Sunday 21 October 2018

இருதய அடைப்பினை நீக்க வேண்டாம்..

இருதய அடைப்பினை நீக்க வேண்டாம்..! --- மருத்துவர் பி.எம்.ஹெக்டே , #மருத்துவத்துறையை_தோலுரிக்கிறார்.

கர்நாடக மாநிலம், உடுப்பியை சேர்ந்த திரு.பெல்ல மோனப்ப ஹெக்டே, இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு இருதய மருத்துவர் (Cardiologist) , இந்திய அரசின் பத்பவிபூஷன் விருது பெற்றவர். மருத்துவர் தவிர அவர் சிறந்த கல்வியாளரும் மருந்தியல் ஆராய்ச்சியாளருமாவார்.

இவர் , கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த கருந்தரங்கில் பேசியபோது கூறியதே கீழுள்ள காணொளி. அதாவது 2017 முதல் , மருத்துவ உலகிலும் மற்றும் மருத்துவமனையே கதி என கிடந்த சாமான்ய மனிதருக்கும் பெரும் அதிர்வலைகளை கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கும் விஷயமாக பரவி வருகிறது.

அதாவது , அவர் கூறுவது என்னவென்றால், " இருதயத்தில் அடைப்பு இருந்தால் தயவு செய்து அதனை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம். Blocks அகற்றுகிறோம் என்கிற பெயரில் stent உதவியுடன் ஆஞ்சியோபிளாஸ்டி மூலமும் பைபாஸ் மூலமும் அடைப்புகளை நீக்குவது ஒரு பித்தலாட்டம்" என போட்டு உடைத்துள்ளார்.

மேலும் அவர் கூறுவதாவது, இயற்கையாக இருதயத்தில் ஒரு அடைப்பு உண்டாகுமாயின், நரம்பு தனக்குத்தானே வேற ஒரு பாதையை கண்டுபிடித்து ரத்த ஓட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்கிறதாம்..இறைவன் நமக்கு கொடுத்த வரம் அது என்கிறார். ஆக்ஸிஜன் குறைந்த அளவு உள்ளிழுக்கப்படுவது இருதயத்திற்கு நன்மையை தான் தரும் என கூறும் அவர். அதிகாலையில் வெற்று வயிற்றுடன் செய்ய வேண்டிய ஒரு உடற்பயிற்சியையும் கற்றுத்தருகிறார். அது தினசரி நாம் அனைவரும் எளிதாக செய்யக்கூடிய பிராணாயாமமத்தை ஒத்ததே.

இவர் தாமாக இதை கூறவில்லை என்றும் science translational Medicine எனும் உலகப்பிரபலமடைந்த மருத்துவ மாத இதழில் 2011ல்  வெளியான ஒரு கட்டுரையை அடிப்படையாக வைத்து, ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஜெர்மன் உள்ளிட்ட நான்கு பல்கலைக்கழக மருத்துவக்குழுக்களை கொண்டு Placebo Effect (volume 3- Page 70) எனப்படும் , ஜெர்மன் மருத்துவர் ஒருவரின் கூற்றை மையமாக வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியின் விளைவினை தாம் விளக்குவதாக கூறினார்.

அதாவது குறிப்பிட்ட ஒரு 30 இருதய நோயாளிகளுக்கு Severe Painkiller எனப்படும் சக்திவாய்ந்த வலிநிவாரணியான Morphine ஐ கொடுத்து, உங்களுக்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று கூறப்பட்டதாம். உடனடியாக அவர்களது வலிகள் குறைந்து, நிதான செயல்பாட்டிற்கு வந்த இருதயத்தின்  துடிப்பை கவனித்த அவர்களுக்கு ஆச்சரியம் பிளாசிபோ எபக்ட் வேலை செய்துள்ளது. ஆனால் மொர்பின் என அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்து சாதாரண விட்டமின் மாத்திரைகளாம். இன்னொரு செட் நோயாளிகளுக்கு வெறும் சலைனை ( உப்புநீர் ) கொடுத்து மோர்பின் என கூறியுள்ளார், அவர்களும் குணமடைந்துள்ளார்கள்.

இருதய அடைப்பை நீக்குவதை விட அதை அப்படியே விட்டுவிடுவது இருதயத்தின் ஆயுளை நீடிக்கும். ஆஞ்சியோ செய்வது இருமடங்கு மீண்டும் இதயவலியை கொண்டாக்கும் என்றும் பைபாஸ் செய்வது நான்குமடங்கு வாதம் அடிக்க வழிவகுக்கும் என்றும்...இருதய செயலிழப்பு , திடீர் மரணித்திற்கு வழிவகுக்கும் என்று கூறி...இருதய அடைப்பு நீக்குதல், ஆஞ்சியோ,பைபாஸ், ஸ்டன்ட் வைப்பது என அத்தனையும் வியாபார நோக்குடன் செய்யப்படும் கயவாணித்தனம் என்கிறார்.

மேலும் திரு.ஹெக்டே ,சென்னை ஸ்டான்லியில் இருந்த சமயத்தில், சுப்ரமணிய சாமி தம்மிடம், இருதய அடைப்பு நீக்கத்திற்காக வந்த்தாகவும் அதற்கு டாக்டர், அதல்லாம் தேவையில்லை போங்க...என்று கூறியவுடன் சு.சாமி கோபமடைந்து டாக்டரை திட்டியதாகவும் கூறி சிரிக்கிறார் பி.எம்.ஹெக்டே.

Placebo Effect : மனிதன் நோயுற்றவுடன் மருந்து என்று எதை கொடுத்தாலும் அதன் மீது நம்பிக்கை வைத்து பயபக்தியுடன் பத்தியத்துடன் உண்கிறான். அந்த மருந்து வேலை செய்வதை விட அவனது மூளை, தமது வலிக்கான மருந்து கிடைத்துவிட்டது என நினைத்து சமாதானமடைந்து, டென்சனை குறைத்து நிவாரணத்தை பரப்ப தொடங்குகிறது. எனவே உடலில் நோய் குணமாக , மருந்தைவிட நம்பிக்கையே கைகொடுக்கிறது.

Best regards,