Tuesday 17 March 2020

இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் எந்த நிலையில் உள்ளது ??

இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் எந்த நிலையில் உள்ளது ??

உண்மை நிலை

உலக சுகாதார மையம் கொரோனா கிருமித்தொற்றை PANDEMIC என்று அறிவித்து விட்டது.

சரி....சீனா, இத்தாலில அவ்ளோ பாதிப்பு. நம்ம இந்தியால பாதிப்பு எந்த கட்டத்தில் இருக்கு ??

PANDEMIC கிருமித்தொற்று நான்கு கட்டங்களாக நகர்கிறது.

கட்டம் 1 - தொற்று நோய் பாதித்த பகுதிகளில் இருந்து புதிய இடத்திற்கு வந்திறங்கும் நோய் தொற்று உடைய மக்கள்.

கட்டம் 2 - புதிதாக பாதித்த இடங்களில் அவர்கள் மூலம் நோய்க்கிருமி அந்த பகுதிகளில் பரவுதல்.

கட்டம் 3 - வரைமுறையின்றி நாட்டின் பல பகுதிகளில் பரவும் நிலை. எவ்வாறு பரவுகிறது என்பதை கண்டறிய முடியாத வண்ணம் மிக வேகமாக பரவும் நிலை இருக்கும்.

கட்டம் 4 - மொத்த நாட்டையே தூக்கிப்போடும் கொள்ளைநோய்.

இத்தாலி, ஈரான், சீனா போன்ற நாடுகள் நான்காம் கட்டத்தில் உள்ளன. ஆகவே தான் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் மிக அதிகம்.

அப்போ இந்தியா ??

கட்டம் 2-ல் உள்ளது. அதாவது நோய்க்கிருமி பாதித்த பகுதிகளில் இருந்து வந்திறங்கிய நபர்களின் மூலம் இந்த நோய்க்கிருமி மெதுவாக பரவ ஆரம்பித்ததுள்ளது.

வரைமுறையின்றி பரவும் கட்டம் 3 இன்னும் ஒரு மாதங்களில் வந்தடையும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

கட்டம் 2 இல் இருந்து கட்டம் 3 க்கு செல்லாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் ??

1.நெடுந்தூர பயணங்களை தவிர்க்க வேண்டும்.

2.பொது இடங்களில் கூடுவதையும், மக்கள் கூட்டாக சேரும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

3. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவற்றை முடிந்த அளவு தற்போதைக்கு மூடுவது சிறப்பு.

இதற்கு கண்டிப்பாக மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

கட்டம் 2-ல் இருந்து கட்டம் 3 செல்ல ஒரு மாத காலம் ஆகும் என்று யூகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மேற்கூறியவற்றை பின்பற்றினால் கட்டம் 2-லேயே கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும். கட்டம் 3 கண்டிப்பாக கட்டம் 4-ல் கொண்டு சென்று நிறுத்தும்.

ஆகவே மக்கள் சிறிது யோசித்து பொறுப்புடன் செயல்பட வேண்டுகிறேன்.


#BETTER_HEALTH_FOR_BETTER_LIFEBest regards,