Wednesday, 28 December 2011

முல்லை பெரியாறு பிரசனை : கேரளத்தவர்கள் YOU TUBE-ல் நக்கல்! காணொளிஇணைப்பு

 முல்லைப் பெரியாறு அணை குறித்து இணைய தளங்களில் தவறான பிரசாரத்தை கேரள மாநிலத்தினர் செய்து வருகின்றனர்.
ஒய் திஸ் கொல வெறிபாடலை ரீ மிக்ஸ் செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வருவதையடுத்து, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை அந்த மாநில ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டு பெரிதாக்கி வருகின்றன.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பது தொடங்கி அணையை உடைக்க முயல்வது, தமிழர்கள், தமிழக வாகனங்கள் மீதான தாக்குதல் போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இரு மாநில உறவுகளைப் பாதிக்கும் வகையில், கேரள அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் அராஜகம் தொடர்கிறது. கேரள ஊடகங்கள் பொறுப்பின்றி தவறான தகவல்களையும், சித்தரிக்கப்பட்ட காட்சிகளையும் பரப்புகின்றன என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

முல்லைப் பெரியாறு அணை உடையும், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கேரள இயக்குநர் சோகன் ராய், ‘டேம் 999′ என்ற திரைப்படத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை சித்தரித்துள்ளார்.

இந்த படம் மற்றும் முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறான தகவல்களைக் கொண்ட குறுந்தகடுகளை கேரளாவைச் சேர்ந்தவர்கள் தயாரித்துள்ளனர்.

இதை கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கேரள மாணவர்கள் அதிகம் படிக்கும் கல்லூரிகளில் ஒளிபரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இணையதளத்திலும் விஷம பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டேம் 999′ மற்றும் முல்லைப் பெரியாறு அணை உடைந்து, இடுக்கி மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவது போல் வதந்தியை பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ‘ஒய் திஸ் கொல வெறிஎன்ற திரைப் பாடல் மூலமும் விஷம பிரசாரத்தில் சிலர் இறங்கியுள்ளனர். நடிகர் தனுஷ் இந்த பாடலை பாடுவது போல் காட்சிகள் இணையதளங்களில் ஏற்கனவே வெளியாகியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை இழிவாக சித்தரித்தும், அணை உடையும் என்ற தவறான தகவல்களோடும், தமிழக மக்கள் மீது வெறுப்பை உமிழும் வார்த்தைகளைக் கொண்டும் அந்த பாடலை ரீ மிக்ஸ் செய்துள்ளனர்.
இதுபோன்ற பல்வேறு பாடல்கள், ஆவணப் படங்களை யூ ட்யூப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த விஷமப் பிரசாரத்தை தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து முறியடிக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.


நன்றி  tamilkudiyarasu