Friday, 8 March 2019

மகளிர் தினம்

மகளிர் தினம் 

என்றார்!
அதனால் மகளிருக்கு
என்ன பெருமை என்றேன்?
என்ன செய்ய வேண்டுமாம்?
தலையில் தூக்கி
ஆடணுமோ?
காலிலே விழுந்தே
கெஞ்சணுமோ!?
அடுக்கடுக்கா புடவைகளை வாங்கணுமோ?
ஏனிப்படி எகத்தாளம்!
அலுவலகம் செல்லவே
பார்க்கவே பளிச்சென்று
அத்தியாவசியமே!
புடவைகள்!
என்றதற்கு! 
வேறு என்ன வேண்டும்
மகளிர் தினத்திலே!
கேட்டார்!
" வாழ வேண்டும்"
என்றேன்!
என்னது? என்றே கேட்டார்! அதிர்ச்சியாக!
அலாரம்! கடிகாரம்!
அன்று அதை மறக்கணும்!
உறக்கம் கலையும் வரையிலே,
கிறக்கமா தூங்கணும்
ப்ரஷ் பண்ணவுடனே
மாஜிக் போல காபி
கிடைக்கணும்!
குளிர, குளிர, எண்ணை
தேய்த்து இதமா குளிக்கணும்!
கார குழம்பு, மிளகு ரசம்
உருளை கிழங்கு ரோஸ்ட்டோடு! பாயஸமும் ,அம்மா
கையால  உண்ணனும்!
மனசுக்கு புடிச்ச
பாடல்களை மணிக் கணக்கா கேட்கணும்!
தனிமையிலே, எனக்கு
புடிச்ச கவிதைகளை
கண் மூடி ரசிக்கணும்!
இரண்டு, மூன்று. கவிதைகளை நான்
எழுதியும் பார்க்கணும்!
யாருமில்லா வீட்டிலே
என் தனிமையும்
நானுமா இருக்கணும்!
தனிமையிலே, இனிமையை
கண்டு! 
அலைகள் ஓய்ந்த கடலிலே அமைதியாக
குளிப்பது போலவே
மகளிர் தினத்திலாவது
" நான் எனக்காக வாழணும்!"
                     தமிழினி!
Best regards,