Thursday, 15 September 2011

தினமும் ஒயின் குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்

நடுத்தர வயதில் அதாவது 50 வயதில் இருந்து தினமும் இரவு உணவுடன் சிறிய அளவு ஒயின் அருந்தி வந்தால் வயதான காலத்தில் பிரச்சனைகள் ஏதுமின்றி அவதிப்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
இந்த பழக்கத்தால் வயதான காலத்தில் புற்றுநோய், இதயநோய்கள் ஆகியவற்றை தவிர்க்க முடியும். இரவு உணவுடன் ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் என்ற அளவில் ஆல்கஹால் சாப்பிடுவது நல்லது.
இப்படி இருப்பவர்களின்  மூளை வயதான காலத்தில் கூர்மையாக செயல்படும். நல்ல மனநலத்துடன் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்வர்டு பல்கலைகழக ஆய்வாளர்கள் 12 ஆயிரம் பெண் மருத்துவ தாதிகள் நடுத்தர வயதில் குடித்திருந்த நிலையில் அவர்களது 70 வயது வாழ்க்கை மிக சிறப்பாக இருந்துள்ளதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
நடுத்தர வயதில் இருந்து சிறிய அளவு ஆல்கஹால் அருந்துவதன் மூலம் பிற்கால வாழ்க்கையின் உடல் நலம் 28 சதவீதம் அதிகரிக்கிறது.