வடலி ஓலையால் வெளியே தெரிந்த உன் முகத்தையும் மறைத்து விட்டாய்.... நான் காதல் சொன்ன போது.... தொட்டுப் பேச நினைக்கிற போதெல்லாம்... எட்டி நின்றே புன்னகைத்தாய்....! நீ விளக்கை பற்றவைத்து யன்னலோரம் வந்து நிற்பாய்... நிலவு தோர்க்கும்... மின் மினி கண் சிமிட்டி பார்க்கும்... மரங்களுக்கும் வேர்க்கும்.. என் வீட்டு முற்றத்து செவ்வரத்தை உனக்காய்த்தான் பூப்பூக்கும்... மணல் மீது படிந்திருந்தது உன் சுவடு... இன்னும் பத்திரமாய் தான் இருக்கிறது என் வீட்டுக்குள்... எனக்கு தெரிந்த காதல் இப்படித்தான்... நான் கிராமத்தான்... எப்படி முடிந்தது உன்னால்... 'நமக்காக நம் பெயரை பச்சை குத்திக் கொண்ட மரங்கள் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறது...!