கடும் பசியுடன் இருந்த சிறுவன் ஒருவன் ஒரு வீட்டை தட்டினான். இளம் பெண் ஒருத்தி கதவைத் திறந்தாள். "குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள்" என்று கேட்டான். ஆனால் அவன் பசியுடன் இருப்பதை உணர்ந்து கொண்ட அந்த பெண் ஒரு கோப்பையில் சூடான பால் கொண்டு வந்து கொடுத்தாள். நன்றியுடன் பெற்றுக்கொண்ட அந்த சிறுவன் கட கட வென குடித்து முடித்தான். பிறகு, " இதற்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும்" என்று கேட்டான்.
"ஒன்றும் வேண்டாம், அன்புடன் கொடுக்கும் எந்த பொருளுக்கும் பணம் பெறக்கூடாது என்பது என் தாயின் அறிவுரை" என்றால் அந்த பெண். அவன் நன்றியுடன் விடை பெற்றான்.
காலம் பறந்தது. அந்த பெண் திடீரென்று நோய்வாய் பெற்றாள். அந்த ஊர் மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் அவளது நோய் குணமடையவில்லை. நகரத்தில் உள்ள புகழ் பெற்ற மருத்துவரான ஹோவார்ட் கெல்லி என்பவரை ஆலோசனைக்காக அழைத்தனர்.
அந்த பெண்ணின் ஊர்ப் பெயரை கேட்டதும், அவளது அறைக்கு விரைந்தார் டாக்டர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவளைக் கண்டதும் அவர் கண்கள் வியப்பில் விரிந்தன. உடனடியாக, அந்த பெண்ணின் சிகிச்சையை தாமே முன்னின்று கவனிக்க தொடங்கினார். தனது அனுபவத்தால், கடும் போராட்டத்திற்குப் பிறகு, அவளை படிப்படியாக குனபடித்தினார் அவர்.
அன்று மருத்துவமனையில் இருந்து அவள் வெளிவரும் நாள். தான் குணமடைந்தது குறித்து மகிழ்ந்தாலும், மருத்துவ சிலவு எவ்வளவு ஆகியிருக்குமோ என்ற கவலை அவளுக்கு!
மருத்துவமனை நிர்வாகத்தினிடம் சென்று நான் எவ்வளவு செலுத்த வேண்டும் என்று கேட்டாள். எதுவுமில்லை என்று கூறி ஒரு கவரை அவளிடம் கொடுத்தார் அந்த ஊழியர். அவளுக்கு ஆச்சரியம். ஆர்வத்துடன் அந்தக் கவரை பிரித்தாள்.
உள்ளே ஒரு காகிதத்தில்..............
அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அதற்கான செலவுகள் ஆகியன பட்டியிலடபட்டிருந்தன. அவை எல்லாவற்றுக்கும் கீழே சிவப்பு மையினால், கொட்டை எழுத்தில் இவ்வாறு எழுதபட்டிருந்தது.
"மருத்துவ செலவுகள் அனைத்தும், சூடான ஒரு கோப்பை பாலின் மூலம், முழுவதுமாக செலுத்தப்பட்டு விட்டன! இப்படிக்கு, டாக்டர் ஹோவார்ட் கெல்லி"
திகைத்து போனால் அவள்.
அந்த ஏழை சிறுவனிடம் தான் காட்டிய கருணையும், அவனுக்கு அளித்த பாலும், இன்று ஓர் அறிய சிகிச்சையாக மாறி, தன்னை காப்பாற்றியதி நினைத்து அவளுக்கு பேச்சே எழவில்லை.
அவள், இறைவனின் பெரும் கருணையை மனித வடிவில் கண்டாள்.
வீட்டிலும், வெளியிலும், அலுவலகத்திலும்,...... பிறர் மீது குற்றம் காண்பதை நிறுத்துங்கள். பிறரை தாழ்ந்தவராக எண்ணுவதை கைவிடுங்கள்.சக மனிதர்களை விட பொன்னையும் பொருளையுமே பெரிதாக கருதி, எவரையும் சொல்லாலோ
செயலாலோ புண்படுத்தீர்கள். தவறுகளை மன்னித்து, மறந்து விடுங்கள். இவை போன்ற எளிய செயல்களால் , உங்களது வாழ்க்கை அன்பு மயமாகும்.
அப்போது இறைவனையே எட்ட முடியும்
வாழ்க வளமுடன்
RAJESH