Wednesday, 24 October 2018

சபரிமலைக்கு ஏன் பெண்கள் செல்லக்கூடாது !

சபரிமலைக்கு ஏன் பெண்கள் செல்லக்கூடாது !
--------------------------------------------------------

பந்தள தேச மன்னரின் வளர்ப்பு மகனே மணிகண்டன், இவன் தனது 12 வயதிலேயே வேத சார்ஸ்த்திரங்கள், புராணங்கள், வில், வாள் வித்தை, கம்பு, சிலம்பம், களரி போன்ற அனைத்து கலைகளையும் கற்றுத்தேர்ந்த மாவீரனாய் திகழ்ந்தான். இவன் வாள், வில் வித்தை மற்றும் களரியில் வல்லவன்.

தனது அவதார நோக்கமான மகிசமூகி என்னும் அரக்கியை வதம் செய்த பிறகு, தான் நைஸ்ட்டீக பிரம்மச்சாரியாக(உச்சகட்ட பிரம்மச்சரியம்) தவம் செய்ய சென்ற இடம் தான் சபரிமலை.

சபரிமலை மிகவும் சக்தி வாய்ந்த ஒரு திருத்தலம். இது ஒரு தாந்த்ரீக் கோவில். இங்கு பூஜை செய்பவரை தாந்த்ரீகள் என அழைப்பர். இவர்கள் அதிகம் முத்திரைகளை பயன்படுத்துவர். அதாவது அதிகம் அறிவியலை பின்பற்றும் ஒரு கோவில்.

மற்ற கோவில்கள் போல் இது வருடம் முழுக்க இயங்காது. கார்த்திகை மாதம் துவங்கி தை மாதம் வரை தான் நடை திறக்கப்படும். இந்த நாட்களிலும் அனைவரும் சாதாரணமாக சென்று விட முடியாது.

ஐயப்பனுக்கு மாலை போட்டு 48 நாட்கள் கடும் விரதம் இருந்து இரு முடி கட்டி தான் செல்ல வேண்டும். இதற்கு துளசி மணி மாலை, தாமரை மாலை மற்றும் ருத்ராட்ச மாலை பயன்படுத்துவர்.

48 நாள் இவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதமுறைகளை பார்ப்போம் !
-------------------------------------------------------------------

1 - தினம் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். மாலையும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளித்த பின் ஐயனின் வழிபாட்டை மேற்கொண்ட பின் உணவு உட்கொள்ள  வேண்டும்.

2 - மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும், எப்பொழுதும் ஐயனையே நினைத்து சரணங்களை சொல்லி வர வேண்டும். இழி சொற்களை உதிர்க்கக்கூடாது.

3 - பாய், தலையணை, மெத்தைகளை பயன்படுத்த கூடாது. தரையில் தூய்மையான ஒரு பருத்தி துணி விரித்து அதன் மேல் தான் உறங்க வேண்டும்.

4 - அசைவம் உண்ணக்கூடாது, மது புகை போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்த கூடாது, முடி வெட்டவோ, முகச்சவரம் செய்யவோ, நகம் வெட்டவோ, தன்னை அலங்காரம் செய்யவோ கூடாது.

5 - இது ஒரு மிக முக்கிய கட்டுப்பாடு, பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது இல்லறத்தில் ஈடுபடக்கூடாது. திருமணம் முடிக்காதோரும் சரி திருமணம் முடித்தோரும் சரி தனது சுக்கிலத்தை வெளிப்படுத்தக்கூடாது.

6 - வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் காலம் வந்தால் அவர்களை பார்க்காமல் இருக்க வேண்டும், அருகில் செல்லக்கூடாது. தொட்டுப் பேசக்கூடாது.

7 - பிறர் வீட்டில் உண்ணவோ உறங்கவோ கூடாது. கடைகளில் உண்ணக்கூடாது. அதிக காரம் மசாலா கலந்த உணவுகளை உண்ணக்கூடாது. உப்பு, புளி, காரம் மிதமாகவே பயன்படுத்த வேண்டும். பசித்தால் பழங்கள் காய்கனிகள் கொட்டை பருப்புகள் போன்ற இயற்கை உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும்.

8 - அசுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது.

9 - ஒரு வேலை மணி மாலைகள் அறுந்தால் அதை சரி செய்து மீண்டும் அணியலாம். அதில் எந்த தவறும் இல்லை.

10 - காலணிகளை அணியக்கூடாது.

ஐயப்பனுக்கு மாலை போட்டு 48 நாட்கள் கடும் விரதம் இருந்து கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளே இவைகள்.

நான்கு வருடம் பல்லாயிரம் பேருக்கு வைத்தியம் பார்த்த வைத்தியன் என்ற முறையில் இதன் நன்மைகளை நான் உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

48 நாள் கடும் விரதத்தின் நன்மைகள் !
--------------------------------------------------------------------

1 - ஆண்களுக்கு வரும் Azoospermia (விந்தணு பூஜ்ஜியம் ஆகும் இருக்கும் நிலை), விந்தணு நீர்த்துப்போதல் போன்ற மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு அதிக உடற்சூடு ஒரு முக்கிய காரணம். இப்பொழுது பலர் இதற்கு இலட்ச இலட்சமாய் செலவழித்து வைத்தியம் பார்ப்பதை நீங்களே அறிவீர்கள். உடல் சூட்டைக்கூட விந்தணுவால் தாங்க முடியாது என்பதனாலே தான் இறைவன் சற்று உடலை விட்டு தள்ளி விதைப்பையை படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்களா ! பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்கும் போது உடலில் தேங்கிய உள்ள அதிகப்படியான உஷ்ணம் குறைகிறது. அதுமட்டும் அல்லாமல் பிரபஞ்ச சக்தி அந்நேரத்தில் அவனுக்கு அபரிதமாக கிடைக்கிறது. அவன் உடல் எலும்புகள் வரை ஊடுருவி இருந்த அதிகப்படியான வெப்பம் இந்த குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது படிப்படியாக குறைந்து விந்தணு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வெளி வர பேருதவி புரிகிறது.

2 - மனதை அமைதியாக வைத்துக்கொண்டு இறை சிந்தனையில் இருக்கும் போது அவனது உடலில் உள்ள அனைத்து ராஜ உறுப்புகளுக்கும் சக்தி கிடைக்கிறது. மனதை சரியாக வைத்துக்கொள்வதன் மூலம் ஆழ்ந்த தூக்கம் வந்து அவன் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகிறது. மேலும் தீஞ்சொற்களை பேசாமல் இருப்பது மூலம் அவனை சுற்றி நேர்மறை சக்திகள் அதிகரிக்கின்றன.

3 - தரையில் பருத்தி துணி விரித்து தலையனை வைக்காமல் படுப்பதன் மூலம் இரத்த ஓட்டங்கள் சீர் பெறுகின்றன. உடற்சூடு அதிகம் ஆகாமல் இருக்கும். பூமிக்கும் உடலுக்கும் உள்ள மின்காந்த சக்திகள் சமநிலைபெறும்.

4 - அசைவம் உண்ணாமல் போதைப்பொருள் பயன்படுத்தாமல் இருக்கும் போது அவனது உடலில் உள்ள கல்லீரல் பலம் பெருகிறது. இதனால் அவனது Body metabolism சீர்பெறுவதுடன், கோபம் குறைந்து எடுத்த செயல் யாவினும் தெளிவானதொரு முடிவு எடுக்க முடிகிறது. 48 நாள் போதை பொருட்களை பயன்படுத்தாமல் விட்டால் எளிதில் அவன் போதை பழக்கம் போன்ற அனைத்து தீய பழக்கங்களில் இருந்தும் வெளி வர முடியும். இதற்காக ஐயப்பனுக்கு மாலை போட பரிந்துரை செய்யும் மருத்துவர்களும் உண்டு.

5 - பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிக்கும் போது, அதாவது இல்லறத்தில் ஈடுபடாமல் இருக்கும் போது, சுக்கிலம் வெளிப்படாமல் இருக்கும் போது, காம எண்ணத்தினுள் நுழையாமல் இறை சிந்தனையுடன் மட்டுமே இருக்கும் போது உச்சி முதல் பாதம் வரை உள்ள அவனது அனைத்து அவயங்களில் உள்ள செல்களும் புதுப்பிக்கப்பட்டு நல் சிந்தனை, ஆரோக்கியமுடைய புது மனிதனாய் உரு மாறுகிறான். இதனால் Azoospermia போன்ற அனைத்து விந்தணு குறைபாடுகளும் குணமாகி குழந்தையின்மை என்ற பேச்சுக்கே இங்கு இடம் இல்லாமல் போகும். வருடத்தில் ஒரு மண்டலம் தன்னை சீர்படுத்திக்கொள்வதால் வருடம் முழுக்க அவனால் இல்லறத்தில் ஆரோக்கியமாக ஈடுபட முடியும். இல்லறம் நல்லறமாக இருக்கும் போது எப்பொழுதும் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியுமே நிலவும். அனைத்திற்கும் மேலாக பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிப்பவனுக்கு பிறக்கும் குழந்தை முன்னோர்களின் திறமைகளை தனது மரபணுவில் கொண்டு தெளிந்த அறிவுடைய தெய்வீக அம்சம் பொருந்திய குழந்தை பிறக்கும்.

6 - வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் காலம் வந்தால் அவர்களை பார்க்க கூடாது, நெருங்க கூடாது, தொட்டு பேசக்கூடாது. மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் காந்தம் போன்றவர்கள் இவர்களால் பிறர் சக்தியை எளிதாக ஈர்த்துக்கொள்ள முடியும். எனவே ஒரு ஆண் அருகில் வந்தாலோ தொட்டாலோ இவனது சக்திகள் குறைந்துவிடும் என்பதால் இதை சொன்னார்கள்.

7 - பிறர் வீட்டில் உண்ணாமல் உறங்காமல் இருக்கும் போது, அவர்களுக்கு நல்ல உணவே கிடைக்கும், நல்ல சக்திகள் அவரது வீட்டினுள்ளேயே தங்கும். மசாலா உணவை தவிர்ப்பதன் மூலம் காம இச்சைகள் கட்டுப்படும்.

8 - அசுப நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும் போது, இவன் வளர்த்து வந்த பிராண சக்தி விரையம் ஆகாமல் இருக்கும்.

9 - துளசி மணி மாலைகள், தாமரை மாலைகள், ருத்ராட்சங்கள் இவனது காம உணர்வை கட்டுப்படுத்தும்.

10 - 48 நாள் காலணிகளை பயன்படுத்தாமல் இருக்கும் போது. இவனது பாதம் பூமிப்பந்தின் மீது நேரடியாக படும். இதன் மூலம் பூமிக்கும் இவனுக்கும் உள்ள மின்காந்த ஓட்டம் சீர்பெறும், நிலம் பஞ்சபூத சக்தி இவனது உடலில் அதிகரிக்கும் வயிறு, மண்ணீரல் சீராக இயங்கத்துவங்கும். மேலும் வெறும் காலில் நடப்பது மூலம் பாதத்தில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு உச்சி வரை இரத்த ஓட்டமும் சக்தி ஓட்டமும் சீர் பெற்று ஒரு முழுமையான ஆரோக்கியம் நிறைந்த மனிதனாக இவனால் வாழ முடியும்.

48 நாள் இந்த கடும் விரத முறைகளை கடைப்பிடிபதன் மூலம் ஆண்களுடைய Testosterone Harmone சீர் பெற்று, அவனின் ஆண் தன்மை அதிகரிக்கிறது. Azoospermia போன்ற அனைத்து விந்தணு குறைபாடுகள் சரியாகிறது. அது மட்டுமா இவனால் அறிவில் சிறந்த மரபு திறமைகளை ஜீன் வழியே பெற்ற வீரம் செரிந்த அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும்.

இப்படி ஐயப்ப வழிபாடு முழுக்க முழுக்க ஆண்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. அவனது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரமான விதை இருந்தால் தானே செழிப்பான விருட்சம் வளரும் !

இப்படி ஆரோக்கிய வித்து இருந்தால் தானே ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும்.

லட்சக்கணக்கான ஆண்கள் மட்டும் ஒரே இடத்தில் இருப்பதால். இவர்களுக்கு ஆண் தன்மை அதிகரிக்கும். Testerone Harmone குறைபாடு உள்ளவர்களுக்கு இது அதிகரித்து பிரச்சனைகள் தீரும். ஆண்களின் ஆன்ம பலம் அதிகரிக்கும்.

ஐயப்பனை பம்பை நதிக்கரையில் எடுத்து வளர்க்கத் துவங்கிய பின் தான் பந்தள மன்னர் ராசசேகரனுக்கே குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


சரி பெண்களை ஏன் அனுமதிப்பதில்லை என்று பார்ப்போம் !
-------------------------------------------------------------------

ஆயிரம் ஆண்டுகளாகவே இங்கு பெண்களை அனுமதிப்பதில்லை.

200 ஆண்டுகளுக்கு முன்பே 1816 ல் பென்ஜமீன் ஸ்பயன் பர்டு, பீட்டர் அயர் கார்னர் என்ற இரு ஆங்கிலேய ஆய்வாளர்கள் திருவிளாங்கூர் கொச்சி மாகாணங்களில் கள ஆய்வுகளில் ஈடுபட்டு மக்களின் கலாச்சாரம் பாரம்பரியத்தை  MEMOIR OF THE SURVEY OF THE TRAVANCORE AND COCHIN STATES என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்கள். அதில் சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். பூப்பெய்தலுக்கு முன் பேரிளம் பெண்ணிற்கு பின் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக பதிவு செய்துள்ளார்கள். கேரள அரசும் இதை அங்கிகரித்து முக்கிய சாசனமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

அதாவது 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டும் அனுமதி இல்லை. மற்ற பெண்கள் வருவதற்கு எந்த தடையும் இல்லை. பூப்பெய்தல் முன் பருவமும் பேரிளம் பெண்ணிற்கு பின் பருவமும் அனுமதிக்கிறார்கள். ஒரு பெண்ணின் கருமுட்டை மாதவிடாய் மூலம் வெளி வரத்துவங்கிய நாட்களில் இருந்து அது நின்று போகும் காலம் வரை அனுமதி இல்லை. இது அவர்களது Fertile காலம்.

சரி இப்பொருது மாதவிடாய் என்றால் என்ன என்று பார்ப்போம். பெண்களுக்கு இரண்டு கருமுட்டை பை உள்ளது. இதில் ஒவ்வொறு மாதமும் வலது பக்கம் இருந்து ஒரு கருமுட்டை இடது பக்கம் இருந்து ஒரு கருமுட்டை வெளியேறும்.

இப்பொழுது கருமுட்டை கருமுட்டைப்பையில் 14 நாட்கள் வளர்கிறது. வளர்ந்த கருமுட்டை felopian tube வழியாக கருப்பையை 7 நாட்களில் அடைகிறது.

இந்த கருமுட்டையை வரவேற்று வளர்க்க தனது உடலில் உள்ள சத்துக்களை எடுத்து சிவப்பு கம்பளம் விரித்து கருப்பை வரவேற்கிறது. இந்த காலத்தில் ஒரு ஆண் விந்தணுவுடன் சேரவில்லை எனில், அந்த சிவப்பு கம்பளத்துடன் அந்த கருமுட்டை 7 நாட்களில் வெளியேறும்.

ஆக மொத்தம் 14 + 7+ 7 = 28 நாட்கள். ஆகவே தான் 28 நாட்களுக்கு ஒரு முறை 3 நாட்கள் மாதவிடாய் காலமாக உள்ளது.

பெண்களை நிலவுடன் ஒப்பிடுவார்கள். நிலவும் மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே தெரியும். நிலவின் ஒளி கருப்பையை வலுவடையச்செய்யும்.

மாதவிடாய் காலத்தில் எப்படி இருக்கு வேண்டும் என பெண்களுக்கு சில வழிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.

1 - இந்த காலத்தில் பெண்கள் காந்தம் போன்றவர்களாய் மாறுவார்கள். இவர்களின் பிராண சக்தி கழிவுகளை வெளி தள்ள மூலாதாரத்தை நோக்கியே செயல்படும். அந்த மூன்று நாள் இவர்கள் Receiving Antenna வாக மாறுவார்கள். தன்னை சுற்றி உள்ள நல்ல சக்திகளாக இருந்தாலும், கெட்ட சக்திகளாக இருந்தாலும் எளிதாக ஈர்த்துக்கொள்வார்கள். எனவே தான் மூன்று நாள் ஓய்வில் ஒரு இடத்தில் இருக்கச்சொன்னார்கள். மாலை நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது என சொன்னார்கள். இந்த காலத்தில் வரும் இரத்த வாடை கெட்ட சக்திகளை ஈர்க்கும் வல்லமை பெற்றது. எனவே தான் வெளியில் சென்றால் கரிகட்டையும் இரும்புத்துண்டும் கொடுத்து அனுப்புகிறோம். இந்த கரித்துண்டும் இரும்பும் கெட்ட சக்திகளை ஈர்த்துக்கொண்டு அவர்களை காப்பாற்றும். இரத்த வாடை மிருகங்களையும் ஈர்க்கும்.

இப்படி இவர்களது உடல் அனைத்து சக்திகளையும் ஈர்க்கும் தன்மையுடன் இருக்கும் போது கோவிலுக்கு வந்தால் அங்கு உள்ள விக்ரக சக்திகளுக்கு சிதைவு நிலை ஏற்பட்டு பிறருக்கு எந்த பலனும் இல்லாமல் போகும் என்பதனாலேயே கோவிலுக்கு செல்லக்கூடாது என சொன்னார்கள், கோவிலுக்கு வரும் பக்தர்களின் சக்தியும்(Energy Level) காணாமல் போகும். யாரேனும் இந்த காலத்தில் இவர்களை தொட்டாலோ அருகில் வந்தாலோ அவர்களது உடலில் சக்திகள் குறைந்து ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்பதனாலே தான் யாரையும் தொடக்கூடாது என சொன்னார்கள்.

2 - குளிக்க கூடாது. குளித்தால் வெப்பம் குறைந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. பின் அது உள் தங்கி கட்டிகளாக மாறிவிடும்.

3 - சணல் சாக்கில் உறங்க வேண்டும். இது வெப்பத்தை பாதுகாத்து கழிவுகளை முழுமையாக வெளியேற்ற உதவி புரியும்.

4 - தனியாக பொருட்களை பயன்படுத்தியதும், சக்தி நிலையில் யாருக்கும் எந்த மாற்றமும் ஏற்படாமல் அனைவரும் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே தான்.

5 - எந்த வேலையும் செய்யாமல் ஓய்வில் இருக்கும் போது இயக்க சக்திகள் அவர்களது கருப்பைக்கு சக்தியை கொடுத்து கழிவுகளை முழுமையாக வெளியேற்றும். ஓய்வில் இல்லாமல் வேறு வேலைகளில் இருந்தால் கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் pcod pcos போன்ற பல்வேறு நீர்கட்டிகளாக மாறும். இதை கழிவுகள் என்று சொல்ல முடியாது. அந்த கருமுட்டையை வளர்த்த உடல் சேகரித்து வைத்த ஊட்டப்பொருட்கள் எனலாம்.

இன்னும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விதித்த அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் அறிவியல் காரணங்கள் உண்டு. இது அனைத்தும் அவர்களது நன்மைக்காகவே என்பதை நமக்கு மறைத்துவிட்டார்கள்.

சபரிமலைக்கு பெண்களை அனுமதித்தால் !
------------------------------------------------------------------

இப்படி சபரிமலையில் ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வழிபாட்டு முறையில் பெண்களை அனுமதித்தால், பெண் உடலில் ஆண் Harmone அதிகரித்து அப்பெண்ணிற்கு குழந்தை பிறக்காமல் போகும்.

லட்சக்கணக்கான ஆண்கள் ஒன்று சேரும் கூட்டத்திற்குள் பெண்களை அனுமதித்தால் ஆண்களின் ஆன்ம பலம் சீர்குலைக்கப்படும். ஆண் சக்தியின் வீரியம் குறையும். ஆண்கள் எதற்காக செல்கிறார்களோ அதன் பலன் கிடைக்காமல் போகும்.

பெண்களை சபரிமலைக்குள் அனுமதித்தால் ஆணின் ஆண் தன்மை சீர்குலையும். பெண்ணின் பெண் தன்மை சீர்குலையும்.

மற்ற ஆயிரம் காரணம் சொல்லப்பட்டாலும் இதுவே முதன்மை காரணம்.

இப்படி ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட வழிபாட்டு முறையை கொண்ட கோவிலுக்கு பெண்கள் ஏன் செல்ல வேண்டும் ? பெண்கள் மட்டுமே அனுமதிக்கும் பல கோவில்கள் நமது நாடு முழுவதும் உள்ளது. கேரளாவில் கண்ணனூர் அருகில் தளிம்பரம்பா என்று இடத்தில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி, ஆண்களுக்கு அனுமதி கிடையாது.

ஒரிசாவில் கேந்திரபாதா என்னும் இடத்தில் சதபையா என்னும் கிராமத்தில் மஞ்சுபாரதி கோவிலில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. இங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் ஒரு மலைக்கு பெண்களுக்கு அனுமதி இல்லை.

மற்ற மதத்திலும் இது போல் வழிமுறைகள் உள்ளது ! மும்பையில் உள்ள ஹாஜி அலி என்ற மசூதியில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. இது போல் இமயம் முதல் குமரி வரை லட்ச உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்னமும் நாடு முழுவதும் ஆண்களை மட்டும் அனுமதிக்கும் கோவில், பெண்களை மட்டும் அனுமதிக்கும் கோவில் இலட்சக்கணக்கில் உள்ளது.

நமது கலாச்சாரத்தை அழித்தொழிக்க மெக்காலே கல்விமுறை போட்ட திட்டத்தின் நீட்சியே இது ! இந்த நொடி வரை கலாச்சார சீரழிவு அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.

நம்மை அழிக்கத்துடிக்கும் உலகவல்லாதிக்க தீய சக்திகளுக்கு இவை எல்லாம் நன்றாக தெரிந்ததால் தான் சில வெளிநாட்டு அமைப்புகள் மூலம் இயங்கி பெண்களுக்கு அனுமதி பெற்றுத் தந்து கொஞ்ச நஞ்சம் மிச்சம் இருக்கும் ஆண்மையையும் காயடிக்க முயற்சி செய்கிறார்கள்.

PETA விற்கு நமது காளைகள் மேல் என்ன அக்கறை வந்ததோ அதே அக்கறை தான் இன்று நம் பெண்கள் மீது வந்துள்ளது.

இவர்களின் நோக்கம் ஆணின் ஆண் தன்மையையும், பெண்ணின் பெண் தன்மையையும் குறைத்து இருவரையும் மலடாக்க வேண்டும். சில நாட்களுக்கு முன் வந்த LGBT சட்டம், பெண் வேறு ஒரு ஆணுடன் இருந்தாலும் குற்றமல்ல போன்ற தீர்பை பெற்றதும் இவர்கள் தான்.

மேல் இடத்தில் இருந்து உத்தரவு வந்தாலும் பெண்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என பூஜைகளை நிறுத்திவிட்டு 18 படிக்கட்டின் கீழ் அமர்ந்து வழி மறித்த தந்த்ரீகளுக்கு எனது பாராட்டுக்கள்.

உச்சநீதி மன்றமே தீர்ப்பு வழங்கிய பின்னும் பெண்கள் படியில் கால் வைக்க முயன்றால் சபரிமலை மூடப்படும் என்ற பந்தள மன்னர் உத்தரவிற்கு தலை வணங்குகிறேன்.

ஒரு ஆண் நன்றாக இருந்தால் தான் குடும்பம் நன்றாக இயங்கும். பெண்கள் நன்றாக இருக்க முடியும்.

பெண்கள் செல்லக்கூடாது என்று சொன்னது ஒரு ஆண் வீரமும் வீரியம் பொருந்திய ஆணாக இருந்து அடுத்த தலைமுறையை அறிவிற்சிறந்த வீரம் பொருந்திய தெய்வீக குழந்தையை உருவாக்கவே !

இப்படி ஒரு குழந்தை வந்துவிடக்கூடாது என்று பயந்து போன உலக வல்லாதிக்க தீய சக்தி தான் இதை சீர்குலைக்க திட்டமிட்டு காய் நகர்த்திவருகிறது.

ஒரு சமூகத்தின் மிகச்சிறந்த வாழ்வியல் முறைக்கு கட்டுப்பாடுகள் இன்றியமையாதவை, இந்த கட்டுப்பாடுகள் இல்லை என்றால் மனிதன் மனிதனாக இருக்க மாட்டான். நாடு நாடாக இருக்காது.

எனவே இந்த நாடு ஒழுக்கம் நிறைந்த நல்வழிப்பாதையில் பயணிக்க உண்மையான ஆன்மீகம் ஒன்றே, ஒரே வழி ! சிறந்த வழி !

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் - குறள் 131

நமது உயிரை விட ஒழுக்கத்தை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம். இப்பேர்பட்ட பரம்பரையில் வந்த நாம், நம் முன்னோர்களின் கட்டுப்பாடுகளுக்கு அடிபணிந்தே நடக்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு பாடல் ஞாபகம் வருகிறது

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது !

பெண்கள் செல்லக்கூடாது என்று சொன்னது பெண்களின் நன்மை மற்றும் சமூகத்தின் நன்மைக்கும் சேர்த்தே என இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

நன்றி


Best regards,