Wednesday, 13 March 2019

பொள்ளாச்சி பாலியல் குற்றம்

*பொள்ளாச்சி பாலியல் குற்றம்*
இந்த பொள்ளாச்சி சம்பவத்துல இருந்து இணையப்பெண்கள் படிக்க வேண்டிய பாடங்கள் ரெண்டு...
1) இணையத்துல யாரையும் முழுசா நம்பி personal messagesல உன் அந்தரங்க உணர்வுகளை பகிர்ந்துக்காத. எதை பண்ணணும்னாலும் தில்லா தெனாவெட்டா டைம்லைன்லயே பண்ணு. இல்ல ஒரிஜினல் ஐடிகள்ள இருக்கிற பெண்கள் குழுக்கள்ள இணைஞ்சு பப்ளிக்கா பண்ணு! எவனும் உன்னை அணுகமாட்டான். ஏன்னா இவ தனியா இல்லங்குற பயம் எல்லாவன்கிட்டயும் இருக்கும்.
2) அப்டியே ஒருவேளை உணர்ச்சிப்பெருக்கில யார்கிட்டயாவது உன் அந்தரங்கத்த personal messagesல பகிர்ந்துகிட்டன்னா, அதுக்கப்புறம் எதிராளி உன்னை மிரட்டுனா உடனடியா சைபர் கிரைம்ல bullying and blackmailing அப்டீன்னு கம்ப்ளெய்ண்ட் பண்ணிரு. மிரட்டலுக்கு பயந்து எந்த விதத்துலயும் அடிபணியாத! ஏன்னா இங்க நீ பேசின திரையடிகளையும் வாயிஸ் ரெக்கார்ட்களையும் போட்டு உன்னை ஒரு மஸ்ரையும் எவனும் புடுங்க முடியாது. “ஆமாண்டா அப்டி தான் டா பேசினேன். எனக்கும் காம உணர்வுகள் இருக்கு. கலவிய நான் அசிங்கமானதா அவமானமா பார்க்கல. அப்டி பார்க்கிறவன் போயி முட்டிகிட்டு சாவு!” அப்டீன்னு பதில் குடுத்திட்டு தெனாவெட்டா கடந்து போயிரலாம்.
- இந்த ரெண்டும் பெண்கள் ஈசியா பண்ணணும்னா முதல்ல இணையத்துல பெண்கள் பாலியல் ரீதியான ஆரோக்கியமான உரையாடல்களை, கருத்துப்பகிர்வுகளை பப்ளிக்கா எந்த அச்சுறுத்தலும் இல்லாம பகிரக்கூடிய பாதுகாப்பான சூழல் இருக்கணும். அப்டி இப்ப இல்ல. அதுக்கு தான் நாங்க பெண்களுக்கான ஒரு குழு அமைச்சு செயல்படுறோம். இந்த மாதிரி இன்னும் குழுக்கள் வரணும். பெண்கள் இணைஞ்சு ஒட்டுக்கட்டையா நிக்க தொடங்கணும். கண்டிப்பா இந்த மாதிரி அயோக்கியர்கள் கைல சிக்காம இளம் பெண்கள் தப்பிக்க முடியும்!
இனி இதுல பெற்றோருக்கான பாடமும் இருக்கு: நம்ம பிள்ளைகள் வயசுக்கு வந்துட்டாங்கன்னாவே அவங்களுக்கு காம உணர்வுகள் இருக்கும் என்கிற உடலியல் உளவியல் உண்மையை நாம முதல்ல ஏத்துக்கணும். அவங்க கிட்ட செக்ஸ் பத்தி எல்லாம் மனம் திறந்து பேசணும். காம உணர்வுகளுக்கு பாதுகாப்பான வடிகால் சுயஇன்பம் தான் என்கிறதை நாமளே நம்ம பிள்ளைகளுக்கு சொல்லி தந்திரணும்.
என் பசங்களுக்கு (17 வயசு மற்றும் 13 வயசு மகன்கள்) 7 வயசுல இருந்தே முறையான பாலியல் கல்வி கொடுக்கப்பட்டிருக்கு. அது மட்டுமில்லாம என் கிட்ட எந்த விஷயத்தையுமே, அதாவது காதல், காமம், கலவி உணர்வுகள், சுய இன்பம், ஹோமோ-செக்‌ஷுவாலிட்டி அப்டீன்னு எதை பத்தியுமே மறைக்காம வந்து கருத்து சொல்லுற அளவுக்கு சுதந்திரமும் நம்பிக்கையும் குடுத்து வளர்த்திருக்கேன். எதை செஞ்சாலும் மம்மிக்கு தெரிஞ்சே செய்யலாம் என்கிற தைரியம் இருக்கிறதால ரெண்டு பேருமே எந்த தப்பையும் ஒளிச்சு மறைச்சு பண்ண வேண்டிய அவசியமில்லாம போயிருது. ஸோ ரொம்ப தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தோடயும் எதையும் நேர்மையா செய்யிற பக்குவத்தோடயும் ரெண்டு பேருமே வளர்ந்திருக்கானுக. ரெண்டு பேருக்குமே பாதுக்காப்பான கலவி பத்தி சொல்லி குடுத்திருக்கேன்.
இப்டி நாமளே நம்ம பிள்ளைகள்கிட்ட வெளிப்படையா எல்லாத்தையும் பத்தி பேச தொடங்கினா அவங்க வேற யார்கிட்டயும் போயி பாலியல் ரீதியான கருத்துப்பகிர்வுகள் பண்ண மாட்டாங்க. அப்டியே பண்ணாலும் அதை உங்க கிட்ட இருந்து மறைக்கமாட்டாங்க. இப்டி எல்லாமே வெளிப்படையா இருந்தா எதாவது தப்பா போகுதுன்னா ஈசியா தெரிஞ்சுரும். பாதுகாப்பா விலகுற ஆலோசனைகள பிள்ளைகளுக்கு குடுத்திரலாம்.
இனி ஒருவேளை எல்லாத்தையும் மீறி பாலியல் ரீதியான ஒரு வன்முறைக்கு நம்ம பிள்ளைகள் ஆளாகிட்டாங்கன்னாலும், ஆபாச வீடியோக்கள் வெளியாக்கிருவோம் என்கிற மிரட்டல் வந்தாலும், அதை அசிங்கம் அவமானம்னு சமூகத்துக்கு பயந்து, மீடியாவுக்கு பயந்து மறைச்சு வைக்காம உடனடியா சட்டப்படியான நடவடிக்கைக்கு நேரா கடக்குற தைரியம் வேணும். ஏன்னா அப்டி ஒரு வீடியோ வெளியாயிட்டாலும் அதனால நமக்கு எந்த நட்டமும் இல்ல என்கிறது தான் உண்மை. கற்பு மானம் எல்லாம் பெண்ணுடல்ல தான் இருக்கு என்கிறதெல்லாம் முட்டாள்தனமான கட்டமைப்பு என்கிறது தான் நிஜம். ஆகவே தைரியமா செயல்படலாம்.
ஊர் மோசமா பேசுமேன்னா, எத்தனை நாளைக்கு தான் பேசிரும்? அப்டி பேசிட்டா தான் என்ன? ஊரார் சாப்பாட்டுலயா நாம இருக்கிறோம்? நாம சம்பாதிச்சு தானே நாம வாழுறோம்? ஸோ இந்த பயம் தேவையே இல்ல. இப்டி எல்லா பெற்றோருமே செய்ய ஆரம்பிச்சிட்டா blackmailers யாரும் தப்பிக்கமுடியாம போயிரும். அப்போ இந்த படத்துல இருக்கிற மாதிரி கயவர்கள் சட்டத்துக்கு பயந்து தான் ஆகணும் என்கிற நிலை வரும். இப்படியான பாலியல் குற்றச்செயல்கள் வெகுவா குறையும்!
முயற்சி செஞ்சு பாருங்க பெண்களே மற்றும் பெற்றோர்களே!
அன்பில்,
Lulu Deva Jamla G

Best regards,