Monday 29 August 2011

முள்முடி மலர்கள்....

உறங்கவில்லை என்றாலும்
வலியின் வரங்களோ எல்லை...

மாற்றம் தேடியே
சதியின் விதியோடு போராட்டம்
முடிவு மலரும் முன்னே
முள்முடிகள் சூட்டப்படுகிறது
வலுக்கட்டாயமாக

தெய்வம் சோதிக்காமல்
ஏதும் தருவதில்லையே...!
வாதிக்கவும் விடுவதில்லையே...!!
வலியில்லாத
வரங்களுமில்லையே...!!!
என்ன செய்ய
வலி வலியதுதான்
வரங்களுக்காகவே...!!!!

மனம் மணம் வீசத்தான் தவிக்குது....
மரபே இல்லாத மனம்
பிண மாலை சூட்டிவிட
முடியாமல் ரணமாலை
தாங்கி முள்முடி
சூட்டிவிட்டே ரசிக்கிறாள்..................

முயற்சிகள் தளர்ச்சிகளாக
அயற்சி அடி போடுகிறது
முள்முடிகளின் வலி தாளாமல் ................

முள்முடி துறந்து
மலர் முடி வருட
களர் நிலம் கடக்க வேண்டும்...
அது சதி களம்
அபிமன்யுவின் சக்கர வியூகம்...............

மதி வளமோ
விதி நலமோ
துணை வரவில்லை.....

விழி நதிக் கரையின்
நாணல்களும்
உதிரக் கறையில்
உறைந்து போனது...

இது குருட்டுக் கண்களுடன்
இருட்டு நாடும்
பேய் வரம்
மருட்டுதல்கள் ஆயிரம்
விரட்டிக் கொண்டே இருக்கிறேன்
விடியலைத்தேடி
என்ன...
இரவின் நீளம் தான்
தெரியவில்லை...

முள் முடிகளின்
உதிரக் கறைகளை
தெளிக்க வரவில்லை
துடைக்கவே வந்தேன்
துயர் தடைபடுவதால்