ஆராக்ஷ்ன் படத்திற்கு நாடுமுழுவதும் எதிர்ப்லைகள் கிளம்பியுள்ள போதும், பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட போதும், கடந்தவாரம் ரிலீசான இப்படம், நான்கு நாளில் ரூ.26 கோடி வசூல் செய்து சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. பிரகாஷ் ஜா தயாரிப்பு, இயக்கத்தில் சைப் அலிகான், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் ஆராக்ஷ்ன். இப்படம் வெளியாவதற்கு முன்பே, நாடுமுழுவதும் பயங்கர எதிர்ப்பு அலைகள் கிளம்பின. இடஒதுக்கீடு பிரச்சனை தொடர்பாக சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இடம்பெற்று இருப்பதாகவும், இதனால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் பிரச்சனை உருவானது. குறிப்பாக உ.பி., பீகார், ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களில் இப்படத்தை திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் இப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது. பின்னர் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின்னர் படத்தை திரையிட அனுமதி அளிக்கப்பட்டது.
ரூ.42 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஆராக்ஷ்ன் படத்திற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் படம் வசூல் ஆகுமோ, ஆகாதோ என்ற கவலையில் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பிரகாஷ்ஜா இருந்து வந்தார். ஆனால் படம் வெளிவந்த நான்கு நாட்களிலேயே ரூ.26 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இது இன்னும் சில நாட்களில் இரட்டிப்பாகும் என்றும் பெரும் வசூலை அள்ளும் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
thank you
தினமலர்