காதல்
யாருமில்லை என்று நினைத்து
தனிமையில் நான் இருந்த பொது
துணையாக நீ வந்தாய்.
எத்தனையோ துன்பன் என் மனதில்
சுமந்திருந்தேன் – நீ வந்த போது
துன்பம் கூட தூசி போல் பறந்து விட்டது.
உன் கை பிடித்த நாள் முதல்
பயம் என்றதே வந்ததில்லை – என்
கை ரெகைகள் கூட உன் கை பிடிப்பதற்காய்
தினம் ஏங்குதடா.
விளி மூடும் போதிலும் அதை ரசிக்க
நீ விளித்தாய் – நீ நடிக்கும்
அழகைப் பார்க்க விளி மூடி
நான் நடித்தேன்.
உன் தோள் சாய்ந்த போது தொல்லை
என்றதே வந்ததில்லை – உன்
தோள் இல்லா நேரத்தில் என்
தொள்கள் என்னை கொல்லுதடா.
நீ கொடுத்த ஒரு ரூபாய் நாணயம்
மறந்துபோய் சாமியிடம் வைத்துவிட்டேன்
என் மனதில் ஏனோ உன் நாணயத்தின்
எண்ணம் வந்தது மறுபடியும் அதை
எடுத்து என் மனதில் வைத்து விட்டேன்.
நான் சிந்தும் கண்ணீர் சொல்கிறது – உன்
கதலை அவனிடம் சொல்லிவிடு என்று – இல்லை
என்றால் உன் மனதை கேட்டு விடு என்கிறது.
கவிதை எனக்கு பிடிகாது – இருந்தும்
உனக்கு கவிதை பிடிகும் என்பதால் – என்
மூச்சே கவிதை தான் என்று சொன்னதடா.