Saturday 24 September 2011

அம்மாவின் தந்திரம்


விஜயகாந்தை தனியாக நிற்க வைத்து, திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி பிரதான எதிர்கட்சியாக தேமுதிகவை கொண்டு வர முயற்சிக்கிறார். இனிமேல் அதிமுக, திமுக இரண்டு முனை போட்டி என்பது போய், அதிமுக, தேமுதிக போட்டி வரும்படி செய்கிறார். இனிமேல் திமுக இல்லாமல் போய்விடும், ஏற்கனவே எதிர் கட்சி என்ற அந்தஸ்தை இழந்து முகவரி இல்லாமல் தவிக்கிறது திமுக, இந்த லட்சணத்தில் தேமுதிகவின் வளர்ச்சி, திமுகவின் வீழ்ச்சி. இந்த உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக திமுகவை விட அதிக இடங்களை கைபற்றி திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளும். இது அம்மாவின் அறிவுரையில் விஜயகாந்த் நடத்தும் தந்திரம். அப்படி உண்மையில் அம்மாவிடம் மன கசப்பு இருந்திருந்தால், திருச்சி மேற்கு தொகுதியில் தனியாக நிற்கிறோம் என்று வேட்பு மனு தாக்கல் செய்திருக்கலாம் அல்லவா? அப்படி இல்லையென்றால், மூன்றாவது அணி அமைத்து போட்டியிடிருக்கலாம் அல்லவா? தேமுதிக திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடாது, ஏன் என்றால் மறைமுகமாக அதிமுகவுடன் கூட்டணியில் தான் உள்ளது. திமுகவை தமிழகத்தில் இருந்து அகற்ற அதிமுகவும் தேமுதிகவும் போடும் ராஜதந்திரம். யாரை வைத்து அதிமுக வை அழிக்க நினைத்தாரோ துண்டு, அவராலே அந்த கட்சி அழிய போகிறது. இனி வரும் காலங்களில் அதிமுக, தேமுதிக தான் பிரதான கட்சிகள். எத்தனை முனை போட்டி என்றாலும், இனி வரும் காலங்களில் இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி இருக்கும்.