அஜீத் 50 ! அஜீத் நடிப்பில் 'மங்காத்தா' திரைப்படம் உலகம் எங்கும் (ஆகஸ்ட் 31) வெளிவர இருக்கிறது. இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்க, தயாநிதி அழகிரி தயாரித்து இருக்கிறார். சன் பிக்சர்ஸ் இப்படத்தினை வெளியிட இருக்கிறது. அஜீத்தின் 50வது படம் வெளிவர இருக்கும் நிலையில் அஜீத் நடிப்பில் வெளிவந்த படங்களில் மக்களிடம் வரவேற்பை பெற்ற படங்கள் சில அமராவதி : அஜீத் நடிப்பில் வெளிவந்த முதல் தமிழ் படம். சங்கவி நாயகியாக நடிக்க இயக்குனர் செல்வா இயக்கி இருந்தார். இப்படத்தின் பாடல்களும், படமும் மக்களிடம் வரவேற்பை பெற்றது. ஆசை : அஜீத்திற்கு மாபெரும் திருப்புமுனையாக அமைந்த படம். இயக்குனர் வஸந்த் இயக்கி இருந்தார். சூர்யா அறிமுகமாகியிருக்க வேண்டிய படம், அஜீத் நடிப்பில் வெளிவந்தது. இப்படத்திற்குப் பிறகு பல படங்களில் 'ஆசை நாயகன் அஜீத் நடிக்கும்' என விளம்பரபடுத்தினார்கள். காதல் கோட்டை : தமிழ் சினிமாவில் வெளிவந்த வித்யாசமான காதல் கதை. இப்படம் மூலம் இயக்குனர் அகத்தியன் தேசிய விருது வென்றார். காதல் மன்னன் : அஜீத்திற்கு ரசிகர்களின் எண்ணிக்கையை உயர்த்திய படம். சரண் இயக்குனராக அறிமுகமானதும், இசையமைப்பாளர் விஸ்வநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த முதல் படமும் இது தான். வாலி : எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமான முதல் படம். அஜீத் நாயகன், வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம் இது. படம் வெளிவந்து வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், அஜீத்தின் நடிப்புக்கு தீனி போட்ட படம் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அமர்க்களம் : காதல் மன்னன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சரண் - அஜீத் இணைந்த படம். ஆக்ஷன் ஹீரோவாக அஜீத்தை மாற்றியது. இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் தான் அஜீத் - ஷாலினி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். முகவரி : தமிழ் சினிமாவில் முக்கிய நாயகனாக வலம் வந்த வேளையில் புதுமுக இயக்குனர் துரைக்கு வாய்ப்பு அளித்து நடித்த படம். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தராமல், உணர்வுகளுக்கு மதிப்பளித்த படம். கதைக்கு முக்கியத்துவமுள்ள படத்தில் நடித்தது அஜீத்திற்கு ரசிகர் கூட்டத்தை மேலும் பெருக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தீனா : அஜீத்திற்கு 'தல' என்ற பட்டத்தை பெற்று தந்த படம். ஏ.ஆர்.முருகதாஸை இயக்குனராக அறிமுகப்படுத்தினார் அஜீத். படம் வரவேற்பை பெற்று, தமிழ் சினிமாவில் முக்கிய நாயகர்களில் ஒருவரானார் அஜீத். சிட்டிசன் : முதன் முறையாக பல்வேறு கெட்டப்களில் நடித்த படம். மிகவும் சிரமப்பட்டு நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, பெரும் பொருட் செலவில் உருவான படம். வில்லன் : முதன் முறையாக கே.எஸ்.ரவிக்குமார் - அஜீத் இணைந்த படம். இரண்டு வேடங்களில் அஜீத் நடித்து வெற்றி அடைந்த மற்றொரு படம் இது. வரலாறு : வில்லன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் மீண்டும் கே.எஸ்.ரவிக்குமார் - அஜீத் இணைந்த படம். அஜீத் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடித்த படம். இந்த படமும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. பில்லா : ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக். இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் அஜீத்தின் முந்தைய பட சாதனைகள் அனைத்தையும் முறியடித்தது. சர்வதேச தரத்தில் ஸ்டைலிஷ் ஆக எடுக்கப்பட்ட அஜீத் படம் என்று 'தல' ரசிகர்களால் ஏற்கப்பட்ட படம். பல படங்களில் நடித்து வரவேற்பை பெற்று இருந்தாலும் சில படங்களில் கெளரவ வேடத்திலும் நடித்து இருக்கிறார் அஜீத். விக்ரமன் இயக்கத்தில் 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்', ராஜ்குமார் இயக்கத்தில் 'நீ வருவாய் என' ஆகிய படங்களில் கெளரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். ஷாருக்கான் நடித்த 'அசோகா' என்ற இந்தி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். முதன் முறையாக 'அசல்' படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். இவ்வாறு பல்வேறு பரிமாணங்கள் எடுத்து இருக்கும் அஜீத் நடிப்பில் 50 வது படமாக மங்காத்தா நாளை வெளிவர இருக்கிறது.
Wednesday, 31 August 2011
அஜீத் 50 !