வைரஸ் நோய்த் தொற்று எனும் ஒத்திகை: பில்கேட்ஸ் நிறுவனத்தின் கொரோனா நாடகம்!
தமிழ்க்கனி,
முனைவர் பட்ட ஆய்வாளர்
பொதுமக்கள் ஆளுகைத் துறை
இக்கட்டுரையை எழுதியுள்ள தமிழ்க்கனி, செம்மைச் சமூகத்தவர். ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். ம.செந்தமிழன் இயற்றிய வேட்டல் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். செம்மை தமிழ்க் கழகப் பணிகளிலும் துணை நிற்பவர்.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பேரழிவு குறித்து ஆறு மாதங்களுக்கு முன்பே ஒத்திகை நிகழ்வு நடத்திய ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு மையம் மற்றும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு - ஒரு விமர்சன பகுப்பாய்வு கட்டுரை
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்த போகிறதோ என்று பதற்றத்துடன் அனைவரும் இயங்கி கொண்டிருக்கும் இவ்வேளையில், இப்படி ஒரு தொற்று கிருமி பாதிப்பும் பேரழிவும் நடந்து விட்டதை போன்ற ஒரு ஒத்திகை நிகழ்வு ஆறு மாதங்களுக்கு முன்னரே (2019 ஆம் வருடம், அக்டோபர் மாதம்) நடந்தேறியுள்ளது என்பது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தருகிறதல்லவா.
சீனாவில், வுஹான் மாவட்டத்தில், இப்படி ஒரு அபாயகரமான வைரஸ் தொற்று பரவி வருகிறது என்று ஜனவரி மாதம்தான் உலக மக்களுக்கு தெரியும். சீனாவுக்கே அப்போதுதான் தெரியும். ஆனால், அதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நோய்த்தொற்று மையம் மற்றும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு இணைந்து தத்ரூபமாக ஒரு ஒத்திகை நிகழ்வை (simulation) நடத்தி இருக்கிறார்கள். இதில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், தொழில் நிறுவன முதலாளிகள், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டு உண்மையான அவசர கால கலந்துரையாடல் கூட்டம் போலவே நிகழ்த்தி உள்ளார்கள்.
இந்த நோய் தென் அமெரிக்காவில் பன்றிகளிடையே காணப்பட்டு, பண்ணை விவசாயிகள் மூலமாக பரவுவதாக ஒரு புனைவு கதையையும் பின்னியிருக்கிறார்கள். ஒத்திகையின் முடிவாக, இந்த பேரழிவின் தாக்கங்கள் குறித்த சில கணக்கீடுகளைப் பதிவு செய்துள்ளார்கள்.
’எத்தனை மக்கள் இறக்க நேரிடும்’ என்ற ஒரு புனைவுக் கணக்கையும் தெரிவித்து உள்ளார்கள். பொருளாதாரம் எந்த அளவு சரியும், மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு (ஜிடிபி), சர்வதேசச் சுற்றுலா மற்றும் போக்குவரத்து மாற்றங்கள், தடைகள், இணைய சேவை, ஊடகங்கள் பங்கு, தொழில் நிறுவன அதிபர்களின் பங்களிப்பு, அரசாங்க மற்றும் உலக தலைவர்களின் பங்களிப்பு, கிருமி நாசினி தயாரிப்பு நிறுவன பங்களிப்புகள், சங்கிலி விநியோக நிறுவனங்கள் உதவிகள் என்று மிகவும் விரிவாகச் செல்கிறது கலந்துரையாடல்.
தற்போது, அந்த ஒத்திகை நிகழ்வு உண்மையாகி விட்டது. இந்த ஒத்திகை நிகழ்வை நடத்திய நிறுவனத்திடம், சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
‘நீங்கள் நடத்திய ஒத்திகையில் கூறப்பட்டுள்ள கணக்குகள் உங்களின் கணிப்பா? 65 மில்லியன் மக்கள் இறப்பதாக கூறப்பட்டுள்ளது, இதை எவ்வாறு எடுத்து கொள்வது? எவ்வாறு அதே கொரோனா வைரஸ் என்ற பெயர் கொண்ட ஒரு புனைவு கதையை உருவாக்கி இருக்கிறீர்கள்?’ போன்ற கேள்விகளுக்கு, 2020 ஜனவரி 24 ஆம் தேதி அன்று ஒரு அறிக்கையை அந்நிறுவனம் (ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு மையம்) வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
’2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு மையம் மற்றும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்புடன் கைகோர்த்து, தொற்று கிருமி பேரழிவு குறித்த ஒரு மேசை பயிற்சியை ஈவென்ட் 201 என்ற பெயரில் நிகழ்த்தினோம். இப்போது சீனாவில் வெளிப்பட்ட கொரோனா தொற்று கிருமி குறித்துதான் முன்னரே கணித்தீர்களா? இதில் கூறப்பட்டுள்ள 65 மில்லியன் மக்கள் இறப்பு என்பது கணிக்கப்பட்ட உண்மையா? என்பது போன்ற கேள்விகளை எங்கள் நிறுவனத்தை பலர் தொடர்பு கொண்டு கேட்கிறார்கள். நாங்கள் மிகவும் தெளிவாக கூறி இருக்கிறோம், இது வெறும் புனைவு மட்டுமே, இதில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கைகள் அனைத்தும் புனைவுகள். மேசை ஒத்திகை பயிற்சியாக இதனை செய்தோம். நிகழ்வு தத்ரூபமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பிரேசிலில் பன்றிகள் இடம் இருந்து மனிதருக்குப் பரவியதாகவும் இந்தப் பேரழிவில் 65 மில்லியன் மக்கள் இறப்பார்கள் எனவும் கற்பனையாகப் புனைந்தோம். அது எங்கள் கணிப்பு அல்ல என்பதை தெளிவு படுத்துகிறோம்.
நாங்கள் கூறியுள்ள நாவல் கொரோனா வைரஸ் தொற்றுக்கும் தற்போதுள்ள nCoV - 2019 என்ற வைரஸுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.
இப்படி ஒரு நோய்த்தொற்று பரவினால் என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகள் தேவைப்படலாம் என்பதற்கான மாதிரி நிகழ்வுதான் இது. இது போன்ற பல ஒத்திகை நிகழ்வுகளை வெவ்வேறு காரணங்களுக்காக முன்பு நிகழ்த்தியுள்ளோம்’
என அந்நிறுவனம் அறிக்கை கொடுத்துள்ளது.
அறிக்கையெல்லாம் சரிதான், ஆனால் ’அந்த அறிக்கையில் உள்ள பதில்கள் நம்மை திருப்திப்படுத்துகின்றனவா’ என்று யோசித்தால், ’இல்லை’ என்ற பதிலே தொக்கி நிற்கிறது.
அந்த ஒத்திகை நிகழ்வின் சில துளிகள் இங்கு அப்படியே மொழி பெயர்க்கப்பட்டு தரப்பட்டுள்ளன. இந்த ஒத்திகை நடந்தது அக்டோபர் 2019 என்பதை நினைவில் கொள்ளவும்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு மையம் மற்றும் பில் அண்ட் மெலிந்த கேட்ஸ் அறக்கட்டளை இணைந்து, 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஒரு தத்ரூபமான ஒத்திகையை அரங்கேற்றியது. அதன் பெயர் ஈவென்ட் 201, தொற்று நோய்க்கிருமி குறித்த பயிற்சி ஒத்திகை.
முதன் முதலில், தென் அமெரிக்காவில் சில மாதங்கள் அல்லது சில வருடங்களுக்கு முன்பு என்றே கூறலாம், ஒரு புது வகை கொரோனா வைரஸ் நல்ல ஆரோக்கியமான பன்றிகளில் அறியப்படுகிறது.
மெதுவாக பன்றி மந்தைகளில் பரவி அதன் காரணமாக முதலில் பண்ணை விவசாயிகள் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு சளித்தொல்லை துவங்கி நுரையீரல் தொடர்பான தொந்தரவுகள், காய்ச்சல் நிமோனியா போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.
சிலர் அவசர சிகிச்சை பிரிவுகளில் சேர்க்கப்படுகின்றனர் பலர் இறக்கின்றனர். அறிஞர்கள் பார்வையில், இது உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லையெனில் இந்த நோய்த்தொற்று உலக நாடுகள் எங்கும் பரவி மக்களை பாதிக்கும்.
இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நோய்த்தொற்று மற்றும் அவசர கால குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் கேட்கப்படுகின்றன.
இந்த நோய்த்தொற்று நிகழ்வு 201 இன் முடிவாக அறிவிக்கப்பட்டது,
’‘இது ஒரு பேரழிவு. கடந்த 18 மாதங்களில் 65 மில்லியன் மக்கள் உயிரிழந்து விட்டனர். ஆரம்ப கட்டத்தில், கட்டுப்படுத்த கூடிய வகையில் அறியப்பட்டாலும், கூட்ட நெரிசல் மிக்க நகர மற்றும் பெருநகரங்களில் இது வெகு வேகமாக பரவி விட்டது. ஒவ்வொரு ஆறு மாத காலத்திலும், ஒரு புதிய நாட்டுக்கு வீரியமாக பரவுகிறது.
உலக பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது. ஜிடிபி 11 சதவீதம் குறைந்து விட்டது. உலக பங்கு சந்தை 20 முதல் 40 சதவீத சரிவு நிலையை எட்டி இருக்கிறது. பொருளாதார நிபுணர்களின் பார்வையில் இந்த நோய்த்தொற்றின் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு சரிக்கட்ட பல ஆண்டுகள் ஆகும், பத்தாண்டுகள் கூட ஆகலாம்.
மறைவான பாதிப்புகளாக அரசாங்கத்தின் மீது அதிருப்தி, தகவல்கள் மீது நம்பிக்கையின்மை, சமூக கட்டமைப்பு சீர்குலைவு ஆகியன சரியாக இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படலாம். இந்த உலக மக்கள் கூட்டம், அடுத்த இத்தகைய தொற்று பேரழிவிற்கு சேர்ந்து போராட தயாராகி விட்டோமா? என்ற கேள்வியுடன் இந்த ஒத்திகை நிகழ்வு முடிகிறது.
பில்கேட்ஸ், தடுப்பூசிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் நபர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்குத் தடுப்பூசிகளுக்கான நிதி உதவி செய்து செல்வாக்கு பெற்றுள்ளவர். இவரது நிறுவனத்திற்கும் மருந்து நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு உலகறிந்தது.
கொரோனா எனும் வைரஸின் தாக்கம் உலகப் பொருளாதாரத்தை எவ்வாறு சிதைக்கும் என்பதைப் பற்றிய இவரது ‘ஒத்திகை நிகழ்வு’ இன்றைக்கு உண்மையாகிக்கொண்டுள்ளது. இந்நிலையிலும் உலகநாடுகள் இவரைக் கேள்விக்குள்ளாக்கவில்லை.
அந்த ஒத்திகை நிகழ்வின் வீடியோ பதிவு இந்த இணையதள முகவரியில் காணலாம். https://youtu.be/AoLw-Q8X174
அந்நிறுவனத்தின் மறுப்பு அல்லது பொறுப்பு துறப்பு அறிக்கை
http://www.centerforhealthsecurity.org/newsroom/center-news/2020-01-24-Statement-of-Clarification-Event201.html
அந்நிறுவனத்தின் மறுப்பு அல்லது பொறுப்பு துறப்பு அறிக்கை குறித்த இன்னும் விரிவான விளக்கங்களை கீழே உள்ள இணையதள முகவரியில் அறியலாம்.
https://www.factcheck.org/2020/01/new-coronavirus-wasnt-predicted-in-simulation/Best regards,

Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com