Wednesday, 7 December 2011

பிரமாதப்படுத்தும் `பிராக்கள்’

பெண்களின் உடலோடு ஒட்டிக்கிடக்கும் பிராக்கள், அவர்களின் முன் அழகை பல மடங்கு அதிகரிக்கிறது. காலத்திற்கு ஏற்ப, வடிவத்திலும், நிறத்திலும், தோற்றத்திலும், சவுகரியங்களிலும் அது நல்ல மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
முன் அழகு முழு அழகாகத் திகழவேண்டும் என்றால், சரியான அளவிலான பிராவை தேர்ந்தெடுத்து அணியவேண்டும். அதிக அழகுக்கு இறுக்கமான பிராவை அணிய வேண்டும் என சில பெண்கள் கருதுவதுண்டு. அது சரியல்ல, பிரா அதிக இறுக்கத்துடன் இருந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கும். அந்தப் பகுதி வீக்கமடையும். அதிகமாக வியர்க்கும். அதனால் சரும நோய்கள் உருவாகக்கூடும்.
இறுக்கமான பிரா அணிந்தால் இத்தனை பிரச்சினைகள் இருப்பதால், தொள தொளவென பிரா அணிபவர்கள் உண்டு. அது வேறு விதத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். தொளதொள பிரா அணிந்தால், அது மார்பகங்கள் தொங்கிப்போக காரணமாகிவிடுகின்றன. அது அழகுக் குறைபாடு ஆகிவிடும்.
உங்களுக்கு எந்த மாதிரியான பிரா பொருத்தமாக இருக்கும் என்பதை அளவு மூலம்தான் தீர்மானிக்க முடியும். சரியாக எப்படி அளவிட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
***
கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டு அளவெடுக்கும் வேலையை தொடங்கவேண்டும். மார்பின் சற்று கீழே நெஞ்சில் டேப்பை வைத்து அளவிட வேண்டும். டேப்பை இறுக்கமாகவோ, தளர்வாகவோ பிடிக்கக்கூடாது. சரியான முறையில் பிடித்து அளவெடுத்தால் மட்டுமே சரியான அளவை தெரிந்துகொள்ள முடியும்.
டேப் மூலம் கணிக்கப்படும் உங்கள் அளவு என்னவோ, அத்தோடு ஐந்தை சேர்த்தால் கிடைக்கும் அளவே, உங்கள் பிராவின் அளவு. அளவிடும்போது ஒற்றைப்படை எண் வந்தால், கூடுதலாக ஒன்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். இது பிராவின் `பேண்ட் சைஸ்’ எனப்படும் சுற்றுவட்ட அளவுதான்.
அடுத்து பிராவின் `கப் சைஸ்’ அளவெடுக்க வேண்டும்.
முதலில் கண்ணாடியை பார்த்தபடி நிமிர்ந்து நில்லுங்கள். டேப்பால் மார்பகங்களின் மேற்பகுதி யோடு அளவிட வேண்டும். அளவிடும்போது டேப் மார்பகங்களை தொட்டபடி இருக்க வேண்டும்.
முதலில் இந்த கப் சைஸ் எடுத்துக்கொள்ளுங்கள். அதிலிருந்து பேண்ட் சைஸ் அளவை குறைக்கவேண்டும். அப்போது கிடைக்கும் நம்பர் ஒன்றாக இருந்தால், உங்கள் கப் சைஸ் `ஏ’ என்று எடுத்துக்கொள்ளவேண்டும். ஏ, பி. சி என்று கப் சைஸில் மூன்று வகை உள்ளன.
பேண்ட் சைஸ், கப் சைஸ் இரண்டையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு பிராவின் அளவை கண்டறியலாம். முதல் இரு அளவீடுகளையும் பிரா வாங்கும் கடையில் கொடுத்தால் அவர்கள் உங்கள் பிராவின் அளவைக் கூறுவார்கள்.
***

பிராக்களில் பத்து வகைகள் உள்ளன. அதன் விவரம்:

ஸ்போர்ட்ஸ் பிரா
விளையாட்டு வீராங்கனைகள் இதை அணிவார்கள். மார்பகங்கள் வளர்ச்சியடையத் தொடங்கும் காலத்தில் சிறுமிகளுக்கும் இது ஏற்றதாக இருக்கும்.

தாய்மை பிரா

பாலூட்டும் தாய்மார் கள் அணிய வேண்டிய பிரா இது. இதனை `நர்சிங் பிரா’ என்பார்கள். குழந்தைக்கு பாலூட்டு வதற்கு எளிதாக திறந்து, மூடும் விதத்தில் இது வடிவமைக் கப்பட்டிருக்கிறது. கெட்டியான துணியில் `லைனிங்’ செய்யப்பட்டிருப்பதால் நனைந்தாலும் பிரச்சினையிருக்காது.

தேனிலவு பிரா

`ஹனிமூன் பிரா’ என்று கவர்ச்சியாக பெயர் சூட்டப்பட்டிருக்கும் இதனை, புதுமணப் பெண்கள் வாங்கி பயன்படுத்துவார்கள். பளிச்சென்ற வண்ணத்தில் பார்க்க அழகாக இருக்கும். எம்பிராய்டரிங் ஒர்க் செய்யப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம்.
கிராஸ் கட் பிரா
குண்டான தோற்றம் கொண்ட பெண்கள் இதனை அணியவேண்டும். பெரிய மார்பகங்களாக இருந்தாலும் நன்றாக தாங்கிப் பிடித்துக்கொள்ளும் விதத்தில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ரவுண்ட் ஸ்டிச் பிரா

மார்பகங்கள் தூக்கலான அழகுடன் காட்சியளிக்க வேண்டும் என்று விரும்பும் பெண்கள் இதனை வாங்கி பயன்படுத்துவார்கள்.

மெட்டல் பிரா

ஜீன்ஸ் போட்டுக்கொள்ளும் பெண்கள் இதனை அணிவார் கள். இதில் `மெட்டல் சப்போர்ட்’ இருப்பதால் மார்பகங்கள் தொங்காத அளவிற்கு பிடித்துக்கொள்ளும்.

பேடட் பிரா

மார்பகங்களை உடலுக்கு பொருத்தமாக சற்று பெரிதாகக்காட்டவும், மார்பகத்திற்கு நல்ல வடிவத்தை தரவும் இது உதவும்.
லேஸ் பிரா
இந்த பிராக்களில் லேஸ் இணைக்கப்பட்டிருக்கும். புடவை கட்டும் பெண்கள் அணிந்துகொள்ள சிறந்தது.

ஸ்ட்ராப்லெஸ் பிரா

இந்த வகை பிராக்களில் `ஸ்ட்ராப்’ இருக்காது. கவுன் அணியும்போது இதனை பயன்படுத்திக்கொண்டால் அழகு அதிகரிக்கும்.

சிலிக்கான் பேடு பிரா

மார்புகள் சிறிதாக தோன்றுகிறதே என்று வருந்தும் பெண்கள் இதனை பயன்படுத்தி சந்தோஷமடைந்துகொள்ளலாம். பிராக்களில் `சிலிக்கான் பேடு’ இணைத்து வைத்திருப்பார்கள். பேடு தேவைப்படாவிட்டால் கழற்றி எடுத்துவிடலாம். தேவைப்பட்டால் அதற்கென்று இருக்கும் விசேஷ பசையை பயன்படுத்தி பேடை ஒட்டி அணிந்து கொள்ளலாம்.