Saturday, 12 March 2016

பணக்கவர்களை வாக்காளர்கள் விரும்பக் கூடாது: சகாயம் வேண்டுகோள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்

பணக்கவர்களை வாக்காளர்கள் விரும்பக் கூடாது: சகாயம் வேண்டுகோள்
ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தேர்தல் என்பது அடிப்படை ஆதாரமானது. கண்ணியமிக்கது. யாருக்கு வாக்களிக்க விரும்பினாலும் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். தமிழக சட்டமன்ற தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறும் என்று நம்புகிறேன். பணக்கவர்களை விரும்பாமல், வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
வாக்குகளை ஒரு விற்பனையாக மாற்றி விடக்கூடாது. இளைஞர்கள் தகுதியான வேட்பாளர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இப்படி வாக்களித்து தேர்ந்தெடுத்தால் நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் பெருமையை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Best regards,