இனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை..நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு!!*
குரூப் ஏ மற்றும் பி அதிகாரிகளிடம் எந்த சான்றிதழ்களையும் சான்றொப்பம் பெற வேண்டியது இல்லை என்று தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு தேர்வுகள், அரசு திட்டங்கள் ஆகியவற்றுக்காக விண்ணப்பிக்கும் போது சான்றிதழ்களின் உண்மைத்தன்மைக்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகளிடம் அதாவது பச்சை இங்கில் கையெழுத்திட தகுதி வாய்ந்த அதிகாரிகள், அரசு மருத்துவர்களிடம் சென்று அசல் சான்றிதழ்களை காண்பித்து நகல் சான்றுகளில் கையொப்பம் பெற வேண்டியது கட்டாயம்.
இதற்காக இவர்களை தேடி சென்று வாங்குவதில் பல சிக்கல்கள் இருந்தன. ஒன்று அந்த அதிகாரியை நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தெரிந்தவர் மூலம் செல்ல வேண்டும்.
அடுத்தப்படியாக அதிகாரிக்காக காத்திருத்தல் வேண்டும்.
குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்ததில் பிரச்சினை ஆகியவை இருந்தது. இந்த நடைமுறை அதிகாரிகளுக்கும் குடிமக்களுக்கும் கால விரயத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இதனால் ஏற்கெனவே உள்ள நடைமுறையில் சில மாற்றங்களை தமிழக அரசு செய்துள்ளது.
எனவே இனி அட்டெஸ்டேஷன் பெற அதிகாரிகளை தேடி போக வேண்டியதில்லை என்ற உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. அசல் சான்றிதழ்களை நியமனத்துக்கு பின்னரோ அல்லது நேர்காணலின்போதோ சமர்ப்பிக்க வேண்டும். அதுவரை விண்ணப்பங்களை அனுப்பும்போது சுய சான்றொப்பம் அளித்து அனுப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையால் பிறப்பிக்கப்பட்டது..
SSTA
Best regards,

Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com