Tuesday, 5 March 2019

நீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்!

நீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்!


இணைப்பு குறித்த தகவலை எல்ஐசி குறுஞ்செய்தி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வருகிறது.

நீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா? அப்படியெனில், இந்தச் செய்தி நிச்சயம் உங்களுக்கானது தான். உங்களின் எல்ஐசி பாலிசி முடியும் தருவாயில் இருக்கிறது எனில், நீங்கள் உடனடியாக உங்களது வங்கிக் கணக்கை உங்கள் பாலிசியுடன் இணைத்ததாக வேண்டும். அப்படி நீங்கள் இணைக்கவில்லை எனில், உங்கள் பணப் பரிமாற்றம் நிறுத்தப்படும். இதுநாள் வரை, செக் மூலமே எல்ஐசி பணம் அளித்து வந்தது. ஆனால், இப்போது வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக பணம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. இதனால் தான் உங்களது வங்கிக் கணக்கை உங்கள் பாலிசியுடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகிறது. அப்படி இணைக்கவில்லை எனில், பாலிசி மெச்சூர் ஆகியிருந்தால் கூட, உங்களால் பணத்தை பெற முடியாது.

இந்த இணைப்புப் பணிகளை எல்ஐசி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதன் மூலம், உங்கள் பாலிசி மெச்சூர் ஆன பிறகு, உங்கள் பணம் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கே வந்து சேரும். இதுவரை இணைப்பு செய்யாத வாடிக்கையாளர்களின் பணத்தை எல்ஐசி நிறுத்தி வைத்துவிட்டது.

இந்த இணைப்பு குறித்த தகவலை எல்ஐசி குறுஞ்செய்தி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வருகிறது.

அதேபோல், இதுவரை உங்கள் மொபை எண்ணை உங்கள் எல்ஐசி பாலிசியில் சேர்க்கவில்லை எனில், அதையும் உடனடியாக சென்று சேர்த்துவிடுங்கள். ஏனெனில், வரும் மார்ச் 1, 2019 முதல் பாலிசி ப்ரீமியம், பாலிசி மெச்சூரிட்டி, பாலிசி ஹோல்ட் போன்ற தகவல்களை குறுஞ்செய்தி மூலமே எல்ஐசி நிர்வாகம் உங்களுக்கு அனுப்பும். ஆகவே, விரைவாக மொபைல் எண்ணையும் இணைத்துவிடுங்கள்.


Best regards,