Saturday, 5 March 2016

CBSE மோகம்.

CBSE மோகம்..
எப்போலேர்ந்து வந்தது இந்த cbse மோகம். எனக்கு தெரிந்து matriculation பள்ளிகளை தேடி ஓடிக்கொண்டிருந்த பெற்றோர்கள், சமச்சீர் கல்வி என்று வந்தவுடன் cbse நோக்கி ஓட ஆரம்பித்துள்ளார்கள்.
நண்பர்களிடம், உறவினர்களிடம் "உங்கள் குழந்தை என்ன படிக்கிறாள்/ன்" என்று கேட்டால் அவர்களின் பதில்..
"First standard CBSE SYLLABUS" என்று syllabusஐயும் சேர்த்து அழுத்தி சொல்வார்கள். இதில் அவர்களுக்கு பெருமை.
ஆனால் cbse syllabusல், குழந்தைகளுக்கு தரும் burdenஐ பற்றி யோசித்துள்ளீர்களா????
CBSE SYLLABUSல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் தேர்வு எழுத பயந்துகொண்டு அவன் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
முன்பெல்லாம் தேர்வில் தோல்வியுற்றால்தான் தற்கொலை செய்து கொள்வார்கள். இப்பொவெல்லாம் தேர்வு எழுத பயந்து கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள் மாணவர்கள்.
ஏன் CBSE?? என்று கேட்டால்..
குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதுதான் இங்கு பெற்றோர்களின் பதிலாக இருக்கும். குழந்தைகளின் நிகழ்காலத்தை தொலைத்துதான் எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமா??
இன்னும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்.. பெருமைக்காக cbseல் குழந்தைகளை சேர்த்து விட வேண்டியது. பிறகு பள்ளியில் கொடுக்கும் ஹோம்-வொர்க்கையும் ப்ராஜக்ட்-வொர்க்கையும் இவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் கொடுக்கும் ப்ராஜக்ட் எதுவுமே குழந்தைகள் செய்வது போல் இருக்காது. பெற்றோர்கள்தான் விடிய விடிய உட்கார்ந்து செய்து கொண்டிருப்பார்கள். அதை ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இப்படி ப்ராஜக்ட் கொடுக்கறாங்கன்னு பெருமை கலந்த சளிப்புடன் பதிவு வேறு இடுவார்கள். அந்த பதிவிலும் கூட CBSE SYLLABUS என்ற குறிப்பு கட்டாயம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற வருடம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்(cbse அல்ல) 95.9% மாணவியரும், 90.5% மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.
எப்படி சாத்தியம்?!!!
எங்கள் உறவினர் ஒருவரிடம் இதைப்பற்றி பெருமையாக குறிப்பிட்டு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்னார்.. "இந்த சமச்சீர் வந்தவுடன் கல்விக்கான தகுதியே போயிடுச்சு. இந்த மாதிரி கல்விமுறை இருந்தா இப்படித்தான் எல்லா பயலும் நல்லா மார்க் வாங்குவாய்ங்க. முதல்ல இந்த சிஸ்டத்த மாத்தணும். அதனால்தான் எம்புள்ளைகள CBSEல சேர்த்து விட்டிருக்கேன்" என்றார்.
பெரும்பாலான பெற்றோர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், கல்வி என்பது கடினமானதாகத்தான் இருக்க வேண்டும். நிறைய ஹோம்-வொர்க் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அது தரமான கல்வி. மிக எளிமையாக, குழந்தைகளின் மனநிலைக்கும் அவர்களின் மூளை வளர்ச்சிக்கும் ஏற்றார் போல் கல்வி இருந்தால் அது தரமற்ற கல்வி.
பாரதியை பள்ளியில் சேர்த்தவுடன் அவன் ஆசிரியரிடம் நான் சொன்னது "தினமும் இரண்டு subject மட்டும்தான் ஹோம்-வொர்க் கொடுக்க வேண்டும். அதற்கு மேல் கொடுத்தால் அவன் செய்ய மாட்டான்". இப்போ அவன் எட்டாம் வகுப்பு படிப்பதால் கூடுதலாக ஒரு subject. அதாவது math + any 2 subject.
அதேபோல் விடுமுறை நாட்களில் ஹோம்-வொர்க் கொடுத்தால் செய்ய விட மாட்டேன். ப்ராஜக்ட்-வொர்க் என்றால் ஓகே. அதுவும் அவனே செய்வதாக இருக்க வேண்டும். அவ்வப்போது சின்ன சின்ன உதவி வேண்டுமானால் செய்வேன். அவனால் செய்ய முடியாத இயலாத ப்ராஜக்ட் என்றால் அவனால் இயலவில்லை என்று அவன் ஆசிரியரிடம் தெரிவித்து விடுவேன்.
கல்வியை குழந்தைகள் விரும்பி கற்க வேண்டுமே தவிர, அதை திணிக்கும் அதிகாரம், உரிமை பெற்றோர்களுக்கு கூட கிடையாது என்பதே என் கருத்து.

Best regards,