Sunday, 18 December 2011

திருப்புல்லாணி பெருமாள் கோவில்

ஸ்தல வரலாறு......

ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் பெரிய பெருமாள் கோவில் உள்ளது. இத்திருத்தலத்தை "புல்லணை'' என்றும் அழைப்பார். "புல்லணை என்பது "திருப்புல்'' அப்புல்லில் இராமன் பள்ளிகொண்டு எழுந்தருளியதால் 'புல்லணை'' என்று பெயர் வழங்கப்பட்டது. என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அள்ளி கொஞ்ச ஒரு குழந்தை இல்லாமல் நிறைய‌ பேர் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருப்புல்லானி ஆதிஜெகனாதபெருமாள் கோவில் சென்று இங்கு இருக்கும் பெருமாளையும் பத்மாஸனித்தாயாரையும் வணங்கி காலையில் கோவிலில் படைக்கப்படும் பிரசாதமான‌ பாயாசம் சாப்பிட்டு விட்டு சென்றால் அந்த பெருமாளின் கருணையினால் கண்டிப்பாக‌ குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இத்தலத்திற்கு வந்து, சாந்தான கோபாலகிருஷ்ண சந்நிதிக்கு முன் தக்க ஹோமங்கள் செய்து வழிபட்டால் புத்திப்பேறு கிடைக்கும். எத்தனையோ டாக்டர்களிடம் காண்பித்து சரியாகதவர்கள் இங்கு வந்து வணங்கி செல்கின்றனர். இங்கு வந்து வணங்கி சென்றால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

போக்குவரத்து வசதி...

இந்த கோவிலுக்கு செல்ல சென்னையிலிருந்து ரெயில் மற்றும் பேருந்து வசதி உள்ளது.