Tuesday 2 October 2018

விமானம் அதிக உயரத்தில் பறப்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் இது தான்..!

அறிவியல்-அறிவோம்

விமானம் அதிக உயரத்தில் பறப்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் இது தான்..!
 
விமானம் என்றாலே பலருக்கு அது பல ரகசியம் அடங்கிய வாகனம் தான். விமானம் குறித்த பல அடிப்படை தகவல்கள்கூட மக்களுக்கு தெரியவில்லை. ஏன் என்றால் விமானம் என்பது மக்களால் எளிதாக அனுக முடியாத நிலையில் இருப்பது தான் இந்த நிலைக்கு காரணம்.

இவ்வறான மக்களுக்கு தெரியாத விமானம் குறித்த அடிப்படை தகவலை தான் நாம் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். விமானம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது தெரியுமா? பலருக்க எவ்வளவு என்பது சரியாக தெரிந்திருக்காது விமானங்கள் குறைந்தது 35 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் தான் பறக்கிறது.

ஏன் இவ்வளவு உயரம்?

விமானங்கள் உயரமாக பறக்கும் என்பது தெரியும், ஏன் குறிப்பாக 35 ஆயிரம் அடிகளுக்கு மேல் பறக்கிறது. எப்படி அந்த உயரத்தில் என்ன இருக்கிறது என்பது உங்கள் கேள்வியாக இருக்ககூடும்.

விமானங்கள் அடிவெளிப்பகுதி என குறிப்பிடக்கூடி ட்ரோப்போஸ்பியர் என்ற பகுதியில் தான் பறக்கிறது. இந்த பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 23 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 65 ஆயிரம் அடி உயரம் வரை இருக்கும். அந்த பகுதியை தான் விமானிகள் ஸ்விட் ஸ்பாட் என கூறுகிறார்கள்.

இந்த பகுதியில் தான் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும். இதனால் விமானம் குறைந்த சக்தியிலேயே அதிக தூரம் பயணிக்க முடியும். எரிபொருள் செலவு பல மடங்கு இதனால் குறையும். எதிர்காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதால் தான். இந்த வேகத்தில் செல்லமுடிவதாக விமானிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்விட் ஸ்பாட் என்பது விமானத்திற்கு விமானம் மாறுபடும். ஒவ்வொரு விமானத்தின் எடையை பொருத்தும் விமானம் எவ்வளவு உயரத்தில் பறந்தால் சிறப்பான செயல்பாடு அமையும் என்பது கணக்கிடப்படுகிறது. குறிப்பாக அதிக எடை உள்ள விமானங்கள் உயரம் குறைவாகவும், எடை குறைந்த விமானங்கள் அதிக உயரத்திலும் பறக்க முடிவு செய்யப்படுகிறதாம்.

வானிலை

நாம் பொதுவாக மலைப்பிரதேசங்களுக்கு சென்றலே வானிலையில் பெரும் மாற்றத்தை உணர முடிகிறது. விமானம் அதை விதை உயரமாக பறக்கிறது சொல்லவா வேண்டும் அதிகமான குளிர் வானிலை தான் அங்கு நிலவும், சாதரணமாக பூமியில் 20 டிகிரி வெப்பம் உணரப்படும் போது 40 ஆயிரம் அடி உயரத்தில் -57 டிகிரியும், 35 ஆயிரம் அடி உயரத்தில் -54 டிகிரியும் உணரப்படுமாம்.

ஆனால் அந்த பகுதியில் காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதால் வானிலையில் அவ்வளவு எளிதாக மாற்றம் வந்து விடாது. அதனால் தான் விமானிகள் துணிந்து பயணங்களை மேற்கொள்கின்றனர். அடிக்கடி வானிலை மாற்றம் ஏற்பட்டால் விமானம் விபத்தில் சிக்க கூட வாய்ப்புள்ளதாம்.

அதிக உயரத்தில் பறக்கும் விமானங்கள் எல்லாம் பிரஷரைஸ்டு கேபினை கொண்டது. அதாவது கேபினில் உள்ள பிரஷர் மூலம் வெளியில் உள்ள குளிர் எதுவும் உள்ளே வராது. உள்ளே தனியாக வெப்பம் பராமரிக்கப்படும். ஆனால் சில விமானங்களில் இந்த வசதி இருக்காது. அந்த வகை விமானங்கள் 10 ஆயிரம் அடிக்கும் குறைவாக மட்டுமே பறக்க அனுமதியுள்ளது.

எம்ர்ஜென்ஸி

அதிக உயரத்தில் பறக்கும் விமானத்தில் ஏதேனும் இன்ஜின் கோளாறு போன்ற விபரீதங்கள் நடந்து விட்டால் 10 ஆயிரம் அடி உயர்த்தில் பறக்கும் விமானத்தைவிட 35 ஆயிரம் அடி உயரத்திற்கும் அதிகமாக பறக்கும் விமானி துரிதமாக செயல்பட சற்று நேரம் இருக்கும். இது விபத்தை தவிர்ப்பதற்கான சதவித்தை சற்று குறைக்கிறது என்றே கூறலாம்.

குறைந்த பட்ச உயரம்

விமான பறப்பதற்கான குறைந்த பட்ச உயரம் ஒவ்வொரு நாட்டு விமான ஆணையத்திற்கும் மாறுபடுகின்றன எனினும் இந்த ஆனணயங்களுக்கு பொதுவான விதி ஒன்று உள்ளது. உலகில் எந்த விமானமும் 1000 அடிக்கு குறைவாக பறக்க அனுமதியில்லை. மேலும் நீங்கள் பறக்கும் பகுதியில் உயரமான கட்டிடங்கள் இருந்தால். எந்த கட்டிடம் உயரமாக இருக்கிறதோ அதில் இருந்து 500 அடி உயரமாக விமானம் பறக்கம் வேண்டும் அது தான் குறைந்தபட்ச உயரமாக எடுத்து கொள்ள வேண்டும்.

இது மட்டும் இல்லாமல் விமானிகள் தாங்கள் பறக்கும் போது ஏதேனும் அசம்பாவங்கள் நிகழ்ந்து விமானம் செயல் பட முடியாமல் போனால் விமானம் பூமியில் மோதுவதற்கு முன்பாக அதை துரிதமாக செயல்பட ஆகும் நேரத்தை கொண்டு விமான உயராத்தை விமானி முடிவு செய்ய வேண்டும்.

மேலும் விமானத்தை தரையிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், லேண்டிங் கியருக்கு மாற்றி அடிபாகத்தில் உள்ள வீலை வெளியே எடுக்க ஆகும் நேரத்தை கணக்கிட்டு அதற்கான உயரத்தை விமானி சரியாக கணித்து அந்த உயரத்தில் பறக்கலாம்.

அதிகபட்ச உயரம்

விமானங்கள் சராசரியாக 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும் விமானத்தை முடிந்த அளவு அதிகமான உயரத்தில் பறக்க வைக்க தான் விமானிகள் முடிவு செய்வார்கள். அந்த வகையில் கடந்த 1997ம் ஆண்டு சோவியத் யூனியனின் எம்ஐஜி-25 எம் என்ற விமானத்தை ஓட்டிய விமானி அலெக்ஸண்டர் பெடோட்டோவ் என்பவர் அந்த விமானத்தை 1,23,520 அடி உயரம் வரை கொண்டு சென்றுள்ளார். இதுதான் இன்றவுளவும் உலக சாதனையாக உள்ளது.

Best regards,