Wednesday, 13 March 2019

நாகரீக பெண்களே வணக்கம்

நாகரீக பெண்களே வணக்கம்.

இப்பதிவு ஆணாதிக்க திமிரில் எழுதவில்லை...

 பொள்ளாச்சி துயரத்தை தாங்க முடியாத பெண் குழந்தையின் தந்தையாக எழுதுகிறேன்....

நாகரீக பெண்களே..

உண்மையான  தோழமைக்கும் , உடலுக்காக ஏங்கி உங்கள் பின் திரியும்
தருதலைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நீங்கள்..?

ஆத்மார்த்தமான அன்புக்கும்,
உங்களை அணைக்க மட்டுமே அலையும்
அற்ப புத்தி  ஆண்களுக்கும் வித்தியாசம்
அறியாதவர்களா நீங்கள்..?

இரவலாகவோ , சொந்தமாகவோ, ஒரு இருசக்கர வாகனம் வாகனங்கள் வைத்திருப்பது மட்டுமே வாழ தகுதி...?

கண்டபடி முடியை வெட்டிக் கொண்டு
கழிசடை தமிழ் சினிமா கதாநாயகன்  போன்ற  செயற்கையான தோற்றம்
உங்களை ஈர்க்க  போதுமான ஒன்றா...?

காலை முதல் இரவு வரை நேரிலும் , கைபேசியிலும் தொடர்ந்து உங்கள்
 பின் தொடருபவன்  வேலை வெட்டி இல்லாதவன் , வேறு நோக்கம் உள்ளவன் என்பதை கூடவா அறியாதவர்கள் நீங்கள்....?

இதை பார்த்து உண்மை காதல் என்றும் நட்பு என்றும்
ஏமாந்து விட்டேன்  என்கிற அளவுக்கு தான் உங்கள் அறிவு உள்ளதா..?

எல்லாவற்றையும் விட தனியாக இருக்கும் வீட்டிற்கு அழைத்த பின்புமா
உனக்கு வந்த ஆபத்தை நீ உணரவில்லை..?

நீங்கள் கற்ற கல்வியின் பலன் இவ்வளவு தானா..?

உன் வயதில் அடுத்த தெருவு பிள்ளையார் கோவிலுக்கு சென்று வர உன் தாத்தாவிடம் கால் வலிக்க நின்று அனுமதி வாங்கிய உன் அம்மாவுக்கு வராத பாதிப்பு உனக்கு வருகிறது என்றால் உனக்கு கொடுக்கப் பட்டது சுதந்திரமா..?  சாபக்கேடா..?

கைபேசியையே  கட்டிலுக்குள்  மறைத்து வைத்து எங்களுக்கு எல்லாமே தெரியும்
என்று ஏமாந்து நிற்கும் நாகரீக பெண்களே...

ஏமாந்ததும் , பாதிப்பு அடைந்ததும் நீங்கள் மட்டுமே அல்ல
உங்கள் மீது நம்பிக்கை வைத்த உங்கள் குடும்பமும் , இந்த சமூகமும்தான்...

அனைத்தும் Google ல் கிடைக்கும்
நல்லதும் , கெட்டதும் சேர்த்து..

ஆனால் பெற்றோர்களிடம் இருந்து "நல்லது மட்டுமே" கிடைக்கும்.

எனவே அருமை சகோதரிகளே
கல்வியுடன் சேர்ந்து மனிதர்களின்
மனநிலையையும் சேர்த்து படியுங்கள்.

கைபேசியை ஆபத்துக்கு உதவும்  உபகரணமாக மட்டுமே பயன்படுத்துங்கள்...
வாழ்க்கைக்கே ஆபத்தானதாகவும் , உபத்திரவம் தரும் வகையிலும் பயன்படுத்தாதீர்கள்.

நாடக காதல் நாதாரிகளிடம் சிக்கி சீரழிய வேண்டாம்...

பெற்றோர்களே
நம் வாழ்நாட்கள் என்பது பணம்   சம்பாதிப்பதற்கு மட்டுமே  இல்லை.

குழந்தைகளின் முகம் பார்த்து அவர்கள் உள்ளம் அறியும் அளவுக்கு குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.

 நீங்காத நல்ல நினைவுகளும் நல்ல சம்பாத்தியமே..

தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே அதில் சந்தேகம் இல்லை.

படித்ததில் வலித்தது

Best regards,