Saturday 15 December 2018

மௌனம்

மௌனம்

இந்த வார்த்தைக்கு பல
அர்த்தங்கள் உள்ளன.

கேள்வி கேட்கப்படும்
நேரத்தில் மௌனம் சம்மதம்.

நாம் நேசித்த சில உறவுகளை பிரியும் போது மௌனம் துன்பம்.

இடையுறாது காரியம் செய்யும்  விடா முயற்சியின் போது மௌனம் நம்பிக்கை.

நம் இதயத்தில் அமர்ந்த
அந்தக் காதலில் மௌனம் சித்ரவதை.

நாம் தோல்வி கண்டு
வெற்றிக்கு வழிதேடும் போது மௌனம் பொறுமை.

நாம் வெற்றி கண்டபோது
நம்மைச் சூழ்ந்திருக்கும் மௌனம் அடக்கம்.

திருமணக்கோலத்தில்
உள்ள அமைதியின் போது மௌனம் வெட்கம்.

தவறுதலாக தவறு செய்த போது மௌனம் பயம்.

ஆசைகள் நம்மை சூழ்ந்திருக்கும் போது மௌனம் எதிர்பார்ப்பு.

கோபத்தை குறைக்காமல்
அடக்கும் போது மௌனம் ரத்தக்கொதிப்பு.

இலக்கை அடைய நினைத்து
ஒருமுகப்படுத்தும் போது
மௌனம் சக்தி.

தீவிரமாகப் போராடும் போது மௌனம் வலிமை.

பிடிக்காத விஷயங்களை
ஒத்துக்கொள்ளாத போது
மௌனம் எதிர்ப்பு.

கல்யாணவீட்டினில்
கால் இடறி விழுந்தபின் எழுந்து  அமர்ந்திருக்கும் போது மௌனம் அவமானம்.

நம்மை விட்டு பிரிந்தவர்களை
பாசத்தோடு நினைக்கும் போது மௌனம் துக்கம்...!

நம் குடி கெடுத்தவர்களை
பழிவாங்க நினைக்கும் போது மௌனம் ஆத்திரம்.

கற்ற வித்தையை கையாளும் போது மௌனம் ஆனந்தம்.

அயர்ந்த வேளையில்
அமைதியான அந்த
மௌனம் உறக்கம்.

உறக்கம் என்று அனைவரும்
நினைத்திருக்க
உடலோ அசையாமல் அயர்ந்திருக்க அண்டை அயலார் சூழ்த்திருக்க மௌனம் மரணம்...!

Best regards,