Friday, 22 March 2013

தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு

தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு
இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் விடுதலை முழக்கமிட்டவர் மாவீரன் பூலித்தேவன். இவருக்குத் தலைவன் கோட்டை ஜமீன்தார் நேரடியாக சில உதவிகளை செய்தார். ஒரு சில நேரத்தில் மறைமுகமாகவும் உதவினார்கள். ஏனெனில் ஆங்கிலேயர்கள் தனது பகுதிகளுக்கும், மக்களுக்கும் நெருக்கடி தருவார்கள் என்று மறைமுகமாக பல உதவிகளைச் செய்தார். ஆனால் பூலித்தேவர்க்கு தலைவன்கோட்டை ஜமீன்தார்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்க சில கருவிகளைக் கொடுத்துள்ளனர். மேலும் ஆங்கிலேயர்கள் பூலித்தேவரைத் தேடிவரும் போது தலைவன் கோட்டை பகுதியில் உள்ள தாருகாபுரம் மலையிலிருந்து தீப ஒளி (தீப்பந்தம்) காட்டப்படும். அவ்வாறு காட்டும்போது, பூலித்தேவர் அதை அறிந்து கொண்டு உடனே உஷாராகி கொள்வார். இவ்வாறு பூலித்தேவருக்கு மறைமுகமாகப் பல உதவிகளைச் செய்தன.

தலைவன் கோட்டை என்று பெயர் வர காரணம் :

இராமநாட்டில் உள்ள ஆப்ப நாடு, கீழவை நாட்டிலிருந்து வந்த கொண்டையங்கோட்டை,தேவர் [மறக்குலத்தைச் ]சேர்ந்த தலைவனார் வம்சத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் இங்கு பிழைப்பிற்காக வந்தவர்கள். தாருகாபுரம் அருகில் வந்து தங்கினர். உடனே
தமக்கென்று ஊர்ப்பெயர் வேண்டுமென்று நினைத்த அவர்கள் வம்சத்தை வைத்து ஊர்பெயரும் வைத்தனர். அதாவது தலைவனார் என்ற பெயரால் தலைவன் கோட்டை என்று பெயர் வைத்தனர். பின்பு இதுவே பதினெட்டு பட்டிக்குத் தலைநகராக விளங்கியது. இவ்வாறு தலைவன் கோட்டை பெயர் உருவானது.

ஜமீன் குடும்பத்தார் வருகை :

“பதினெட்டு நற்பதியைப் கொண்ட
பலவளம் நிறைந்த நாட்டை
அதிபதியாய் ஆளப் பெற்றார்
ஆப்ப நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்”

ஆதியில் இராமநாட்டைச் சேர்ந்த ஆப்ப நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு வந்து வாழத் தொடங்கினர். பாண்டிய நாட்டின் பகுதிகளில் ஒன்று தலைவன் கோட்டை இதன் அருகாமையில் உள்ளது. தாருகாபுரம் இவ்வூரில் குடியேறி வாழ்ந்தார் அவர்களில் ஒருவர் இந்திரராமசாமி பாண்டியன். இவரது ஏற்றமும், தோற்றமும் போற்றுவதற்குரியதாக இருந்தது. இவர்கள் தேவர் [மறவர் ] இனத்தில் தலைவனார் என்ற வம்சத்தைச் சார்ந்தவர்கள்.