Sunday, 7 October 2018

மழை எச்சரிக்கை... நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை !!

மழை எச்சரிக்கை... நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை !!

☔ தற்போது தமிழகத்தில் மிகப் பரவலாக பேசப்படும் வார்த்தை ரெட் அலர்ட். பேஸ்புக், வாட்ஸ்அப், நியூஸ் என அனைத்திலும் ரெட் அலர்ட் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

ரெட் அலர்ட் என்றால் என்ன?

☔ வானிலை மிக மிக மோசமாக மாற வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்குமாறு உணர்த்தவே ரெட் அலர்ட் விடப்படுகிறது. இந்த அலர்ட் விடப்பட்டால் நிலச்சரிவு, மரங்கள் வேறோடு சரிவதற்கான வாய்ப்பு, அனேக இடங்களில் மின் இணைப்பு, போக்குவரத்து துண்டிக்கப்படும். தாழ்வான பகுதிகளில் அதிக சேதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தும் வகையில் ரெட் அலர்ட் விடப்படுகிறது.

☔ ஒரு பக்கம் ரெட் அலர்ட் பற்றி விறுவிறுப்பாக பேசப்பட்டு வந்தாலும், மறுப்பக்கம் ரெட் அலர்ட் குறித்து அச்சப்பட தேவையில்லை என பேசப்பட்டு வருகிறது. இதில் நாம் எதை நம்புவது என்பதில் குழப்பமாக உள்ளோம்.


☔ சரி. தற்போது பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. எப்படியும் நாம் மழைக்காலத்தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இதனால் நமக்கும், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் மிகப் பாதுகாப்பாக இருக்கும்.

☔ மேலும், மழைக்காலங்களில் உயிர் சேதங்களும் அதிகரிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இடி மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் தான்.

☔ மேலும், இத்தகைய காலங்களில் நாம் புகார் எண்களை தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம்.

பொதுமக்கள் புகார் செய்ய இலவச தொலைபேசி எண்கள் :

நோக்கம்தொலைபேசி எண்கள்மின்வெட்டு மற்றும் மின்சார பேரிடர் 1912வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்ற மீட்பு பணி1070அவசர ஆம்புலன்ஸ் சேவைகள்108அவசர போலீஸ் சேவைகள்100குற்ற நடவடிக்கைகள் மற்றும் ஊழல் தொடர்பான புகார்கள்1031போக்குவரத்து தொடர்பான புகார்கள்1073மகளிர் புகார்கள்1091கடலோர காவல் அவசர உதவி1093பேரிடர் தொடர்பான புகார்கள்101குழந்தைகள் தொடர்பான புகார்கள்1098நுகர்வோர் தொடர்பான புகார்கள்1800-425-1082
☔ மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு முன்னதாக எஸ்.டி.டி எண்கள் சேர்க்க தேவையில்லை.



Best regards,