Saturday 23 March 2013

ஊடக விபச்சாரம்.

ஊடக விபச்சாரம்.

இன்று சன் டிவியின் செய்தி ஆசிரியர் ராஜா என்பவர் மேல் ஒரு பாலியல் புகாரை அந்த நிறுவனத்திலேயே பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கொடுத்துள்ளார். இந்த ராஜா என்பவர் வேறு யாருமில்லை, ரஞ்சிதா - நித்யானந்தா ஆபாச வீடியோவை சன் டிவியில் போட்டு கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து கொடுத்தவர் தான். இவர் மீது ஒரு கொலை வழக்கும் ஏற்க்கனவே இருக்கிறது

இந்த ராஜாவை பற்றி "சன் பிக்சர்ஸ்' முன்னாள் செயல் அலுவலர் சக்சேனா தெரிவித்த கருத்து இது தான். "சன் டிவி ராஜாவுக்கு, கோடி, கோடியாக சொத்து வந்தது எப்படி என, எனக்கு தெரியும். பணம் வசூலிப்பதில் ராஜாவின் பாணியே தனி. கழிவு நீர் ஓடுகிறது; அதனால் நோய் தொற்று அதிகரித்து வருகிறது என செய்திபோட்டு விடுவதாக மிரட்டி, ஆலை அதிபர்களிடம், லட்சக்கணக்கில் பணம் கறப்பார்"

சன் டிவி நிருபராக வேலை பாரத்த சங்கீதா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் அந்த கொலை வழக்கை நீர்த்துப்போக வைத்துவிட்டார்கள்.

இதேபோல் ராம.செல்வராஜ் சன் டிவியின் கிரைம் நிருபராக பல காலமாக பணியாற்றி வருகிறார். இதனால், இவருக்கு பல காவல்துறை அதிகாரிகளோடு நெருக்கமான தொடர்புகள் உண்டு. சமீபத்தில், ஒரு நட்சத்திர ஓட்டலில் விபச்சாரத் தடுப்பு போலீசார் ஒரு ரெய்டு நடத்தினார்கள். அந்த ரெய்டு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ராம.செல்வராஜுக்கு, அந்த வழக்கில் சிக்கிய ஒரு பெண்ணோடு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் “சன் நியூஸ்” தொலைக்காட்சியில் “நிஜம்” என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும்பான்மையாக இந்து ஆன்மீக, கலாசார, பழக்கவழக்கங்களை கேவலமாகச் சித்தரித்து, பார்வையாளர்கள் மனதில் இந்து மதத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை ஏற்படுத்தி, இந்து மதத்தின் உன்னதமான கலாசாரத்தை அவர்கள் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது

ரஞ்சிதா - நித்யானந்தா ஆபாச வீடியோவை சன் தொலைக்காட்சி ஒளிபரப்ப செய்தது விபச்சாரத்தை விட மோசமான செயல். அவர்களின் தொலைகாட்சிகளில் வரும் நாடகங்கள் தான் சமூக அவலங்களுக்கு மூலக்காரணம். சகலத்தையும் வியாபார மயமாக்கி, பெரும் கலாச்சாரச் சீரழிவுகளுக்கு காரணமாகி வரும் இவர்களிடம் சமூக அக்கறையை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

ஏற்க்கனவே 40 வயதிற்கு உட்பட்ட சன் டிவி ஊழியர்கள் மன உளைச்சலால் இறந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இது போல அதிக புகார்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அவை ஊடக தர்மங்களால் அதிக பத்திரிக்கை மற்றும் டிவிகளில் வருவதில்லை. ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு மாறன் குடும்பம் செய்யும் அட்டூழியத்திற்கு அளவே இல்லை.