Friday, 8 May 2020

மருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு...!

மருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு...!

மதுக்கடைகளை தற்போது திறந்தால்?

மருத்துவராகிய நாங்கள் CORONA எனும் நோயை மக்களிடம் இருந்து  விரட்டுவது என்பது.....

குருட்டு திருடன் இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடுவது போல் ஆகிவிடும்...

நோயின் தீவிரத்தை உணர்ந்து பணியாற்றிய எங்களுக்கு

 உங்கள் அறிவிப்பு

தரையிரங்கும் விமானத்தின் சக்கரத்தை கழட்டி விடுவது போல் உள்ளது

ஆம்...

இத்தனை நாட்கள்,

 துக்கம் மறந்து, தூக்கம் துறந்து, பனியாற்றிய காவல்துறை மருத்துவதுறைக்கு கிடைக்கும்
சாட்டையடியாகவே இதை கருதுகிறேன்...

சரி இனி மருத்துவராக பேசுகிறேன்!

எந்த ஒரு வியாதிக்கும் நமது உடம்பே அதற்கான மருந்தை உடலில் உற்ப்பத்தி செய்கிறது

CORONA விஷயத்தில் என்ன நடக்கிறது

இது பயங்கரமாக பரவக்குடிய நோய்

ஆனால்

பயங்கரமாக மனிதனை கொல்லகுடியது அல்ல

அப்படியானால், ஆம்

இந்நோய்க்கும் இயற்கையாகவே நமது உடலே மருந்தை(Antibody) உற்பத்தி செய்கிறது!

 அதன் பெயரே எதிர்ப்பு சக்தி!

அப்படியேன்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருக்கும்!

எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள்,

யார் அவர்கள்,

மதுபிரியர்கள்
புகைப்பவர்கள்
வயதானவர்கள்
சக்கரை வியாதியினர்

கடந்த 40 நாட்களாக கடை பிடித்த ஊரடங்கு மற்றும் Tasmac முடியது போன்றவற்றால் அரசு திறம்பட நோயின் KILLING RATIO என்பதை கட்டுக்குள் வைத்தது

ஆனாலும் பறவியதே...

ஆம்

மேலே சொன்னது போல பரவுமே தவிற கொல்வது குறைவு

காரணம்

அரசின் நடவடிக்கை

ஆனால் 7ம் தேதி திறக்கும் TASMAC ஆல் அத்தனையும் பாலாக போகிறது

இந்த மது என்ன செய்துவிடமுடியும் என்று தோன்றினால்

இதை முழுவதும் படியுங்கள்:

மது மனிதனின் எதிர்ப்பு சக்தியை அதி விரைவாக அளிக்க்கூடிய ஒன்று

40 நாட்கள் மேல் இதை உட்கொள்ளாத உடம்பில் இயற்க்கையாக எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

அதிகமாகுதோ இல்லையோ நிச்சயமாக குறையாது

அதுசமயம் அவருக்கு CORONA தொற்று ஏற்ப்பட்டால் அவருக்கு மருத்துவம் செய்து நோயிடம் இருந்து மீட்பது எளிது

இதுவே குடித்தவருக்கு எற்ப்பட்டால் வைத்தியம் கூட பார்க்க இயலாது

மருத்துவராக சொல்கிறேன்

உலகிலே நம் நாட்டில் மட்டும் தான் இந்நோயின் Killing ratio மிகவும் கட்டுக்குள் உள்ளது

திவிறமாக பரவக்குடிய நோய் எளிதாக பரவும்

இனி எளிதாக கொல்லும்

 TASMAC ஐ திறந்தால்.

மருத்துவராக கொல்லும் என்று சொல்வது தவறு தான்...

ஆனால் உன்மை அது தான்!

அரசே காதுகளை திறந்து கேளுங்கள்:

எங்களுக்கு

கைதட்ட வேண்டாம்..
ரானுவம் கொண்டு மலர் தூவ வேண்டாம்...

6 மாதங்களுக்கு மதுகடைகளை மூடுங்கள்...

என்னை கேட்டால் நிரந்தரமாக மூட சொல்வேன், ஆனால்

எதார்த்தம் என்ன என்பதை நானும் உணர்வேன்...

மூடியதால் சட்ட ஒழுங்கு பிரச்சனையா?

இத்தனை நாட்கள் காத்து கவனித்த காவல்துறை இனி "பாத்து கவணிக்க" ஆனை பிறப்பியுங்கள்...

காவலும் மருத்துவமும் இரு கரங்களாக செயல்பட்டு மக்களை காப்பாற்றினோம்...

கடைசியில் எது எதோ காரணங்களை காட்டி கடையை திறந்து கஷ்டப்படுத்தீராதீர்!

ஒரு வேலை திறந்தால்...

பகீறங்கமாகவே எச்சரிக்கிறேன்!

 வரலாற்றில் உங்கள் அரசை வசைபாடும் படி நிகழ்வுகள் நிகழும்...

நோய் பரவுதல் அடுத்த கட்டத்தை அடைந்த நேரத்தில் இதை செய்வது...

கடிக்கவரும் நாயிடம் கருணை போதிப்பது போல் ஆகிவிடும்

மருத்துவராக அல்ல மனிதனாக கேட்கிறேன்...

மதுகடைகளை திறக்காதீர்கள்🙏🏻Best regards,