் பாக்குறாங்க...
ஒரே ஆஸ்பத்திரில தான் ட்ரீட்மென்ட் எடுக்கறாங்க...
ஒரே மாதிரி தான் சாகுறாங்க....
செத்தா கவர்ன்மெண்ட் சுடுகாட்டுல தான்
எரிச்சு சாம்பலா குடுக்கறாங்க...
எந்த சாதி பொம்பளையும் இப்போ
வெள்ளை புடவை கட்டறதும் இல்லை....
எந்த சாதி விதவைன்னும் கண்டுபிடிக்க முடியாது....
இப்டி பொறக்கறதுல இருந்து சாகுற
வரைக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை
முறை உள்ள ஜாதிகளில் என்ன பாரம்பரியம்
இருக்கு மிஸ்டர் பொன்னார்.....
வெறி புடிச்சு அலையிரதுலையா...?
சாதி சாதின்னு வெறி புடிச்ச நாயா
அடுத்தவங்களை கடிச்சி குதறது தான் பாரம்பரியாமா...?
நியாயமா இப்புடி வெறி புடிச்சி
அலையிறவனை மென்டல் ஹாஸ்பிடல்
தான் சேர்க்கணும் மிஸ்டர் பொன்னார்...
அதுக்கு உங்க அரசு மூலமா
நடவடிக்கை எதாவது எடுங்க...
அத
விட்டுபுட்டு பாரம்பரியம், பாரம்
இல்லாத
பரியம்ன்னு கத வுட்டுகிட்டு இர்க்காதிங்க...
பரியம்ன்னு கத வுட்டுகிட்டு இர்க்காதிங்க...
Best regards,
Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com