Tuesday, 26 March 2013

சிகரட் பிடிக்கும் நம் நண்பர்கள் அதில் இருந்து விடுபட 'இமேஜ் தெரபி' எனும் மனோதத்துவ சிகிச்சை

சிகரட் பிடிக்கும் நம்  நண்பர்கள் அதில் இருந்து விடுபட 'இமேஜ் தெரபி' எனும் மனோதத்துவ சிகிச்சையின் பகுதி

நண்பர்களே முழுமையாக படித்துவிட்டு பகிரவும், இதில் ஒருவர் திருந்தினாலயே எங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறோம்...!

என் முதல் கட்டப் பணி உங்களுக்கு சில தகவல்களை தெரிவிக்க விரும்புகிறேன். இது உங்களுக்கு தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம். தெரிந்து இருந்தால் நீங்கள் மிகப்பெரிய குற்றவாளி! தெரியாதவர்களை மன்னித்து விடுகிறேன்

கடவுள் நமக்கு இந்த உடலைத் தந்திருக்கிறார் வெளியே தோலும் கண்களும் மூக்கும் கை கால்களும் தெரியும் உறுப்புகள் அதன் செயல்பாடுகளும் உங்களுக்குத் தெரியும். ஆனால் என் சாண் உடம்பு தோல் போர்த்தி உள்ளே நடக்கும் விஞ்ஞான அற்புதங்கள் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்..?

முதல் உதாரணம்: நாம் சுவாசிப்பது நமக்குத் தெரியும். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது? நம் நுரையிரலில் என்ன நடக்கிறது அது வெளிப்படுத்தும் பொருள் என்ன? மேலே பார்க்கலாம்!.

நமது உடலின் தசைகளை புதுப்பிக்க ரத்தம் தேவைப்படுகிறது. இரத்தத்தில் சிகப்பணுக்கள் உள்ளன. இந்த அணுக்கள் கரையக் கூடிய ஆக்ஸிஜனை திசுக்களுக்கு கொண்டு செல்கின்றன. இதனால் செல்கள் உயிர் பெறுகின்றன.

அது சரி இரத்தத்தில் எப்படி ஆக்ஸிஜன் கலக்கிறது?

வியக்கப் போகிறீர்கள்...மெல்லப் படியுங்கள்... புரியும் வரை படியுங்கள்...அதுவரை நான் உங்களுக்காக காத்து இருப்பேன்...

கடவுளின் மிகப்பெரும் கருணையில் இந்த வினை மாற்றம் நுரையீரலில் நிகழ்கிறது. நமது நுரையிரல் பஞ்சு போன்ற அல்லது ஸ்பாஞ்ச் போன்ற அமைப்பில் உள்ளது. நுரையிரல் வெளிக்காற்றை உட்கொள்ளும் போது காற்றில் உள்ள ஆக்ஸிஜன் ஸ்பாஞ்சின் உள்ளே போகிறது. சிறிய சிறிய துவாரங்களின் முனைக்கு செல்லும் போது காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அங்குள்ள மிகச்சிறிய இரத்த நாளத்தின் முனையில் உள்ள ஒரு மைக்ரான் அளவுள்ள இரத்தம் உடனே தன்னுள் ஆக்ஸிஜனை கரைத்து உட்கொண்டு உடனே பறக்கிறது. பறந்து செல்லும் இந்த இரத்தம் தான் திசுக்கள் உள்ளே சென்று அதை புதுப்பிக்கிறது.

எதற்கு இதை நான் உங்களிடம் சொல்கிறேன்? காரணம் இருக்கிறது......

சிகரெட் பிடிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை-

1. சிகரெட் பிடிக்கையில் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள வெப்ப நிலை சுமார் 800 டிகிரி செல்சியஸ் அதாவது இந்த வெப்பத்தில் பித்தளையும் துத்தநாகமும் உருகும். இந்த வெப்பம் உங்களின் உதடுகளை எரித்து கருப்பாக்குகிறது.

2. இதே அளவுள்ள சூடு உங்கள் நாவின் மேல் பட்டு ருசி அறியும் நாளங்களை சுட்டுப் பொசுக்கி நீங்கள் உட்கொள்ளும் உணவின் ருசி அறியாமல் செய்கிறது. நீங்கள் உண்பது முட்டையா இல்லை தயிரா என்பது உங்களுக்குத் தெரியாமல் போகிறது.

இதென்ன? தின்பவனுக்கு கண் இல்லையா?

எனக்கு தெரியாதா? முட்டையா அல்லது தயிரா என கேள்வி கேட்கும் பிரகஸ்பதிகளுக்கு பரிட்சை வைக்கிறேன். உங்களால் கண்ணை மூடிக்கொண்டு நான் தரும் உணவில் உள்ள பொருள்களை மூக்கையும் பொத்திக் கொண்டு உங்களால் சொல்ல முடியும் என்றால் உங்களுடன் சேர்ந்து நானும் புகைபிடிக்க தயார்!

அவ்வாறு இல்லையென்றால் என்னுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு நீங்கள் உங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை விட தயாரா?

சவால்!!!!!!!!!!!!

3. நீங்கள் ஒவ்வொரு முறையும் உள்ளே இழுக்கும் புகையில் சுமார். 2 மில்லியன் எரிந்த நிலையில் கரித்துகள்கள் நுரையீரலை கடுமையாக தாக்குகிறது.?

எப்படி?

புகை என்பது கரியின் மைக்ரான் அளவுள்ள மாவுபொடி ஒரு கப் கோதுமைமாவை உங்களால் சுவாசிக்க முடியாது! ஆனால் பத்து சிகரெட் குடித்து முடிக்கையில் ஒரு கப் கோதுமை மாவு அளவுள்ள கரித்துகள்கள் உங்கள் நுரையீரலின் உளளே சென்று குதியாட்டம் போடுகிறது!.

அதனால் என்ன போடட்டுமே? நமக்கென்ன கவலை என்பவர்களே?

ஆடிக்களைத்தபின் அது ஓய்வெடுக்க அமரும் இடுக்கு நான் முன் சொன்ன சிறிய துவாரம் கடவுளின் கருணைக் கொடையான காற்று ஆக்ஸிஜன். திரவ ஆக்ஸிஜனாக மாற்றும் அந்த துவாரம். !!!!!!!!!!!!!!

உங்களின் பிராணவாயு துவாரங்களை நீங்கள் உங்கள் உதவி கொண்டே அடைத்து முதல் கட்ட வியாதியை வரவழைத்துக் கொள்கிறீர்கள்.....

கரித்துகள்கள் மைக்ரான் அளவு! அந்த துளையும் மைக்ரான் அளவு ஆப்பு அடித்தது போல மேலே உட்கார்ந்து மேற்கொண்டு காற்றை உள்ளே விடாமல் அடைக்கிறது.

பல லட்சக்கணக்கான கோடிக்கணக்கான துவராங்களை வெறும் இருபது சிகரெட்டுகள் பிடிப்பதன் மூலம் அடைத்து விட முடியும் இங்கே தான் தொடங்குகிறது உங்கள் ஆரம்ப கட்ட நோய்!.

திடீரென்று உங்களுக்கு சுவாசத்தில் மாறுதல் என்னவோ அதிகமாக காற்று தேவை போல மாடியேறினால் மூச்சிரைக்கிறது. ஓடிச்சென்று பஸ் ஏற முடியவில்லை !

ஆக்ஸிஜன் குறைவினால் உங்கள் தாம்பத்திய உறவு சரியில்லை சட்டென்று உங்களுக்கு மார்பு சளி வந்து எளிதில் குணமாக முடிவதில்லை.

என்னது? தாம்பத்திய உறவில் பிரச்சனையா? போய் சொல்கிறீர்கள் சார்..... எனக்கு காத்து குத்தியாகி விட்டது என்று சொல்லும் காம ராஜர்களே.... கேளுங்கள் .....

ஆம்! நண்பர்களே தாம்பத்திய உறவின் போது மிக அதிகமான ஆக்ஸிஜன் இரத்தத்தில் இருந்தால் மட்டுமே உங்களின் உயிர் உறுப்பு தன் பணியை செய்யும் இல்லையேல் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கும். குட் நைட் சொல்லும் பரவாயில்லையா? நீங்கள் இழப்பது இருக்கட்டும்.... உங்களின் பார்ட்னரை பசியோடு விடுவதில் என்ன நியாயம்?

இது தேவையா?

எங்கே இப்போதாவது உங்களுக்கு தோன்றுகிறதா? சிகரெட்டை விட வேண்டும் என்று?

ஆம் தோன்றுகிறது என்போருக்கு சபாஷ்!

இன்னும் இல்லை என்பவருக்கு இன்னமும் பல கதைகள் இருக்கிறது. சொல்லிக் கொண்டே போவேன்...வெட்கமில்லாமல்....சிகரெட் குடிப்பதற்கு நீங்கள் வெட்கப் படவில்லை...அதன் தீமைகளையும் விளைவுகளையும் சொல்லுவதற்கு நான் என் வெட்கப் பட வேண்டும்?

அடுத்த மிகப்பெரிய வெடிகுண்டு தலைமுறை மாற்றம்! சரியான அளவில் இரத்ததில் ஆக்ஸிஜன் இல்லாமல் போனால் உங்களின் உயிர் அணுக்கள் பாதிக்ப்படுகிறது.

எவ்வாறு?

புரத சத்துக்களும் பின்னர் கண்ணிற்கும் அறிவிற்கும் புலப்படாத பல நுண்ணிய விஷயங்கள் மூலம் மனிதனின் உயிரணுக்கள் உண்டாகின்றன. ...... குறைந்த அளவு ஆக்ஸிஜன் உள்ள இரத்ததில் உயிரணுக்களின் குரோமோசோம்களின் எழுதப்படும் தலைமுறை பற்றிய விவரங்களில் குறுக்கீடு ஏற்பட்டு உங்கள் குழந்தை உங்கள் டி என் ஏ விலிருந்து மாறுபட்டு ஒரு தலைமுறை உறவு விட்டு போகிறது.

அதனால் என்ன என்று கேட்கும் ஜெனடிக்ஸ் அறியா நண்பனே? ஜீன்கள் குறைந்தால் எல்லா வித நஷ்டங்களும் உனக்கில்லை .... உன்னால் பிறக்கும் குழந்தைக்குத்தான் ....என்ன வெல்லாம் நடக்கும்?

உங்கள் குழந்தை நோஞ்சானாக பிறக்கும்! சுவாச கோளாறு கண்பார்வை கோளாறு மற்றும் சில சமயங்களில் நோய் எதிர்பு சக்தி குறைந்து எடுத்ததற்கெல்லாம் வியாதி என்று எப்போதுமே நோயில் விழும் அபாயம்.!

யார் காரணம் இதற்கு? உங்கள் உடலை கெடுத்துக் கொள்வது உங்கள் உரிமை எனில் உங்களால் பிறக்கும் உயிர்க்கு நீங்கள் எப்படி தீங்கு நினைக்கலாம்?

அக்குழந்தைக்கு நல்ல கல்வியும் ஒழுக்கமும் கொடுக்க வேண்டிய தந்தையே அதன் நோய்க்கான மூலக்காரணம் என்று அதற்கு தெரிய வரும் போது உங்களின் மரியாதை என்ன ஆகிறது?

நினைத்து பாருங்கள் கையில் சிகரெட்டுடன் நீங்கள்! விந்தி விந்தி நடந்து இருமிக் கொண்டு வரும் உங்கள் மகன்! அல்லது மகள்!!

யார் காரணம்?

நீங்கள் இல்லையா?

அதன் காரணம் உங்கள் புகை பிடிக்கும் பழக்கம் இல்லையா? சைத்தான் அல்லவா இது ? விட்டுவிட வேண்டுமா இதை?

உங்களுக்கு எந்த நல்ல பயனும் இல்லை! உங்கள் தாம்பத்திய உறவு திருப்தியில்லை!! உங்கள் குழந்தை நோயுள்ள சவலைக் குழந்தை!!! காலம் முழுதும் குற்ற உணர்வுடன் உங்கள் வாழ்க்கை!!!!

கவலையாக இல்லை உங்களுக்கு?

இந்த கணமே வேண்டாம் என விட்டுவிடுங்கள்!

அதன் பயனாக நான் உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன். கீழ் கண்டவற்றை நீங்கள் உடனே அடையலாம்.....

1. புகைப்பழக்கம் விட்ட இரண்டாவது நாளிலிருந்து உங்களின் நாவு மீண்டும் பழைய சுவையை திருப்பித்தரும்.

2. பாலின் மெல்லிய சுவையையும் மணத்தையும் அறிவிர்கள்.

3. மல்லிகைப்பூ மணம் புகையிலை மணமில்லாது நல்ல வாசம் தரும்.

4. தயிருக்கு இத்தனை சுவை உண்டா என உங்கள் மனம் வியக்கும்.

5. சுற்றிலும் நடக்கும் விஷயங்களில் மனம் ஆழமாக பதியும் இதெல்லாம் நீங்கள் புகைப்பதை விட்டுவிட்ட 48 மணி நேரத்தில் நடக்கும்.

ஆனால் உங்கள் பிரச்சனை எனக்குப் புரிகிறது! என்னால் ஒரு மணிநேரம் கூட புகை பிடிக்காமல் இருக்க முடியவில்லையே என்பவர்களுக்கு!

நான் இருக்கிறேன் வழி சொல்ல!

எத்தனை பேர் என்னுடன் பயணிக்கத் தயார்?

என்னுடன் பயணம் செய்பவர்கள் அனைவரும் நிச்சயம் இதிலிருந்து விடுதலை பெறுவீர்கள் நம்புங்கள்! நிச்சயம்! உறுதி.!

புகைப்பதை நிறுத்த முடியாமல் போவதின் காரணம் என்ன ?

சிகரெட்டில் உள்ள புகையிலையில் 'நிக்கோட்டின்' என்னும் ரசாயனம் தான்.

இது வெள்ளைக்கார துரையின் செயல்பாடு போல! நண்பன் போல முதலில் வரும், பின்னர் விருந்தாளியாகி களிக்கும், அதன் பின் உங்கள் எஜமானனாகி உங்களை அடிமை செய்யும்!

நிகோடினும் அது போலவே செயல்படுகிறது.

முதல் முறை நீங்கள் புகை பிடித்த போது 'கிர்'ரென்று ஒரு கிறக்கம் வந்ததா? அதை போதை எனகிறிர்களா? அது போலவே ஒவ்வொரு சிகரெட்டிலும் வரும் என்று நினைத்தீர்கள் இல்லையா?

ஆனால் அது நடக்காமல் சில நாட்கள் கழித்து காலையில் பிடிக்கும் சில சிகரெட்டிற்கு மாத்திரம் போதை தரும் சங்கதி இருந்தது இல்லையா? நாளின் மற்ற சமயங்களில் அது போல நடக்கவில்லை? கொஞ்ச நாள் கழித்து காலையிலும் அந்த முதல் சிகரெட்டும் போதை தரவில்லை இல்லையா?

ஆனால் நடந்தது என்ன முதல் முதல் குடித்த சிகரெட் உங்கள் நண்பன் போல வ்ந்து போதை தந்தது! காலையில் போதை தந்த சிகரெட் உங்கள் விருந்தாளி ஆனது! பின்னர் நீங்கள் புகைத்த அனைத்து சிகரெட்டிற்கும் நீங்கள் அடிமையாகி போனீர்கள்!. காலையில் டாய் லெட் போக உங்களுக்கு முதல் தேவை ஒரு சிகரெட்....

உங்களுக்குள் நிகழ்ந்த மாற்றம் என்ன? ஏன் திடீரென்று ஒரு நாளைக்கு இத்தனை சிகரெட் பிடிக்க ஆரம்பித்தீர்கள்?


இதன் பெயர் தான் 'நிக்கோட்டின் அடிமைத்தனம்'. மருத்துவத்தில் நிகோடின் 'க்ரேவிங்' என்று கூறுவார்கள் உங்கள் உடலில் நிக்கோடின் ஒரு அளவு வரை கரைந்து உங்களுக்கு மன நிறைவை தரும் ஆனால் கரைசலின் அடர்த்தி குறையும் போது 'சிகரெட் குடி .....சிகரெட் குடி .......' என்று உங்களைத தூண்டும்.

அப்போது தான் நீங்கள் அடுத்த சிகரெட்டை தேடுவிர்கள்.

புகைத்த பின் உங்களுக்கு திருப்தி உங்களுக்கு திருப்தி அல்ல, உங்கள் ரத்தத்தில் கலந்துள்ள நிகோடின் சாத்தானுக்குத் திருப்தி! இனி அடுத்த சிகரெட் சாத்தான் உங்களிடம் கேட்கும் வரை உங்களுக்கு சிகரெட் பிடிக்க தோன்றுவதில்லை.

நோய் நாடி நோய் முதல் நாடி அதன்
வாய் நாடி வாய்ப்பக் கொளல்'

எனும் குறளிற்குத் தக்கவாறு நாம் சாத்தானை எதிர்கொள்ள போகிறோம். நாம் அது நம்முள் மீண்டு எழாதபடி முழு சக்தியும் பிரயோகித்து அதனை அடக்கி விரட்டப்போகிறோம். உங்கள் மனபலம் கொண்டே நீங்கள் நண்பனாய் நினைத்த விரோதியை உங்கள் கையாலேயே அடித்து விரட்டப்போகிறீர்கள்.

குடி சாத்தானே...! இதோ நாங்கள் உன்னை தொலைத்து தலைமுழுக வந்துள்ளோம் அதற்குள் எத்தனை வேண்டுமானாலும் குடித்து முடி. நீ மடியப்போகும் நாள் குறிக்கப்பட்டுவிட்டது.