நாளாந்தம் 2 கப் கோப்பி குடிப்பது குறிப்பிடத்தக்களவு பாரிசவாத அபாயத்தைக் குறைக்கும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இதற்கு முன்னரான ஆய்வுகளின்படி சிலர் இது அபாயகரமானது என்றும் சிலர் இது உயிர்களைப் பாதுகாக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் இதன் இறுதி முடிவாக பிரித்தானியாவின் மிகப்பெரிய கொலையாளியான பாரிசவாதத்தைத் தடுக்கும் சக்தி, கோப்பிக்கு உண்டு என கூறப்படுகின்றது.
கோப்பி உட்கொள்பவர்களில் 14 வீதத்தினருக்கு மூளையில் குருதி உறைவு ஏற்படுவது குறைவாகக் காணப்பட்டது.
சுவீடனின் ஸ்ரொக்ஹோமிலுள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அரை மில்லியன் மக்களிடம் செய்த 8 ஆய்வுகளில் கிடைத்தவற்றைப் பரிசோதித்து இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.
நாளாந்தம் 6 அல்லது அதற்கும் கூடுதலான கப் கோப்பி குடிப்பவர்கள் 7 வீதமானளவு ஆபத்துக் குறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
கோப்பியிலுள்ள ஒட்சிசன் எதிர்ப்புக் கலங்கள், லிப்போபுரதத்தினால் ஏற்படுத்தப்படும் குருதிக்கலன்களைப் பாதுகாக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் குருதியழுத்தத்தை இது அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கோப்பியில் ஒரு கலவையான மூலக்கூறுகள் இருப்பதால் இவற்றில் சில நன்மை பயப்பனவாகவோ சில தீமை பயப்பனவாகவோ காணப்படலாம்.
