பயர்பொக்ஸ் உலாவியின் தற்போதைய பதிப்பான 6.0.2 சற்று மேம்படுத்தப்பட்ட பதிப்பாக தற்போது வெளிவந்துள்ளது.
இதில் மெமரி மிகவும் குறைவாக எடுத்துக் கொண்டு வேலை செய்யும் விதத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
அதிகபட்சம் 50 சதவீதம் இணையப்பக்கங்கள் லோடு ஆகும் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றனர். நிறைய பாதுகாப்புகள் மேம்படுத்தப்படிருக்கின்றன.
புக்மார்க்குகள் உடனடியாக பயர்பொக்ஸ் உலாவியின் மூலமாக Sync செய்யும் வசதியும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
கூகுளின் புதிய வசதிகள் வந்துகொண்டிருக்கும் வேளையில் தனது 13ஆம் ஆண்டின் பிறந்தநாளினை கொண்டாடுகிறது கூகுள்.
இந்நேரத்தில் பழைய ஆட்சென்ஸ் முகப்பினை விரைவில் மூடப்போவதாகவும் அதற்காக புதிய ஆட்சென்ஸ் முகப்பிற்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.