யாழ்.குடாநாட்டுப் பாடசாலைகளில் பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டுப் பெட்டிகளை வைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அதிபரும் யாழ்.பதில் பொலிஸ் மா அதிபருமான நீல் தலுவத்த தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை சுன்னாகப்பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்ற கிறீஸ் மனிதன் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் சந்திப்பின் போது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளில் பாலியல் தொந்தரவுக்குள்ளாகும் மாணவர்கள் இந்த முறைப்பாட்டு பெட்டியில் முறையிடலாம் எனவும் இத்தகைய முறைப்பாட்டுப் பெட்டிகளை வைக்கும் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது நிலைமையைப் பற்றி முறையிட முடிவதுடன் அவர்களை இத்தகைய துஷ்பிரயோக நடவடிக்கைகளில் இருந்தும் பாதுகாக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அந்த முறைப்பாட்டு பெட்டிகள் வைக்கும் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு பிரபல பாடசாலை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தெரிய வருகிறது.