Saturday, 9 May 2020

சுகாதார துறையினரின் வலிகள் மிகுந்த பதிவு

சுகாதார  துறையினரின் வலிகள் மிகுந்த பதிவு

மன வலிகள் மிகுந்த பதிவு கூட

எங்க வீட்டை சுத்தமா மறந்துட்டீங்களா எப்பவுமே ஆபீஸ் தானா கேட்டா corona தடுப்பு பணி சொல்றீங்க எங்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள் உங்களை நம்பித்தான் நாங்க இருக்கோம் உங்களுக்கு எதுனா ஒண்ணு நான் எங்களால தாங்க முடியாது அதும் இல்லாம நீங்க செய்யறதை யாராவது பாராட்டுகின்றார்களா எதற்கெடுத்தாலும் மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சி  துறை  இவர்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள் ஆனால் நீங்களோ சுகாதார  துறை,சுகாதாரத் துறை என்று பெருமையாக கூறுகிறீர்கள் உங்களை என்ன தான் சொல்லுது என்று மனைவியின் குரல் கேட்டு அலுவலகம் செல்ல தயாராக இருந்தவன் இருக்கையில் அமர்ந்தான் மனைவியை அழைத்தான் இங்கே வா
அருகில் வந்து அமர்ந்தாள் என்ன சொல்லுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு என்றாள்
அவன் கூறினான் எங்களுக்கு பாராட்டு தேவை இல்லை மற்றவர்கள் பாராட்டுவார்கள் என நினைத்து நாங்கள் வேலை செய்யவில்லை நாங்கள் சேவையாக செய்கிறோம் உனக்கு ஒன்று தெரியுமா வானத்தில் பட்டம் பறக்கிறது பட்டம் பறப்பதற்கு என்ன தேவை என்றான் மனைவி கூறினால் இது என்ன பெரிய விஷயம் பேப்பர் வேணும் காத்தாடி பண்ண குச்சி வேண்டும் பறப்பதற்கு வால் வேண்டும் மேலே செல்ல நூல் வேண்டும் அவ்வளவுதான் என்றாள்
மனைவி கூறியதைக் கேட்டு சிரித்தான் பட்டமாக நூலாக குச்சியாக வால் ஆக அனைத்து துறைகளும் இருந்தாலும் பட்டம் பறப்பதற்கு காற்று அவசியம் காற்று கண்களுக்கு தெரிவதில்லை காற்று இல்லையேல் எதுவும் இல்லை நாங்கள் காற்று போல யார் கண்களுக்கும் தெரிய மாட்டோம் என்று கூறிவிட்டு அலுவலகம் நோக்கி புறப்பட்டான்

வலிகள் காற்றைப்போல
தோழமையுடன், சுகாதார துறை பணியாளர்கள்   👌💐💐💐💐💐


Best regards,