Friday 28 December 2018

கண்ணீர்......!

கண்ணீர்......!

இயல்பான

இதயத்திலிருந்து
பீரிட்டு பொங்கி எழும்
உணர்வுகளின் வெளிப்பாடு

பெண்கள்
ஆண்களை வீழ்த்த
கையாலும் ஒப்பற்ற
ஆயுதம்

தண்ணீர்
மட்டுமல்ல
பெண்களின்
கண்ணீரும்தான்
வீணடிக்கப்படுகிறது என்று கூவும்
பெண்ணிய வாதத்தின் சின்னம்

இனி.....

கண்கள்
அச்சு மற்றும் இலத்திரனியல்
ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களை தாங்கள் வாழ்வியலோடு
ஒப்பீட்டு அழுகிறது.அழுவது உருதியான
நிலையே! என்கிறது ஆய்வு

மன
தைரியம்
அதிகம் இருப்பதால்
அவர்களால் மற்றவர்களின்
விஷயங்களைப் பார்த்து அதில்
இருக்கும் கஷ்டங்களை சிந்திக்க
முடிகிறது

இதனால்
நிஜத்தையும்
கற்பனையையும்
பிரித்தறிய முடிகிறது

வார்தையால்
வெளிப்படுத்த முடியாததை
கண்ணீரால் உணர்த்த முடிகிறது

துக்கத்தின்
வடிகால் என்றால்
அது மிகையாகாது

கண்ணீர்
கிருமி நாசினியாக....
கண்ணில் எற்படும்
பக்றிரீயாக்களை கட்டுப்
படுத்தி விடும்

உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தினால்
உடல் நல கேடு விளைவிக்கும்
தன்மையை தடுக்கும் அரும் மருந்து

கண்ணீர்
உடல் நலத்திற்க்கும்
மன நலத்திற்க்கும் நல்லது

ஆணோ
பொண்ணோ
அழுத பின்னரே
சம நிலை பேணப்படுவதை
நன்றாக உணர்கின்றார்கள்

உப்பு
கரிக்கும்
கண்ணீரே
வாழ்கைக்கு சுவை
(கவிக்கோ)

நான்
அழும் போது
மழையில் நனைய
ஆசைப்படுகிறேன் என்பவராலேயே
உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்த முடிந்தது

பிறப்பு முதல்
இறப்பு வரை...
அழுகையானது
சாபமல்ல
வரம்!!!


Best regards,