தமிழகத்தில் சிங்கள வீரர்கள் பங்குபெறும் ஐபிஎல் போட்டிகளை முடக்குவோம்!
தமிழர்களை ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்த கொலைபாதக சிறிலங்கா அரசாங்கம்மீது சீற்றங்கொண்டு தமிழகம் கிளர்ந்தெழுந்திருக்கும் இந்நிலையில் இந்தியாவில் கோலகலமாக நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் சிறிலங்காவைச் சேர்ந்த 12 கிரிக்கற் வீரர்கள் பங்குபற்ற உள்ளனர்.
இதில் சென்னை அணியில் சிறிலங்கா பந்துவீச்சாளர் நுவன் குலசேகர பங்கேற்கிறார். இந்தியப் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கா உருகிய தயாநிதிமாறனின் குடும்பத்துக்குச் சொந்தமான சன் ரைசஸ் அணி தனது அணிக்கு கப்டனாக குமார் சங்கக்காரவை நியமித்துள்ளது. இவர் தவிர சிறிலங்காவின் சகல துறை ஆட்டக்காரர் திஸ்ஸர பெரேராவும் இந்த அணிக்கா விளையாட இருக்கிறார்.
தமிழின ஒழிப்பில் ஈடுபட்டுள்ள, சிங்கள அரச டைகளுடன் நெருக்கமானவர்கள்தான் சிறிலங்கா கிரிக்கட் அணி வீரர்கள். ஐபிஎல் போட்டிகளில் புனே அணிக்காக விளையாட இருக்கும் அஜந்த மென்டிஸ் இலங்கை இராணுவத்தில் 2வது லெப்டினன்ட் ஆக உள்ளவர். இவர் ஆட்டிலறிப்படையில் சுடுநராக சிறந்த சேவையாற்றியவராகப் பட்டியலிடப்பட்டுள்ளார். பல அப்பாவித் தமிழ் மக்கள் வைத்தியசாலைகள், பாடசாலைகள் என்பவற்றில் தஞ்சம் அடைந்திருந்த வேளை அவர்கள்மீது குண்டுகளை ஏவிப் படுகொலை செய்ததுதான் இவர்சார்ந்திருந்த ஆட்லறிப்படை.
கொலைபாதக சிங்கள இராணுவத்தின் செயல்களை பல சந்தர்ப்பங்களில் நியாயப்படுத்தியுள்ளவர் மாறன் குடும்பத்துக்குச் சொந்தமான அணியின் கப்டனாக இருக்கும் குமார் சங்கக்கார. ஆகவே தமிழர்களின் கொலையை மூடிமறைத்து சிறிலங்காவிற்கு சர்வதேசமட்டத்தில் ஒரு நற்பெயரை உருவாக்க துணைநிற்கும் சிறிலங்கா கிறிக்கற்றைப் புறக்கணிப்போம். சிங்கள தேசத்திலிருந்து ஐபிஎல்லில் விளையாடவரும் வீரர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எந்த சிங்கள வீரரரையும் விளையாடவிடோம் என உறுதிபூணுவோம்.