கணணி என்றாலே வேகம் என்றுதான் பொருள், இப்படி இருக்க கணணியில் இருக்கும் பயன்பாடுகளை அணுகுவதில் மட்டும் ஏன் இவ்வளவு தாமதம் என்று நம்மில் பலர் நினைப்பீர்கள்.
ஒரு சிலர் கணணியில் உள்ள பயண்பாடுகளை வேகமாக அணுகுவதற்கு டாஸ்க்பாரில் ஐகானை செட் செய்து வைத்திருப்பார்கள். இதில் ஒரு சில பயன்பாடுகளை மட்டுமே பெற முடியும். சிஸ்ட்டம் ட்ரேயில் இருந்தவாறு பல்வேறு விதமான பயன்பாடுகளை பெற ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது. இதன் மூலம் நாம் விரைவாகவும் எளிமையாவும் பயன்பாடுகளை பெற முடியும்.

இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ட்ரேயில் ஒரு ஐகான் இணைந்திருக்கும். அந்த ஐகானை பயன்படுத்தி மிக வேகமான பயன்பாடுகளை வேகமாக திறக்க முடியும்.


பயன்பாடுகளை திறக்க வசதி இல்லையெனில் நாமலே புதிய பயன்பாடுகளை திறப்பதற்கான வழியினை உருவாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருள் ஒரு போர்ட்டபிள் மென்பொருள் ஆகும்.