காஸை சிக்கணப்படுத்துவது எப்படி?
       
          

- * ரப்பர் டியூபில் சிறிது காஸ் லீக் ஆனாலும், டியூப் வாங்கி புதிதாக பொருத்த வேண்டும்.
- * காஸ் ஸ்டவ்வை பற்ற வைப்பதற்கு முன், சமையலுக்கு வேண்டிய அத்தனை  பொருட்களையும், பாத்திரங்களையும் முன்கூட்டியே யோசித்து திட்டமிட்டு, ஸ்டவ்  அருகே தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டவ்வை பற்ற வைத்து, பிறகு  ஒவ்வொன்றாக தேடி எடுத்து வருவது ஒருபோதும் கூடாது.
- * சமையலுக்கு கூடுமானவரை அகலமான அடிப்பாகம் உள்ள பாத்திரங்களையே  பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், ஜுவாலை மூலம் கிடைக்கும் வெப்பம்  அதிகமாக சமையலுக்கு உதவும்.
- * சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரத்தின் வாயை இறுக்கமாக மூட  வேண்டும். உள்ளே உள்ள நீராவி வெளியேறாது தடுத்தால்தான், உள்ளே உள்ள  பொருட்கள் வெகு விரைவில் வேகும்.
- * பிரிஜ்ஜிலிருந்து எதையும் எடுத்தவுடன் சமைக்க துவங்கி விடக் கூடாது.  வெளிக்காற்றில் வைத்து, அது வெளி வெப்ப நிலைக்கு ஏற்ப வெப்பமடைந்த  பிறகுதான், சமையலுக்கு பயன்படுத்த வேணடும்.
- * அரிசி, பருப்பு போன்றவைகளை முன்கூட்டியே ஊறப் போட்டிருந்து, பிறகு எடுத்து சமைத்தால், விரைவில் வெந்துவிடும்.
- * குக்கருக்குள் உள்ள பொருட்கள் வேக எவ்வளவு தண்ணீர் தேவையோ, அந்த அளவு  தண்ணீர் மட்டுமே குக்கரில் இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும்.
- * வீட்டிலுள்ள எல்லாரும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால், மீண்டும், மீண்டும் உணவைச் சூடாக்குவதைத் தவிர்க்கலாம். 
