Thursday 28 March 2013

முட்டாள் தமிழா இனியாவது சிந்தி

முட்டாள் தமிழா இனியாவது சிந்தி
.

திரை கூத்தாடி உனக்காக போராட வேண்டிய அவசியமும் கட்டாயமும் என்ன.???
.
அவன் அரசு அதிகாரியா,
நீ பணியமர்த்திய பணியாளனா,
பணம் பெறாது தேர்வு செய்த அரசியல் வாதியா,
பலன் எதிர்பாராது உழைக்கும் சமூக அர்வமுடயவனா,
அல்லது போராளியா, தமிழனா, உனது உணர்வுகளுக்கு
கட்டுப்பட உனது மனைவியா, கணவனா. தோழனா.........
இப்படி உன்னோடு எதிலும் சம்பந்தம் அல்லாத ஒருவன் உனக்காக குரல் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன...????
.
பிழைக்க வந்தவனை பணத்தில் புரள வைத்ததற்கா.?
தலைவா என வேலை வெட்டியற்று குறைத்ததற்கா.?
அவனது திரைபடத்தை நீ ஆண்டுகளில் ஓடவைப்பதாலா.?
அவனை அர்த்தமற்று புகழ்ந்து பலான நடிகைகளுடன் கூட்டிகொடுத்து இலை மறைவாய் மாமாவேலை பார்த்ததற்கா.?
இரத்தைத்தை பாலாக்கி உனது பசியாற்றவலை பட்டினியில் கிடத்தி அவனது உருவத்திற்கு பாலாபிஷேகம் செய்ததற்க்கா.?
இதைவிட மேலாய் திரைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் சம்பந்தம் அல்லாத நடிகனை உன்னை ஆளும் அதிகாரத்தில் அமர வைத்து அழகு பார்த்ததற்கா.?
.
இதெற்கெல்லாம் உனது பதில் ஆம் எனில் தவறு நீ பழிகூரும் திரை கூதடியல்ல ( ரஜினி, கமல், அஜித், விஜய் மற்றும் நீ விரல் நீட்டும் கூத்தாடிகள் ) முழுமுதற் காரணம் அறவே அறிவும், உணர்வும் அற்ற நீ மட்டுமே.
.
மருத்துவம், பொறியியல், கணிதம், அறிவியல் எந்திரவியல் போன்று திரையும் ஒரு துறை அதில் நடிப்பவனும் இயக்குபவனும், பணியாற்றுபவனும் ஒரு வியாபாரியே. வியாபாரி என்பவன் வர்த்தகம் செய்து பணம் ஈட்டுபவன் மட்டுமே. நீ அவனது திரைக்காக செலவிடும் பணத்திற்கு உன்னை மகிழ்விப்பது மட்டுமே அவனது கடமை உனக்காக போராடுவதும், குரல் கொடுப்பதும் அல்ல நினைவிற்கொள்.
.
வந்தேறி ரஜினி என்பவன் தமிழனல்ல அவன் பிறப்பால் யாரோ அதற்காக குரல் கொடுக்கிறான். அதை கேள்வி கேட்க தகுதியற்றவன் நீ.

1) விபச்சாரிக்கு போராடிய இவன், உனது சகோதரிகள் கற்பை சூரையாடியதற்கு குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல காரணம் அவள் அவனது துறை சார்ந்த நடிகை நீ ரசிகன் அவ்வளவே,
2) ஒரு நடிகனாய் சஞ்சய்தத் தீர்பிர்க்கு அனுதாபம் தெரிவிப்பதும், தவறை மன்னிக்க செய்வதும் என்ன தவறு.
3) குடிநீர், மின்சாரம், எல்லை, போன்ற பல பிரச்சனைகளுக்கு தமிழகத்துக்கு எதிராக குரல் கொடுத்ததில் என்ன தவறு அவன் அவன் இனத்துக்காகவும், மொழிக்காகவும் உணர்வோடு செயல்டுகிறான்.
.
கமல் தான் ஒரு வியாபாரி மட்டுமே என பலமுறை பொதுப்படையாக அறிவித்தவன். அவனிட்ட முதல் போகும் நிலையில் கண்ணீர் சிந்தியதும், வருந்தியதும் ஒரு வியாபாரியாகவே அதற்கு களமிறங்கி போராடி அவனை கைதூக்கி விட்டது பாராட்ட தக்கதே அதற்காக அவன் உனக்கு குரல் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன.
.
மேற்கூர்யா ஏதும் உனது மூளைக்கு எட்டவில்லை எனில் எட்டும் பொருட்டு சில
உனது பசிக்கும், தாகத்திற்கும் பிறரை சாராத நீ,
உனது வலிக்கும், வேதனைக்கும் பிறரை நாடுவது உனது கையாலாகாத தனம்.
இல்லை எல்லாத்துக்கும் என் தலைவன் தான் வேனும், அவர் சொன்னதான் நாங்க கேப்போம், அவர்தான் எங்களை காக்க வந்த ரட்சகன்னு சத்தம் போட்டிங்க உங்க அவதாரத்திற்கு படையலாய் உன் மனைவியை, சகோதரியை கொடு.
.
மூளை என்பது இருப்பில் சிந்தி, மனக்கண் இருப்பின் விழித்தெழு.
.
நிலைமாற உணர்வோம்