Monday 26 September 2011

கூகிள் மீதான தேடுதல் விளைவுகளில் மாற்றம் : கூகிள் ஏற்க மறுப்பு

கூகிள் தனது இணையத்தள மற்றும் சேவைகளை மேம்படுத்த தேடுதல்களைத் மாற்றியுள்ளது என்ற விடயத்தை கூகிளின் நிர்வாகி எரிக் ஸ்கிமிற் மறுத்துள்ளார்.

அமெரிக்க சமஸ்டி வர்த்தக அமைப்பு இதே விடயத்தைப் பற்றி விசாரணை செய்துவருகின்றது.

இதனால் ஐரோப்பிய அமைப்பின் விசாரணைக்கும் இணையத்தள தேடுதல் இராட்சதனான கூகிள் முகங்கொடுக்கின்றது.

கூகிள் ஏனைய போட்டியாளர்கள் எவரதும் வழிமுறைகளைத் தடுப்பதற்கு எதையும் செய்யவில்லை என கூறப்படுகிறது.

எந்தவிதமான எதிர்ப்புமில்லாமலே விசாரணைகளையும் தண்டப்பணங்களையும் பல வருடங்களாக எதிர்கொண்ட மைக்ரோசொப்ற்றினைக் குறிப்பிட்டு தாங்களும் அவர்கள் போன்ற பாடங்களைக் கற்றுவருவதாகக் திரு.ஸ்கிமிற் குறிப்பிட்டார்.

இணையத் தேடுதலில் கூகிளின் ஆக்கிரமிப்பை எடுத்துக் கொண்டால் மூன்றில் இரண்டு பங்குகளைக் கொண்டுள்ள இவ்விணையம் வேறு இணையத்தளப் பகுதிகளுக்குள்ளும் பரவலடைந்து வளர்ச்சியடைந்து வருகின்றது.

அத்துடன் அமெரிக்கக் கையடக்கத் தெலைபேசி நிறுவனமான மோட்டரோலா மொபிலிட்டி நிறுவனத்தினையும் வாங்குகின்றமையும் இதன் பரவலாக்கலில் அடங்குகின்றது.

10
வருடங்களாக ஏப்ரல் வரையும் கூகிளின் முதன்மை நிர்வாகியாக திரு.ஸ்கிமிற் பணியாற்றியிருந்தார். அதன்பின்னரே லறி பேஜ் பதவியேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.