Wednesday, 31 August 2011

காதல் கவிதைகள்

காதல் என்பது குழந்தை போல,                              அது 
அழுதாலும் அழகாய் இருக்கும்,
சிரித்தாலும் அழகாய் இருக்கும்..
..*FALL IN LOVE*.

என் அம்மா


மறு பிறவி இருந்தால்
செருப்பாக பிறக்க
வேண்டும்...
 


என் அம்மா
காலில் மிதி பட அல்ல...
என்னை சுமந்த அவளை
ஒரு முறை நான்
சுமப்பதற்காக...!
.:

"ஒருமுறை காதல்"


ரெயிலிலும் உன் நினைவுகள்....

நகர்ந்து கொண்டே
இருக்கிற நிமிடங்களை போல தான்...
நானும் இந்த ரெயிலும்...

மறக்க நினைக்கையில்
மறுபடி வருகிற
உன் நினைவுகளின் தடயங்களாய்
பயணம் முழுவதும் தொடர்கிறது....

திருடனுக்கு பயந்து
பையை பாதுகாப்பாய் வைக்கையில்
நீ என்னை சிறைப் படுத்தியதும்...
யன்னலோரம் வருகிற
மென்மையான வெய்யில் தொடுகையில்
உன் உரசலும்....
வெளியே தெரிகிற இயற்கையை
ரசிக்கையில்
உன் விரசமும் தொடர்கிறது.....

சிகரட்டை பற்றவைத்து
கதவோரம் நிற்கிறேன்...
பெரியவன் வந்து
திட்டும் போது அனுமதி
தந்தவனும் அடையாளம் தெரியாதவன்
ஆகி விடுகிறான்...
உன்னைப் போல...

ரயிலின் இரைச்சல் காதைக் குடைந்தாலும்
மனம் கண்டு கொள்வதாக தெரியவில்லை...

நீண்ட நாட்களின் பின்
என் ஊர் நோக்கிய பயணம்...
உறவுகளையும் கண்டு
கொள்ளக் கூடாதென்றும்...
உன் நினைவுகளையும் மறந்து விட
வேண்டும் என்றும் தான் நினைக்கிறேன்....

ரெயின் ஒவ்வொரு தரிப்புக்களில்
நிற்கிற போதும் ஏறி வருகிற
பெண்களெல்லாம் உன் சாயலில்...
இருப்பதாய் தோன்றுகிறது...

நீண்ட தூரம்
நீண்ட நேரம்....
தூக்கம் எப்போதோ
தொலைந்து போனது தான்

இந்தப் பயணம் கூட என்னை
பக்குவப் படுத்தியதாய் தெரியவில்லை...
உன் நினைவுகளிலிருந்து.....

நீ எனக்கு எழுதிய
கடிதங்கள் சட்டென்று
ஞாபகத்தில் விரிகிறது....
'
எங்கு போனாலும் உன்னுடன் வருவேன்..
என்ற வரிகள் மட்டும்
மறுபடி மறுபடி வந்து
தொலைக்கிறது...
பழமொழிகளை நான் இதுவரை
நம்பியதில்லை..
பழமைகளையும் நம்ப வைக்கிறது...
உன் நினைவுகள்...
உப்புக்கு சப்பாணி போல

தண்டவாளங்கள்...
நீயும் நானும் என்று
தோன்றினாலும்....
இந்த ரெயிலின் இடம்
வெற்றிடமாகவே விரிகிறது...

டிக்கட் செக்கர் தட்டும் போது
விழித்தேன்...
எனக்கான உன்னை பறித்துப் போன
அந்த பணக்காரனின்
ஞாபகமாய் அவன் இருந்தான்...

நான் அறிமுகமில்லாதவர்களுடன் தான்
பயணப்பட ஆசைப்படுகிறேன்...
உன் அறிமுகமொன்றே...
வேதனைக்கு போதுமானதாக இருக்கிறது...

தண்டவாளங்களுக்கு அருகில்
வீடு இருந்தும்....
ரெயிலில் பயணிக்க கிடைக்காத
வருத்தத்துடன் ஒவ்வொரு ரெயின்
வீட்டை கடக்கிற பொழுதும்...
வாசலில் நின்று ஏக்கத்துடன்
கையசைக்கிற குழந்தைக்கும் ரெயினுக்கும்
இடையே உள்ள இடைவெளிகள் தான்....
உனக்கும் எனக்கும்...

அரசு கேபிள் டிவி


  அரசு கேபிள் டிவி வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று இன்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. முதலில் இலவச சேனல்கள் அளிக்கப்படும். பின்னர் படிப்படியாக கட்டண சேனல்கள் கொண்டுவரப்படும். அவை முறைப்படுத்தப்பட்டு, வழங்கப்படும். முதலில் கேபிள் கட்டணமாக மாதம் ரூ.70 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது...

ஆசை


வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது ??
ஆசை மற்றும் நம்பிக்கையில் மட்டுமே ..
ுன்பத்துக்கெல்லாம் அதுவே காரணம் ஆகிறது ..
வேண்டும் என்ற மனம் விரிவடைந்து கொண்டே போகிறது ..
......போதும் என்ற மனம் சாகும் வரை வருவதில்லை ..
ஒரு விஷயம் கிடைத்துவிட்டால் நூறு விஷயத்தை மனம் தேடி அழைகிறது !!
- கண்ணதாசன்

அன்பே!




அன்பே! எங்கு செல்கிறோம் என்பது அறியாமலே .. அழைத்தவுடன் ஆவலாய் என்னோடு தொடர்பவளே . . . காதல் எனும் ரோஜாக் கூட்டம் நமக்கு துனை வரும் என ஆனந்தம் கொண்டாயோ . . . கூப்பிட்ட குரல் கேடு கேள்வி கேட்காமல் வந்தவளே . . . நாம் போகும் பாதை கல் முள் இருந்தும் கவலையில்லாமல் என்னோடு இருகரம் பிடித்து நடப்பவளே . . . நீ நிஜம் நீ என்னை தொடர்வதால் தான் என்னவோ என்னை எனக்கு பிடிக்கிறது என்னை எனக்கு உணர்த்தியவளே என்னருமை காதலியே . . . உன் பாதம் இனி புல் தரையில் கூட பட வேண்டாம் மெதுவாய் என்னில் உறைந்து விடு என்னோடு சேர்ந்து விடு - கை வீசி நடப்போம் நிலவை தொடும் வரை - நான் உன்னோடு கடைசி வரை காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .

editor



கதை கட்டுரை எழுதுகிறார்கள், கவிதை எழுதுகிறார்கள், நாவலும் எழுதுகிறார்கள், குறும்படமும் தயாரிக்கிறார்கள்... சதா நெட்டில்..பேஸ்புக்கில் இருக்கிறார்கள், டுவிட்டர், கூகுள்+/ பஸ் (நானும் அங்கு உள்ளேன், வேறு ஒரு பெயரில்), லும் இருக்கிறார்கள், பொது நிகழ்வு, மேடை பேச்சு, சோசியல் சேர்விஸ்(தர்க்கம் செய்வது) என இப்படியே, பார்க்கும் போதெல்லாம் எழுத்து எழுத்து எழுத்து...! அப்படியென்றால் அவர்களின் வேலை எதுவாக இருக்கும்.?