Monday, 30 March 2020

“நம் முன்னோர்கள் வாழ்ந்த முறை..

“நம் முன்னோர்கள் வாழ்ந்த முறை..

1.கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள். ஏன்? -பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள்..

2. சலூனுக்கும், சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள். ஏன்? -கிருமிகள்...

3. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள். ஏன்? -கிருமிகள்...

4. பள்ளிக்கும், வெளியேயும் சென்று வந்தால் கை,கால் கழுவி வீட்டிற்குள் வரசொன்னார்கள். ஏன? -கிருமிகள்...

5. பிறந்தாலோ, இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர். ஏன்? -கிருமிகள்...

6. சாவு வீட்டில் சமைக்க கூடாது என்றார்கள். ஏன்? -கிருமிகள்...

7. குடும்பத்திற்கு சமைக்கும் பெண்கள் காலையிலேயே குளித்துவிட்டு சமைத்தார்கள். ஏன்? -கிருமிகள்...

8. வாசல் பெருக்கி சாணம், மஞ்சள் தெளித்து கோலமிட்டார்கள். ஏன்? -கிருமிகள்...

9.மண்,செம்பு,வென்கல பாத்திரங்களை உபயோகித்தார்கள். ஏன்? -கிருமிகள்...

10. வீட்டில் சமைத்த உணவு அதிலும் சைவமே பெரும்பாலும் உண்டார்கள். ஏன்? -கிருமிகள்...

தனிமனித ஆரோக்கியம், சமூகத்தில் சுத்தம், அண்டை அயலாரோடு அகலாது அனுகாது உறவாடுதல் போன்ற நம் மூதாதையர் வாழ்வியல் நெறியை கிண்டலடித்து, திட்டமிட்டு சிதைத்த மேலைநாட்டு நாகரிகம் அதற்கான விலையை இன்று கொடுத்து கொண்டிருக்கிறது...

இன்று... உறவினர்களை கூட வீட்டுக்குள் அனுமதிக்க முடியாத நிலை...


Note:
(அந்த 7 & 8 வது points க்கு Association பொறுப்பல்ல...)🤫🤕Best regards,

Saturday, 28 March 2020

ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்ட கொரோனா வைரஸ்

ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்ட கொரோனா வைரஸ்
பதிவு: மார்ச் 16, 2020 13:56 IST
மாற்றம்: மார்ச் 16, 2020 14:52 IST

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது.
ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்ட கொரோனா வைரஸ்
கோப்பு படம்
சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் தினமும் கொத்து கொத்தாக பலர் பலியாகி வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன் கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் (மார்கழி) மேற்கு திக்கில் இருந்து புதிய வைரஸ் நோய் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படியே புதிய வைரஸ் நோயான கொரோனா சீனாவில் உருவாகி 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே நடுங்க வைத்து வருகிறது. இத்தாலி, ஈரானிலும் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொரோனா வைரஸ் உருவாவதற்கு ஜோதிட ரீதியாக என்ன காரணம் என்று சார்வரி வரு‌ஷத்திய ஆற்காடு சீதாராமய்யர் சர்வ முகூர்த்த பஞ்சாங்க ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் கூறியதாவது:-

இந்த ஆண்டின் உலக ஜாதகம் விகாரி வரு‌ஷம் ராஜா-சனி, மந்திரி-சூரியன் சூரியனுக்கு மகன் சனி இருவருக்கும் பகை. குருவுடன் சனி தனுஷில் இணைந்து பிரம்மத்தி தோ‌ஷம் பெற்றதாலும், 7-ம் பார்வையாக புதன் வீட்டை பார்ப்பதாலும் மிதுன ராசியில் புதன் வீட்டில் ராகு பகவான் இருப்பதாலும், இந்த புதிய வைரஸ் நோய் உருவாகியுள்ளது.

மேலும் மகர சங்கராந்தி புரு‌ஷர் பெண் கழுதை வாகனத்தில் வந்ததால் விலங்குகளால் புதிய வைரஸ் நோய் உற்பத்தியாகியுள்ளது. இத்தகைய உலக ஜாதக பலன் மாற்றமே புதிய நோய் உருவாவதற்கு ஒரு காரணம்.

அசுர சுக்கிரன் மேற்கில் உதயத்தில் இருப்பதால் மாசி மாதம் கிரக நிலை மாத வாரியாக மாசியில் மீனத்தில் உச்ச பலம் பெற்றிருப்பதாலும் சூரியனும் புதனும் கும்பத்தில் சேர்ந்து இருப்பதாலும் குளிர் பிரதேசமான நாடுகளிலும், மாநிலங்களிலும் இந்த நோய் அதிவேகமாக பரவும்.

சந்திர கிரகணம் இந்த ஆண்டு வடமேற்கு பருவ காலத்தில் பிடிப்பதால் இந்த புதிய வைரஸ் நோயானது வடகிழக்கு திக்கில் உருவாகி மேற்கு திக்கு வழியாக தமிழ்நாட்டிலும் நுழையும். இங்கும் பரவும். ஆனால் பாதிப்பு இருக்காது.

முதலில் பொதுவாக ஒரு நோய் பரவி வருகிறது என்றால் மரம், விலங்குகளை வைத்து நாம் கணித்து கொள்ளலாம். முதலில் வேப்ப மரத்தை நோய் தாக்கும். அதன்பின் அரச மரம், புங்க மரத்தையும் நோய் ஆட்கொள்ளும். அதன் பிறகு விலங்குகளில் நாய்களை தாக்கும். அதன் பின்னர் தான் மனிதனை தாக்கி பரவுகிறது.

வேப்ப மரம் காற்றில் வரும் வைரசை முழுமையாக உள்வாங்கி இழுத்து பூமிக்குள் தள்ளிவிடும். இதனால் நோய் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது.

நாய்களுக்கு தோல் நோயை உருவாக்கும். இதெல்லாம் வைரஸ் பரவுவதற்கான அறிகுறி.

புதன் கிரகம் மீனத்தில் இடம் பெயர்ந்து நீட்சம் பெற்றதாலும் சூரியன் 14-ந்தேதி முதல் மீனத்தில் பெயர்ச்சி யாவதாலும் நோய் கட்டுக்குள் வரும்.

சுக்ர பகவான் மே‌ஷ ராசிக்கு இடம் பெயர்ந்ததால் இந்த வைரஸ் நோய் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 14-ந்தேதி முதல் சூரிய பகவான் மே‌ஷ ராசிக்கு அதிபதி செவ்வாய் கிரகம் அந்த வீட்டில் சித்திரை 1-ந்தேதி உச்ச பலம் பெற்று வருவதால் 14.4.2020 செவ்வாய்க் கிழமை உச்ச பலத்துடன் ராஜ கிரகத்துடன் வருவதால் அனைத்து விதமான வைரஸ் நோய்களையும் குணமடைய செய்வார். அன்றிலிருந்து நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து ஜூன் மாதம் முற்றிலும் குணமடைந்து விடும்.

வறட்டு இருமல், சரியான தூக்க மின்மை இந்த கொரோனா வைரசுக்கான முதல் அறிகுறி. கால் உதறல் நோயின் தீவிரத்தை காண்பிக்கும். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவரை பார்த்து அவரது ஆலோசனைபடி மருத்துவம் பார்ப்பது நல்லது.

12 நாள் முதல் 18 நாட்களுக்குள் இந்த நோயை குணப்படுத்திட வேண்டும். அதன் பிறகு நோயின் தாக்கம் நீடித்தால் நல்லதல்ல.

மஞ்சள் கலர் பழங்கள் பப்பாளி, ஆரஞ்சு, பைனாப்பிள், வாழைப்பழம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புதிய வகை வைரசில் இருந்து காக்கும்.

1 டம்ளர் வெந்நீரில் ஒரு சிண்டிகை பெருங்காய தூள் போட்டு குடிக்கலாம். 1 டம்ளர் வெந்நீரில் எலுமிச்சை சாறில் உப்பு போட்டு சாப்பிடுவதாலும், கருந்துளசி, சீரகம், மிளகு, சுக்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சித்தா, ஆயுர்வேதம், பாட்டி வைத்திய முறையில் இந்த நோய்க்கு மருந்து உள்ளது. புதிய வகையான வைரஸ் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வீட்டின் முன்புறமோ அல்லது பின்பக்கத்திலோ துளசிசெடி வளர்க்க வேண்டும். கருந்துளசி வளர்த்தால் மிகவும் நல்லது. எந்த விதமான நோய்களில் இருந்தும் பாதுகாத்து கொள்ளலாம்.

இவ்வாறு ஜோதிடர் கே.என்.சுந்தரராஜன் அய்யர் கூறினார்.Best regards,

21 நாள் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் அடைந்து கிடக்கும் கணவனின் பிரதான பணிகள்..

21 நாள் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் அடைந்து கிடக்கும் கணவனின் பிரதான பணிகள்..

சீலிங் பேன் துடைப்பது..

தினமும் காத்திருந்து பல்லி அடிப்பது..

ஒட்டடை அடித்து, டியூப் லைட், பல்பை துடைப்பது.

பீரோவில் உள்ள மனைவி & குழந்தைகளின் துணிகளை அடுக்கி வைப்பது.

எலியை பிடிக்க புது வழிமுறைகளை கையாள்வது..

பிள்ளைகளின் ஆண்டு தேர்வுக்கான புத்தகங்களை மட்டும் வைத்து விட்டு, மற்ற நோட்டுகளின் எழுதாத பேப்பரை கிழிப்பது.

கிழித்த பேப்பர்களை ஒரு நோட்டாக தயார் செய்து  மளிகை கடை, காய்கறி வாங்க லிஸ்ட் போட தயார் படுத்துவது.

முந்தின நாள் கிழித்த எழுதிய பேப்பரை வைத்து, காலையில் விறகு அடுப்பில் வெந்நீர் போடுவது.

துவைத்து போடும் துணியை மொட்டமாடியில் காய போடுவது.

தண்ணீர் டேங்கை கிளீன் செய்வது.

மனைவிக்கு அடுபங்கரையில் ஒத்தாசை செய்வது.

செடிக்கு தண்ணீர் ஊத்துவது.

வீட்டை சுற்றி வெளியே பெருக்கி, பெருச்சாளி பொந்துகளை மணல் போட்டு அடைத்து, ஒழுங்கு படுத்துவது.

21 நாள் வீட்டில் கணவன் மனைவிக்கு உதவி செய்யுங்கள்

வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்கு வாழ்வது பெண்கள் மட்டுமே

21 நாட்கள் ஆண்கள் செய்வோம் வீட்டில் வேலையை

மனைவியை அமர வைத்துBest regards,

21 உள்ளடங்கு நாட்கள் இலகுவாக நகர்த்த, குடும்பஸ்தருக்கான 21 வாழ்வியல் சூத்திரங்கள்.

21 உள்ளடங்கு நாட்கள் இலகுவாக நகர்த்த, குடும்பஸ்தருக்கான 21 வாழ்வியல் சூத்திரங்கள்.

1. வீடு மனைவியின் அதிகார வரம்பிற்குட்பட்டது. அங்கு நீங்கள் அதிகாரம் செலுத்த முயலாதீர்கள். கிட்டாதாயின் சட்டென மற.

2.எப்போதும் அடக்கத்தை கடைப்பிடியுங்கள். அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.

3.வீடு என்பது நீங்கள் தங்குவதற்கு விசா பெற்றுள்ள இடம். குடியுரிமை பெற முயற்சிக்காதீர்கள். விணாசே காலம் விபரீத புத்தி.

4.உங்கள் அன்றாட கடன்களையும் கடமைகளையும் அனுமதி பெற்று கைக்கொள்ளுங்கள். அனுமதி ஒரு வெகுமதி.

5.உணவும் பானங்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் உடனடியாக கிடைக்க வேண்டும் என்று  எப்போதும் நினைத்து விடாதீர்கள். கிடைக்கும் நேரத்தில் மறக்காமல்  கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஆசைப் பட்டால் அவஸ்தை.

6. சும்மா இருக்குறதுக்கு ஒட்டடை அடிக்கலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் ஒட்டடை அடித்து விடுங்கள். இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான முதல் கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். முந்தினால் முதலுக்கு மோசமில்லை.

7. சும்மா இருக்குறதுக்கு ஃபேன் துடைக்கலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் ஃபேன் துடைக்க ஆரம்பியுங்கள். ஏங்க ஜாக்கிரைதைங்க, பாத்து க்ளீன் பண்ணுங்க என்று கரிசன வாசகம் உங்கள் காதுகளை எட்டும்.  இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான இரண்டாவது  கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். சுத்தம் சோறு போடும்.

8. சும்மா இருக்குறதுக்கு அந்த பாத்ரூமை க்ளீன் பண்ணலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் பாத்ரூம் க்ளீன் பண்ண ஆரம்பியுங்கள். ஏங்க இதையெல்லாம் நீங்க பண்றீங்க, வேலையாள் வச்சி பண்ணிக்கலாங்க  என்று கரிசன வாசகம் உங்கள் காதுகளை எட்டும்.  இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான மூன்றாவது  கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். சுத்தம் சுபம்.

9. இப்போது சிங்க்கில் இருக்கும் பாத்திரங்களை கழுவ துவங்குங்கள். ஏங்க, இதெல்லாம் நீங்க செய்யிற வேலையாங்க, போயி பேப்பர் படிங்க, டீ போட்டு எடுத்துட்டு வர்றேன் என்று ஒரு வாசகம் வரும். அது திருவாசகம். இப்போது உங்கள் மதிப்புயர்வு உறுதியாகி விட்டது. பாத்திரம் அன்புக்கு பாத்திரம்.

10.  அழுக்கு துணி களை சேகரித்து வாஷிங் மிஷினில் போடுங்கள். பின், இன்னும் ஏதாவது இருக்காம்மா என்று தணிந்த குரலில் கேளுங்கள். பின்னர் வாஷிங் மிஷினை இயக்கி விட்டு நாற்காலியில் அமருங்கள்.இப்போது நீங்கள் கால்மேல் கால் போட்டு தைரியமாக அமரலாம். உங்கள் மதிப்புயர்வு ஏற்கனவே உறுதியாகி விட்டதால் உங்களுக்கு ஒன்றும் ஆகாது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்.

11. இனி வாஷிங் மிஷின் துவைத்த துணிகளை மாடிக்கு எடுத்து சென்று கொடியில் கிளிப் போட்டு காய வையுங்கள்.இது மிக முக்கியமான செயல். தவறினால்  கஷ்டப்பட்டு கிடைத்த மதிப்புயர்வு பரமபத பாம்பிடம் சிக்கியதைப்போல் சர்ரென சருக்கி விடும். கவனம் கவசம்.

12. துணி காய வைத்தபின் வீட்டுக்குள் (கால்மேல் கால் போட்டு) அமர்ந்து அடுத்து  என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். இப்போது உங்களுக்கு ஒரு டீ அன்பு கொஞ்சம் தூக்கலாக வழங்கப்படும். அசந்து விடக்கூடாது. மெல்ல எமுந்து, பெட்ஷீட், தலையனை போன்றவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்த டீ வழங்கப்பட்டது என்பது பிறிதொரு யோசனையில்தான் புரியவரும். காரணமில்லாம காரியமில்ல.

13. சாப்பாட்டு நேரம். ஆச்சரியமாயிருக்கும். உங்களுக்கு பிடித்த உணவு வகைகள் வரிசை கட்டி நிற்கும். இந்த உள்ளடங்கு காலத்துல எதுக்கும்மா இவ்வளவு சிரமம் எடுத்துக்கிறே என்று (சம்பிரதாயமாகவாவது மறக்காமல்) கூற வேண்டும். புகழோடு தோன்றின் இகழ் இல்லை.

14. உண்டபின் அமைதியாக  உறங்கி ஓய்வு எடுக்க அனுமதி உண்டு. வாய்திறக்க அனுமதி இருந்தாலும் அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இருப்பது சிறப்பு. ஆதலின் மௌனமாய் இருத்தல் நன்று.

15. உறங்கி எழுந்த பின் அற்புதமாய் ஒரு டீ வரும். நீங்கள் ஆனந்தமாய் அதை பருகலாம். அதன்பின், காயப்போட்ட துவைத்த துணிகளை எடுத்து வந்து விட வேண்டும். இதில் காலதாமதம் வேண்டாம். நீங்கள் ஆனந்தமாய் பருக வழங்கப்பட்ட டீ இதற்காகத்தான் என்பது விரைவில் புரிய வரும். செய்கை நன்றே.

16. இப்போது அதி தீவிரமான கண்கானிப்புக்கு ஆட்படுவீர்கள். நீங்கள் காய வைத்து எடுத்து வந்த துணிகளை மடித்து வைக்க வேண்டும். இல்லையேல் பரமபத பாம்பு வேலை நடந்து உங்கள் அறிவு கூறாக்கப்பட்டுவிடும் ஜாக்கிரதை. முடிவே விடிவு.

17. நீங்கள் இப்போது ஆல் பாஸ் கேட்டகரியில் உள்ளீர்கள். நிம்மதி நிச்சயம். இரவு உணவு ஏக சுவையாய் பரிமாரப்படும். எப்பிடித்தான் இவ்வளவு வேலையை இழுத்துப்போட்டு செய்றியோம்மான்னு சொல்லீட்டி ( இங்க ரிப்பீட் அனுமதிக்கப்படும்) உறங்கப் போயிரனும் நல்ல பிள்ளையாய். புகழுரை தெளிவுரை.

18. இந்த தினசரி யதார்த்தங்களைத்தவிர, உங்கள் கவனத்தை பரண் மேல் ஒரு நாள் இருத்த வேண்டும். பரண் சுத்தம் பரம சௌக்கியம்.

19. இதேபோல் அலமாரியின் மேல்  கவனம் செலுத்த வேண்டும்.அற்புத பலன் தரும். அற்புத பலன் தரும் அலமாரி சுத்தத்தை அவ்வப்போது மேற்கொள்வதால் இல்லத்தில்  ஆனந்தம்  தாண்டவமாடும். அலமாரி அருள் மாரி.

20. கொஞ்சம் கஷ்டமானாலும் கடினம் பாராமல் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, ஒவ்வொரு நாளும் வீட்டின் ஏதாவது ஒரு  மூலையை தேர்வு செய்து மூலை சலவை, அதாவது மூலையை சுத்தம் செய்ய வேண்டும். மூலை சலவை மூளை சலவை போக்கும்.

21. நீங்கள் அறிவாளி🤔 என்பதையோ, புத்திசாலி🥱 என்பதையோ எப்போதும் நினைவில் கொள்ளாதீர்கள். கொண்டது கொல்லும்.

மேலே உள்ள 21 சூத்திரங்களையும் வாழ்வின் ஒவ்வொரு  நொடியும் நினைவில் இருத்துங்கள். சூத்திரம் சாத்திரம்.

21 நாட்கள் மட்டுமல்ல, 21 யுகங்கள் கூட நீங்கள் வெற்றிகரமான குடும்பஸ்தனாக இருக்கலாம்.
வாழ்த்துக்கள்.Best regards,

Friday, 27 March 2020

நூலகம்

நூலகம்📓📔

இப்போது நீங்கள் வீட்டில் இருக்கும்  இந்த 21 நாட்களில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை புதுப்பித்துக் கொள்வோமே.

தமிழ் PDF மின்நூல்கள்:

வாழ்க்கை வரலாறுகள்

கார்ல் மார்க்ஸ்
https://t.co/BbQwjgJFcq
சேகுவேரா
https://t.co/JI9eSrEDUE
தாமஸ் ஆல்வா எடிசன்
https://t.co/a6InSC0Da1
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
https://t.co/IWWUTSWna5
மேதகு வே.பிரபாகரன்
https://t.co/Zg5mtFiFE8
மாவீரன் அலெக்சாண்டர்
https://t.co/A2abcypbAv
மருதநாயகம்
https://t.co/gpeSWfN4R6
ராமானுஜம்
https://t.co/HgR7VZeYGI
சுனிதா வில்லியம்ஸ்
https://t.co/jkSAD1kMEL
ஹெலன் கெல்லர்
https://t.co/Jjw8SYd5XH
அறிஞர் அண்ணா
https://t.co/hanYh3Y2cS
திப்பு சுல்தான்
https://t.co/hMPzLcS68j
நெப்போலியன்
https://t.co/2CeBxGohU3
கேனல் கடாபி
https://t.co/W6aukGy6rs
ஹிட்லர்
https://t.co/qHpoaN6Z0A
காமராசர்
https://t.co/Y7A7LCmo1o
பாரதியார்
https://t.co/lVAC1Skenq
பிடல் காஸ்ட்ரோ
https://t.co/2fAuV7G33K
பெரியார்
https://t.co/q2VexzfDTP

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் தொகுப்பு
👉 https://drive.google.com/drive/mobile/folders/0B-WHJQf1fFONSWFUR0VyNDNxcVE
தமிழ்வாணன் நாவல்கள் தொகுப்பு 👇 https://drive.google.com/drive/mobile/folders/0B-WHJQf1fFONWkdJR1g2RW1iQTQ?usp=drive_open
சாண்டில்யன் நாவல்கள் தொகுப்பு👇
 https://drive.google.com/drive/mobile/folders/0B-WHJQf1fFONX3JPU1VndmJVdnM?usp=drive_open

சுபா நாவல்கள் தொகுப்பு👇
https://drive.google.com/drive/mobile/folders/0B-WHJQf1fFONclVQRFZyc3BOZVE?usp=drive_openBest regards,

Thursday, 26 March 2020

வைரஸ் நோய்த் தொற்று எனும் ஒத்திகை: பில்கேட்ஸ் நிறுவனத்தின் கொரோனா நாடகம்!

வைரஸ் நோய்த் தொற்று எனும் ஒத்திகை: பில்கேட்ஸ் நிறுவனத்தின் கொரோனா நாடகம்!

தமிழ்க்கனி,
முனைவர் பட்ட ஆய்வாளர்
பொதுமக்கள் ஆளுகைத் துறை

இக்கட்டுரையை எழுதியுள்ள தமிழ்க்கனி, செம்மைச் சமூகத்தவர். ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். ம.செந்தமிழன் இயற்றிய வேட்டல் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். செம்மை தமிழ்க் கழகப் பணிகளிலும் துணை நிற்பவர்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும்  பேரழிவு குறித்து ஆறு மாதங்களுக்கு முன்பே ஒத்திகை நிகழ்வு நடத்திய ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு மையம் மற்றும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு - ஒரு விமர்சன பகுப்பாய்வு கட்டுரை

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்த போகிறதோ என்று பதற்றத்துடன் அனைவரும் இயங்கி கொண்டிருக்கும் இவ்வேளையில், இப்படி ஒரு தொற்று கிருமி பாதிப்பும் பேரழிவும் நடந்து விட்டதை போன்ற ஒரு ஒத்திகை நிகழ்வு ஆறு மாதங்களுக்கு முன்னரே (2019 ஆம் வருடம், அக்டோபர் மாதம்) நடந்தேறியுள்ளது என்பது  ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தருகிறதல்லவா.

சீனாவில்,  வுஹான் மாவட்டத்தில், இப்படி ஒரு அபாயகரமான வைரஸ் தொற்று பரவி வருகிறது என்று  ஜனவரி மாதம்தான் உலக மக்களுக்கு  தெரியும். சீனாவுக்கே அப்போதுதான் தெரியும். ஆனால், அதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நோய்த்தொற்று மையம் மற்றும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு இணைந்து தத்ரூபமாக ஒரு ஒத்திகை நிகழ்வை (simulation) நடத்தி இருக்கிறார்கள். இதில்  பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், தொழில் நிறுவன முதலாளிகள், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டு உண்மையான அவசர கால கலந்துரையாடல் கூட்டம் போலவே நிகழ்த்தி உள்ளார்கள்.

இந்த நோய் தென் அமெரிக்காவில் பன்றிகளிடையே காணப்பட்டு, பண்ணை விவசாயிகள் மூலமாக பரவுவதாக ஒரு புனைவு கதையையும் பின்னியிருக்கிறார்கள். ஒத்திகையின் முடிவாக, இந்த பேரழிவின் தாக்கங்கள் குறித்த சில கணக்கீடுகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

’எத்தனை மக்கள் இறக்க நேரிடும்’ என்ற ஒரு புனைவுக் கணக்கையும் தெரிவித்து உள்ளார்கள். பொருளாதாரம் எந்த அளவு சரியும், மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு (ஜிடிபி), சர்வதேசச் சுற்றுலா மற்றும் போக்குவரத்து மாற்றங்கள், தடைகள், இணைய சேவை, ஊடகங்கள் பங்கு, தொழில் நிறுவன அதிபர்களின் பங்களிப்பு, அரசாங்க மற்றும் உலக தலைவர்களின் பங்களிப்பு, கிருமி நாசினி தயாரிப்பு நிறுவன பங்களிப்புகள், சங்கிலி விநியோக நிறுவனங்கள் உதவிகள் என்று மிகவும் விரிவாகச் செல்கிறது கலந்துரையாடல்.

தற்போது, அந்த ஒத்திகை நிகழ்வு உண்மையாகி விட்டது. இந்த ஒத்திகை நிகழ்வை நடத்திய நிறுவனத்திடம், சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

‘நீங்கள் நடத்திய ஒத்திகையில் கூறப்பட்டுள்ள கணக்குகள் உங்களின் கணிப்பா? 65 மில்லியன் மக்கள் இறப்பதாக கூறப்பட்டுள்ளது,  இதை எவ்வாறு எடுத்து கொள்வது? எவ்வாறு அதே கொரோனா வைரஸ் என்ற பெயர் கொண்ட ஒரு புனைவு கதையை உருவாக்கி இருக்கிறீர்கள்?’ போன்ற கேள்விகளுக்கு, 2020 ஜனவரி 24 ஆம் தேதி அன்று ஒரு அறிக்கையை அந்நிறுவனம் (ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு மையம்) வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், 
’2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு மையம் மற்றும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்புடன் கைகோர்த்து, தொற்று கிருமி பேரழிவு குறித்த ஒரு மேசை பயிற்சியை ஈவென்ட் 201 என்ற  பெயரில் நிகழ்த்தினோம். இப்போது சீனாவில் வெளிப்பட்ட கொரோனா தொற்று கிருமி குறித்துதான் முன்னரே கணித்தீர்களா? இதில் கூறப்பட்டுள்ள 65 மில்லியன் மக்கள் இறப்பு என்பது கணிக்கப்பட்ட உண்மையா? என்பது போன்ற கேள்விகளை எங்கள் நிறுவனத்தை பலர் தொடர்பு கொண்டு கேட்கிறார்கள். நாங்கள் மிகவும் தெளிவாக கூறி இருக்கிறோம், இது வெறும் புனைவு மட்டுமே, இதில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கைகள் அனைத்தும் புனைவுகள். மேசை ஒத்திகை பயிற்சியாக இதனை செய்தோம். நிகழ்வு தத்ரூபமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பிரேசிலில் பன்றிகள் இடம் இருந்து  மனிதருக்குப் பரவியதாகவும் இந்தப் பேரழிவில் 65 மில்லியன் மக்கள் இறப்பார்கள் எனவும் கற்பனையாகப் புனைந்தோம். அது எங்கள் கணிப்பு அல்ல என்பதை தெளிவு  படுத்துகிறோம்.

நாங்கள் கூறியுள்ள நாவல் கொரோனா வைரஸ் தொற்றுக்கும் தற்போதுள்ள nCoV - 2019 என்ற வைரஸுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.

இப்படி ஒரு நோய்த்தொற்று பரவினால் என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகள் தேவைப்படலாம் என்பதற்கான மாதிரி நிகழ்வுதான் இது. இது போன்ற பல ஒத்திகை நிகழ்வுகளை  வெவ்வேறு காரணங்களுக்காக முன்பு நிகழ்த்தியுள்ளோம்’

என அந்நிறுவனம் அறிக்கை கொடுத்துள்ளது.
அறிக்கையெல்லாம் சரிதான், ஆனால் ’அந்த அறிக்கையில் உள்ள பதில்கள் நம்மை திருப்திப்படுத்துகின்றனவா’ என்று யோசித்தால், ’இல்லை’ என்ற பதிலே தொக்கி நிற்கிறது.

அந்த ஒத்திகை நிகழ்வின் சில துளிகள் இங்கு அப்படியே மொழி பெயர்க்கப்பட்டு தரப்பட்டுள்ளன. இந்த ஒத்திகை நடந்தது அக்டோபர் 2019 என்பதை நினைவில் கொள்ளவும்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு மையம்  மற்றும் பில் அண்ட் மெலிந்த கேட்ஸ் அறக்கட்டளை  இணைந்து, 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஒரு தத்ரூபமான ஒத்திகையை அரங்கேற்றியது. அதன் பெயர் ஈவென்ட் 201, தொற்று நோய்க்கிருமி குறித்த பயிற்சி  ஒத்திகை.

முதன் முதலில், தென் அமெரிக்காவில் சில மாதங்கள் அல்லது சில வருடங்களுக்கு முன்பு என்றே  கூறலாம், ஒரு  புது வகை கொரோனா வைரஸ் நல்ல ஆரோக்கியமான பன்றிகளில் அறியப்படுகிறது.

மெதுவாக பன்றி மந்தைகளில் பரவி அதன் காரணமாக முதலில் பண்ணை விவசாயிகள் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு சளித்தொல்லை துவங்கி நுரையீரல் தொடர்பான தொந்தரவுகள், காய்ச்சல் நிமோனியா போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

சிலர் அவசர சிகிச்சை பிரிவுகளில் சேர்க்கப்படுகின்றனர் பலர் இறக்கின்றனர். அறிஞர்கள் பார்வையில், இது உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லையெனில் இந்த நோய்த்தொற்று உலக நாடுகள் எங்கும் பரவி மக்களை பாதிக்கும்.

இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நோய்த்தொற்று மற்றும் அவசர கால குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் கேட்கப்படுகின்றன. 

இந்த நோய்த்தொற்று நிகழ்வு 201 இன் முடிவாக  அறிவிக்கப்பட்டது,

’‘இது ஒரு  பேரழிவு. கடந்த 18 மாதங்களில் 65 மில்லியன் மக்கள் உயிரிழந்து விட்டனர். ஆரம்ப கட்டத்தில், கட்டுப்படுத்த கூடிய வகையில் அறியப்பட்டாலும், கூட்ட நெரிசல் மிக்க நகர மற்றும் பெருநகரங்களில்  இது வெகு வேகமாக பரவி  விட்டது. ஒவ்வொரு ஆறு மாத காலத்திலும், ஒரு புதிய நாட்டுக்கு வீரியமாக பரவுகிறது.

உலக பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது. ஜிடிபி 11 சதவீதம் குறைந்து விட்டது. உலக பங்கு சந்தை 20 முதல் 40 சதவீத சரிவு நிலையை எட்டி இருக்கிறது.  பொருளாதார நிபுணர்களின் பார்வையில் இந்த நோய்த்தொற்றின் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு சரிக்கட்ட பல ஆண்டுகள் ஆகும், பத்தாண்டுகள் கூட ஆகலாம்.

மறைவான  பாதிப்புகளாக அரசாங்கத்தின் மீது அதிருப்தி, தகவல்கள் மீது நம்பிக்கையின்மை, சமூக கட்டமைப்பு சீர்குலைவு ஆகியன சரியாக இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படலாம். இந்த உலக மக்கள் கூட்டம், அடுத்த இத்தகைய தொற்று பேரழிவிற்கு சேர்ந்து போராட தயாராகி விட்டோமா? என்ற கேள்வியுடன் இந்த ஒத்திகை நிகழ்வு முடிகிறது.

பில்கேட்ஸ், தடுப்பூசிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் நபர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்குத் தடுப்பூசிகளுக்கான நிதி உதவி செய்து செல்வாக்கு பெற்றுள்ளவர். இவரது நிறுவனத்திற்கும் மருந்து நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு உலகறிந்தது.

கொரோனா எனும் வைரஸின் தாக்கம் உலகப் பொருளாதாரத்தை எவ்வாறு சிதைக்கும் என்பதைப் பற்றிய இவரது ‘ஒத்திகை நிகழ்வு’ இன்றைக்கு உண்மையாகிக்கொண்டுள்ளது. இந்நிலையிலும் உலகநாடுகள் இவரைக் கேள்விக்குள்ளாக்கவில்லை.

அந்த ஒத்திகை நிகழ்வின் வீடியோ பதிவு இந்த இணையதள முகவரியில் காணலாம். https://youtu.be/AoLw-Q8X174
அந்நிறுவனத்தின் மறுப்பு அல்லது பொறுப்பு துறப்பு அறிக்கை
http://www.centerforhealthsecurity.org/newsroom/center-news/2020-01-24-Statement-of-Clarification-Event201.html
அந்நிறுவனத்தின் மறுப்பு அல்லது பொறுப்பு துறப்பு அறிக்கை குறித்த இன்னும் விரிவான விளக்கங்களை கீழே உள்ள இணையதள முகவரியில் அறியலாம்.
https://www.factcheck.org/2020/01/new-coronavirus-wasnt-predicted-in-simulation/Best regards,

காவல் துறை அறிவிப்பு - கொரோனா வைரஸ்

காவல் துறை அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொடர்பாக இனி எந்த செய்தியையும் தன்னிச்சையாக வாட்ஸ்அப் குழுக்களில் பகிர வேண்டாம் என அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே செய்திகளை வெளியிட வேண்டும்.
தவறான செய்தி பரப்பினால், கண்டிப்பான நடவடிக்கை.

எனவே குழு Admins (அட்மின்கள்) இதை உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவும். உறுப்பினர்கள் கவனமாக செயல்படவும். நன்றி.Best regards,

Tuesday, 24 March 2020

144 தடை உத்தரவு அரசின் கட்டுபாடுகள் என்ன ? விதிமுறைகள் என்ன? -

 144 தடை உத்தரவு அரசின் கட்டுபாடுகள் என்ன ? விதிமுறைகள் என்ன? - தமிழக அரசு அறிவிப்பு.
தமிழக அரசு 144 தடை உத்தரவு குறித்து பொதுமக்களுக்கு அறிவித்த அறிவிப்பாணைகள்:

1. அனைத்து அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கும்

2. நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி

3. அனைத்து அரசு அலுவலகங்கள் மூடல்

4.பெட்ரோல் பங்க் திறந்து இருக்கும்

5. மார்ச் 16ம் தேதி வரை முன்பதிவு செய்த திருமணங்களை  நடத்தலாம்  திருமண நிகழ்வில் 30 பேர் மட்டுமே கூடலாம் என கட்டுப்பாடு விதிப்பு

6, டாஸ்மாக், மால், தனியார் தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மூடல்

7. ரேஷன்கடைகள் திறந்து இருக்கும்

8. 5 பேருக்கு மேல் கூட தடை

9. பிளஸ் 1 தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது.

10, சிலிண்டர் விநியோகம் செய்யலாம்.

11. ஆவின் பால் நிலையம் திறந்து இருக்கும்.

12. பிளஸ் 2 தேர்வு  திட்டமிட்டப்படி நடைபெறும்

13, அனைத்து வழிபாட்டு தலங்கள் மூடப்படும்

13. பேருந்துகள் இயங்காது மற்றும்  வாடகை கார், ஷேர் ஆட்டோ, ஆட்டோ  ரிக்‌ஷா போன்ற தனியார் சேவைக்கு அனுமதி மறுப்பு

14. உணவகங்கள், டீக்கடைகள் நிபந்தனையுடன் அனுமதி

15. மருந்தகங்கள் திறந்து இருக்கும்

16. ஆசிரியர்கள் வீட்டில் இருந்து பணி தொடரலாம்.

17.  அரசு பணியில் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதி

18. ஓட்டலில் அமர்ந்து சாப்பிட தடை

19. மரண ஊர்திக்கு தடை இல்லை

20. அம்மா உணவகங்கள் திறந்து இருக்கும்

21. அனைத்து கல்லூரி தேர்வுகளும், வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளும் தள்ளிவைப்பு

22.அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

23.மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு வந்த வெளிநாட்டினர் தனிமைப்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் 

24. பொது மக்கள் ஒருவருக்கு ஒருவர் ஒரு மீட்டர் தூரத்தில் இருப்பது அவசியம்

இந்த 144 தடை உத்தரவு நாளை மாலை முதல் ஏப்ரல் 1 வரை  அமலில் இருக்கும்.Best regards,

Monday, 23 March 2020

டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D கொரோனா வைரஸ். Scientist.

டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D கொரோனா வைரஸ். Scientist.

எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விட்டு 2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே அறிந்து கொள்ளுங்கள். எழுத்துத் தொகுப்பு மட்டுமே என்னுடையது.

முதலில் நல்ல செய்திகள்.

- COVID-19 பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு.

- 1950லேயே கண்டு பிடிக்கப் பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ். அவ்வளவே.

- இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம்.

- எல்லா விலங்கிலும் கூட கொரோனா வைரஸ் இருக்கிறது.

- சபீனா சோப்பில் கை கழுவினால் கூட போதுமானது.

- பொது ஜனத்திற்கு முகமூடிகள் தேவையில்லை. (சுகாதாரப் பராமரிப்பில் ஈடுபட்டவர்களுக்குத் தான் வேண்டும்). பாதிக்கப் பட்டவர்கள் சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

- குழந்தைகளிலும், கர்பிணிப் பெண்களிலும் பாதிப்பின் வீரியம் குறைவே.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் உயிர் பிழைக்கும் சதவிகிதம் மிக அதிகம் (99.1%).

- உலகில் மருந்து கண்டு பிடிக்க முடியாத பல வியாதிகள் இருக்கின்றன. குறிப்பாக டெங்கு. எனவே கொரோனாவிற்கு கூடுதல் அச்சம் தேவையில்லை.

- சிகிச்சை பாதிப்பைப் பொறுத்தது. நோயைப் பொறுத்தது அல்ல. எனவே நடைமுறையில் உள்ள சிகிச்சைகளே போதுமானது.

- நாய், பூனை, பறவைகள் வைத்திருப்பவர்கள் பொதுவான சுகாதாரத்தைப்  பின்பற்றினாலே போதும். செல்லப் பிராணிகளுக்கு என்று குறிப்பாக பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை.

- பாதிக்கப் பட்டவர்களிலும் 15% மட்டுமே, ICU, Ventilator தேவைப் படுகிறது.

- பதற்றம் தேவையே இல்லை.

புரளி நம்பர் 1 - வெய்யிலில் வராது.

வெய்யிலில் கண்டிப்பாக வரும். வெய்யிலில் காற்றில் ஈரத்தன்மை சற்று அதிகம் இருக்கும். எனவே, பரவும் வேகம் குறைவாக இருக்கலாம். குளிர் காலத்தில் காற்று சற்று காய்ந்து இருக்கும். பரவுதல் சற்று எளிது. அதுவே வித்தியாசம்.

புரளி நம்பர் 2 - மாமிசம் தின்றால் வரும்.

ரசத்திலிருந்து மட்டன் பிரியாணி வரை எதை வேண்டுமானாலும் உண்ணலாம். எதைத் தின்றாலும் சுத்தமான தண்ணீரில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமைத்த உணவில் வைரஸ் பிழைக்காது.

புரளி நம்பர் 3 - நிறைய தண்ணீர் குடிச்சா வராது.

தேவையான தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. எந்த நோயையும் எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. மற்றபடி, கொரோனா தாக்குதலுக்கும், தண்ணீர் குடிப்பதற்கும் தொடர்பு இல்லை.

புரளி நம்பர் 4 - இளவயதினருக்கு வராது.

- வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்கும், ஆனால் வயதானவர்களிலும், மற்ற உடல் உபாதைகள் சேர்ந்திருப்பவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் பாதிப்பு அதிகம். (குறிப்பாக, Diabetes, HBP, Transplant candidates, Cancer patients etc.,)

புரளி நம்பர் 5 - கிராமங்களில் வராது.

காற்று இருக்கும் எல்லா இடங்களிலும் பரவும். நகரம் கிராமம் எல்லாம் கொரோனாவிற்கு தெரியாது.

புரளி நம்பர் 6 - மாற்று மருந்துகளில் குணமாகும்.

பரிசோதிக்கப் பட்ட எந்த மருந்தும் எந்த மருத்துவத்திலும் இன்று வரை புதிய கொரோனாவிற்கு கிடையாது. எந்த மருந்தும் சந்தைக்கு வருவதற்கு முன், நோயைக் கட்டுப் படுத்தும் அதன் தன்மைக்காகவும், அது பாதுகாப்பானதா என்பதற்காகவும் சோதனை செய்யப்பட்ட பிறகே பரிந்துரைக்கப் படும். கொரோனாவிற்கு அப்படி ஒரு மருந்து வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். எனவே அறிகுறிகள் இருந்தால், நிச்சயம் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரைப் பாருங்கள். உயிரிழப்பைத் தவிருங்கள்.

புரளி நம்பர் 7 - அறுபது வயதிற்கு மேற்பட்ட சீனர்களை முடித்துக் கட்ட சீனா உருவாக்கிய வைரஸ்.

இது அறிவியல் கூடத்தில் உருவாக்கப் பட்ட வைரஸ் அல்ல. GENOME SEQUENCE கொண்டு விலங்கிடமிருந்து எந்த நாளில் மனிதனுக்கு கடத்தப் பட்டது என்பது வரை மிகத் தெளிவாக ஆராய்ந்து கண்டு பிடித்து விட்டார்கள்.

புரளி நம்பர் 8 - கொரோனா வைரஸ் இருப்பவர்கள் கடந்து போனாலே நமக்கும் வந்து விடும்.

வராது. நம் மேல் இருமினாலோ, தும்மினாலோ, அவர்களின் எச்சில் விரவி இருக்கும் காற்றை நாம் சுவாசித்தாலோ தான் நம்மைத் தாக்கும். அவர்களின் எச்சில் பட்டு ஒரு இடம் காய்ந்து விட்டால், அந்த இடத்தை நாம் தொட்டாலும் வராது.

அறியாமை நம்பர் 1. - முகமூடி அணிந்து விட்டால் கை கூட கழுவ வேண்டாம்.

முதலில் முகமூடி அணியத் தேவையில்லை. அணிந்தால் சரியாக அணிய வேண்டும். அணிந்தாலும் 4-6 மணி நேரங்களுக்கு ஒரு முறை புதிய முகமூடி அணிய வேண்டும். ஒரு வேளை அதற்கு முன் maskஐ வெளிப்புறமாக வடிகட்டியில் தொட்டு விட்டால் தூக்கி எறிந்து விட்டு புதிய mask அணிய வேண்டும். Mask அணிந்தாலும் கை கழுவ வேண்டும்.

அறியாமை நம்பர் 2. பூண்டு, இஞ்சி, மிளகு சாப்பிட்டால் வராது.

இவற்றையெல்லாம் சாப்பிட்டாலும் கொரோனா வைரஸ் வரும். மேலும், பூண்டு நிறைய rawவாக சாப்பிட்டால் தொண்டையில் inflammation வரும். எச்சரிக்கை. Magicஆன எந்த காய்கறிகளும், பழங்களும் இல்லை.

கொரோனா வைரஸ்க்கு பயப் போடணுமா?

- புது வைரஸ். பின்னால் வருத்தப் படுவதை விட இப்பொழுது பாதுகாப்பாக இருப்பது நல்லது.

- காற்றில் பரவும் வைரஸ். குறைந்த நேரடித் தொடர்பினால் கட்டுப் படுத்த வாய்ப்புகள் அதிகம்.

- ஒருவர் 2 மீட்டர் தூரத்திற்கு ஒன்றிலிருந்து மூன்று பேர் வரை ஒரே சமயத்தில் பரப்ப முடியும்.

- பாதிக்கப் பட்டவர்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் பரவலின் வீரியத்தைக் குறைக்க முடியும்.

- தங்களுக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை தனிநபரால் தெரிந்து கொள்ள முடியாது.

- பரிசோதிப்பதற்கு Proper Test Kit வேண்டும். Inaccurate test kit. Inaccurate results.

ஏன் இவ்வளவு பதற்றம்?

புது வைரஸ். பரவும் வேகம் அதிகம். மேலும் கடந்த காலங்களை விட நாம் பயணிப்பதும், பொதுவில் ஒன்று கூடுவதும் அதிகமாகி விட்டது. சமூக வலை தளங்கள். 99.5% புரளிப் பரிமாற்றங்கள்.

என்ன செய்ய வேண்டும்?

1. தனிப்பட்ட சுகாதாரம். முடிந்த வரை அடிக்கடி கை கழுவுங்கள். குறைந்த பட்சமாக சாப்பாட்டிற்கு முன், பின். கழிவறைக்கு முன், பின், வெளியில் இருந்து வந்தால், அழுக்கான இடங்களைத் தொட்டால். இது அனைத்தும் பொதுவாகவே நமக்கு கற்று கொடுக்கப் பட்ட விஷயங்கள் தான். கொரோனா special இல்லை.

2. கூட்டம் தவிருங்கள்.

முக்கியமாக எதை செய்யக் கூடாது.

வதந்திகளை பரப்பாதீர்கள்.

வதந்திகளை பரப்பாதீர்கள்.

வதந்திகளை பரப்பாதீர்கள்.

வதந்திகளை பரப்பாதீர்கள்.

வதந்திகளை பரப்பாதீர்கள்.

 நேர்காணலின் தமிழின் எழுத்துத் தொகுப்பு: Srikanth
Thanks மத்யமர்Best regards,

குறுங்கதை - கொரோனாவும் மாரிமுத்துவும்

குறுங்கதை - கொரோனாவும் மாரிமுத்துவும்

நான் கோரோனா கிருமி பேசுகிறேன்.

 இப்பொழுது மாரிமுத்துவின் தொண்டைக்குள் இருக்கிறேன். நான் இங்கு வந்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டன.

 மாரிமுத்துவின் உடலில் வெற்றிக்கரமாக நுழைந்த கடைசி கிருமி நான். நான் உள்ளுக்குள் வந்த கதையைச் சொல்லிவிட நினைக்கிறேன்.

இன்று சரியாக மதியம் 12.35க்கு ஜாலான் பெலக்காங் உணவகத்தில் மாரிமுத்து 'ரொட்டி சானாய்' சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

இன்று இரவு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிரப்பிக்கப்படலாம் என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதும் சற்றுப் பரப்பரப்பானார்.

வீட்டில் அடுத்த சில நாள்களுக்கு மட்டுமே சமையல் பொருள்கள் இருப்பதை அரற்றிக் கொண்டிருந்த மனைவியின் முகம் ஞாபகத்திற்கு வரக் கடைசித் துண்டைப் பிய்த்து வாயில் அதக்கிக் கொண்டே எழுந்தார்.

அப்பொழுதுதான் எனது சில சகோதரர்கள் அவரின் உள்ளங்கைகளில் தாவிக் கொண்டனர். பின்னர், சந்தைக்கு விரைந்த அவரிடம் நான் ஒரு வெளிநாட்டவரின் கைகளிருந்து இருவரும் கைக்குலுக்கும் கணத்தில் அவர் விரல் இடுக்கில் புகுந்து கொண்டேன்.

 என்னுடன் சேர்த்து அவருடைய வலது கையில் மொத்தம் 15 கொரோனாக்கள் இருந்தோம்.

நான் சற்று சாமர்த்தியமானவன். மெல்ல நகர்ந்து அவருடைய விரல் நுனியில் காத்திருந்தேன்.

எந்நேரத்திலும் அவர் கண்களையோ அல்லது மூக்கையோ தொடுவார் அடுத்த கணமே அவர் சுவாச நுழைவாயில் நுழைந்து உள்ளே சென்றுவிடத் தயாராக இருந்தேன்.

பொருள்களை யெல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டைச் சென்றடைந்தார். நாங்கள் அனைவரும் அவர் வலது கையில் பத்திரமாக இருந்தோம். என் சகோதரர்களுக்கு ஒரே குதுகலம். வீட்டில் நிறைய பேர் இருப்பார்கள் என அவர்களுக்குக் கொண்டாட்டம் தாள முடியவில்லை.

 மாரிமுத்து வீட்டின் உள்ளே நுழைவதற்குள் அவருடைய அப்பா வெளியில் வந்து எதையோ சுட்டிக் காட்டினார்.

ஞாபகம் வந்த மாரிமுத்து வீட்டின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த ஒரு நீல வாளியிலிருந்து
'*மஞ்சள் கலந்த நீரில்' கால்களையும் கைகளையும் கழுவினார்.

அந்த மஞ்சள் நீர் பட்டதும் சகோதரர்கள் அனைவரும் எரிச்சல் தாங்க முடியாமல் கதறினர். நான் மட்டும் விரலில் ஏறி நகத்தில் ஒளிந்து கொண்டதால் தப்பித்து விட்டேன்.

தப்பித்தோம் பிழைத்தோம் என நானும் எனது இன்னும் இரண்டு சகோதரர்களும் மட்டுமே மாரிமுத்துவின் கையில் எஞ்சியிருந்தோம்.

"கைய நல்ல கழுவுனீங்களா? சும்மா தண்ணிய அள்ளி தெளிச்சா போதுமா? போய் சவர்க்காரத்துல கழுவுங்க..."
என்றது மாரிமுத்துவின் மனைவியின் குரல். எனக்கும் என் சகோதரர்களுக்கும் அவரின் மனைவியின் மீது கடும்கோபம் எழுந்தது.

 இப்பொழுது என்ன செய்வது? மாரிமுத்து கைகளைக் கழுவ குழாயிடம் சென்று கொண்டிருந்தார். இனி நமக்கு வாய்ப்பில்லை என்று சோகத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தபோது சட்டென்று மாரிமுத்து தன் வலது கையை எடுத்து நெற்றியைத் துடைத்தார். கிடைத்த வாய்ப்பை வீணாக்காமல் அடுத்த நொடி நெற்றியின் மீது பாய்ந்து வழிந்து சறுக்கிக் கொண்டே அவர் மூக்கின் மீது சரிந்து சந்தில் நுழைந்தேன்.

அவர் மூச்சின் பிறப்பிடம் தேடி அடுத்து நகர வேண்டும். அவருடைய நுரையீரலை அடைய எனக்கு எப்படியும் நான்கு நாட்கள் எடுக்கும். வசதியாக தொண்டைக்குள் சரிந்து மாரிமுத்துவின் சதையில் படுத்துக் கொண்டேன். சுகமான சூழல் என்னைச் சூழ்ந்தது.

மாரிமுத்து கைகளைக் கழுவும்போது எனது இன்னபிற சகோதரர்கள் மாண்டார்கள். எப்படியும் நான் மட்டும் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டதை நினைத்துப் பெருமிதம் கொண்டேன்.

 வெளியில் இருந்த வெப்பத்தால் வாடிக் கொண்டிருந்த எனக்கு இப்பொழுது மாரிமுத்துவின் உடலில் இருந்த குளிர்ந்த தன்மை இதமாக இருந்தது.

ஆம். இப்படித்தான் நான் மாரிமுத்துவின் உள்ளே நுழைந்தேன்.

எனது பிறப்பின் யதார்த்தமே மனிதர்களின் நுரையீரலை அடைந்து பூர்த்தி பெறுவது மட்டுமே. நானும் 14 நாட்களில் இறந்துவிடப்போகும் ஓர் அற்ப கிருமி மட்டுமே. ஆனால், இறப்பதற்கு முன் மனித உயிர்களைப் பலி வாங்கிய பின்னரே மறைவோம்.

“ப்பா... அம்மா இந்த உப்புத் தண்ணியில வாயைக் கொப்பளிக்கச் சொன்னாங்க!” என்றது மாரிமுத்துவின் மகனின் குரல்.

எழுந்து அக்குவளையில் இருந்த நீரைப் பருகி தொண்டைக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

என்னைச் சூழ்ந்துகொண்ட அவ்வுப்பு நீர் சதையோடு ஒட்டிக் கொண்டிருந்த என்னை அடித்து நகர்த்துகிறது.

அத்தனை பலம் கொண்ட அந்நீரில் நான் மெல்ல மூழ்குகிறேன்.

 எனது மூச்சுத் திணறுகிறது.

 உலகத்தின் மிக நுண்ணிய உயிரான நான் சரியாக மாலை 5:40க்கு மாரிமுத்துவின் தொண்டைக்குள்ளேயே இறக்கப் போகிறேன்; இறந்து கொண்டிருக்கிறேன்.

-படித்ததில் பிடித்தது-Best regards,

Thursday, 19 March 2020

நம்மை_அச்சுறுத்துவது

நம்மை_அச்சுறுத்துவது

#கொரோனாவா  #கொடிய_அரசா ?

அன்பார்ந்த மக்களே வணக்கம்

உலகமெல்லாம் பரவி கொண்டு மக்களை தினமும் நூற்றுக்கணக்கில் காவுவாங்கிக் கொண்டிருக்கிறது கொள்ளை நோய் கொரோனா.

உலகின் வளர்ந்த பணக்கார நாடுகள் எல்லாம் அவசரநிலையை அறிவித்துவிட்டன. இந்திய அரசோ எல்லாவற்றையும் எதிர்கொள்ள நாங்கள் தயார் என்கிறது. கொரோனா வந்து கொன்று விடும் என்ற பயத்தை விட ஆயிரம் ஐநூறு ரூபாய் நோட்டுகளுக்காக நடுரோட்டில் நிற்க வைத்தவர்கள், ஜிஎஸ்டியாலும் பொருளாதார பஞ்சத்தை உருவாக்கி வேலையின்மையை உருவாக்கி சாகடித்தவர்கள்தான்  நம்மை காப்பாற்ற போகிறார்கள் என்பதை நினைத்தால் நெஞ்சு வெடித்து விடும்போல் இருக்கிறது. கொரோனா வந்தவர்கள் கூட இந்த அரசை நம்பத்தயாரக இல்லை.

சீனா காரன் நாய்கறி தின்பான் பூரான் - பூச்சி தின்பான் அதனால் கொரோனாவந்து செத்துப் போனான் என்று நக்கல் அடித்தார்கள். கொரோனாவுக்கு மாட்டு முத்திரம் குடி ஆலோசனை சொன்னவர்கள் அப்போலோவில் அட்மிட் ஆகிறார்கள்.

சீன அரசு ஏழு நாட்களில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட இரண்டு மருத்துவமனைகளை கட்டியிருக்கிறது. இந்திய அரசு ஒரேநாளில் ஏன் இந்தியாவை போண்டியாக்கி இருக்கிறது .யுகான் மாகாணத்தில் வாழ்ந்த கோடிக்கணக்கான மக்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான உணவு உடை, நீர், மருந்துகள் உட்பட அனைத்தையும் வீட்டுக்கே சென்று கொடுத்தது சீன அரசு. ஒவ்வொரு ஊரிலும் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளை இழுத்து மூடிக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.

முகக் கவசம், உடல் கவசம், மருத்துவம் என அனைத்தையும் மக்களுக்கு இலவசமாக கொடுத்து மக்களை கொரோனாலிருந்து மீட்பதில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது சீன அரசு. உலக சுகாதார நிறுவனம் ஆய்வுக்கு அங்கே சென்று எந்த நாட்டிலும் இப்படி ஒரு மருத்துவ கட்டமைப்பை உருவாக்கி இருக்க முடியாது என்று பெருமைபட கூறுகிறார்கள்.

இந்தியாவின் நிலை என்ன? ஏறத்தாழ 80 சதவீதத்துக்கும் மேல் மருத்துவத்துறை தனியார் மயமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் மூடப்பட்டு கொண்டிருக்கின்றன. நாய்க்கடிக்கு மருந்து இல்லை, பாம்புக் கடிக்கு மருந்து இல்லை, மாவட்ட மருத்துவமனைக்கு போ என்று அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது அரசு.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு கவச உடை கூட கிடையாது. எப்படி மருத்துவர்கள் வைத்தியம் பார்ப்பார்கள்?

 கொரோனாவினால் பாதிக்கப்பட்டவருக்கு முக்கியமான இரண்டு மருத்துவ கருவிகள் தேவைகளாக உள்ளன. ஒன்று ரோபோட்டிக் மருத்துவம் இன்னொன்று எக்மோ கருவி. இந்த இரண்டும் எத்தனை அரசு மருத்துவமனைகளில் இருக்கின்றன?

சின்னஞ்சிறு நாடான கியூபா தனது  மருத்துவர்களை உலகம் முழுக்க அனுப்பி இந்தக் கொள்ளை நோய்க்கு எதிராக தன்னால் முடிந்த அளவுக்கு ஆன உதவிகளை செய்து வருகிறது ஆனால் மோடி அரசு மருத்துவர்களே உருவாகாமல் இருப்பதற்காக நீட்  தேர்வை கொண்டு வந்து வைக்கிறது.

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி மருத்துவம் பார்க்க வேண்டும் அப்பொழுதுதான் அது யாருக்கும் பரவாது .இதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் நகரின் மையப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டை  உருவாக்கியுள்ளது  எடப்பாடி அரசு.

சீனாவின் யுகான் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து மட்டுமே பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்றால் நகரின் மையப்பகுதியில் , ஒரு பொது மருத்துவமனையில் இந்த நோய்க்கு மருத்துவம் பார்த்தால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்த கொள்ளை நோய் பரவும் அபாயம் அதிகமாகவே இருக்கிறது.

தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக இவர்கள் செலவு செய்ததாக கூறப்பட்ட தொகையில் பாதியை கூட மருத்துவத்திற்கு செலவு செய்திருந்தால் ஊர் ஊராய் மோடி சுற்றினாரே அதற்கு செலவான கோடிகளில் சிறு பகுதியை செலவு செய்திருந்தால் எத்தனை எக்மோ கருவியையும் ரோபோட்டிக்களை உருவாக்கி இருக்க முடியும்?

இருக்கின்ற அரசு மருத்துவமனைகளில் இழுத்து மூடி  மருத்துவர்களைக் பழிவாங்கும் இந்த அரசு இந்த கொள்ளை நோயில் இருந்து நம்மை எப்படி  காப்பாற்றும்?

எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் மலக்குழியில் மனிதனை இறக்கி சாகடிக்கும் இந்த அரசு எப்படி நம்மை காப்பாற்றும் ?

நம்மை  எப்படி காப்பாற்றிக்கொள்வது? குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு முறையும் கொள்ளை நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் செத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு போதும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசுமேற்கொள்வது இல்லை.ஏர் இந்தியாவை எப்படி விற்கலாம் எல்ஐசியை எப்படி கபளீகரம் செய்யலாம்?  என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ  கொண்டு வந்து மக்களை அகதியாக்கும் அரசு , அரசுத்துறைகள் எல்லாவற்றையும் எப்படி ஒழித்துக் கட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் அரசு மக்களுக்காக செயல்படுமா?

இப்போது 30 நொடிகள் சோப்பு போட்டு நன்றாக கையை கழுவினால் கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியும் என்கிறார்கள். பல தொற்று நோய்களை உருவாக்கும் மருத்துவமனை கழிவறைகளை எதைப்போட்டுக்கழுவுவது?  ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, பொருளாதார இழப்பு, வேலையின்மை, சுகாதாரக்கேடு, சுற்றுப்புற சூழல் நாசம் ஆகியவற்றை உருவாக்கி கோடிக்கணக்கான மக்களின் அழிவுக்கு காரணமான இந்த கார்ப்பரேட் காவி அரசுக் கட்டமைப்பை ஒழித்துக் கட்டாமல் நாம் எப்படி நிம்மதியாக வாழ முடியும்?

போராடினால் தான் சுடுகாடு கிடைக்கும் என்ற சூழலில் நாம் போராடாமல் கொரோனாவிலிருந்து  மட்டும் எப்படி தப்பிக்க முடியும் ?

---

தமிழக அரசே !

புறநகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மருத்துவமனைகளை போர்க்கால அடிப்படையில் உருவாக்கு !

தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் வழங்கிடு!

மருத்துவ கால அவசர நிலை பிரகடனத்தை அறிவித்திடு!

மக்கள் அதிகாரம்
சென்னை
9176801656Best regards,

Tuesday, 17 March 2020

இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் எந்த நிலையில் உள்ளது ??

இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் எந்த நிலையில் உள்ளது ??

உண்மை நிலை

உலக சுகாதார மையம் கொரோனா கிருமித்தொற்றை PANDEMIC என்று அறிவித்து விட்டது.

சரி....சீனா, இத்தாலில அவ்ளோ பாதிப்பு. நம்ம இந்தியால பாதிப்பு எந்த கட்டத்தில் இருக்கு ??

PANDEMIC கிருமித்தொற்று நான்கு கட்டங்களாக நகர்கிறது.

கட்டம் 1 - தொற்று நோய் பாதித்த பகுதிகளில் இருந்து புதிய இடத்திற்கு வந்திறங்கும் நோய் தொற்று உடைய மக்கள்.

கட்டம் 2 - புதிதாக பாதித்த இடங்களில் அவர்கள் மூலம் நோய்க்கிருமி அந்த பகுதிகளில் பரவுதல்.

கட்டம் 3 - வரைமுறையின்றி நாட்டின் பல பகுதிகளில் பரவும் நிலை. எவ்வாறு பரவுகிறது என்பதை கண்டறிய முடியாத வண்ணம் மிக வேகமாக பரவும் நிலை இருக்கும்.

கட்டம் 4 - மொத்த நாட்டையே தூக்கிப்போடும் கொள்ளைநோய்.

இத்தாலி, ஈரான், சீனா போன்ற நாடுகள் நான்காம் கட்டத்தில் உள்ளன. ஆகவே தான் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் மிக அதிகம்.

அப்போ இந்தியா ??

கட்டம் 2-ல் உள்ளது. அதாவது நோய்க்கிருமி பாதித்த பகுதிகளில் இருந்து வந்திறங்கிய நபர்களின் மூலம் இந்த நோய்க்கிருமி மெதுவாக பரவ ஆரம்பித்ததுள்ளது.

வரைமுறையின்றி பரவும் கட்டம் 3 இன்னும் ஒரு மாதங்களில் வந்தடையும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

கட்டம் 2 இல் இருந்து கட்டம் 3 க்கு செல்லாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் ??

1.நெடுந்தூர பயணங்களை தவிர்க்க வேண்டும்.

2.பொது இடங்களில் கூடுவதையும், மக்கள் கூட்டாக சேரும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

3. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவற்றை முடிந்த அளவு தற்போதைக்கு மூடுவது சிறப்பு.

இதற்கு கண்டிப்பாக மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

கட்டம் 2-ல் இருந்து கட்டம் 3 செல்ல ஒரு மாத காலம் ஆகும் என்று யூகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மேற்கூறியவற்றை பின்பற்றினால் கட்டம் 2-லேயே கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும். கட்டம் 3 கண்டிப்பாக கட்டம் 4-ல் கொண்டு சென்று நிறுத்தும்.

ஆகவே மக்கள் சிறிது யோசித்து பொறுப்புடன் செயல்பட வேண்டுகிறேன்.


#BETTER_HEALTH_FOR_BETTER_LIFEBest regards,

Monday, 16 March 2020

சுற்றுலா பயணிகள் தங்கும் இடம் அனைத்தும் மூடப்பட வேண்டும்

 சுற்றுலா பயணிகள் தங்கும் இடம் அனைத்தும் மூடப்பட வேண்டும்

* கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்

* கொரோனா பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

* மார்ச் 31ம் தேதி வரை மாநாடு, ஊர்வலம், கருத்தரங்கு நடத்த தடை

* டாஸ்மாக் பார்கள், கேளிக்கை விடுதிகளை 31ம் தேதி வரை மூடி வைக்கவும் உத்தரவு

* பொது இடங்களில் கூடுவதை, அடுத்த 14 நாட்களுக்கு பொது மக்கள் தவிர்க்க வேண்டும்

* தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும்

* 31ம் தேதி வரை பல்கலைக் கழகங்களும் செயல்படாது

* திட்டமிட்டபடி 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்

* அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும்

* மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த கல்லூரிகள் அனைத்தும் தொடர்ந்து இயங்கும்

* அங்கன்வாடி மைய குழந்தைகளின் உணவை, வீட்டிற்கு சென்று ஊழியர்கள் வழங்க வேண்டும்

* ஏற்கனவே திட்டமிட்டதை தவிர, திருமண மண்டபங்களில் புதிதாக நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது

* தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும்

* பிற மாநிலங்களில் இருந்து பேருந்தில் வருபவர்களும் இனி சோதனை செய்யப்படுவார்கள்
#EdappadiPalaniswami | #CoronaAlertBest regards,

Saturday, 14 March 2020

கொரோனா வைரஸ் பரவும் வழிகள் தமிழ் மொழிப்பெயர்ப்பு. 
 நம்பத் தகுந்த தகவல் யுனிசெஃப்லிருந்து.   (UNICEF)

 👉🏼 கொரோனா வைரஸ் அளவில் பெரியது அதன் விட்டம் 400_500 மைக்ரான் அதனால் நாம் உபயோகிக்கும்  மாஸ்க் வழியாக உடம்பில் செல்லாது.

👉🏼2.இந்த வைரஸ் காற்றில் படியாது அதனால் காற்றால்  பரவாது

👉🏼3.கொரோனா வைரஸ் திடப்பொருளின் மேல் உட்காரும் பொழுது 12 மணி நேரம் உயிருடன் இருக்கும்
🤝🏼 அதனால்
கையை சோப் போட்டு தண்ணீரில் கழுவினால் போதுமானது.

👉🏼4.வைரஸ் பேபரிக் மேல் உட்காரும் பொழுது 9 மணி நேரம் உயிருடன் இருக்கும் அதனால் துணியை துவைக்க வேண்டும்.

 அல்லது இரண்டு மணி நேரம் ☀ சூரிய ஒளி துணிகளில் பட வேண்டும்

👉🏼 5.காரோனா வைரஸ் கை மேல் 10 நிமிடம் உயிருடன் இருக்கும் அதனால் ஆல்கஹால் கிருமி நீக்கியை ஊபயோகித்தால் தடுக்கலாம்.

👉🏼6.இந்த வைரஸ் 26_27 டிகிரி வெப்பம் படும் பொழுது இறந்து விடும்  அதனால் அதிக வெப்பநிலையில் உயிர் வாழாது.

👉🏼 அதனுடன் காய்ச்சிய தண்ணீர் மற்றும் சூரிய ஒளி நமது உடலில் பட்டால் இந்த நோய் வராது.

👉🏼 மேலும் ஐஸ்கிரீம் குளிர் பானம் இவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

👉🏼7 சூடான உப்பு தண்ணீரில் கொப்பளிக்கும் பொழுது நமது தொண்டையில் டான்சிலில் உள்ள கிருமியை அழிப்பதன் மூலமாக அந்த கிருமி நுரையீரலுக்கு செல்வதை தடுக்கிறது.

மேலே சொல்லியிருக்கிற உத்திகளை கடைபிடித்தால் இந்த நோய் வராமல் தடுக்கலாம்.

யுனிசெஃப். நன்றி.

 அனைவரும் தெரிந்து கொள்(ல்)வோம் வைரஸை.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Best regards,

Wednesday, 11 March 2020

நமக்கு வராது..?????

நமக்கு வராது..????? 🙄🙄🙄🤔🤔🤔

--------------------------------

கிட்டத்தட்ட முதல் நூறு மரணங்கள் நிகழும்வரை சீனாவும் சுதாரிக்கவில்லை. சீன புத்தாண்டின் கொண்டாட்ட நேரம் அவர்களுக்கு இப்படித்தான் விடிந்திருக்கிறது. இன்று மூவாயிரம் பேரைக் காவு வாங்கிவிட்டு, உலகத்தின் அத்தனை மூலைகளுக்குள்ளும் நுழைய ஆரம்பித்திருக்கிறது கரோனா.

எங்கோ தூரத்தில் கேட்டிருந்த சேதிகள், இன்று நம் வீட்டு கதவைத் தட்டிக்கொண்டிருக்கின்றன. 'சீனாவில்தானே' என்ற மனநிலை 'இந்தியாவில்' என்றதும் கொஞ்சமாய் பதறுகிறது. சற்று நேரத்தில் அதை மறந்து, 'பெங்களூரில்தானே' என்று ஆசுவாசம் கொள்கிறது. நாளை சென்னை என்றாலும் கும்பகோனத்தில் உள்ளவனுக்கு பயம் வராது. அந்தளவிற்கு தற்காப்பு முனைப்புகள் சுரணையற்று போய்விட்டன. இது மணிக்கு மணி துயரம் அதிகமாகிக்கொண்டிருக்கும் பேரிடர் கணம்.

 நம்மால் கற்பனை செய்யமுடிந்ததைத் தாண்டிய மிக மோசமான தொற்று இது. மருந்தில்லாத தொற்றுகள், ரத்தத்தின் மூலம் பரவியதற்கு இருந்த பயம் கூட காற்றில் பரவிக்கொண்டிருக்கும்போது இருக்கவில்லை. முன்னொரு காலத்தில், சார்ஸ் என்றொரு தொற்று வந்தது நினைவிருக்கலாம். அதுவும் கரோனா வைரஸ்தான். இது அதனுடைய மேம்படுத்தப்பட்ட வெர்ஷன். சார்ஸ்-2. இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நிமிடம் வரை இந்தியாவில் முப்பது பேருக்கு அந்த தொற்று வந்திருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் மரணக் கணக்குகள் ஆரம்பமாகிவிட்டன.

சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசுகளே தடுமாறிக்கொண்டிருக்கும்போது, நமது நிலை ரொம்பவே பரிதாபத்திற்குறியது. இங்கே ஒரு விஷயத்தைச் சொல்லி மக்களை நெறிப்படுத்துவதும் அத்தனை சுலபமில்லை.

அரசாங்கம் எதுவுமே செய்வதில்லை என்றவொரு பிரசங்கம் இங்கு பரவலாக உண்டு.

இன்னொரு விஷயம், டெங்குவை மர்மக் காய்ச்சல் என்று மழுப்பியதாக சொல்லப்படுவது. அரசின் ஒரு அறிவுரைக்கு இங்கு எத்தனை பேர் செவி சாய்க்கிறார்கள். வீட்டில் நீர் தேங்கும் தொட்டிகள் வைக்காதீர்கள் என்று சொன்னபோது அதை சட்டையே செய்யாமல் ஹிண்டு பேப்பர் படித்துவிட்டு, பின்னர் அதற்கே அபராதம் போட்டப்போது குய்யோ முய்யோவென்று கத்திய மெத்த படித்தவர்கள் எத்தனை எத்தனை பேர். வரும் எந்த ஓர் அபாயமும் எனக்கானதல்ல என்று பொறுப்பற்று திரியும் மெத்தனம் இங்கே மலிந்துப்போயிருக்கிறது. பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் அரசாங்கத்தால் சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போட்டுவிட முடியாது.

'மர்மக் காய்ச்சல்' என்பது, கறை பட்டுவிடக்கூடாது என்ற அரசியல் சாதுர்யத்தையும் தாண்டிய அச்சுறுத்தலும் கூட. 'டெங்கு' என்ற வார்த்தைக்கு மக்களிடம் பயமே இல்லாமல் போய்விட்டது. 'மர்ம' என்றால் கொஞ்சம் பயம் சேரும். அவ்வளவுதான். இப்போது கரோனாவை வைத்துக்கொண்டு மீம்களும் அவல நகைச்சுவைகளையும் பரப்பிக்கொண்டிருப்பதைப் பார்த்தால், வரப்போகும் பேரழிவு குறித்து எந்தவொரு விஷய ஞானமும் இங்கே இல்லை என்றுதான் படுகிறது. அதுதான், கரிவேப்பிலை ஜூஸில் இரண்டு சொட்டு கருவாட்டு ரத்தத்தை விட்டு குடித்தால் கரோனா அண்டாது என்ற புளுகல் பரப்புரைகளைச் செய்யச்சொல்கிறது.

தமிழ்நாடு மாதிரியான சுகாதாரத் துறையில் முன்னேறியுள்ள மாநிலத்திலேயே இந்த நிலை என்றால், வடக்கைப் பற்றி யோசிக்கவே முடியவில்லை.

சீனாவில் செயல்படுத்த முடிந்த மாஸ் ஷட் டவுன் முறையெல்லாம் இங்கு சாத்தியமாவென தெரியவில்லை. கல்வி நிலையங்கள், வர்த்தக மையங்கள், சிறு சிறு கடைகள், பேருந்து, ரயில், விமானம், வங்கிகள் என அத்தனையையும் வாரக் கணக்கில் மூடி வைப்பதன் சாத்தியத்தை யோசித்துப் பார்க்கமுடிகிறதா? உணவு தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி, நிர்வாக குளறுபடிகள், ஒரு மிகப்பெரிய நோய்த்தொற்றை உடனடியாக சமாளிக்க மருத்துவமனை/மருத்துவர்கள் போதாமை என எத்தனை எத்தனை துயரங்கள் அதில் அடங்கியிருக்கின்றன.

பேராபத்து நெருங்கும் முன்னரே நாமே வலிந்து இறங்கி செய்யவேண்டியது சில இருக்கின்றன.

1) விதண்டாவாதம் செய்யாமல் சுகாதாரத் துறை அறிவிப்புகளை ஏற்பது. அது குறித்து எந்தவொரு அவநம்பிக்கை உண்டாக்கும் எந்தவொரு செய்தியையும் கூடுமானவரை சமூக வலைதளங்களில் பரப்பாமல் இருப்பது

2) கூடுமானவரை கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களை தவிர்ப்பது. திரையரங்குகள், திருமண நிகழ்வுகள், அவசியமற்ற பேருந்து/ரயில் பயணங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைய்யுங்கள்.

3) மருத்துவமனைகளுக்கு வேறேதோ பிணிக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினர்கள்/ நண்பர்களை நலம் விசாரிக்க அநாவசிய விஜயம் செய்யாதீர்கள். அரசு மருத்துவமனையிலிருக்கும் முக்கால்வாசி கூட்டம் உறவினர்களும் நண்பர்களும்தான்.

4) மின்தூக்கிகள் பிரயோகிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

5) மாஸ்க் அணிவதால் இருக்கும் நன்மையைவிட கையை சுத்தகரிக்க பயன்படும் hand sanitizerகளால்தான் நன்மை அதிகம். எப்போதும் கையிருப்பு வைத்துக்கொள்ளவும். அடிக்கடி கை கழுவவேண்டியது அவசியம்.

6) மருந்தோ தடுப்பூசியோ இல்லாததால்தான் நாடுவிட்டு நாடு வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதுதான் மருந்து எனில் அதை அரசே அறிவிக்கும். வாட்ஸப்பில் தினமும் புதிய மருந்து ஒன்றைக் கண்டுபிடிக்காதீர்கள்.

7) வீட்டில் நாய் வளர்ப்பதால், மாடு வளர்ப்பதற்கு எதிரான கருத்துகளை நம்பாதீர்கள். பரப்பாதீர்கள்.

8) கரோனா வராமல் இருக்க சிறப்பு வழிப்பாட்டு கூட்டங்கள் நடந்தால் முன்வரிசையில் போய் நிற்காதீர்கள். கோவில்கள், மசுதிகள், தேவாலயங்கள் அனைத்தையும் கொஞ்சம் காலத்திற்கு ஒதுக்கி வைய்யுங்கள். கூட்ட நெரிசல் ஏற்படும் முக்கியமான இடங்களில் அவைதான் முதலிடம்.

இந்த பதிவையும் பகிர்ந்துவிட்டு, இதெல்லாம் யாருக்கோவெனதான் இருக்கப்போகிறோம். இதில் தனி மனிதன் ஒவ்வொருவனுக்கும் கடமை இருக்கிறது. அரசு பார்த்துக்கொள்ளும், அரசு முன்னெச்செரிக்கையாக இருக்கவில்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்போமாயின், பிணக்குவியல்களை நம் செய்தி ஊடகங்கள் சில வாரங்களில் காட்டத் துவங்கும்.

' நமக்கு வராது' என்ற மனநிலைதான் நம் சமூகத்தின் முதல் கேடு. கூடுமானவரை தன்னொழுக்கத்துடன் போராடிப் பார்க்கவேண்டிய அவசரநிலை இது. தவறவிட்டோம் எனில், மாஸ் ஷட் டவுன் என்ற சுகாதார சர்வாதிகாரம் பிரகடனத்திற்கு வந்தே ஆகவேண்டிய நிலை வரும். நம் மக்கட்தொகையும், அதற்கு பொருந்தாத நில நெரிசலும், இந்த விஷக்கிறுமிக்கு மிகத் தோதான விளைச்சல் நிலம். கொத்து கொத்தாக அறுவடை விழும்.       " விழித்துக்கொள்வோர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்Best regards,

Tuesday, 10 March 2020

ஒரு நல்ல தரமான பதிவு

ஒரு நல்ல தரமான பதிவு

_அன்று என் தலையில் கடுமையான வலி இருந்தது. நான் மருந்தகத்திற்குச் சென்றேன். கடையில் ஒரு பணியாளர் இருந்தார், அவர் எனக்கு ஒரு மாத்திரை அட்டையை கொடுத்தார். கடை உரிமையாளர் எங்கே என்று நான் அவரிடம் கேட்டேன். 

அவருக்கு தலைவலி இருப்பதால் அவர் சாலையின் எதிரே இருந்த காபி ஷாப்பில் காபி அருந்த சென்றுள்ளார் !!.  நான் என் கையில் இருந்த அந்த மருந்து அட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்._

 _*என் அம்மாவின் இரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரை அதிகரித்ததால், அதிகாலையில் அவரை எங்கள் குடும்ப மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன்.

மருத்துவர் யோகா மற்றும் உடற் பயிற்சிகளை செய்து கொண்டிருந்தார். நாங்கள் சுமார் 45 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. சிறிது நேரம் கழித்து, மருத்துவர் தனது எலுமிச்சைப் பழச்சாறுடன் கிளினிக்கிற்கு வந்து என் அம்மாவைச் சோதிக்கத் தொடங்கினார்.

அவர் என் அம்மாவிடம் தனது மருந்துகளை அதிகரிக்க வேண்டும் என்று சொன்னார், சுமார் 5 அல்லது 6 மருந்துகளின் பெயர்களை ஒரு மருந்து சீட்டில் எழுதினார். தவறாமல் மருந்துகளை உட்கொள்ளும்படி அம்மாவுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் நான் டாக்டரிடம் ஆர்வத்துடன் கேட்டேன், அவர் தொடர்ந்து யோகா செய்து கொண்டிருந்தாரா என்று, டாக்டர் கடந்த 15 ஆண்டுகளாக யோகா செய்து வருவதாகவும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறினார் !!

 என் கையில் இருக்கும் அம்மாவின் மருந்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அதில் டாக்டர் பிபி மற்றும் சர்க்கரையை குறைக்க பல மருந்துகளை எழுதியிருந்தார்.*_

_ஒரு நாள் நான் என் மனைவியுடன் ஒரு (பியூட்டி பார்லர்) அழகு நிலையத்திற்குச் சென்றேன். தலைமுடி மோசமடைந்து வருவதால் என் மனைவிக்கு முடி சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.

 வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண் தன்னிடம் பல பேக்கேஜ்களையும் அவற்றின் நன்மைகளையும் சொன்னாள். தொகுப்புகள் ரூ .1200 / - முதல் ரூ. 3000 / - வரை இருந்தன.. சிலபல தள்ளுபடிகளுக்குப் பிறகு, என் மனைவிக்கு ரூ .3000 / -க்கான தொகுப்பை ரூ .2400 / - க்கு கொடுத்தார்.

முடி சிகிச்சையின் போது, ​​என் மனைவிக்கு சிகிச்சையளித்த அந்த பெண்ணின் தலைமுடியிலிருந்து ஒரு விசித்திரமான வாசனை இருந்தது. நான் அவளுடைய தலை முடியிலிருந்து ஒரு விசித்திரமான ஆனால் நல்ல வாசனையை உணர்வதாக தெரிவித்தேன்.

 கற்பூரத்துடன் கலந்த வெந்தய எண்ணெயைப் பயன்படுத்துவதால் இது தலைமுடியை மென்மையாக வைத்து, நன்கு வளரவும் செய்கிறது என்று அவர் கூறினார்.

 தலைமுடியை ரூ .2400 / - க்கு நல்லதாக்க வந்த என் மனைவியை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்._

_*அவர் ஒரு பெரிய பால் பண்ணை வைத்திருக்கும் எனது பணக்கார உறவினர். நான் அவரது பண்ணைக்கு வந்தேன். பண்ணையில் சுமார் 150 வெளிநாட்டு மாடுகள் இருந்தன, அவற்றின் பால் பிரித்தெடுக்கப்பட்டு இயந்திரங்களால் பதப்படுத்தப்பட்டது.

ஒரு தனி பகுதியில் 2 நாட்டு மாடுகள் பச்சை தீவனத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அது என்ன ? என்று கேட்டபோது, ​​தங்கள் பால் பண்ணையிலிருந்து பால் வழங்கப்பட்ட அந்த மாடுகளின் பால் அவரது வீட்டிற்கு வரவில்லை, ஆனால் குடும்பத்தின் பயன்பாட்டிற்காக, இந்த இரண்டு நாட்டு மாடுகளின் பால், தயிர் மற்றும் நெய் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன என்று அவர்கள் கூறினர்.

பிராண்டட் பாலை வாங்குபவர்களை சிறந்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன்.*_

 _தனித்துவமான சமையல் மற்றும் தூய உணவுக்காக புகழ்பெற்ற ஒரு பிரபலமான உணவகத்தில் நாங்கள் உணவருந்தச் சென்றோம். வெளியேறும்போது, ​​மேலாளர் என்னிடம் மிகவும் பணிவுடன் கேட்டார், ஐயா, உணவு எப்படி சுவைத்தது.??

நாங்கள் தூய நெய், எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன் படுத்துகிறோம். நாங்கள் வீட்டைப் போலவே சாப்பாடு தர முயற்சிக்கிறோம். நான் உணவைப் பாராட்டியபோது, ​​அவர் தனது விசிட்டிங் கார்டை எனக்குக் கொடுப்பதற்காக என்னை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். கவுண்டரில் 3  டிபன் பாக்ஸ் வைக்கப்பட்டது.

ஒரு பணியாளர் இன்னொருவரிடம் "சுனில் ஐயரின் உணவை கேபினுக்குள் வைக்கவும், அவர் பின்னர் சாப்பிடுவார்" என்றார்.

 நான் பணியாளரிடம் கேட்டேன் - சுனில் இங்கே சாப்பிடுவது இல்லையா? அவர் பதிலளித்தார்- "சுனில் சார் ஒருபோதும் வெளியில் சாப்பிடுவதில்லை, வீட்டிலிருந்து தனது உணவைப் பெறுகிறார்".  என் கையில் இருந்த ரூ .1670 / - பில்லைப் பார்த்துக் கொண்டிருந்தேன்._

 _*இவை சரியான வாழ்க்கை முறை என்று சிலவற்றை நாம் கருதுகிறோம், ஆனால் அது நம்மை குழப்புவதற்கான ஒரு வழிமுறையாகும் என்பதை எனக்கு புரியவைத்த சில எடுத்துக்காட்டுகள் இவை.

நாம் பெரு நிறுவனங்களின் ஏடிஎம்களாக இருக்கிறோம்...
அதில் இருந்து திறமையான சந்தைப்படுத்தல் உள்ளவர்கள் பெரிய பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.

பெரும்பாலும் நமக்கு விற்கப்படும் பொருட்கள் விற்பனையாளர்களால் பயன்படுத்தப் படுவதில்லை.*_ 🤦🏻‍♂🤨

உண்மை தானே ?!
Best regards,

Monday, 9 March 2020

'நமக்கு வரும்'

Post from Dr Mayilan Chinnappan. 

'நமக்கு வரும்'

--------------------------------

கிட்டத்தட்ட முதல் நூறு மரணங்கள் நிகழும்வரை சீனாவும் சுதாரிக்கவில்லை. சீன புத்தாண்டின் கொண்டாட்ட நேரம் அவர்களுக்கு இப்படித்தான் விடிந்திருக்கிறது. இன்று மூவாயிரம் பேரைக் காவு வாங்கிவிட்டு, உலகத்தின் அத்தனை மூலைகளுக்குள்ளும் நுழைய ஆரம்பித்திருக்கிறது கரோனா.

எங்கோ தூரத்தில் கேட்டிருந்த சேதிகள், இன்று நம் வீட்டு கதவைத் தட்டிக்கொண்டிருக்கின்றன. 'சீனாவில்தானே' என்ற மனநிலை 'இந்தியாவில்' என்றதும் கொஞ்சமாய் பதறுகிறது. சற்று நேரத்தில் அதை மறந்து, 'பெங்களூரில்தானே' என்று ஆசுவாசம் கொள்கிறது. நாளை சென்னை என்றாலும் கும்பகோனத்தில் உள்ளவனுக்கு பயம் வராது. அந்தளவிற்கு தற்காப்பு முனைப்புகள் சுரணையற்று போய்விட்டன. இது மணிக்கு மணி துயரம் அதிகமாகிக்கொண்டிருக்கும் பேரிடர் கணம்.

நம்மால் கற்பனை செய்யமுடிந்ததைத் தாண்டிய மிக மோசமான தொற்று இது. மருந்தில்லாத தொற்றுகள், ரத்தத்தின் மூலம் பரவியதற்கு இருந்த பயம் கூட காற்றில் பரவிக்கொண்டிருக்கும்போது இருக்கவில்லை. முன்னொரு காலத்தில், சார்ஸ் என்றொரு தொற்று வந்தது நினைவிருக்கலாம். அதுவும் கரோனா வைரஸ்தான். இது அதனுடைய மேம்படுத்தப்பட்ட வெர்ஷன். சார்ஸ்-2. இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நிமிடம் வரை இந்தியாவில் முப்பது பேருக்கு அந்த தொற்று வந்திருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் மரணக் கணக்குகள் ஆரம்பமாகிவிட்டன.

சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசுகளே தடுமாறிக்கொண்டிருக்கும்போது, நமது நிலை ரொம்பவே பரிதாபத்திற்குறியது. இங்கே ஒரு விஷயத்தைச் சொல்லி மக்களை நெறிப்படுத்துவதும் அத்தனை சுலபமில்லை.

அரசாங்கம் எதுவுமே செய்வதில்லை என்றவொரு பிரசங்கம் இங்கு பரவலாக உண்டு. ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன். ஒரு மாதத்திற்கு முன், ஹாங் காங் வழியாக நான் பயணம் மேற்கொண்டு திரும்பிய முதல் இரண்டு வாரங்களும், ஒவ்வொரு நாளும், சுகாதாரத் துறையிலிருந்து அலைப்பேசியில் அழைத்து, இன்ன இன்ன நோயறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றனவா என்று விசாரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். பயணம் மேற்கொண்டு வரும் ஒவ்வொரு தனிமனிதனையும் விரட்டிப் பிடித்து ஒவ்வொரு நாளும் நோயறிவதெல்லாம் எத்தனை அசாதாரணமான காரியம் என்பது யோசிக்கவே மலைப்பாக இருக்கிறது. இந்த surveillance-க்கு எத்தனை உழைப்பு வேண்டும் என்பதை ஓரளவு அந்த துறையின் சிரமங்கள் அறிந்தவன் என்ற முறையில் என்னால் சொல்லமுடியும்.

இன்னொரு விஷயம், டெங்குவை மர்மக் காய்ச்சல் என்று மழுப்பியதாக சொல்லப்படுவது. அரசின் ஒரு அறிவுரைக்கு இங்கு எத்தனை பேர் செவி சாய்க்கிறார்கள். வீட்டில் நீர் தேங்கும் தொட்டிகள் வைக்காதீர்கள் என்று சொன்னபோது அதை சட்டையே செய்யாமல் ஹிண்டு பேப்பர் படித்துவிட்டு, பின்னர் அதற்கே அபராதம் போட்டப்போது குய்யோ முய்யோவென்று கத்திய மெத்த படித்தவர்கள் எத்தனை எத்தனை பேர். வரும் எந்த ஓர் அபாயமும் எனக்கானதல்ல என்று பொறுப்பற்று திரியும் மெத்தனம் இங்கே மலிந்துப்போயிருக்கிறது. பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் அரசாங்கத்தால் சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போட்டுவிட முடியாது.

'மர்மக் காய்ச்சல்' என்பது, கறை பட்டுவிடக்கூடாது அரசியல் சாதுர்யத்தையும் தாண்டிய அச்சுறுத்தலும் கூட. 'டெங்கு' என்ற வார்த்தைக்கு மக்களிடம் பயமே இல்லாமல் போய்விட்டது. 'மர்ம' என்றால் கொஞ்சம் பயம் சேரும். அவ்வளவுதான். இப்போது கரோனாவை வைத்துக்கொண்டு மீம்களும் அவல நகைச்சுவைகளையும் பரப்பிக்கொண்டிருப்பதைப் பார்த்தால், வரப்போகும் பேரழிவு குறித்து எந்தவொரு விஷய ஞானமும் இங்கே இல்லை என்றுதான் படுகிறது. அதுதான், கரிவேப்பிலை ஜூஸில் இரண்டு சொட்டு கருவாட்டு ரத்தத்தை விட்டு குடித்தால் கரோனா அண்டாது என்ற புளுகல் பரப்புரைகளைச் செய்யச்சொல்கிறது.

தமிழ்நாடு மாதிரியான சுகாதாரத் துறையில் முன்னேறியுள்ள மாநிலத்திலேயே இந்த நிலை என்றால், வடக்கைப் பற்றி யோசிக்கவே முடியவில்லை.

சீனாவில் செயல்படுத்த முடிந்த மாஸ் ஷட் டவுன் முறையெல்லாம் இங்கு சாத்தியமாவென தெரியவில்லை. கல்வி நிலையங்கள், வர்த்தக மையங்கள், சிறு சிறு கடைகள், பேருந்து, ரயில், விமானம், வங்கிகள் என அத்தனையையும் வாரக் கணக்கில் மூடி வைப்பதன் சாத்தியத்தை யோசித்துப் பார்க்கமுடிகிறதா? உணவு தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி, நிர்வாக குளறுபடிகள், ஒரு மிகப்பெரிய நோய்த்தொற்றை உடனடியாக சமாளிக்க மருத்துவமனை/மருத்துவர்கள் போதாமை என எத்தனை எத்தனை துயரங்கள் அதில் அடங்கியிருக்கின்றன.

பேராபத்து நெருங்கும் முன்னரே நாமே வலிந்து இறங்கி செய்யவேண்டியது சில இருக்கின்றன.

1) விதண்டாவாதம் செய்யாமல் சுகாதாரத் துறை அறிவிப்புகளை ஏற்பது. அது குறித்து எந்தவொரு அவநம்பிக்கை உண்டாக்கும் எந்தவொரு செய்தியையும் கூடுமானவரை சமூக வலைதளங்களில் பரப்பாமல் இருப்பது

2) கூடுமானவரை கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களை தவிர்ப்பது. திரையரங்குகள், திருமண நிகழ்வுகள், அவசிஅயமற்ற பேருந்து/ரயில் பயணங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைய்யுங்கள்.

3) மருத்துவமனைகளுக்கு வேறேதோ பிணிக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினர்கள்/ நண்பர்களை நலம் விசாரிக்க அநாவசிய விஜயம் செய்யாதீர்கள். அரசு மருத்துவமனையிலிருக்கும் முக்கால்வாசி கூட்டம் உறவினர்களும் நண்பர்களும்தான்.

4) மின்தூக்கிகள் பிரயோகிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

5) மாஸ்க் அணிவதால் இருக்கும் நன்மையைவிட கையை சுத்தகரிக்க பயன்படும் hand sanitizerகளால்தான் நன்மை அதிகம். எப்போதும் கையிருப்பு வைத்துக்கொள்ளவும். அடிக்கடி கை கழுவவேண்டியது அவசியம்.

6) மருந்தோ தடுப்பூசியோ இல்லாததால்தான் நாடுவிட்டு நாடு வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதுதான் மருந்து எனில் அதை அரசே அறிவிக்கும். வாட்ஸப்பில் தினமும் புதிய மருந்து ஒன்றைக் கண்டுபிடிக்காதீர்கள்.

7) வீட்டில் நாய் வளர்ப்பதால், மாடு வளர்ப்பதற்கு எதிரான கருத்துகளை நம்பாதீர்கள். பரப்பாதீர்கள்.

8) கரோனா வராமல் இருக்க சிறப்பு வழிப்பாட்டு கூட்டங்கள் நடந்தால் முன்வரிசையில் போய் நிற்காதீர்கள். கோவில்கள், மசுதிகள், தேவாலயங்கள் அனைத்தையும் கொஞ்சம் காலத்திற்கு ஒதுக்கி வைய்யுங்கள். கூட்ட நெரிசல் ஏற்படும் முக்கியமான இடங்களில் அவைதான் முதலிடம்.

இந்த பதிவையும் பகிர்ந்துவிட்டு, இதெல்லாம் யாருக்கோவெனதான் இருக்கப்போகிறோம். இதில் தனி மனிதன் ஒவ்வொருவனுக்கும் கடமை இருக்கிறது. அரசு பார்த்துக்கொள்ளும், அரசு முன்னெச்செரிக்கையாக இருக்கவில்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்போமாயின், பிணக்குவியல்களை நம் செய்தி ஊடகங்கள் சில வாரங்களில் காட்டத் துவங்கும்.

' நமக்கு வராது' என்ற மனநிலைதான் நம் சமூகத்தின் முதல் கேடு. கூடுமானவரை தன்னொழுக்கத்துடன் போராடிப் பார்க்கவேண்டிய அவசரநிலை இது. தவறவிட்டோம் எனில், மாஸ் ஷட் டவுன் என்ற சுகாதார சர்வாதிகாரம் பிரகடனத்திற்கு வந்தே ஆகவேண்டிய நிலை வரும். நம் மக்கட்தொகையும், அதற்கு பொருந்தாத நில நெரிசலும், இந்த விஷக்கிறுமிக்கு மிகத் தோதான விளைச்சல் நிலம். கொத்து கொத்தாக அறுவடை விழும்.
Best regards,

Sunday, 8 March 2020

மகளிர் தின வாழ்த்துக்கள்

*மகளிர் தின வாழ்த்துக்கள்
 தயவுசெய்து  கீழே உள்ள நிகழ்வு ஒன்றை வாசியுங்கள்!!


ஆசிரியர் வந்து, "இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து, "இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..." என்று பணித்தார்.

அந்த பெண்ணும் எழுதினார். பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்... அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.. அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார். அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்...

இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்... அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன்....

இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்... இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்...

வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்...

மீண்டும் ஒரு பெயரை அழிக்க சொன்னார் அந்த ஆசிரியர்... அந்த பெண் அழுது கொண்டே... நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் அவரது மகனின் பெயரை அழித்து விட்டு கதறிவிட்டார்... ஆசிரியர் அவரை அவரது இருக்கைக்கு போகச்சொல்லிவிட்டு, "ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்... உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கினர். உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை அளித்தான். .. பின் ஏன் ..?" என்று கேட்டார்.. முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப்போகும் பதிலுக்காக காத்திருந்தது...

அதற்கு அந்த பெண்...."இருக்கலாம்.. என் பெற்றோர் எனக்கு முன்னமே இறந்துவிட வாய்ப்புள்ளது... என் மகன் படிப்பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்து விட நேரலாம்.... ஆனால் எப்போதும் என் கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக அர்ப்பணிப்பவர் என் கணவர் மட்டுமே.. அதனால் தான்...." என்றார்.....

அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டினர்.... இது தானே உண்மை .... உங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த தவறாதீர்கள்...... அதன் பொருட்டே இறைவன் உங்களை இணைத்திருக்கிறான் என்பதை உணருங்கள்...தோழமைகளே...

இது மனைவிக்கு மட்டும் இல்லை கணவர்களுக்கு தான்.Best regards,

மகளிர் கவனத்திற்கு...

மகளிர் கவனத்திற்கு...

1.உலகத்திலே அனைத்து பெண்களுக்கான வாக்குரிமை முதன் முதல் தமிழக பெண்களுக்கே திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சியின் ஆட்சியில் வழங்கப்பட்டது

2.பெண்களுக்கான சொத்துரிமை இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது.

3.இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் அரசு பணியில் 30% பெண்களை அமர்த்தியது திராவிட கட்சி ஆட்சி.

4.உள்ளாட்சி துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடை இந்தியாவிலே முதல்முறையாக தமிழ்நாட்டில் திராவிட கட்சி ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

5.பெண்களுக்கான திருமண உதவி தொகை இந்தியாவிலே முதன் முதல் தமிழ் நாட்டில் திராவிட கட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது.

6.பெண்களுக்கான மகபேறு உதவி தொகை இந்தியாவிலே முதன் முதல் தமிழ் நாட்டில் திராவிட கட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது.

7.பெண்கள் காவல் துறையில் இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் அமர்த்தப்பட்டனர்.

8.பெண்களுக்கு இலவசமாக கேஸ் அடுப்பு இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது.

9.பெண்களுக்கான சுயஉதவி குழுக்களை அமைத்து சுழல் நிதி அளித்து இந்தியாவிலே தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் முதலிடம் வகித்தது

10.பெண்களுக்காக தாய் சேய் நலம் மையம் அமைத்தது இந்தியாவிலேயே தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் தான்

11.பெண்கள்  இந்து அறநிலைத்துறையில் இந்தியாவிலேயே முதன் முதல் தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் அமர்த்தப்பட்டனர்.

12.கைம்பெண்களுக்கு இலவச தையல் மிஷின் இந்தியாவிலேயே தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது.

13.திருமணமாகாத பெண்களுக்கு இந்தியாவிலேயே முதன் முதல் தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

14.பெண்களுக்கான முதியோர் ஊக்கத்தொகை இந்தியாவிலேயே முதன் முதல் தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது.

15.பெண்களையும் அச்சகராக நியமித்து இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் அரசானை பிறப்பிக்கப்பட்டது.

16.கைம்பெண்களுக்கு அரசு தேர்வில் உள்ஒதுக்கீடு வழங்கி இந்தியாவிலேயே முதன் முதல் தமிழ்நாட்டில் திராவிட கட்சி ஆட்சியில் சலுகை அளிக்கப்பட்டது.

17. தொட்டில் குழந்தை திட்டம் திராவிட ஆட்சியில் அமலாக்கப்பட்டு பெண் சிசு கொலை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டுவரப்பட்டது...

18. பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் திராவிட ஆட்சியில் அமலாக்கப்பட்டது.

19. திராவிட ஆட்சியில் பெண் குழந்தை பாதுகாப்பு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண்குழந்தையின் பெயரில், வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையும், இரண்டுப் பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தை பெயரிலும் தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையும் இருப்பு வைக்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து, வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும். இது, ஏழைப் பெண்களின் உயர்கல்வி, திருமணம் போன்ற எதிர்கால தேவைகளுக்கு பேருதவியாக இருக்கும். லட்சக்கணக்கான பெண்கள் இத்திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.

20. பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் திராவிட ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம், கிராமங்களில் உள்ள இளம் பெண்கள் முதல் சிறைச்சாலையில் இருக்கும் பெண் கைதிகள்வரை, பலதரப்பட்ட பெண்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. உலக அளவில் பெண்களின் சுகாதாரத்திற்கான சிறந்த முன்னுதாரணத் திட்டமாக இத்திட்டம் போற்றப்படுகிறது.

21. உடல் எடைக்கும், உடல் நலனுக்கும் இடையே உள்ள தொடர்பை மனதில் கொண்டு, பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம் திராவிட ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசு அங்கன்வாடி மையங்கள் மூலம், குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் உடல் எடைகள் கண்காணிக்கப்பட்டு, எடை குறைந்த பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கப்பட்டு, அவர்களின் உடல்நலம் காக்கப்படுகிறது.

22. அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் திட்டம் திராவிட ஆட்சியில் அமலாக்கப்பட்டது...

அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும், அரசின் பரிசாக, சோப்பு, பொம்மை, துண்டு, ஷாம்பூ, குழந்தைக்கான ஆடை உள்ளிட்ட 16 பொருட்களைக் கொண்ட 'அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்' என்ற புதிய திட்டம் 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது . ஏழை, எளிய குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகள், நலமும் வளமும் பெற்று வளர, இத்திட்டம் உதவி வருகிறது.

23. அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திட்டம் திராவிட ஆட்சியில் அமலாக்கப்பட்டது...

பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும், பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர்,  2003 ஆம் ஆண்டு பெண்களை மட்டுமே கொண்ட சிறப்பு பெண்கள் ஆயுதப்படையும் தொடங்கப்பட்டது.

24. பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் திராவிட ஆட்சியில் அமலாக்கப்பட்டது...

கைக்குழந்தைகளுடன் பெண்கள் வெளியில் செல்வதே பெரும்பாடானது. அதிலும் பாலூட்டும் தாய்மார்கள், பயணங்களில், பொதுவெளிகளில் தங்கள் குழந்தைக்கு பசியாற்ற முடியாமல் தவிப்பார்கள். இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில், தாய்மார்கள் பாலூட்டுவதற்கு என பிரத்யேக தனியறைகளை அமைத்துக்கொடுக்கப்பட்டது.

25. மகப்பேறு மாதம் வரை கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்ற மூலிகைகளைத் தரும் ’அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்’ திராவிட ஆட்சியில் அமலாக்கப்பட்டது... இதன் மூலம், மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க, 11 வகை மூலிகை மருந்துகள் அடங்கிய ’மகப்பேறு சஞ்சீவி’, அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், கருவுற்ற பெண்களின் ஆரோக்கியமும், கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.

26. பெண்களுக்கான விருதுத் திட்டங்கள் திராவிட ஆட்சியில் அமலாக்கப்பட்டன.

வீர, தீரச் செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கூடிய, ‘கல்பனா சாவ்லா’ விருது, சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களுக்கு, 1 லட்சம் ரூபாயோடு, 8 கிராம் தங்கப் பதக்கமும் அடங்கிய ‘அவ்வையார் விருது’ ஆகியவை திராவிட ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை.  இந்த விருதுகள், பெண்களின் திறனை உலகம் அறிய, வகை செய்கின்றன.

தமிழகத்தில் பெண்கள் நலனுக்காகவும், பெண்களை போற்றிப் புகழும் வகையிலும் திராவிட ஆட்சிகளால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முழுதும் திரட்டி பட்டியலிடுவதற்கு இங்கு இடமும் நேரமும் போதாது...

அனைத்து மகளிருக்கும் நாம் அனைவரும் மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்... 🙂💖💐



மகளிர் தின வாழ்த்துகள். 💟 💐 💐

- பகிர்வுBest regards,

கோவை போகும் வழியில், மதிய உணவுக்காக பஸ்ஸை ஒரு ஹோட்டலில் நிறுத்திய போது தான், அவரை கவனித்தேன்,

கோவை போகும் வழியில், மதிய உணவுக்காக பஸ்ஸை ஒரு ஹோட்டலில் நிறுத்திய போது தான், அவரை கவனித்தேன்,

அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்...

கையில் சிக்னல் ஸ்டிக்கர் லைட்டும்,
வாயில் விசிலுமாய்,

ஹைவேஸில் போகின்ற வண்டிகளை எல்லாம் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார்...

வயோதிகம் காரணமாகவோ,             
நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ,

தனது கால்களை வலி தாளாமல்,
கால் மாற்றி தவித்துக் கொண்டே இருந்தார்...

டீ சாப்பிட்டு வந்த பிறகு கவனித்தேன்,
அவர் இடம் மாறவே
யில்லை.

அந்த இடத்தின் என் மனைவியோடு சில செல்பிகளை எடுத்துக் கொண்டே மீண்டும் அவரை கவனித்த போதும்,
அவர் அமரவே இல்லை.

இது போன்ற
எளிய மனிதர்களை கண்டால்,
இயன்றதை தருவது, என் வழக்கம்.

அருகே சென்று,
தோளைத் தொட்டு திருப்பி,
நூறு ரூபாய் பண நோட்டை நீட்டினேன், பணத்தை கவனித்தவர்,

மெல்ல புன்னகைத்தே,
வேணாம் சார் என மறுத்தார்.

அவர் மறுத்தது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.           

ஏனெனில்
எப்படியும் அது, அவரது ஒரு நாள் சம்பளமாகத்தான் நிச்சயமிருக்கும்.

ஏன் எனக்
கேட்டேன்.

அவங்க கொடுத்திட்டாங்க..

" யாரு "

திரும்பி,
பஸ் அருகே நின்று கொண்டிருந்த என் மனைவியை காண்பித்தார்.

நிச்சயமாய்
நான் கொடுத்ததை போல,
அவள் கொடுத்திருக்க வாய்ப்பேயில்லை.

பணம் கண்டு பேராசை படாத அவரின் உண்மையும்,

உண்மையை சொல்லி வேண்டாமென மறுத்த அவரின் நேர்மையும்,
எனக்கு மிகவும் பிடித்திருந்தது...

மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தேன்.

" பேரென்னங்க ஐயா "

"முருகேசனுங்க "

" ஊருல என்ன
வேல "

" விவசாயமுங்க "

" எத்தனை வருசமா இங்கே வேலை செய்யறீங்க "

" நாலு வருசமா செய்றேங்க "

" ஏன் விவசாயத்த விட்டீங்க "

மெல்ல மௌனமானார்.

தொண்டை
அடைத்த துக்கத்தை,                         
மெல்ல மெல்ல முழுங்கினார்.

கம்மிய குரலோட பேச துவங்கினார்.

ஆனால்,
என்னோடு பேசிக் கொண்டிருந்த போதும்,

அவரின் முழு கவனமும், சாலையில்
செல்லும் வண்டிகளை, அவ்வப்போது அழைப்பதிலேயே குறிக்கோளாகவே
இருந்தது.

" எனக்கு திருநெல்வேலி பக்கம் கிராமமுங்க,

ஒரு பொண்ணு,
ஒரு பையன், விவசாயந்தான் முழு நேர பொழப்பே நமக்கு.

ஆனா,
மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார்.

நானும் முடிஞ்சவரை கடன,
உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன்,

ஒண்ணுமே விளங்கலே,

கடைசிவரை
கடவுளும் கண்ணே தொறக்கலை.

இதுக்கு மேல தாளாதுன்னு,

இருக்கிற நிலத்த வித்து,
கடனெல்லாம் அடைச்சுட்டு,

மிச்ச மீதிய வச்சு, ஒரு வழியா
பொண்ணுக்கு கல்யாணத்த பண்ணினேன்.

பையன் இருக்கானே,
அவனைப் படிக்க வைக்கணுமே,

அதுக்காக,
நாலு வருசத்துக்கு முன்னாடி தான் இங்கே வந்து வேலைக்கு  சேர்ந்தேன்.

மூணு வேளை சாப்பாடு.
தங்க இடம்,
மாசம் 7500/- ரூபா சம்பளம்.

இந்த வேலைய பாத்துகிட்டே,
பையனை என்ஜினியருக்கு படிக்க வைச்சேன்.

படிச்சி முடிச்சிட்டு, போன மாசம் தான்,
பையன் கோயம்புத்தூருல வேலைக்கு சேர்ந்தான்.

அப்படியா,
உங்க பையன் என்ஜுனியரா, சூப்பர்.

சரி,
அதான் பையன் வேலைக்கு போறான்ல,

நீங்க ஊரோட போக வேண்டியது தானே பெரியவரே,

நிச்சயமா
போவேன் சார்,

பையனே
"நீ கஷ்டப்
பட்டது போதும்ப்பா,
வந்துடு,
எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு" தான் சொல்லுறான்,

ஆனா,
இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு,

அதையும் அடைச்சிட்டா ஊருக்கு போயிடுவேன் சார் "

" எப்போ "

" இன்னும் ஒரு அஞ்சு மாசம் ஆவும்
சார் "

" சரி,
கடவுள் இருக்கார் பெரியவரே,

இனி எல்லாமே நல்லதாவே
நடக்கும் ".

பெரியவர்
சிரித்தார்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது,

ஹோட்டலிலிருந்து ஒரு பையன் வந்து, அவரிடம் காதில் ஏதோ சொன்னான்,

பெரியவர் முகம் மலர்ந்தார்.

" கொஞ்ச நேரம் உட்கார சொல்லிருக்
காங்க" என்றார்.

"என்ன
சொன்னீங்க சார்.

கடவுளா !!!

கடவுள் என்ன சார் கடவுளு,

அவன் ரொம்ப ரொம்பக் கொடுமைகாரன் சார்.

இல்லன்னா,
ஊருக்கே சோறு போட்ட என்னைய,
கடனாளியாக்கி

இப்பிடி நடு ரோட்டுல நின்னு,

சாப்பிட
வாங்கன்னு
கூப்பிட வைப்பானா,

" மனுஷங்க
தான்
ஸார் கடவுள் "

முகம் தெரியாத, என்னை நம்பி இந்த வேலையை தந்து,

நான் வேலைகாரன் தானேன்னு கூட பாக்காம,

இதோ இந்த  வயசானவனுக்கு கால்
வலிக்கும்ன்னு உட்காற சொல்ற,
என் முதலாளி ஒரு கடவுள்,

"உங்கப்பா ஏன் இப்படி கஷ்டப்
படனும்,
பேசாம நம்ம கூட வந்திருக்க சொல்லு,

கூழோ,
கஞ்சோ இருக்கிறத பகிர்ந்து சாப்பிடலாம்னு " சொன்ன,
எம் பொண்ண சந்தோஷமா வச்சிருக்கிற,
என் மாப்பிள்ளை ஒரு கடவுள்.

கஷ்டப் பட்டு
அப்பா படிக்க வச்சதை கொஞ்சம் கூட மறக்காம,

" நீ வேலைக்கு போவாதப்பா,
எல்லாம் நான் பாத்துகிறேன்ன்னு சொன்ன
 என் புள்ள
ஒரு கடவுள்

நான் கடனை அடைச்சுடுவேன்னு என்னை நம்பி, தொந்தரவு பண்ணாத,
எனக்கு கடன் கொடுத்தவங்க எல்லாருமே ஒரு கடவுள்.

இங்கே வந்து என்னையும் சக மனுசனா மதிச்சி
அப்பப்ப ஆதரவா பேசுற,
உங்களை மாதிரியே இங்கே வர்ற, ஆளுங்க எல்லாருமே தான் சார் கடவுள்.

" மனுசங்க தான்
சார் கடவுள் "

எனக்கு அந்த பெரியவரை அப்படியே கட்டி அணைக்கவே
தோன்றியது,

இருக பற்றி அணைத்துக் கொண்டேன்.

வேண்டாமென மறுத்த போதும்,

பாக்கெட்டில் பல வந்தமாய்
பணம் திணித்தேன்.

பஸ் கிளம்பும்
போது,
மெல்ல புன்னகைத்த,

முருகேசன் என்கிற அந்த பெரியவரை பார்த்து,

தலை வணங்கியே, கும்பிட்டேன்.

ஒவ்வொரு வீட்டுக்குமே,
இது போன்ற தகப்பன் சாமிகள்,
நிறைய பேர் இருக்கத்தான்
செய்கிறார்கள்.

நமக்குத்
தான் எப்போதுமே
கும்பிடவோ, நினைத்துப் பார்க்கவோ மனம் வருவதே இல்லை



விவசாயிகளின் இன்றைய அவல நிலைக்கு யார் காரணம்‼

சிந்தியுங்கள்
நன்கு சிந்தித்து செயல்படுங்கள்

நம் நாட்டில் விழையும் இயற்கை உணவுகளை வாங்கி பயன்படுத்தி
விவசாயிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.

மேலும் இயற்கை உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

அன்பே சிவம்



எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க

🙏வாழ்க வளமுடன்🙏Best regards,

Thursday, 5 March 2020

தமிழாக்கம் கொரோனா வைரஸ் பற்றிய ஓர் பார்வை..!

 தமிழாக்கம் கொரோனா வைரஸ் பற்றிய ஓர் பார்வை..!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கொரோனா வைரஸ் கிருமி அளவில் பெரிய ஒன்று.. ஏறக்குறைய அது 400-500 மைக்ரான் அளவில் இருப்பதால்,
அதனை எந்த சாதாரண துணி முகமூடியாலும் தடுக்கவியலும்..
ஆகவே அதற்கு தனியாக Mask என போலி விளம்பரங்களை நம்பி மோசம் போக வேண்டாம்..

2.இந்தக் கிருமி காற்றில் பரவாது..ஆனால் நிலப்பரப்பின் மூலம் பரவும்.

3.கொரானா வைரஸ் உலோகங்களின் மேல்பரப்பில் 12 மணிநேரம் வரை வாழும். எனவே உலோகப் பொருட்களை கையால் தொடுபவர்கள் உடனே கைகளை சோப்பினால் நன்கு கழுவுவதே போதுமானதாகும்..

4.இந்த கிருமி துணிகளின் மீது 9மணி நேரம் வரை வாழும்.எனவே துணிகளை நன்கு துவைத்து 2மணிநேரம் வரை வெயிலில் உலர்த்தவும்..

5.இந்த வைரஸ் 26-27° டிகிரி வெப்பத்தில் வாழும் தன்மையற்றது.. எனவே இந்தியா போன்ற வெப்பமண்டல தேசங்களில் இக் கிருமிகள் பரவும் வாய்ப்பு மிக குறைவே.. ஒருவேளை இவற்றின் பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள விரும்பினால், சூரிய ஒளியில் சிறிதுநேரம் நடக்கவும், சூடான தண்ணீரை அருந்தினாலும் போதும்..

6.எக்காரணம் கொண்டும் குளிர்ச்சியான உணவுகளை உண்ணாதீர்கள்.. ஐஸ்கிரீம் போன்ற குளிர்சியான பொருட்களை தவிர்க்கவும்..!

7.தொண்டை வறட்சியும்,அதன் தொடர்ச்சியுமே இந் நோயின் அறிகுறி.. எனவே தொண்டை வறண்டு விடாமல்,சூடான உப்பு கலந்த தண்ணீரால் கொப்பளிப்பதும், அதனால் கல்லீரலுக்கு இந்த வைரஸ் பரவாமலும் தவிர்க்க முடியும்

மேற்கண்ட தற்காப்பு முறைகள் கொரோனா வைரஸில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள UNICEF வழங்கியுள்ள ஆலோசனைகளாகும்...!

நன்றிகள் பலBest regards,

Monday, 2 March 2020

காய்கறி கவிதை

காய்கறி கவிதை

தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில்
எக்காலும் நோயில்லை காண் .

எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர்
எலும்புக்கு வலு சேர்க்குமே .

வெங்காய மில்லாச்  சாம்பார் எஞ்ஞான்றும் 
தங்காதே நாவில் ருசி .

பொல்லாத பேரையும் நல்லவ ராக்குமே
புடலங்காய் போற்றிச் சுவை .

தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய்
முள்ளங்கி மூன்றினை  த்தான்.

வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும்
தொண்டையில் இறங்காது காண் .

வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும்
வாழாதார் என்பது வழக்கு . 

கத்திரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம்
இத்தரையில் பித்தருக்குச் சமமெனக்கொள் .

பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில்
புகழோடு வாழ்வார் அவர் .

காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும்
நோய்நொடியில் வீழ்ந்து கெடும்.

முருங்கைக்காய் ருசித்தாரே ருசித்தார் வேறெல்லாம்
வெறுங்கையில் முழம் போடுவர் .

காரிருளில் கண்தெரிய  வேண்டுமெனில் பாரிலுள்ள
கரிசலாங் கண்ணியைச் சேர் .

இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில்
கரும்பைப் போய் விரும்பிச்சுவை .

உரிக்க உரிக்கத்  தோல்தான் வெங்காயமென்றாலும்
செரிக்குமோ உரிக்காவிடில்.

பறித்தவுடன்   உண்ணுவீர் பரங்கியை எப்போதும்
பலனது   வேண்டுமெனில்

பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார்
சோகத்தில்  சேர்ந்து விழும்.

வெல்லத்தில்  இரும்புண்டு  ஆகையினால் சாப்பாட்டில்
ஒரு துண்டு சேர்த்துச்சமை . 

வாழ்வதனால் ஆய பயனென்கொல் வாழைக்காய்
தாழ்வேனெவே எண்ணு பவர்.

கேரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள்
தேரை வாழ்ந்த கதை .

பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும்
பீட்ரூட்டை உணவில் சமை.

கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் இவையெல்லாம் 
சத்தே என சரியாய் உணர் .
கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர்
சொறி பிடித்தோடுவார் காண் .

பொன்னிற மேனி வேண்டுமெனில் நீயந்த
பொன்னாங் கண்ணியைச் சேர் .

கண் இருந்தும் குருடரே காசினியில்
காய் கறியை உண்ணாதவர் .
💐💐💐💐💐💐💐💐
Best regards,

அருமையான பதிவு !!!

அருமையான பதிவு !!!

ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து போனார். வயதுக்கு வந்த மகன் குடும்பப் பொறுப்பு ஏற்றான். அப்பா இறந்த பிறகு அவரது டைரியில் இருந்த குறிப்பு ஒன்று சற்றே அதிர்ச்சி தந்தது.

அதில் நண்பரிடம் ஒரு லட்சம் கடனாக வாங்கியிருப்பதைத் தந்தை குறிப்பிட்டிருந்தார். அவர் கடன் வாங்கிய விபரம் குடும்பத்தில் யாருக்கும் தெரியவில்லை.

இறப்பின் போதும், இறப்பிற்குப் பிறகும் கடன் கொடுத்த அந்த அப்பாவின் நண்பரை பல் வேறு இடங்களில் சந்தித்து விட்டான். அவரும் இவனிடம் நலம் விசாரித்ததோடு சரி.

மேலும், அவனது அப்பாவிடம் வழங்கியிருந்த கடன் குறித்து பேசாதது ஆச்சரியம் தந்தது. எனவே தந்தையின் நண்பரைத் தேடிச்சென்றான், சந்தித்தான், விவரம் சொன்னான்.

அவர் மெதுவாகச் சொன்னார், "உங்க அப்பா எனக்குப்  பலப்பல  நேரங்களில் உதவியிருக்கிறார். அவர் ஒரு சமயத்துல உங்க அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்ட போது கேட்டார். கொடுத்தேன்.

அதுக்கு எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை. திடீர்னு உங்கப்பா இறந்துட்டார்.

இந்த நிலையில் எந்த ஆதாரமும் இல்லாம, உங்கப்பா எங்கிட்ட கடன் வாங்கி இருக்காருன்னு கேட்குற மனம், எனக்கும் வரல.

அதுக்கு முக்கிய காரணம், கடன் வாங்கும்போதே, இது வீட்டிற்குத் தெரிய வேண்டாம்ன்னு சொன்னார்.

அவர் இறந்த பிறகும் அவர் வார்த்தைக்கு மதிப்பளிப்பது தான் நியாயம்னு பட்டது. அதனால தான் நானும் அதை விட்டுட்டேன்" என்றார்.

"எங்கப்பா கையெழுத்துப் போட்டு கடன் வாங்கலேனாலும் அதைத் திரும்பக் கொடுக்குறது தான் அவரோட மகனான எனக்கு  அடையாளமாக இருக்கும் என்ற மகன், கையோடு கொண்டு சென்றிருந்த பணத்தைத் திரும்பக் கொடுத்தான், நண்பரும் நெகிழ்ந்தார்.

பண்பும் செயலும்தான் ஒருவனை உயர்த்துமே தவிர, மதமோ சாதியோ,வசதியோ அல்ல.

இந்தச் சம்பவத்தில் இரண்டு நல்லவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.

இதுதான் வழக்கு மொழியில் சொல்வார்கள். நல்லவர்களுக்கு எழுத்து தேவையில்லை; கெட்டவர்களுக்கு எழுதியும் பயனில்லை என்று.

ஒருவன் நல்லவனாகவும் கெட்டவனாகவும் உருவாகச் சூழ்நிலைதான் பெரும்பங்கு வகிக்கிறது.

தப்புச் செய்யச் சூழல் அமையாதவரை எந்த ஒரு மனிதனும் நல்லவன் தான் என ஒரு வாக்கியம் உண்டு.

சேற்றிலும் செந்தாமரையாக வளர்வதே முக்கியம்.

தப்புச் செய்ய வாய்ப்புக் கிடைத்தும், வாய்மையோடும், சூழல் அமைந்தும் நேர்மையோடும் வாழ முயல்பவனே நல்லவன்.

மனிதகுலத்தில் நல்லவர்கள் என்ற இனம் அழிந்து  வரும் இனமாக அடையாளம் காட்டப் படுவது வேதனையளிக்கிறது.Best regards,