Sunday, 31 May 2020

பிஸ்கட்_சாப்பிடாதீர்கள்....!!

பிஸ்கட்_சாப்பிடாதீர்கள்....!!

#எச்சரிக்கிறார்கள்_மருத்துவர்கள்...

பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது.

பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில் பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது. 'நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி கிடைக்கிறது' என்ற அறிவிப்போடு விற்பனைக்கு வரும் பிஸ்கட்டுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

இப்படி, நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா? உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா?

#நிச்சயம்_சாப்பிடக்கூடாது' என்கிறார்கள்
ஊட்டச்சத்து நிபுணர்கள்...

'இன்றைய சூழலில் ஆபீஸ் மீட்டிங் தொடங்கி டீ பிரேக் வரை எல்லா இடங்களிலும் பிஸ்கட் முக்கிய உணவுப்பொருளாக இருக்கிறது.

சிலர் பிஸ்கட்டை உணவாகவே உண்டு வாழ்கின்றனர்.

உண்மையில், பிஸ்கட் என்பது கழுத்தைச் சுற்றிய பாம்பு போல ஆபத்தான ஓர் உணவு என்பதைப் பலர் அறிவதில்லை. பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப் படுகிறது.

பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன.

பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (#Hydrogenated_Fat) சேர்க்கப்படும். இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (#TransFat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும்.

பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச்சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.

சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.

சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.

`லோ இன் கலோரிஸ்' (Low in Calories) என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டை லோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.

பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

'கட்டாயம் பிஸ்கட்டைத் தவிர்க்க அறிவுறுத்தப் படுகிறவர்கள் தவிர மற்றவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பிஸ்கட் சாப்பிடலாம். க்ரீம் பிஸ்கட் என்றால் ஒன்றோ, இரண்டோ போதும். இது சிறியவர், பெரியவர் அனைவருக்கும் பொருந்தும்'' என்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் வீட்டிலேயே பிஸ்கட் செய்து சாப்பிடுவது தான் சிறந்த தீர்வு. அதையுமே அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ள வேண்டாம்' என்றும் அறிவுறுத்துகிறார்.

#குழந்தைகளுக்குபிஸ்கட்கொடுப்பதுசரியா?
-குழந்தைகள்நல சிறப்பு மருத்துவர்.

'பிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவது தான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது.

பெரும்பாலானவர்கள், குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகை பிஸ்கட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன.

இவையாவும் செயற்கை ஃப்ளேவர்கள். அதேபோல, க்ரீம் பிஸ்கட்டுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். பெரியவர்களே வெள்ளைச் சர்க்கரை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப் பட்டு வரும் நேரத்தில், வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதென்பது, பல்வேறு பிரச்னைகளுக்குத் திறவுகோலாக அமையும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, காலை பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்பும் பெற்றோரைப் பார்க்க முடிகிறது.

இதனால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும்.

பிரேக்கில் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன், கூடுதல் சத்துகளைக் கொடுக்கும். மாலை நேரத்தில் பிஸ்கட் சாப்பிடுவது, அவர்களை மந்தப்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.'...Best regards,

Saturday, 30 May 2020

அரசு ஊழியர் யார்?

அரசு ஊழியர் யார்?


அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா? சட்டம் சொல்வதென்ன?

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 பிரிவு.2(3)-ன் படி, ஒரு அரசு ஊழியர்கள் என்பவர் அரசு தன் ஆட்சியின் காரியங்களை ஆற்ற பணி அல்லது பதவிக்கு அமர்த்தும் நபர் என வரையறுக்கபடுகின்றது. இது இந்திய ஆட்சிப் பணியிலிருந்து (I.A.S) கடைநிலை ஊழியர் வரை பொருந்தும்.

”Officer” என்பது அலுவலர் அதாவது அலுவல்களை செய்பவர் ஆவார். ”Minister’ என்பது செயலாற்றுப் பணியாளர், என பொருள்படும். ”அமைச்சு’ என்றால் பணி செய்தல், உதவியாயிருத்தல், கொடுத்துதவுதல் என பொருள். அதிகாரி என்றால் அரசு நிர்வாகத்தில் ஆனைகளை நடைமுறைபடுத்தும் பொறுப்பிலுள்ள அலுவலர் என பொருள். ஆக அனைத்தும் மக்களுக்கு பணி செய்யவே ஒழிய. அதிகாரி என அதிகாரம் செய்தல் சட்ட விரோதம் ஆகும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: (Classification of Government Employees)

அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது..

1. தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6,600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை வகை l (கிரேடு) என்றும், (முன்பு A Class)

2. தர ஊதியம் ரூபாய் 4,400 முதல் 6,600க்குள் பெறும் அரசு அலுவலர்கள்/ஆசிரியர்களை வகை II (கிரேடு) என்றும், ( முன்பு B Class)

3. தர ஊதியம் ரூபாய் 4,400க்கு கீழ் பெறும் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களை வகை III & lV (கிரேடு) என்றும் பிரிக்கப்படுகிறது. (முன்பு C & D Class).

அரசு ஊழியர் பெறும் சம்பளம்

அடிப்படை சம்பளம்( Basic salary), பஞ்சப்படி எனும் அகவிலைப்படி(Dearness Allowances), பயணப்படி (Travelling Allowances), வீட்டுவாடகை படி (House allowance), அரசு ஊழியர் ஆரோக்கிய இன்சூரன்ஸ் திட்டம் (Govt. Employees Health Fund Scheme), வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பு (provident fund) பொங்கல் பரிசு (Pongal Gift), விழா முன்பணம்(Festival Advance), மருத்துவ படி (Medical Allowance) விடுப்பு பணம்(Encashment of Leave) ஓய்வூதியம், இன்னும் பல

அரசு ஊழியர்களுக்கான செலவு

மாநில அரசின் மொத்த வருவாயில் மாநில வரிவருவாய் ரூ. 99,590.13 கோடி வரி அல்லாத ஏனைய வருவாய் 12,318. கோடியில் ரூ.66,908 அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதிற்கும் செலவிடப்படுகிறது.

அரசின் முக்கிய துறைகள்

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை, வேளாண்மை துறை,கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை

எரிசக்தி, சுற்றுச்சூழல் (ம) வனத்துறை, நிதி துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை

மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை, உயர்கல்வி துறை,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழில் துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை, தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை, சட்டத்துறை, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை, திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொது துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக் கல்வி துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, சுற்றுலா,பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து துறை, இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, பொது (தேர்தல்கள்) துறை,பொதுப்பணி துறை. இத்தனை துறைகளில் ஊழியர்கள் உண்டு.

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 சொல்வது என்ன?

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும், மாநில அரசிடம் ஊதியம் பெறும் சட்ட சபை உறுப்பினர்களும், அமைச்சர்களும், வாரியத்தலைவர்களும் அரசு ஊழியர்கள் ஆவார். எனவே இவர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களே.

விதி-3

எந்த அரசு ஊழியரும் வரதட்சணை கொடுக்கவோ, பெறவோ கூடாது.

விதி-3-A

எந்த அரசு ஊழியரும் தனியார்களின் கௌரவ விழா, ஓய்வி விழா, நிறுவனங்கள், பொதுமக்கள் அவர்களுடன் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களை அரசின் முன் அனுமதியின்றி செய்தல் கூடாது.

விதி-5

எந்த அரசு ஊழியரும் பங்குச் சந்தையில் ஈடுபடுதல், வேறு முதலீடுகள் செய்தல், தன் சார்பாக குடும்ப உறுப்பினர்களை ஈடுபடச் செய்தல், எந்த தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.

விதி-6 (4) (aa)

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி யாருக்கும் 10,000 ரூபாய்க்கு மேல் அசையும் சொத்தை குத்தகை, அடமானம், வாங்குதல், விற்றல், கொடை செய்தல், பரிமாற்றம் செய்தல் போன்றவற்றை அரசின் அனுமதியின்றி செய்தல் கூடாது.

விதி-7

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி எந்த வியாபாரம், தொழிலில் ஈடுபடக்கூடாது.

விதி-11

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி நாளிதழ், தொலைக்காட்சி, வானொலி பிரசுரம் போன்றவற்றை ஈடுபடுதல் கட்டுரை வரைதல் செய்தல் கூடாது.

விதி-12

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி பொதுவிழாவில் நடந்த விசயங்களை, கருத்தை சொல்லக் கூடாது. அரச்சின் கொள்கைகள், அரசு பரிபாலனம், அரசின் மற்ற அரசுகளுடனான உறவுகள் பற்றி பேசுதல் கூடாது. அலுவலகம் சாராத கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், தலைமை ஏற்றல் கூடாது.

விதி-14

எந்த அரசு ஊழியரும் தன் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் ஈடுபடுதலை தடுக்க வேண்டும்.

விதி-14-A

எந்த அரசு ஊழியரும் மதம், இனம், இடம், பிறந்த இடம், குடியிருப்பு, மொழி, ஜாதி சம்மந்தமான எந்த அமைப்பிலும் உறுப்பினராகவோ, சம்மந்தப்பட்டோ இருத்தல் கூடாது

விதி-17

எந்த அரசு ஊழியரும் நெருங்கிய சொந்தங்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியவோ, தன் பணி சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியமர்ந்திருப்பதையோ அனுமதிக்கக் கூடாது.

விதி-20

எந்த அரசு ஊழியரும் முழுமனதுடன், முழு ஈடுபாட்டுடன் பணியில் இருக்க வேண்டும்.

விதி-20-B

எந்த அரசு ஊழியரும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்திரவு கொடுத்தல், பாலியல் ஆசையை முன்மொழிதல், தொடுதல், கேட்டல், வேண்டல், சைகை, ஆபாசப்படம் காட்டுதல் போன்ற தேவையற்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது.

பிரிவு-21

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி அலுவலக நேரத்தில் அல்லது அலுவலின் போது குடித்திருக்கக் கூடாது.

இதையெல்லாம் ஊழியர்கள் கடைபிடிக்கிறார்களா?

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா! சட்டம் சொல்வதென்ன?

 அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து.19.(1)(c) அமைப்புகள் மற்றும் சங்கங்கள் வைத்துக் கொள்ள உரிமை அளிக்கிறது.

 ஆனால் ஷரத்து 19(4) இன் படி ”இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்தின் மீது அக்கரை கொண்டு, சொல்லப்பட்ட உரிமையில் நியாயமான கட்டுப்பாட்டை விதிக்கக் கூடிய நடைமுறையிலுள்ள சட்டம் எதையுமோ அரசு இயற்றிய உட்கூறுகள் பாதிக்கக் கூடாது.

 இதை P.N.Ramasamy Vs The Commissioner of Coimbatore AIR 1968 (Masdras) 383 Per Ramakrishna J.- என்ற வழக்கில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 O.K.Ghosh Vs.E.X.Joseph, AIR 1963 SC 812 என்ற வழக்கில் சங்கங்கள் அமைப்புகளுக்கு உரிமை கொடுக்கப்பட்ட உரிமை ஒரு உத்திரவாதமான உரிமை என கொள்ள முடியாது, தகுந்த காரணங்கள்: இருப்பின் அவை திரும்பப் பெறப்படும் என் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 விதி-16 இன் படி எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி சங்கத்தில் அமைப்பில் உறுப்பினராக இருக்கக் கூடாது. விதி-22-A இன் படி அலுவலக நேரத்தில், அலுவலக வளாகத்தில் ஊர்வலம் கூட்டங்கள் நடத்தகூடாதென சொல்லப்பட்டுள்ளது.

மேலும் All India Bank Employees’s Association Vs. National Industrial Tribunal என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம், “ வேலைநிறுத்தம் என்பது அரசியலமைப்பு சட்டம் ஷரத்து-19-இன் படி அடிப்படை உரிமையில்லை, ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை குறிப்பிட்ட எல்லைக்குள் வெளிப்படுத்தலாம் எனவும், தங்கள் குறைகளை வேலைநிறுத்தல் என்ற உரிமையை கோரமுடியாது எனவும் தீர்ப்பளித்தது.

இறுதியாக!

எப்படியாவது அரசு வேலைக்கு செல்வது என பெரு முயற்சி எடுத்து சேர்ந்து, அரசின் அத்தனை பணப்பலன்களையும் பெற்று பணிக்கு வந்தது மக்கள் பணி ஆற்றவே. 2002ல் தமிழகத்தில் டெஸ்மா (Tamil Nadu Essential Services Maintenance Act (TESMA), 2002) போன்ற சட்டத்தை இயற்ற அரசை தள்ளியது யார் என எண்ண வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீத அரசு ஊழியர்களுக்கு அரசு செலவிடும் தொகை 60 சதவீதத்துக்கும் மேல்.என்பதை நினைவுக்கூர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென்பதே மக்களின் விருப்பம்

மேலும், ஊழியர்கள், அலுவலர்கள் வரும் நேரம், செல்லும் நெரம், அலுவலர்கள் கள ஆய்வு செல்லும் இடம் நேரம்,என அனைத்து பணிகளைச் குறிப்பிடும் மாவட்ட அலுவல கையேடு(District Office Manual), அரசு ஊழியர் நடத்தை விதிகள்(the tamil nadu government servants' conduct rules, 1973), தமிழ்நாடு அரசு சார்நிலை ஊழியர்கள் பணி விதிகள்(tamilnadu government subordinate service rules) என ஒவ்வொரு துறைக்கும் உள்ள பணிவிதிகளை அனைவரும் தெரிந்து அதன்படி நடந்தால் அரசு இயந்திரம் சிறக்கும்Best regards,

வெட்டுக்கிளிக்கும் கரிச்சான் குருவிக்கும் இருக்கும் தொடர்பு பத்தி பார்ப்போம்!!

வெட்டுக்கிளிக்கும் கரிச்சான் குருவிக்கும் இருக்கும் தொடர்பு பத்தி பார்ப்போம்!!



வெட்டுக்கிளி பற்றி பேசும் போது இவனை பற்றி பேசாமல் இருக்க முடியாது... ஆமாம் இவனின் பிரதான உணவே வெட்டுக்கிளி தான்...

இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்பவர்கள். 

ஒரு நாளைக்கு எவ்வளவு பூச்சிகளை உண்ணுகிறார்கள் என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

வயிறு நிறம்பியபிறகு சாப்பிடும் பூச்சிகளை ஒன்றிரண்டாக அரைத்து வெளியில் கக்கிவிடுகிறார்கள். அப்படி கக்கிய பூச்சிகள் மண்ணிற்கு சிறந்த உரமாக செயல்படுகிறது.

இவனை போன்றவர்களின் எண்ணிக்கை குறைய குறைய வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும்... அவன் தான் கரிச்சான் குருவி...

இவனுக்கு மாட்டுக்காரன், இரெட்டைவால் குருவி, வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு.

கரிச்சான் குருவிகள் கிராமப்புறங்களில்  ஆடு மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும். அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் கிளப்பிவிட அவை பறக்கும்போது, கரிச்சான் குருவி இறக்கைகளை விரித்தபடி வைத்துக் கொண்டு ‘கிளைடர்’ விமானம் போல பறந்து சென்று பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு அதே மூச்சில் தான் இருந்த இடத்திற்கே வந்து சேரும் ‘பூமரேங்’ என்னும் ஆயுதம் போல.

இவர்களை மின் கம்பிகள், விளக்குக் கம்பங்கள் இவற்றின் மீதும் பார்க்கலாம். அவ்வப்போது சிறிது தூரம் பறந்து சென்று இருந்த இடத்திற்கே திரும்புவதைக் காண முடியும். இதுவும் அவை தன் உணவை அடையும் பொருட்டே.

இவர்களுக்கு பயம் என்பதே துளியும் கிடையாது. இவர்கள் தன்னைவிட உருவத்திலும், பலத்திலும் பெரிதான காகம், கழுகு, பருந்து போன்ற பறவைகளைத் துரத்தித் துரத்தி விரட்டுகிறார்கள். அந்தப் பறவைகளும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று திரும்பிப் பாராமல் அதி வேகமாகப் பறந்து செல்லும். இந்தக் காட்சி பார்க்க வேடிக்கையான ஒன்று. King crow என்ற பெயர் வரக் காரணமும் இதுவே.

சில பறவைகள் தங்களது சிறகுகளில் பேன் போன்ற சிறு பூச்சிகள் சேராமல் தடுக்க ஒரு உத்தியினைக் கையாளும். அவை எறும்புப் புற்றின்மீது சென்றமரும். அப்போது அவற்றின் மீது ஏறும் எறும்புகள் வெளியிடும் ஃபார்மிக் அமிலத்தில் பேன்கள் இறந்து விடுகின்றன. இவர்களும் அப்படி தான்...

இவர்களின் அருமை இன்று புரிகிறதா...
உணவு சங்கிலியில் ஒரு சங்கிலி அழிக்கப்படுவதின் விளைவுகளை இன்று உணர்கின்றது இந்த மனித இனம்...

பாருங்கள் இன்னும் எத்தனை பிரச்சினைகளை சந்திக்க காத்திருக்கிறது இந்த மதிக்கெட்ட மனித சமுதாயம்...

கரிச்சான் மட்டுமல்ல... அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்போம் இல்லையேல் இப்படியே மனித இனத்தின் அழிவை பார்த்து ரசிப்போமாக...

பறவைகளை பாதுகாப்போம்!
இயற்கைக்கு புத்துயிர் ஊட்டுவோம்!!
மனித இனத்தை பேரழிவில் இருந்து காப்போம்...!!!

Best regards,

அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண்

அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண்

என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.
அதனை நீங்களும் பார்த்திருக்கலாம்.
இந்த எண்கள் மிகவும் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும்.*

ஆனால், அதன் அருகில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன? என்பது பல பேருக்குத் தெரியாது. அதற்காகத்தான் இந்தப் பதிவு :

1. ந.க எண் என்றால், நடப்புக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

2. ஓ.மு. எண் என்றால், ஓராண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

3. மூ.மு எண் என்றால்  மூன்றாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

4. நி.மு. எண் என்றால் நிரந்தர முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

5. ப.மு. எண் என்றால், பத்தாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்.

6. தொ.மு எண் என்றால், தொகுப்பு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

7.ப.வெ எண் என்றால்  பருவ வெளியீடு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

8. நே.மு.க எண் என்றால்,  நேர்முகக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

மேற்கண்ட வார்த்தைகளில் ந.க.எண்  (நடப்புக் கணக்கு எண்) மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும்.

நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்ட அலுவலருக்கு, மேல்மட்ட அதிகாரி எழுதும் கடிதம் ஆகும். இது நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை கீழ்மட்ட அலுவலர் விரைந்து  அளிக்க  வேண்டும்.

மேற்கண்ட எண்கள் இல்லாமல் இருந்தால்...?
மேற்கண்ட குறிப்பு எண்கள் ஏதும் இல்லாமல் அரசு அலுவலகங்களில் இருந்து கடிதம் உங்களுக்கு வந்தால்,  அந்தக் கடிதம் சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் அலுவலகப்பதிவேட்டில் பதியாமல் அரசு அலுவலர்கள் அனுப்பிய கடிதம் என்று நீங்கள் முடிவுசெய்து கொள்ளலாம்.

கடிதம் அனுப்புகின்ற ஊழியர்  தனது  கடமை தவறியுள்ளார் என்பதை இதுபோன்ற கடிதத்தை வைத்து நிரூபிக்கலாம்


.Best regards,

Friday, 29 May 2020

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

 வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு:-

கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது.

வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை

இப்போது விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள் நாம் சாதாரணமாக நம் பகுதிகளில் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள். ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை மிகவும் விசித்திரமானது.

பொதுவாகத் தனித்தனியாகக் (Solitary Phase) குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கு நிலத்தில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் எப்போதும் ஆபத்தானவை அல்ல. வறட்சி ஏற்படும் காலகட்டங்களில் ஆங்காங்கே உதிரிகளாய் இருக்கும் இவை பசுமையான சிறிய நிலப்பரப்புகளுக்கு வந்து சேர்கின்றன. அவ்வாறு பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவுதேட நேரும்போது அவற்றின் நரம்புமண்டலம் தூண்டப்பட்டு செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருள் அதிக அளவில் அதன் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்போதுதான் அவை ஆபத்தான அச்சுறுத்தும் உயிரினங்களாக மாற்றம் பெறுகின்றன.

வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தும் படிநிலை

இந்த செரட்டோனின் உடலில் சுரந்த சில மணி நேரங்களில் அவற்றின் குணநலங்களில் பெரும் மாறுதல் ஏற்படுத்துகிறது. தனித்து வாழும் வெட்டுக்கிளிகள் அப்போதுதான் சமூகமாய் ஓத்துழைத்து வாழும் கூட்டு வாழ்வுக்குத் (Gregarious phase) தூண்டப்படுகின்றன. அவற்றின் உணவு உண்ணும் பழக்கம், நடத்தை, வேகம் என அத்தனையும் மாற்றமடைகின்றன. இந்நிலையில் சரியான ஈரப்பதமும் ஈரமண்ணும் வாய்க்கப்பெற்றால் அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவரும் அடுத்த தலைமுறை வெட்டுக்கிளிகள் உருவ அமைப்பிலும் நிறத்திலும் ஏன் மூளை அளவிலும்கூட மாறுதல் பெறுகின்றன. இந்த மாற்றங்கள் முட்டைகள் பொரித்தபின் அவற்றின் வளரிளம் பருவத்தில் (Nymph) நடைபெறுகின்றது. பெற்றோரிடமிருந்து முற்றிலும் தோற்றத்திலும் நடத்தையிலும் வேறுபட்ட இந்தத் தலைமுறை பெரிய மூளை, குட்டையான கால்களுடன் அதிக தூரம் பயணிக்கும் தகவமைப்பைப் பெறுவதோடு பெரும் அழிவு சக்தியாக உருவெடுக்கின்றது.

பலநூறு முட்டைகளையிடும் ஒரு வெட்டுக்கிளி தன் வாழ்நாளில் மூன்று முறைகள் வரை முட்டையிடுகிறது. இவை இலைகளில் மட்டுமின்றி மண்ணிற்கு அடியிலும் முட்டையிடுகின்றன. பெரும் கூட்டமாக மிகக்குறைந்த கால அவகாசத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் பெருகும் இந்த வெட்டுக்கிளிகள் தம் கண்ணில் படும் பசுமை அத்தனையையும் அழித்து உண்டபடி பெரும்பசியுடன் கூட்டமாய் அடுத்தடுத்த பசுமை நிலங்களை நோக்கி நகர்கின்றன. இவற்றின் கண்ணில்படும் எந்தத் தாவரமும் தப்ப முடியாது. இவை ஒரு நாளைக்கு நூறு கிலோமீட்டர்களுக்கும் மேல்கூட பயணிக்க வல்லவை. தொடர்ந்து பசுமையை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்கும் இவை செங்கடலையே தரையிறங்காது தாண்டக்கூடியவை. சில ஆண்டுகள்கூட தொடர்ந்து அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டே தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும் திறன் கொண்டவை. பாலைவன லோகஸ்ட் என்ற வெட்டுக்கிளி இரண்டரை மாதங்கள் முதல் ஐந்து மாதங்கள்வரை வாழக்கூடியது.

ஆச்சரியகரமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் அவை தாமாகவே தமது முந்தைய solitary phase ஐ அடைந்து மீண்டும் ஆபத்தற்ற ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளி இனங்களில் வெறும் 22 இனங்களே இந்த Locust swarm எனப்படும் அழிவு சக்தியாக மாற்றம் பெறும் திறனுள்ளவை.

உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கட்தொகையை பட்டினிக்குத் தள்ளும் அளவுக்கு அவை திறன்பெற்றவை என்று National Geographic இவற்றைப்பற்றி பெரும் கவலைதரும் தகவலைப் பதிவு செய்கிறது.

இந்த ஆபத்தை உலகம் எப்படிக் கையாளுகிறது?

அடுத்ததாக இந்த ஆபத்தை எப்படி உலகம் எதிர்கொள்கிறது என்று பார்க்கும்போது ஏறக்குறைய கொரோனா போன்ற கையறு நிலையே காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகளின் விரைவான இனப்பெருக்கம், தொடர்ந்த வலசை (migration), பெரும் பரவல் மற்றும் எண்ணிக்கையால் இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது. தற்போதைய சூழலில் வானிலிருந்து தெளிக்கப்படும் வேதிப் பூச்சிக்கொல்லிகளே உலகம் முழுதும் இதற்கு தீர்வாகக் கருதப்படுகிறது. இந்திய அரசும் மாலத்தியான் எனப்படும் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் (!) தாக்கி அழிக்கும் நச்சை இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இது அதிகம் நீர்க்கப்பட்டுதான் (Ultra Low Volume) பயன்படுத்தப்படவேண்டும் என்றாலும் இதன் நச்சுத்தன்மை விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே அழிக்கும் என்பதோடு அதன் நச்சு எச்சம் நீரிலும் நிலத்திலும் கலக்கும் என்பது மறுக்கமுடியாது உண்மை.

இந்த வெட்டுக்கிளிகள் விரைவில் தொடர்ந்து இடப்பெயற்சி அடைந்து விடுவதாலும் பல சதுரகிலோமீட்டர் தொலைவுகளுக்கு இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுவதாலும் இந்த பூச்சிக்கொல்லித் தெளிப்பு பெரிய அளவில் பயனளிப்பதில்லை. இந்நேரத்தில் இயற்கையிலேயே பூச்சிகளை கட்டுப்படுத்தும் பறவைகள் மற்றும் விலங்குகளை நாம் பெருமளவில் ஒழித்துவிட்டதையும் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

விழிப்புடன் இருக்கிறதா தமிழகம்?

ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் வலசையை இராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம். ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும் இவற்றின் இடப்பெயற்சியை சரியாக யாராலும் கணிக்கமுடியாது என்பதே அறிவியல் உண்மை. இவை தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் சொல்வதைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. மேலும் இதுகுறித்த பேட்டி ஒன்றில் பேராசிரியர் அவர்கள் தமிழக அரசும் விவசாயிகளும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவதோடு வேதிப் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாகச் சில பாதுகாப்பான மாற்றுகளையும் முன்வைக்கிறார்.

கொரோனா விஷயத்தில் முதலில் அரசு மெத்தனமாக இருந்துகொண்டு பின்னர் கைவிரித்தது போன்றில்லாது இப்போதே நம்மிடமிருக்கும் மக்களையும் மண்ணையும் நேசிக்கும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து உரிய தயாரிப்புடன் இருப்பதே விவேகமானது. ஆபத்து நெருங்க வாய்ப்புகள் இருக்கும் நேரத்தில் எவ்வித தாமதமும் இன்றி சில சோதனை முயற்சிகளைச் செய்து முடித்துவிடுவதே விவேகமானது.

தொடரும் அச்சுறுத்தல்களும் காலநிலை மாற்றமும்

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இவ்வுலகத்துக்குப் புதியதல்ல. இஸ்ரயேலர்களிடமிருந்த எகிப்தியர்களைக் காக்க எகிப்தியர்களின் நிலத்தின்மீது கடவுள் வெட்டுக்கிளிகளை ஏவியதான குறிப்புகள் பைபிளில் காணக்கிடக்கின்றன. அக்காலத்திலேயே வெட்டுக்கிளிகள் ஒரு அச்சுறுத்தும் சக்தியாகவே இருந்திருக்கின்றன. எனினும் இன்றைய அதிகரிக்கும் புவி வெப்பமும் காலநிலை மாற்றமும் இந்த அழிவு சக்திக்கு இன்னும் அதிக சாதகமாக இருப்பதை அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆபத்தற்ற solitary phase இல் வாழும் வெட்டுக்கிளிகளை ஆபத்தான Gregarious phase க்கு மாற்றுவது அவற்றின் சுற்றுச்சூழலும் காலநிலையுமே.  அதிகரிக்கும் கடல்களின் வெப்பநிலை அதிக ஈரப்பதத்தையும் அபூர்வமான புயல்களையும் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்தில் ஏற்படுத்தி இந்த வெட்டுக்கிளிகளின் Gregarious phase க்கு மேலும் மேலும் தூண்டக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.

கொரோனா உட்பட உலகெங்கும் நடக்கும் விசித்திரமான தொடர் நிகழ்வுகள் நமக்குச் சுட்டிக்காட்டுவது ஒன்றே ஒன்றுதான். காலநிலை மாற்றம். உலக வெப்பமயமாதலின் விளைவுகளை நம் தலைமுறை ஏற்கெனவே சந்திக்கத் தொடங்கிவிட்டது. உலக வெப்பமயமாதல் பூச்சிகளின் பெருக்கத்திலும் நடத்தியிலும் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் ஏற்கனெவே எச்சரித்திருக்கின்றார்கள்.

வரலாறு காணாத மழை, வரலாறு காணாத வெள்ளம், வரலாறு காணாத வெப்பம், வரலாறு காணாத வறட்சி, என புதிய புதிய மொழியில் இந்த பூமி மனிதனிடம் ஏதேதோ பேச முயல்கிறது. கூர்மதியுள்ள மனித சமூகமும் அதை ஆழும் வல்லரசுகளும் எப்போது பூவுலகின் குரலுக்குச் செவிசாய்க்கப் போகிறார்கள்? -

நன்றி. பூவுலகின் நண்பர்கள்

Best regards,

Thursday, 28 May 2020

BioWar 2.0 = பாலைவன வெட்டுக்கிளி...

BioWar 2.0 = பாலைவன வெட்டுக்கிளி...



திரைப்பட கதைகளை
விஞ்சி நடக்கும்
2020-ன் தொடர் பேரழிவுகள்!

"ஒரு சதுர கிலோ மீட்டர் அளிவில் சுமார் 4கோடி வெட்டுக்கிளிகள் கிட்டதட்ட 35,000 மனிதனின் விவசாய உணவை அழித்துவிடும் என்றும்,
இந்த வெட்டுக்கிளிகள்
ஆப்பிரிக்கா, ஈரான், பாகிஸ்தான் வழியாக..
இந்தியாவிற்கு வந்தடையும்
என்று..

ஐநா'வின்
உணவு மற்றும் விவசாய ஆணையம்
சில நாட்களுக்கு முன்பு
செய்தி அறிக்கை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக சில நாட்களாக ஈரான் நாடும், பின்பு பாகிஸ்தானும் கடும் வெட்டுக்கிளி தாக்குதலுக்கு உள்ளான செய்திகள் வந்தது.

இதை தொடர்ந்து நேற்று,
வெட்டுக்கிளி கூட்டம்
இந்திய எல்லை பகுதிகளில் நுழைந்து, இராஜஸ்தான் மாநிலத்தின்
ஜெய்பூர் நகரில் குடியிருப்பு பகுதிகளில் கோடி கணக்கில் ஊடுருவி, அங்குள்ள மரங்களை அழித்து சென்றுள்ளது.

இது மேலும் அங்குள்ள
18 மாவட்டங்களில் பரவியுள்ளது.

இந்த வெட்டுக்கிளிகள்
தற்போது பரவி மத்தியப்பிரதேச மாநிலத்திலும் ஊடுருவியுள்ளது,
மேலும் இது பல வடமாநிலங்களில்  சென்றடைந்து பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களையும், மரங்களையும் அழிக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது.

UN-FAO கடந்து 10 ஆண்டுகளில் இல்லாத பேரழிவை இவை ஏற்படுத்தும் என்று தொடர்ந்து எச்சரிக்கிறது.

இந்நிலையில் இந்த வெட்டுக்கிளி தாக்குதலால் ஆரம்பத்திலேயே பாதிப்புக்கு உள்ளான கிழக்கு ஆப்பிரிக்க_நாடுகள் இதனால் ஏற்பட்ட அதீத இழப்பால் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

எல்லாவற்றிக்கும் மேலாக
ஒரு சதுர கிமீ'ல் 4கோடி எண்ணிக்கையில் இருக்கக்கூடிய வெட்டுக்கிளிகள் பொதுவாக.. 1000சதுரகி.மீ அளவில்,
நாள் ஒன்றுக்கு 150கி.மீ வரை பறக்கக்கூடியது என்பது,
பேரதிர்ச்சி அளிப்பதோடு,
இந்த பூச்சிகள்,
2020ன் போர் ஆயுதங்களாகவே பார்க்கப்டுகிறது."

பாலைவன வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிப்பது எப்படி?

பதில் : ஊரடங்கு மற்றும் கொரானாவால் பாதித்துள்ள நமக்கு புதிய தலைவலியாக பாலைவன வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கில் படையெடுத்து வந்து பயிர்களை அளித்துக் கொண்டிருக்கிறது.

கென்யா, தான்சானியா, ஏமன்,மத்திய பிரதேஷ் ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் படையெடுத்து உள்ளது.

இதிலிருந்து தப்பிக்க 2  சிறந்த எளிமையான வழிகள் உள்ளது.

1. தோட்டங்களில், வரப்புகளில் 20,30 மிளகாய் செடியின் கத்தைகளை (காய்ந்த மிளகாய் மார்) பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

மிளகாய் மார்களில் காந்தல் தன்மை அதிகம் கொண்டது.  [காடுகளின் தன்மைக்கேற்ப கத்தைகளை தயாராக வைத்திருக்கவும்]

தங்கள் காட்டுக்குள் வரும் பொழுது இதனை தீ வைத்து எரிக்க, புகைமூட்டம் சூழ வேகமாக வெட்டுக்கிளி திசை மாறும், வெளியேறிவிடும்.

மிளகாய் மார் மிக நன்றாக வேலை செய்யும்

2. மிளகாய் மார் கிடைக்காத நிலையில் , மிளகாய் பொடியை சிறிதளவு எண்ணெய் சேர்த்து புல்லுடன் எரிக்க புகைமூட்டம் வரும். இந்த புகைக்கு வெட்டுக்கிளி ஓடிவிடும்.

சில இரசாயன மருந்தின் ஊக்கத்தினால் நிழல் உலக இலுமினாட்டிகள் இந்த வெட்டுக்கிளியை ஏவி உணவு பஞ்சத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த வெட்டிக்கிளியை "துள்ளுகடான்"இன்று கிராமத்தில் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் Locust என்று அழைப்பார்கள்.

அக்காலத்தில் தொலை தொடர்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் ஊதல் (சீட்டி அடித்தல், விசில்) மூலம் ஒவ்வொரு தோட்டத்திற்கும் தெரிவித்தார்கள்.

உடனடியாக கத்தைகளை (மிளகாய் மார்) தீ மூட்டி விரட்டுவார்கள்.

அன்று சீட்டி அடித்தல்!!  இன்று தொலைபேசி!!

எவ்வித மருந்திற்கும் கட்டுபடாது!!!

"இது ஒன்றே தீர்வு"Best regards,

ரேஷன் கடைகளில் முறைகேடு புகார் தகவல் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் ...........................................................

ரேஷன் கடைகளில் முறைகேடு புகார் தகவல் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்
...........................................................
☄ *காஞ்சிபுரம்-  9445045604.

☄ *திருவள்ளூர்- 9445045605.

☄ *சென்னை-   9445045601.

☄ *சென்னை (வ)-    9445045602.

☄ *சென்னை (தெ)- 9445045603.

☄ *திருச்சி- 9445045618.

☄ *வேலூர்- 9445045606.

☄ *தஞ்சை- 9445045619.

☄ *தி.மலை- 9445045607.

☄ *திருவாரூர்- 9445045620.

☄ *விழுப்புரம்- 9445045608.

☄ *நாகை- 9445045621.

☄ கடலூர்- 9445045609.

☄ புதுகை- 9445045622.

☄ தர்மபுரி-9445045610.

☄ திண்டுக்கல்- 9445045623.

☄ சேலம்- 9445045611.

☄ தேனி- 9445045624.

☄ நாமக்கல்- 9445045612.

☄ மதுரை- 9445045625.

☄ ஈரோடு- 9445045613.

☄ சிவகங்கை- 9445045626.

☄ கோவை- 9445045614.

☄ விருதுநகர்- 9445045627.

☄ நீலகிரி- 9445045615.

☄ ராமநாதபுரம்- 9445045628.

☄ கரூர்- 9445045616.

☄ தூத்துக்குடி- 9445045629.

☄ பெரம்பலூர்- 9445045617.

☄ நெல்லை- 9445045630.

☄ கன்னியாகுமரி- 9445045631.

☄ கிருஷ்ணகிரி-    9445045632.

☄ அல்லது- 044-28592828

பிறரும் தெரிந்துகொள்ள பகிருங்கள்...... .Best regards,

Friday, 22 May 2020

வஉசியின் சுதேசிகப்பல் என்னாச்சு...

வஉசியின் சுதேசிகப்பல் என்னாச்சு...


யாரும் சொன்னார்களா?
நான் சொல்கிறேன்.

வ.உ.சி. அவர்கள் வாங்கிய எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ். லாவோ கப்பல்களில் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள், 1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தது.

தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு 4 அணா கட்டணம் மட்டுமே சுதேசி கப்பலில் வசூலிக்கப் பட்டது.

ஆனால் ஆங்கிலக் கம்பெனியோ 4 ரூபாய் வசூலித்தது. மேலும் சரக்கு மூட்டைகளுக்கும், லக்கேஜூக்கும் தனிக்கட்டணமும் வசூலித்தது.

கட்டணம் மிகக் குறைவாக இருந்ததாலும், சுதேசிக் கப்பல் என்றும் மக்கள் கருதியால் சுதேசிக் கப்பலுக்கு மகத்தான ஆதரவளித்தனர்.

நட்டத்தில் மூழ்கிய ஆங்கிலக் கப்பல் தனது கட்டணத்தை 1 ரூபாயாகவும், பின்னர் 4 அணாவாகவும், குறைத்த பிறகும் கூட்டம் வராததால் கட்டணமின்றி ஏற்றிச் செல்வதாக அறிவித்தது.

அப்பொழுதும் மக்கள் ஆதரவு இல்லாததால் வ வு சியை வளைக்கத் திட்டமிட்டது ஆங்கில கம்பெனி.
கடைசியில் வ உ சிக்கு ஒரு லட்சம் லஞ்சம்  தருவதாக பேரம் பேசிப் பார்த்தது. இதற்கும் மடியாததால் பழி தீர்க்க முடிவு செய்தது.

இந்த நேரத்தில் வங்க மாநிலத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த பிபின் சந்திரபாலரின் விடுதலையை கொண்டாட
இந்தியா முழுவதும் மட்டுமின்றி தமிழகத்திலும் வெள்ளை அரசு தடை விதித்து இருந்தது.

ஆனாலும் விடுதலை நாளான 09.03.1908ம் தேதியில் தூத்துக்குடியில் சுமார் 20000 மக்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் சுப்பிரமணிய_சிவாவுடன், வ.உ.சி பேசினார்.
இதற்காக காத்திருந்த வெள்ளை அரசு, உடனடியாக தடையை மீறிய குற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர் விஞ்ச் என்பவரை நேரில் சந்திக்க பணித்தது.

இதன்படி 12.03.1908 அன்று நேரில் சந்தித்தார்.
அப்போது,

1. அனுமதியின்றி கூட்டத்தில் பேசியது,

2. மக்களை வந்தேமாதரம் கோசமிட தூண்டியது,

3. ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் ஓட்டுவது குற்றம் என கண்டித்து நன்னடத்தை சான்றிதழ் கொடுத்து வெளியில் செல்ல ஆணையிட்டது.
இதனை கடுமையாக கண்டித்த வ உ சிக்கும், சுப்பிரமணிய சிவாவுக்கும், பத்மநாப அய்யருக்கும் 109, 124ஏ பிரிவுகளில் வழக்குப் போட்டு 26.03.1908ல் பாளையங்கோட்டை சிறையில்  உடனடியாக அடைத்தது.

ஏனெனில் சுதேசி கப்பல் ஓராண்டு புள்ளி விவரப்படி லாவோ கப்பல் 115 பயணங்களில் 29773 பேர் பயணித்தாகவும், காலியா கப்பல் 22 பயணங்களில் 2150 பேர் பயணித்தாகவும் கூறிய கணிப்புதான்.

பெரும் இலாபத்துடன் இயங்கிய சுதேசி கப்பலை முடக்க 24.07.1908 அன்று நடுக்கடலில் வேறொரு கப்பலில் மோதிய வழக்கை கையில் எடுத்தது.

இதனால் சுதேசி கப்பல் நிர்வாகிகள் அச்சமடைந்தனர்.
திடீரென்று விசாரணை முடிவில் கப்பல் தலைமை அதிகாரி அலெக்ஸ்_ஃபிளிட்  விடுதலை செய்யப்பட்டார்.

இதற்குள் ஓர் இரகசியம்_ஒளிந்து  இருந்தது.
வ உ சி சிறையில் இருந்த போது சுதேசி நிர்வாகிகள் பயந்து போட்டியை சமாளிக்க முடியவில்லை என்றதோடு நிற்காமல் சிலர் ராஜினாமா செய்து ஓடினர்.

அதோடு மட்டுமில்லாமல் இரண்டு கப்பலையும் விற்று விட்டனர். இதில் கேவலம் என்னவென்றால் எஸ்.எஸ்.காலியா கப்பலை வெள்ளையருக்கே விற்று விட்டது தான்.

இதனை அறிந்த வ உ சி...
"" மானம் பெரிதென கருதாமல், கூட இருந்த பாவிகளே அற்ப காசுக்காக வெள்ளையனிடமே விற்று விட்டீர்களே, அதைவிட அந்தக் கப்பலை சுக்கல் சுக்கலாக நொறுக்கி வங்கக் கடலில் வீசியிருக்கலாம் "" என குமுறினார்.

பெற்ற மகன் செத்துக் கிடந்த போதும், கட்டிய மனைவி கவலைக்கிடமாக இருந்த போதும் நாட்டின் விடுதலைக்காக வாங்கிய கப்பலை வெள்ளையனிடமே
விற்றதை  எண்ணி நொந்து உள்ளம் நொறுங்கிப் போனார்
வ உ சி.

நாட்டிற்காக குடும்பத்தையும், சொத்துக்களையும் இழந்த தியாகிகளை கொண்டாடாமல், வேசதாரிகளையும், பதவிப் பித்தர்களையும் தேசத் தலைவர்களாக கொண்டாடுவது கேவலத்திலும் கேவலம்.

என்னை பொறுத்தவரை இவரும் நம்
தேசிய கடவுள் தான்...
ஓங்கட்டும் உமது புகழ்

Best regards,

Wednesday, 20 May 2020

ஒரு கப் பால் ஒன்னரை லட்ச ரூபாய்..

ஒரு கப் பால் ஒன்னரை லட்ச ரூபாய்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது.. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை.. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்..

அந்த வீட்டின் கதவைத் தட்டினான்.. ஒரு பெண் கதவைத் திறந்தாள்.. ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான்.. ஆனால் கூச்சம்.. கேட்க மனம்வரவில்லை..

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள்.. உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்..

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்“இந்த பாலுக்கு நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”

அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்
“கடனா… அப்படி ஒன்றும் இல்லை.. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.”

“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்..

ஆண்டுகள் கழிந்தன.. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.. அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது..

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.. அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது.. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல்.. விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார்.. அவள் தான்.. தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம்..

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார்.. நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள்.. பல லட்சங்கள் செலவானது.. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது.. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்..

அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது..

“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது.. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன..

அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.

நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல.. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்..

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள்.. அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
படித்ததில் பிடித்தது.Best regards,

Tuesday, 19 May 2020

இந்த படைபோதுமா...

இந்த படைபோதுமா...

பாகிஸ்தான் ராணுவமோ இல்லை பாகிஸ்தான் தீவிரவாதிகளோ  இந்தியாவின் மீதோ  இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் தொடுத்தால் உடனே ஐயோ என்று கையை பிசைந்து கொண்டு ஐநா சபையின் கதவை தட்டும் அளவிற்கு இந்தியா இப்போது இல்லை... ஒன்றுக்கு பத்தாக  திருப்பித் போட்டு  தாக்கும் அளவில்தான் தற்போது இந்தியா உள்ளது...

இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்க வரிந்து கட்டிக்  கொண்டு இந்திய ராணுவம் களத்தில் இறங்கியுள்ளது. விமானந்தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், அதி நவீன  போர் விமானங்கள்,சூப்பர் சோனிக் குரூஸ் ரக ஏவுகணைகள், ICBM என்று அழைக்கப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள், கவச வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

உங்களுக்கு தெளிவாக புரிந்துகொள்ள இந்திய ராணுவத்தின் வலிமையை விரிவாக கூறுகிறேன்.

1. விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ரமாதித்யா தயார் நிலையில் உள்ளது இதிலிருந்து 50க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்று எதிரியின் இலக்கை தாக்கி வரலாம்.

2.கல்வாரி என்றழைக்கப்படும் ஸ்கார்பியன் வகையான நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் இன்னும் பல வகையான நீர்மூழ்கிக் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இவை வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் என்று  சுற்றி சுற்றி வருகின்றன

.3. நாசகாரி போர்க்கப்பல்கள் என்றழைக்கப்படும் குண்டு வீசும் போர்க்கப்பல்கள் இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட போர்க்கப்பல்கள் ஏவுகணைகளை செலுத்தும் போர்க்கப்பல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. இவற்றிலிருந்து அணு ஆயுதங்களையும் இயக்க முடியும் அக்னி பிரித்வி பிரமோஸ்   போன்ற ஏவுகணைகளை கொண்டு எதிரிகளை தாக்க முடியும்.

4. போர் விமானங்கள்  மற்றும் அணு குண்டு அதாவது அணு ஆயுதங்களை   வீசும் விமானங்கள் மற்றும்  மின்னல் வேகத்தில் சென்று எதிரியின் இலக்கை தாக்கக்கூடிய ரஃபேல் ,சுகோய் ,தேஜஸ் ரக விமானங்கள் என ஆயிரக்கணக்கான விமானங்கள் தயாராக உள்ளது.

 5.போர் தளவாடங்களை ஏற்றிச் செல்ல சூப்பர் 130 CC ஹெர்குலஸ் விமானங்கள் மிகப்பெரிய அளவில் படைகளை நகர்த்துவதற்கு மலைப்பிரதேசங்களில் படைத்தளவாடங்களை கொண்டு செல்வதற்கும் இவை பெரிதும் உதவுகின்றன.

6.சினூக் வகை ஹெலிகாப்டர்கள் போர் தளவாடங்களையும் படைகளையும் இடம் மாற்றுவதற்கு மிக உயர்ந்த இடங்களான  மலை  பிரதேசங்களுக்கும் கொண்டு செல்ல பெரிதும் உதவியாக இருக்கின்றன.

7.அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இவை இரவிலும் எதிரியின் இலக்கை மிகத் துல்லியமாக கண்டறிந்து தாக்கும் வல்லமை படைத்தது இதிலிருந்து ஏவுகணைகளை செலுத்தமுடியும்.

8. சூர்யா ICBM ரக அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணை யான இதன் தாக்கும் திறன் சுமார் 20000 கிலோமீட்டர் வரை எதிரியின்  இலக்குகளை மிக துல்லியமாக தாக்கும் சக்தி வாய்ந்தது. இது முதற்கட்ட ஆய்வில் உள்ளது .

9.அக்னி 6 வகை  அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் இது சுமார் 12 முதல் 16 கிலோமீட்டர் வரை தாக்கும் திறன் வாய்ந்தது. அக்னி-5 இது சுமார் 5 ஆயிரம் முதல் 8  ஆயிரம் கிலோ மீட்டர் வரை தாக்கும்  சக்தி வாய்ந்தது.மேலும் இந்திய ராணுவத்தில் இடம்பிடித்துள்ள அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் குறைந்த தூர ஏவுகணைகளான நாக், நிர்பயா, ஆகாஷ் ,பிருத்வி இது போன்ற இன்னும் பல ஏவுகணைகள் முப்படைகளிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஏவுகணைகள் கப்பலிலிருந்தும் விமானங்களிலிருந்தும் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும்  எதிரிகளின் இலக்குகளை மிக துல்லியமாக  தாக்கும் வல்லமை பெற்றது. மேலும் இதை சாலை மார்க்கமாகவும் எடுத்துச்செல்ல முடியும். மேலும் இந்த ஏவுகணைகளை எந்த இடத்தில் இருந்தும் செலுத்தும் வல்லமை பெற்றுள்ளன.

10. S.400 ஏவுகணைகள் மற்றும் விமானங்களை தடுத்து அழிக்கும் உலகின் தலை சிறந்த வான் தடுப்பு சாதனங்கள்.

11. Advanced Air Defence System இந்திய வான்வெளி பாதுகாப்பு அமைப்பு.

12. எதிரி நாட்டு சாட்டிலைட்டை  தாக்கி அழிக்கும்  ஏவுகணை தொழில்நுட்பம்.

இத்தகைய நவீன ஆயுதங்களை கொண்டும் ராஜதந்திர முறையிலும் இந்திய நாட்டின் இறையாண்மையை காக்கவும் இழந்த மண்ணை மீட்கவும் #இந்தியபேரரசு எதற்கும் தயாராக உள்ளது.

🌹🌹🌹🌹🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳🌹

பகிரவும் இந்தியாவின் வலிமையை அனைவரும் அறியட்டும்.Best regards,

Monday, 18 May 2020

பாபாஹர்பஜன்சிங்

பாபாஹர்பஜன்சிங்

இந்திய சீன எல்லையில் அமைந்திருக்கும் நாதுலா என்ற கணவாயை இன்று வரை சீனாவிடமிருந்து பாதுகாத்துவருவதும், சீன வீரர்களை நடுங்க வைத்துக்கொண்டிருப்பதும் எது தெரியுமா?
இந்தியாவின் பிரமோஸ் ஏவுகனைகளோ,
சுகாய் போர் விமானங்களோ... அல்ல.
சாதாரண இந்திய சிப்பாய் ஒருவரின் ஆவி.
அந்த ஆவிக்குச் சொந்தக்காரர் '#பாபா #ஹர்பஜன்_சிங்'.
இங்குள்ள (சிக்கிமில் உள்ள) இராணுவ வாகனங்களில் எல்லாம் இவருடைய படத்தினைக் காணலாம்.

ஹர்பஜன் சிங் பஞ்சாப்பில் 1946-ஆம் ஆண்டு பிறந்தார். இராணுவத்தில் பஞ்சாப் ரெஜிமென்டில் 23-வது பட்டாலியனில் சேர்ந்தார். . 1968-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 04-ஆம் தேதி கோவேறு கழுதைகள் தொகுதி ஒன்றுடன் பட்டாலியன் தலைமையகத்திலிருந்து சென்றபோது மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது உடலை தேடினார்கள். உடல் கிடைக்கவில்லை.
அந்நிலையில், வீரர் ஒருவரின் கனவில் தோன்றிய ஹர்பஜன் சிங், தன்னுடைய ஆயுதங்கள் இந்த இடத்தில் இருக்கின்றது, தன்னுடைய உடல் இந்த இடத்தில் கிடக்கின்றது என்றும் சொல்லியிருக்கின்றார்.
காணாமல் போய் நான்கு நாட்கள் கழித்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இரவில் #வெள்ளை #உடை அணிந்த ஒருவர் #குதிரையில் #ரோந்துப்பணியில் சுற்றுவதாக சீனர்கள் பலமுறைத் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஹர்பஜன் சிங் மீது பயம் கலந்த பக்தி இருநாட்டு வீரர்களுக்கும் ஏற்பட்டது.
இந்திய வீரர்கள் நாதுலாவில் அவருக்கென ஆலயம் கட்டி வழிபட்டனர். (சீன வீரர்களும் அங்கு ஹர்பஜன் சிங்கை வழிபடுகின்றனர்.) வழிபாட்டுத் தலத்தில் மூன்று அறைகள் வரிசையாக உள்ளன. அதில் மத்திய அறையில் அவர் படம் மாட்டப்பட்டுள்ளது. அவரது சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறையில் கோவில் போன்றே தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வலது புற அறையானது அவரது அலுவலமாகும். அங்கு மேசை, நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. அவர் அங்கு அமர்ந்து தனது அலுவலக வேலைகளை பார்ப்பதாக கூறுகிறார்கள். இடது புற அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
அங்கு தினமும் அவருடைய பூட்ஸ்-க்கு பாலீஷ் செய்து வைக்கப்படுகின்றது. படுக்கை விரிப்பும் நன்கு விரித்து வைக்கப்படுகின்றது. மறுநாள் காலையில், அவருடைய பூட்ஸ் மண்ணாகி இருக்கும். விரித்துவைத்தப் படுக்கை கலைந்து இருக்கும்.
ஹர்பஜன் சிங் கட்டுப்பாடு நிறைந்தவர். இரவு காவலில் இருக்கும் ஏதேனும் வீரர் கண்ணயர்ந்து தூங்கி விட்டால், அவர் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைவதுண்டு. ஹர்பஜன் சிங் தங்கள் மத்தியில் இன்னும் உயிரோடு இருப்பதாக வீரர்கள் நினைத்ததால், அவர் இறந்ததைப் பதிவு செய்யவில்லை. அவருக்கு இராணுவம் தொடர்ந்து சம்பளத்தை வழங்கியது. அவர் திருமணம் செய்யாததால் அவரது தாயாருக்கு அவரது சம்பளத்தை அனுப்பி வைத்தது இந்திய இராணுவம்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி அவர் பெயரில் அமிர்தசரஸ் செல்லும் இரயிலில் பஞ்சாப் மாநிலம் கபுர்தாலாவில் உள்ள அவர் கிராமத்திற்கு அவருக்கு என டிக்கெட் பதிவு செய்யப்படும். அவருடைய இருக்கைக்குக் கீழ் அவருடைய பெட்டி வைக்கப்படும். இரயில் படுக்கையில் அவர் படுக்கை விரிக்கப்படும். அவருக்குத் துணையாக மூன்று வீரர்களும் உடன் சென்று அவருடைய குடும்பத்தாரிடம் இந்தப்பெட்டியை ஒப்படைப்பார்கள்.
பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவர்கள் அந்தப்பெட்டியை வாங்கிக்கொண்டு நாதுலா திரும்புவார்கள்.
ஆவியான இவருக்கு கெளரவ #கேப்டன் பதவியும், பின்னர் கெளரவ #மேஜர் பொறுப்பும் வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு #மகாவீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது.
நாதுலாவில் இருக்கும் போர் நினைவிடத்தில், முதலாவதாக இவரது பெயரையே பொறிக்கப்பட்டுள்ளது.
பாபா ஹர்பஜன் சிங் பெட்டிப் படுக்கைகள் ஊருக்கு வரும்போது அவருடைய கிராமத்தில் விழா எடுக்கின்றார்கள்.
இந்தியா-சீனா எல்லைப்பகுதி வீரர்கள் சந்திப்பின் போது ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு இருக்கையை சீனர்கள் ஒதுக்குவதாகவும் சொல்கிறார்கள்.
ஹர்பஜன் சிங் சொல்லை மீறி செயல்பட எந்த படைவீரரும் தயாராக இல்லை. நாதுலா மட்டுமல்ல, வடக்கு சிக்கிம்மில் உள்ள இராணுவத்தினரும் தங்கள் கூடாரத்திற்கு வெளியே ஒரு சிறு விளக்கை ஏற்றி, அதனை பாபா ஹர்பஜன் சிங் என்று கருதி வழிபட்டு வருகின்றனர்.
பாபா ஹர்பஜன் சிங் எல்லையில் காவல் புரியும் வீரர்களுக்கு காவல் தெய்வமாகவே இருக்கின்றார்...Best regards,

என் பங்கு சொத்து (சிறுகதைகள் சீ2 – 44)

 என் பங்கு சொத்து (சிறுகதைகள் சீ2 – 44)

#ganeshamarkalam



இப்படியெல்லாம் நடக்கும்னு யார் கண்டா? ஆனால் “ஆல் இஸ் வெல் தேட் எண்ட்ஸ் வெல்”னு சொல்லுவா. அதாவது தினம் தினம் நாய்பிழைப்பா கழிஞ்சாலும் கடைசீலே சாகரப்போ மெர்சிடீஸ் கார் நசுக்கி உயிர் போராப்புலே. அப்படி நடந்தால் “ஆல் இஸ் வெல்”ணு ஒத்துக்கமுடியுமா? அதான் நமக்கு அப்படி ஆகிடப்பிடாதுன்னு தீர்மானமா இருந்தேன்

வாழரச்சேயே நல்ல வாழ்வு வாழ்ந்துடனும்.



அதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்



நான் சீனுவாசன். திருவையாத்துலேந்து வேலைதேடி சென்னைக்கு வந்துட்டேன். அதிகம் படிப்பில்லை. பிகாம் பெயில். பாஸ் பண்ணலைன்னாலும் படிச்சது நினைவிருக்கே! கணக்கு வழக்குத்தெரியும். க்ரெடிட் டெபிட். கூட்டல் கழித்தல் தப்பில்லாம செய்வேன். நுணி நாக்கு இங்க்லீஷ் பேசுவேன். சட்டையை இன்பண்ணிண்டு பக்கிள்ஸ் வச்ச செறுப்பை மாட்டிண்டு MBA படிச்சவன் மாதிரி நடக்கத்தெரியும். ஆனால் எங்கே போனாலும் வேலை இல்லைன்னுட்டா. கடைசீயில் கிண்டி ரேஸ் கிளப்பில் வேலை கிடெச்சது. தினப்படிதான். அதுவும் சீசனில் மட்டும். ஆகட்டும் இப்போதைக்கு எடுத்துண்டு அப்புரமா பாத்துக்கலாம்னு.



என்ன வேலை? குதிரை பின்னாடியே ஓடணுமான்னு கேக்கப்பிடாது. கவுன்டரில் புன்டர்களுக்கு அவா கட்டற பணத்தை எண்ணிப்பாத்து வாங்கி சீட்டைக் கொடுக்கணும். ரேஸ் முடிஞ்சதும் ஜெயிச்சவா வந்து என் பணத்தைக் கொடும்பா. சீட்டை சரிபார்த்துட்டு ஜெயிச்சிருந்தான்னா கொடுத்துடணும். 6 ரேஸ் ஓடும். அப்புரமா எல்லாக் கணக்கு வழக்கு சரிபார்த்து லெட்ஜெரில் எழுதி ஆபீசில் கட்டணும். அன்னைக்கு வேலைக்கு காசு கொடுப்பா. வாங்கிண்டு வந்துடுவேன். சைதாப்பேட்டையில் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் மேன்ஷனில் ஜாகை. கூட ஒருத்தன். வாடகையை சரிபாதியா கொடுத்துடுவன். இங்கேந்து கிண்டிக்கு ட்ரைனில் போய் வர சௌரியமா.



எங்கம்மா பட்டம்மா என்னை பெத்துட்டு போய் செர்ந்தா. உடனே கைக்குழந்தையா என்னை அப்பாகிட்டே விட்டுட்டுப் போனாளான்னு யோசிக்கப்பிடாது. SSLC முடிக்கரவரை கண்ணும் கருத்துமா பாத்துண்டா. திடீர்னு காய்ச்சல், மஞ்சக்காமாலை. 1 வாரம் உடம்பு நிறம்மாறி சித்தே கஷ்டப்பட்டா. அப்பாதான் உடெஞ்சு போயிட்டர்.



அப்பா ப்ரோஹிதம், சாதாரணக்குடும்பம். திருவையாத்தை மட்டும் நம்பி தொழில் செய்யமுடியாதுன்னுட்டு, தஞ்சாவூர், கபிஸ்தலம், கும்பகோணம்னு யாராத்து விசேஷத்துக்கு கூப்பிட்டாலும் போயிடுவர். கடை திறப்பு விழா, கிரஹப்பிரவேசம்னா லம்பா கிடைக்கும்.

சில மாசம் காசு வராட்டாலும் அம்மா பதவிசா குடுத்தனம் செஞ்சா. கொஞ்சம் மிச்சமும் பிடிச்சுடுவா. என்னை நல்ல படிப்பு படிக்க வைச்சுடணும்னு ஆசை.



“சீனு பெரீய வேலையில் உக்காந்து நம்ம கஷ்டத்தை போக்குவான்”. வாஸ்தவமான கனவு. அவள் நினெச்சது நடந்ததான்னு பாக்காம போய் சேர்ந்தாச்சு.



அப்புரம் எனக்கு படிப்பில் கவனம் போச்சு. பிகாமில் நான் வச்ச அரியர்ஸை பாத்துட்டு தஞ்சாவூர் காலேஜில் நான்தான் ந்யூஸ். “ஒரு நல்ல நிலைமைக்கு வந்தப்புரம் வந்து பாக்கிரேன்.” அப்பாகிட்டே ஜம்பமா சொல்லிட்டு கிளம்பி வந்தேன். ஆண்பிள்ளை பொழச்சுப்பான்னு ஆசீர்வாதம் செஞ்சு அனுப்பிவச்சர்.



ஒரு வருஷம் ரேஸ் குதிரைகளையும் அதுமேலே காசைக்கட்டி அழிஞ்சு போனவாளையும் பாத்துண்டு இருந்தாச்சு. அப்புரம் எப்படியோ ஒரு தனியார் பேங்கில் எடுபிடி வேலை கிடெச்சது. சேர் போட்டு உக்காரலையே தவிர எல்லா வேலையும் தெரிஞ்சிண்டேன். அதுலேயும் இந்த நகைக்கடன் செக்ஷனில் எடைபோட்டு தரம் பாத்து கடன் எவ்வளவு தரலாம்னு சொல்ராளே அந்த சூட்சுமம் நன்னாவே புரிஞ்சது. அதைப் பாத்துக்கோன்னு என்னை உக்காத்தி வச்சுட்டா. கையில் சுளையா மாசம் 10ஆயிரம் ரூபாய். இதே திருவைய்யாத்தில் கிடெச்சா சந்தோஷமா இருக்கலாம், இங்கே 2000 வாடகைக்கே போயிடரது. அங்கே இங்கேன்னு பார்ட் டயிம் செஞ்சு இன்னும் 4000 கிடைக்க அப்படியே செட்டில் ஆயிடலாம்னு தோணித்து.



ஊருக்குப்போய் 2 வருஷம் ஆச்சு. ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்னு கிளம்பிட்டேன்.



நைட் திருச்சி பஸ்ஸில் ஏறி பெரம்பலூர் இறங்கி அங்கேந்து திருவையாறு. கொள்ளிடம் பாலம் தாண்டினதும் ஊர் வந்துடும். அம்மன் கோபுரத்துக்கிட்டே கார்த்தாலே 5 மணிக்கு இறங்கி பாவாஸ்வாமி அக்ரஹாரத்தில் நுழைஞ்சா 3ஆம் வீடு எங்களோடது. ஆத்து வாசலில் ஒரு 30 வயசு பொண் கோலம் போட்டுண்டிருக்கா. அப்பா வீடு மாத்திண்டு போயிட்டரா?



“சகாதேவன் வீடுதானே இது?” என் குரலைக்கேட்டு நிமிர்ந்து பாக்கரா. “சீனாவா?” “அமாம், நீங்க? உங்களுக்கு என்னை தெரியுமா?” “போடோவில் பார்த்தேன், உங்கப்பா என் பிள்ளைன்னு காட்டினர். உள்ளெ வாப்பா”



“நீங்க யாருன்னு சொல்லவேயில்லையே?”

“நான்தான் உன் சித்தி. உங்கப்பாவும் நானும் ரெண்டு மாசம் மின்னாடி கல்யாணம் செஞ்சுண்டோம்.”



எனக்கு எப்படீயிருக்கும் நினெச்சுப் பாருங்கோ. அப்படியே வாசத் திண்ணையிலேயே உக்காந்துட்டேன். வாசலில் ஏதோ குரல் கேட்டதேன்னு வந்த அப்பா கையைப் பிடிச்சு அழைச்சிண்டு போரார். “வரேன்னு ஒண்ணும் தகவலே சொல்லலை? வா, எப்படி இருக்காய்?” இவ்ளோ சகஜமா அவர் என்கிட்டே அம்மா இருந்தப்போகூட நடந்துண்டதில்லை. இப்போ என்ன ஏக்ட் விடரர்?



புரோகிதம் செஞ்சிண்டிருந்தவர் எப்படி ரெண்டாம் கல்யாணம்? அதுவும் சித்தி என்னவிட 2 வயசுதான் பெரியவள் மாதிரி பட்டது. இவாளுக்குள் 25 வயசு வித்யாசம் வருமே? அம்மா இருந்த இடத்தில் இவள் எப்படி? மனசு எப்படி வந்தது? இப்போ நான் என்ன பண்ரது? நீங்களே சொல்லுங்கோ? அதுக்கு பதில் சொல்ராப்புலே சித்தி “போ போய் குளிச்சுட்டு வா நல்ல காபியும் டிபனும் செஞ்சு தரேன் சாப்டுண்டே பெசலாம்”னா. என்ன பண்ணட்டும்னு தவிச்சவனுக்கு குளிக்கலாம்னு ஐடியா கிடெச்சதே!



ஒரு வாரம் அப்பாவோட இருந்துட்டுப் போலாம்னு வந்தவன் அன்னைக்கு ராத்திரியே கிளம்பிட்டேன். பஸ் ஸ்டேண்டுக்கு கூட வந்த அப்பா, “நான் கல்யாணம் செஞ்சுண்டது உனக்கு பிடிக்கலைன்னு நன்னாவே தெரியறது. வயசான காலத்தில் பாத்துக்க ஒரு துணை தேவைப்பட்டது, சகுந்தலா ரொம்ப ஏழைப்பட்ட பிராம்ணாவாத்து பொண், கல்யாணமே ஆகலை. எனக்கும் துணையாச்சு, அவளுக்கும் வாழ்க்கைன்னு கோவில்ல வச்சு தாலிகட்டி அழைச்சிண்டு வந்துட்டேன். இவள் அண்ணா எனக்கு பரிச்சயமானவர். இதனால் நம்ம உறவில் எந்த இடையூரும் கிடையாது. சகஜமா வந்துண்டு போயிண்டிரு. உன் சித்தி நல்ல மனுஷி. சீக்கிரம் உனக்கும் ஒரு பொண்ணைப்பாத்து கல்யாணம் செஞ்சுவைக்கிரேன்.”



அவரை பாத்தப்போ கோபமா வந்த உணர்வு, இப்போ பரிதாமாய் மாறிப்போனது. சித்தின்னு உறவுமுறை சொல்லிண்டு சகஜமா பழகின அந்தப் பொண்மேல் எனக்கு எந்த துவேஷமும் இல்லை. அப்பா எனக்கும் அம்மாவுக்கும் துரோகம் செஞ்சுட்டார்னு மனசில் ஆழமா பதிஞ்சுடுத்து. என் சிநேகிதன், “என்னடா மூஞ்சி பேயரைஞ்சாப்போல இருக்கு, அடுத்த வாரம்தான் வருவாய்னு சொன்னாய்?” அங்கலாய்ச்சான். அவனிடம் விஷயத்தை சொன்னேன். சகவனமா கேட்டிண்டிருந்தவன் “ரெண்டாம் கல்யாணம் செஞ்சுக்கரது உங்க அப்பாவோட பெர்சனல் மேட்டர், உங்கிட்டே சொல்லிட்டு செஞ்சிருக்கலாம்தான். நீ உன் வாழ்க்கையை கவனி.”



மனசு கனத்துண்டே 3 வருஷம் ஓடித்து. திருவையாறு பக்கமே தலைவச்சப் படுக்கலை. அப்பப்போ போன் வரும். எப்போ வராய்னு அப்பா கேப்பர். லீவு கிடைக்கலை அது இதுன்னு சப்பைகட்டு கட்டுவேன். சரீன்னுடுவர். ஒருதடவை பெரீய பணக்காராளாத்து விசேஷம்னு சில சாஸ்த்ரிகளோட சென்னை வந்தவர் என் மேன்ஷனுக்கு வந்தர், நான் இல்லை. சீட்டில் நான் வந்தேன்னு எழுதி தொங்கின பூட்டில் சொருகி வச்சுட்டுப் போனர்.



நிரந்தரமான வேலை இல்லாம அல்லாடிண்டு என் காலம் கழிஞ்சது. ஒவ்வொரு நாளும் தள்ள பிரம்மப் பிரயத்தனம். கையில் 10 ரூபாய் இருந்தால் 5க்கு மேலே சிலவழிக்க தோணாது. இன்னொரு 10ரூ எப்போ வரும்னு நிச்சயம் இல்லை. அப்போதான் என் சினேகிதன் ஒரு ஐடியா தந்தான். உங்கப்பா சொத்தில் உன்னோட பங்கை கேட்டு வாங்கி நீ ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாமேன்னு. சரியாப்பட்டது.



என் பங்குன்னா என்ன? அப்பா சொத்து பூரா ஒரே பிள்ளையான எனக்குத்தானே சொந்தம்? பங்கு ஏன் கேக்கணும்? யோசிக்க ஆரம்பிச்சேன். அப்பாவுக்கு என்ன சொத்து இருக்குன்னு ஒரு கேள்வி வந்தது. திருவையாத்தில் வீடு அவரொடதுதான். வித்தா 20லக்ஷம் கிடைக்கும். பின்னாடி தென்னந்தோப்பும் துறவுமாய். அந்த ஊரில் அவ்வளவுதான். கொடுத்தார்னா சின்னதா ஒரு சூப்பர் மார்கெட் வச்சுப்பேனே. அவர் அதை வித்துத் தரணுமே?



வித்துட்டா அவர் எங்கெ போவர்? சித்தி வேர இருக்காளே? நீங்க வேர வீடு பாத்துக்கோங்கோன்னுட்டு வீட்டை வித்து நான் எடுத்துக்க முடியாதே? ஒரு வக்கீலைக் கேட்டால் என்ன?



சைதாப்பேட்டை கோர்ட் கிட்டே ஒருத்தரை மடக்கினேன். தேவைப் பட்டால் நீங்களே கேசை வாதாடலாம்னு ஆசை காட்டி காசு வாங்கிக்காமல் அட்வைஸ் செய்ய ஒத்துக்க வச்சேன். எல்லாத்தையும் கேட்டுட்டு, “உங்க அப்பா இருக்கர வரைக்கும் அவர் சொத்தில் உங்களுக்குன்னு ஒன்ணும் கிடைக்காது, அவரா தந்தாத்தான் உண்டு. சொத்து அவருக்கப்புரம் உயிரொட இருக்கர மனைவிக்குத்தான் போகும். அவளா பாத்து ஏதாவது கொடுத்தால்தான் உண்டு. உங்க சித்திக்கு குழந்தைகள் இருந்தா சொத்தை சரிசமமா பிரிக்கணும், உங்களுக்கு பாதிதான்னுட்டர். அப்பா உயில் எழுதலாம். அப்படீன்னா கதை வேர மாதிரிப்போகும்”



இப்போ என்ன பண்ரது? ஒருக்கா திருவையாத்துக்கு போய் அப்பாகிட்டே உதவி கேட்டு அப்படியே சொத்து விஷயத்தை ஆரம்பிச்சு அவர் மனசில் என்ன இருக்குன்னு தெரிஞ்சிண்டா என்ன? நமக்கு காரியம் ஆகணும். அப்பா செஞ்ச காரியத்தை பெரிசு படுத்தாம போயிட்டு வரது நல்லதா பட்டுது. பல் தேச்சுட்டு கிளம்பிட்டேன்



கும்பகோணத்துக்கு பஸ்கிடச்சது. பண்டிகை நாட்களில் அவ்வளவா நகை அடகுவைக்க வரமாட்டா. பேங்கில் லீவு கொடுத்துட்டன். கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இறங்கரச்சே பகல் 12. இங்கேந்து திருவையாத்துக்கு அரை மணிக்கொண்ணு போரது. இங்கேயே ஏதாவது ஹோட்டலில் சாப்டுட்டா சித்திக்கு வேலை வைக்கவேண்டாம். என்ன திடீர்னு சித்திமேலே கரிசனம்? எப்படியாவது சிரிச்சுப் பேசி காரியத்தை சாதிச்சிண்டு திரும்பணும்.



சாப்டுட்டு பஸ்ஸில் ஏறி தியாகராஜ சமாதி ஸ்டாப்பில் இறங்கி சித்தே நடந்து 2 மணிக்குப் ஆத்துக்கு போயாச்சு. அப்பா மத்தியானம் தூங்குவர். இல்லைன்னா வெளில்லே போயிருக்கலாம். கதவை ரெண்டு மூணு தடவை தட்டினப்புரமே சித்தி வந்து தொறந்தா.  கண்ணில் தூக்கக் கலக்கம். என்னை பாத்துட்டு முகம் மலர வரவேத்தா.



“வா சீனு, ரொம்பநாளா வராம ஏன் இருந்தாய்?” அழைச்சிண்டு போனா. “அப்பா வடுவூரில் பூணல் கல்யாணம்னு போயிருக்கா, சாயங்காலமா வந்துடுவர். உக்காந்துக்கோ காப்பி போட்டுத்தரேன், மத்தியானம் சாப்பிட்டாயா?.” வீடு நிசப்தமா இருந்தது.



பையை வச்சுட்டு ஊஞ்சல் கிட்டே கீழேயே உக்காந்துண்டேன். காபி நன்னாத்தான் போட்டிருக்கா. ஒண்ணும் பெசாமல் குடிச்சேன். என்னவோ தெரியலை சொல்லிட்டேன். “காபி நன்னா இருக்கு” சித்தி முகத்தில் சந்தோஷம். காபியைப் புகழ்ந்தது அவளை லேசா அக்ஸெப்ட் செஞ்சுண்டுட்டா மாதிரி பட்டிருக்கும். உன் அப்பா, உனக்கு ரெண்டு வரன் பாத்து வச்சிருக்கர். நேத்துதான் அனுப்பணும்னு லெட்டர் எழுத உக்காந்தர், அதுக்குள்ள வடுவூர் போக அழைப்பு வந்துடுத்து. இப்போ நீயே வந்துட்டாய்.”



பேசிண்டிருகச்சேயே பின்னாடி உள் ரூம் கதவைத் திறந்துண்டு சிணுங்கிண்டே 2 வயசில் ஒரு பொண் குழந்தை பட்டுப் பாவாடையில் நடந்து வரது. சித்தி “வா செல்லம், இங்கே ஓடிவா, யார் வந்திருக்கா பாரு”ன்னு குழந்தையை அணைச்சுக்கரா. உன் அண்ணாடா செல்லம். சீனு அண்ணா.”



என்னைப் பாத்ததும் அழகா அந்த குழந்தை சிரிக்க, என்னை அறியாம இங்கே வான்னு கையை நீட்டரேன். துளிக்கூட வேத்து முகம் இல்லாமல் எங்கிட்டே வந்து ஆசையா மடீலே உக்காந்திண்டது. “சித்தி யார் இந்த குழந்தை? என் தங்கையா? எப்போ பொறந்தா, ஏன் லெட்டரே பொடலை?”ன்னு கேக்கரேன். “அவர் தான் இப்போ வேண்டாம், நேரில் சொல்லிக்கலாம்னும் நீ ஏற்கனவே கோவிச்சிண்டுட்டாய்னும் வருத்தப்பட்டர்.”



என்ன பேர் வச்சிருக்கேள்னு நான் கேக்க, குழந்தையே மெல்ல “பட்டு”ன்னு சொல்ல, எனக்கு திக்குன்னுது.



எங்கம்மா ஜாடையில் என் தங்கை. 29 வயசு வித்யாசத்தில். எனக்குன்னு குழந்தை இருந்தால் அந்த வயசில். இத்தனை வருஷம் கழிச்சு என் மடியில்.



என்மேல் அப்படியே சாஞ்சுண்டு திரும்பவும் தூக்கத்தை விட்ட இடத்துலேந்து இந்த சின்ன பட்டம்மா திரும்பவும் தூங்க ஆரம்பிக்க, சட்டைப்பையில் இருந்த பர்ஸ், பேனா அவள் கன்னத்தில் குத்தப்போரதேன்னு நான் அதை எடுத்து தூர வைக்கரேன்.



என் பங்கு சொத்தை நான் அப்பாகீட்டே சண்டை போட்டு வாங்கிண்டு போயிடணும்னு வந்தது கேக்காமலே என் மடியில் இருக்காமாதிரி நினெச்சுண்டேன்Best regards,

இந்த ஸ்வஸ்திக் கிணறு தமிழ் நாட்டில் திருச்சி- துறையூர் நடுவில் இருக்கிறது.

 இந்த ஸ்வஸ்திக் கிணறு தமிழ் நாட்டில் திருச்சி- துறையூர் நடுவில் இருக்கிறது.

நந்திவர்மரால் 800 வருஷங்களுக்கு முன் கட்ட பட்டது.

ஆண்களோ பெண்களோ குளிக்கும் போது எதிர் திசையில் குளிப்பவர்களுக்கு காணமுடியாத மாதிரி தூண்களால் மறைத்து கட்டபட்டுள்ள குள கிணறு இது.

ஊரின் பெயர் திருவெள்ளறை.  108 வைஷ்ணவ தலங்களில் ஒன்று.

இத்தகைய அழகாக நேர்த்தியாக கட்டப்பட்ட கிணறு உலகில் எங்காவது உண்டா !!!
.Best regards,

வருங்காலம் கடினமாகத் தான் இருக்கப் போகிறது. மனதையும்,குடும்பத்தையும் தயார் செய்து கொள்வது நன்று

வருங்காலம் கடினமாகத் தான் இருக்கப் போகிறது. மனதையும்,குடும்பத்தையும்  தயார் செய்து கொள்வது நன்று

கொரானாவுக்கு பிறகு

இந்த செய்தியில் இருக்கும் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டது இல்லை. திரு. ஜெயரஞ்சன், திரு. ஆனந்த் வெங்கடேஷ், திரு. அரவிந்த் சுப்ரமணியம் போன்ற பொருளாதார அறிஞர்களின் பேட்டிகள் அவர்கள் பொது வெளியில் அளித்த சில புள்ளி விவரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் இது போன்ற செய்திகளை பார்வேர்டு செய்ய மாட்டார்கள். இருப்பினும் ஒரு முறையாவது நமக்கு தெரிந்ததை சொல்லிவிடுவது கடமை.

உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகக் கடுமையாக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பல கம்பெனிகள், அரசாங்கங்கள், தங்களது ஊழியர்களுக்கு  சம்பளம் போடக்கூட பணம் இல்லாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலை இன்னும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கும் என்று கணிக்கப்படுகிறது. கணிக்கப்படும் வானிலை வேண்டுமானால் தவறாகப் போகலாம்.  ஆனால் பொருளாதார கணிப்புகள் பெரும்பாலும் மாறுவதில்லை. அதன்படி நடக்கப் போகும் சங்கதிகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன.

துபாய், அபுதாபி உள்ளிட்ட UAE ல் பணியாற்றும் 17,50,000 இந்தியர்களில் ஏறத்தாழ 30% முதல் 40% பேர் வேலை இழப்பது உறுதி. அதாவது கிட்டத்தட்ட 6 இலட்சம் பேர் - யு.ஏ.ஈ. ல் மட்டுமே வேலை இழப்பார்கள்.

சவூதியில் பணியாற்றும் 15,40,000 பேரில் வேலை இழப்பவர்கள் கிட்டத்தட்ட 5,00,000 பேர்.

இவ்வாறு குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைனில் வேலை இழக்க உள்ளார்கள்.

எனது கணவர் அல்லது மகன்,  ஐரோப்பா அல்லது அமெரிக்காவில், ஐடி வேலையில்  இருக்கிறார்கள் பிரச்சினை எதுவும் இல்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். முதலில் வேலை இழக்கப் போவதும் அல்லது அதிரடியாக சம்பளக் குறைப்புக்கு ஆளாகப் போவதும் இவர்கள்தான். அதிக பாவம் இவர்கள்தான்.

அதனால் மேற்கண்ட இவர்கள் இந்த இன்னலை சந்திக்க தயாராக வேண்டும்.

வேலை இழந்து வருபவர்களில் தமிழகத்தை சார்ந்தவர்கள் மட்டும் குறைந்த பட்சம் கிட்டத்தட்ட 3,00,000 பேர் வருவார்கள். இது 5,00,000 பேர் வரை ஆவதற்கும் வாயய்ப்புகள் உள்ளது.

சரி, இவர்கள் இனி என்ன செய்யலாம்?
கஷ்டம்தான்!!! முதலில் பின்பற்ற வேண்டியது சிக்கனம்தான்.

1. வருடத்திற்கு லட்சங்கள் பீஸ் வாங்கும் பள்ளிகளை தவிர்த்து விட்டு நார்மலான பள்ளிகளில் அல்லது அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கலாம். காரணம் பெரும்பாலான பசங்கள் தந்தையரின் நேரடி கண்கானிப்பு இல்லாத நிலையில் தாய்மார்களிடம் தங்கள் விரும்பியதை வாங்கிக் கேட்டு, படிப்பில் கவனம் இல்லாமல் பல லட்சங்கள் செலவழித்து கடைசியில் B.Com அல்லது BBA மட்டுமே படிக்கிறார்கள். ஒரு சிலர் விருப்பம் இல்லாமல் கடமைக்கு BE படிக்கிறார்கள். ஆக செலவு செய்வது வேஸ்ட். இதே படிப்பை ஒரு பைசா செலவில்லாமலே பல லட்சம் பேர் படிக்கிறார்கள்.

2. அம்மாவுக்கு சுகர், மூட்டுவலிக்கு மருத்துவம் பார்க்க சுற்றுலாவுக்கு போவது போல கார் எடுத்துக் கொண்டு குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து கொண்டு  போய், நம்ம டாக்டர் சொல்லிட்டார் என்று எந்த கேள்வியும் கேட்காமல் பணத்தை அள்ளி வீசி தேவை இல்லாத டெஸ்டுகள் எல்லாம் எடுத்து, பை நிறைய மருந்துகளும், பைல் நிறைய டெஸ்ட் ரிப்போர்டுகளும் எடுத்துக் கொண்டு, ஜவுளிக்கடைக்குள் புகுந்து, தேவையோ இல்லையோ ஒரு புது டிசைன் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

3. பேக்கரிக்குள் புகுந்து கண்டதையும் வாங்குவதையும், சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து கண்டதை எல்லாம் வாரி கூடையில் போடுவதை நிறுத்த வேண்டும்.

4. நாள் வாடகைக்கு கார் எடுப்பதை நிறுத்த வேண்டும்.

5. கார் வைத்திருப்பவர்கள் டிரைவரை வேலைக்கு அமர்த்தி சும்மா உட்கார வைத்து சம்பளம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்

6. எக்காரணம் கொண்டும் பழைய நகையை கொடுத்து புது நகை வாங்குகிறேன் பேர்வழி என்று கிளம்பக் கூடாது. இது ஆக முட்டாள்தனமான முடிவு. காரணம் பத்து பவுன் நகையை மாற்றினால் அது, இது என்று பிடித்து கையில் ஏழரை பவுன்தான் கொடுப்பார்கள். கடைக்காரன்  பணக்காரனாகவும் நீங்கள் நஷ்டவாளிகளாக வும் ஆகிவிடுவீர்கள்.

7. பசங்க பைக் கேட்கிறார்கள் என்று எந்தக் காரணம் கொண்டும் வாங்கிக் கொடுக்காதீர்கள். அதற்கு மாத தவணையும், பெட்ரோலும் நீங்கள்தான் போட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்

8. அதிக செலவு பிடிக்கும் விருந்து கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

9. திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால், குதிரை, யானை, பேண்ட் வாத்தியம், வெடி இல்லாமல் சிம்பிளாக நடத்துங்கள்.

10. வரதட்சணை கேட்டால் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வரதட்சணை வாங்காத மாப்பிள்ளை பாருங்கள்.

11. கார் எடுத்துக் கொண்டு சுற்றுலா போகலாம் என்ற நினைப்பே வரக்கூடாது. ஒன்லி பஸ், டிரைன் சுற்றுலாதான்

12. வெளிநாடுகளில் சம்பாதித்து விட்டு வேலை இழந்து ஊர் திரும்பும் சிலரிடம் நல்ல சேமிப்பு இருக்கலாம். அதை அறிந்து சில ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் முள்ளு செடியும், கள்ளி செடியும் வளர்ந்த வனாந்திரத்தை காட்டி இப்போது இதை வாங்கிப் போடுங்கள், இன்னும் இரண்டு வருடத்தில் டபுள் விலைக்கு போகும் என்று ரீல் விடுவார்கள். மாட்டிக் கொள்ளாதீர்கள். ஐந்து வருடம் ஆனாலும் போட்ட காசில் பாதி கூடக் கிடைக்காது

13. உடம்பு சரியில்லாவிட்டால் முதலில் ஒரு ஜெனரல் டாக்டரிடம் காட்டுங்கள். அவரிடம் உங்களுக்கு நோய்களை பற்றி அதிகம் தெரிந்ததாக காட்டிக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் அதிக விபரமாக பேசுபவர்கள்தான் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களிடம் அனுப்பப்பட்டு அனைத்து டெஸ்டுகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள். அப்புறம் பணம் போய் விட்டதே என்று வருத்தப்படுவீர்கள்

14. மச்சான் ஒரு நல்ல பிஸினஸ் இருக்கிறது போடுங்க காசை அள்ளலாம் என்று சில மச்சினன்மார்கள் சுற்றி வருவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் செல்போன் கடை மீது காதல் இருக்கும். ஆனால் அந்த காதல் இப்போதைய நிலையில் உங்களை பஞ்சர் ஆக்கிவிடும்

15. மச்சான் அஞ்சு ரூபாய் சப்பாத்தி, அதுக்குள்ள பத்து ரூபாய் சிக்கன், அஞ்சு
அஞ்சு ரூபாய் காய்கறியும், ஒரு ரூபாய்க்கு சாஸ் ம் ஊற்றி நூறு ரூபாய் க்கு விற்கலாம், ஒரு ஷாவர்மா விற்றால் 80 ரூபாய் லாபம், ஒரு நாளைக்கு 100 விற்கலாம், ஒரு பர்கர் விற்றால் 50 ரூபாய் லாபம். தினமும் நூறு பர்கர் விற்கலாம் என்று சிலர் தூண்டுவார்கள். அவர்களின் தொடர்பை துண்டித்துக் கொள்வது உங்களுக்கு லாபம். இல்லாவிட்டால் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத உங்கள் ஊரின் ஒதுக்குப் புறத்தில் கடை போட்டு பத்து நாள் பந்தாவாக பிஸினஸ் செய்து விட்டு, பிறகு வியாபாரம் டல்லடித்ததும் புரோட்டாக் கடை, பிரியாணி கடை என்று அவதாரம் எடுப்பதும் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும் இனி வரும் ஐந்தாண்டுகள் பணப்புழக்கம் குறைவதால் ஆடம்பர ஹோட்டலுக்கு வருவது நின்று அத்தியாவசியமான, விலை குறைவான  உணவுகளையே மக்கள் வாங்குவார்கள்.

16. பிக்ஸட் டெபாசிட்டுகளை ஒரே பேங்கில் வைக்காமல் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்

17. அவசியம் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவம் செய்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள். குறைந்தது 25 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை  குடும்பத்தினர் பொருளாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்ற கவலை நீங்கி விடும்.

18. பிள்ளைகளை Neet, Jee போன்ற பரீட்சைகள் எழுதவும் Professional கோர்ஸ் படிக்கவும் தயார் படுத்துங்கள்

19. அரசாங்கத்தின் கடைசி நிலையில் இருக்கும் ஊழியருக்கு இருக்கும் பணி பாதுகாப்பு, பணிக்கொடை போன்ற எதுவுமே உங்களுக்கு இல்லை அதனால் பிள்ளைகளை போட்டித் தேர்வுகளுக்கு பழக்கி அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரமாக்க முயற்சி செய்யுங்கள்.

20. அவசரம் வேண்டாம் மூன்று மாதம் சுற்றிலும் உள்ளதை கவனித்து பாருங்கள். எதில் நல்ல வாய்ப்புகளும் எதிர்காலமும் உள்ளது என்று புரியும். அதன்படி செயலாற்றுங்கள்.

21. இனி அதிக நாட்கள் நீங்கள் ஊரிலேயே இருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் பல இயக்கத்தவர்களும் உங்களை இழுப்பார்கள். நாங்கள்தான் சக்தி வாய்ந்தவர்கள் எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று கதை அளப்பார்கள். பிடி கொடுக்காதீர்கள். முடிந்தவரை பெரிய அளவுக்கு அவர்களுக்கு பணம் அன்பளிப்பு செய்யாதீர்கள். நூறு இரு நூறுகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

22. எந்தக் காரணம் கொண்டும் பிற சமுதாயத்தினரோடு சச்சரவுகள் செய்வதோ, விவாதங்கள் செய்வதோ கண்டிப்பாக கூடாது. அனைவருடனும் நல்ல இணக்கத்தோடு வாழுங்கள்

பெண்களே இனி ஒரு குடும்பம் உருப்படுவதும், வீணாகப் போவதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. பண வரவு இல்லாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். கணவரை குத்திக் காட்டுவீர்கள். கணவர் பிரிந்திருந்த நேரங்களில் நீங்களாகவே எல்லா முடிவும் எடுத்திருப்பீர்கள். இனி அது முடியாது அதனால் ஒரு இயலாமை ஏற்படும்.
இதெல்லாம் உங்களுக்கு மன அழுத்தம் தரும். ஆனால் வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக் கொண்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்த அழுத்தமும் வராது.

கவலைப்படாதீர்கள்.
இதுவும் கடந்து போகும்


Best regards,

Saturday, 16 May 2020

நீண்ட பதிவுதான். எனினும் மிக அருமையான கருத்துக்கள்!

நீண்ட பதிவுதான். எனினும்
மிக அருமையான கருத்துக்கள்!👍 தற்போதைய சூழ்நிலையில் நாம் அனைவரும் கைக்கொள்ள வேண்டியது அவசியம்!!
நல்ல நம்பிக்கையை விதையுங்கள்!
கரு. ஞானசம்பந்தன்.

'Hundredth Monkey effect '

'நூறாவது குரங்கு விளைவு' ...

உயிரியல் அறிஞர் டாக்டர். லையால் வாட்சன்   தனது ஆராய்ச்சிக்காக ஜப்பான் கோஷிமா (Kōjima) என்ற தீகளில்  வாழும் குரங்குகளை வைத்து ஆய்வுசெய்யத் தொடங்கினர்.

அத்தீவில் குரங்குகள் சாப்பிடுவதற்கு, சக்கர வள்ளிக் கிழங்குகளைத் தூக்கிப் போட்டார்.

மண்ணில் விழுந்த அந்தக் கிழங்குகளில் ஒன்றை எடுத்த, குட்டிக்குரங்கு ஒன்று, மண்ணைத் தட்டிவிட்டுச் சாப்பிடாமல், அருகிலிருந்த கடல் தண்ணீரில் கழுவி சாப்பிட்டது.

அதைப் பார்த்த மற்ற குரங்குகளும், கீழே விழுந்த கிழங்குகளை எடுத்து, கடல் தண்ணீரில் கழுவி சாப்பிட்டன

இது ஒன்றும் அதிசயம் இல்லை தான் ..

இது நடந்து சில ஆண்டுகள் சென்று, அந்த தீவில் குரங்குகளுக்குச் சக்கரவள்ளிக் கிழங்குகளைத் தூக்கிப் போட்டாலே, அவை, அவற்றை கழுவித்தான் சாப்பிட்டன.

அந்த தீவில் சரியாக நூறாவது குரங்கு சாப்பிட்டவுடன் ஆய்வாளர்கள் மற்றொரு அதிசயத்தையும் பார்த்தனர்

இந்த பழக்கத்தைக் கற்றுக் கொண்ட பின் இந்த செய்தி உடனடியாக மற்ற தீவுகளில் உள்ள குரங்குகளுக்கும் எப்படியோ 'டெலிபதிக்' காக எட்டி விடுகிறது...

கோஷிமா தீவுக்குத் தொலைவிலுள்ள மற்ற தீவுகளில் இருந்த குரங்குகளுக்கும், சக்கர வள்ளிக் கிழங்குகளைத் தூக்கிப்போட்டபோது அவையும், அந்த கிழங்குகளை அருகிலிருந்த கடல் தண்ணீரில் கழுவி சாப்பிட ஆரம்பித்தன.

கோஷிமா தீவிலுள்ள குரங்குகள் மட்டும் சாப்பிட்டால் பரவாயில்லை,

ஆனால் கடல் தாண்டியுள்ள மற்ற தீவுகளில் இருந்த குரங்குகளும் ஒரே மாதிரி சாப்பிட்டது, ஆய்வாளர்களுக்கு வியப்பூட்டின.

மிக மிக அதிக தூரத்தில் உள்ள, கடலால் பிரிக்கப்பட்ட தீவுகளில் உள்ள குரங்குகளும் இந்த 'கழுவி சாப்பிடும்' பழக்கத்தை ஆரம்பிக்கின்றன...

அந்த தீவில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை (100 ) அடையப்பட்டதும் இந்த பழக்கம் மற்ற தீவுகளுக்கும் பரவுகிறது..

இது எப்படி சாத்தியம் என்று இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்படவில்லை...

அவர்கள் அது பற்றி ஆய்வை மேற்கொண்ட போது, “நூறாவது குரங்கின் விளைவு (Hundredth monkey effect)” என்ற ஒரு முடிவுக்கு வந்தனர்.

இது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த லையாலும் பத்து  ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தி விட்டார்

டெலிபதிக்கு ஒரு முக்கிய உதாரணமாக விளங்கும் இந்த நிகழ்ச்சி உலகத்தில்
நாகரீகங்கள் இந்த முறையில் பரவி இருக்கலாமோ, என்று நினைப்பதற்கும் வழிவகுக்கிறது

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்,
அதை கீழே இங்கிலீசுல படிச்சுக்கங்க;

"Hundredth Monkey Phenomenon means that when only a limited number of people know of a new way, it may remain the conscious property of these people.

But there is a point at which if only one more person tunes-in to a new awareness, a field is strengthened so that this awareness is picked up by almost everyone!"

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில், சில நபர்கள், சில பண்புகளை உறுதியுடன் வெளிப்படுத்தும் போது, அது ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டிய வுடன், ஒரு மனதிற்கும், அடுத்த மனதிற்கும் இடையே தொடர்பு ஏற்பட ஆரம்பிக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

அதாவது அவர்களின் பண்புகள், உடன் இருப்பவர்களில் உள்ளார்ந்த தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன.

அவர்களின் பண்புகள் மற்றவர்களின், ஆழ்நிலை யில் நல்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை, ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இதைத்தான், மொத்தமாக, குழுவாகத் நல்தாக்கத்தை உருவாக்குதல் (Mass Consciousness, group Consciouness) என்று சொல்கின்றனர்.

நூறாவது குரங்கின் விளைவையும், தற்போது உலகில் கொரோனா தொற்றுக்கிருமி பரவல் உருவாக்கியுள்ள ஒருவித பய உணர்வையும் தொடர்புபடுத்தி, உளவியல் மருத்துவர் ஜே.விக்னேஷ் ஷங்கர் அவர்கள், சில அறிவுரை களை யூடியூப் வழியாக எடுத்துரைத்துள்ளார்.

ஜப்பானில் 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியில், புக்குஷிமா (Fukushima Dai-ichi) அணுமின் நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அங்கிருந்த நான்கு அணு உலைகளும், ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன.

அவற்றிலிருந்து பயங்கரமான கதிர்வீச்சுகள் வெளிவந்தன.

இன்று வரை, அவற்றில் இருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகின்றது.

 அந்த சுனாமி நிகழ்வு குறித்து ஜப்பான் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருந்தனர்.

ஆனால் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஊடகங்கள் இதை மிகைப்படுத்தி செய்திகளை வெளியிட்டன.

இந்தச் செய்தியை அந்த மக்கள் ஆழமாக உள்வாங்கியதால், அவர்கள் பயம் சார்ந்த உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்தினர்.

இதன் விளைவாக, நிறைய நோய்களால் அமெரிக்கர்கள் தாக்கப்பட்டனர்.

எனவே, ஆய்வாளர்கள் ஜப்பானில் நடந்த அணுக் கதிர்வீச்சுக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டினர் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு, மிக விரிவாகவே ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஜப்பான் நிகழ்வை அமெரிக்க தொலைக்காட்சி களும் மற்ற ஊடகங்களும் மிக அதிகமாகவே வெளியிட்டதால், பயம் சார்ந்த உணர்வுகள் அதிகமாக உருவாகியுள்ளன.

 அதனால் அவர்களுக்கு உடல் சார்ந்த பிரச்சனை களும் அதிகமாக வந்துள்ளன என்று, ஆய்வாளர் கள் கண்டுபிடித்தனர்.

இவ்வாறு விளக்கும், உளவியல் மருத்துவர் ஜே.விக்னேஷ் ஷங்கர் , பயம் சார்ந்த உணர்வுகளை நாம் அதிகமாக வெளிப்படுத்தும் போது, ஆயிரத்துக்கும் அதிகமான எதிர்மறை யான வேதிப்பொருள்கள் நம் உடலில் சுரக்க ஆரம்பிக்கின்றன.

அவை நம் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்

இந்த கொரோனா தொற்றுக்கிருமி பரவல் காலத்தில், பெரும்பாலான நாளிதழ்கள், சமுதாய ஊடகங்கள், தொலைக் காட்சிகள், உடன் இருப்பவர்களின் பகிர்வுகள் போன்ற அனைத்துமே, பெரும்பாலும் பயம் சார்ந்த உணர்வுகளையே வெளிப்படுத்து கின்றன.

இந்த உணர்வை நாம் எல்லாருமே வெளிப் படுத்தத் தொடங்கினால், அது ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதனால், இப்போதுள்ள சூழலில், நூறாவது குரங்கின் விளைவு என்ற கொள்கையை, நாம் பின்பற்றினால், நாம் விரும்பும் மாற்றத்தை கொணரலாம்.

விழிப்புணர்வுடன் இருந்து, பயம் சார்ந்த உணர்வு களை அதிகமாக வெளிப்படுத்தாமல் இருந்தாலே, இந்நோயிலிருந்து தப்பிக்கலாம்.

அதேநேரம் ஊடகங்களில் வரும் எல்லா செய்திகளையும் நாம் நிராகரிக்க வேண்டும் என்பதும் கிடையாது என்று, விக்னேஷ் அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

இந்த அசாதாரண சூழலிலும், பலர் அச்சத்தை அகற்றி நற்பணிகளை ஆற்றி வருகின்றனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் புரூக்ளின் நகரிலு ள்ள மாரியோ சலேர்னோ என்ற செல்வந்தர்,  தனக்குச் சொந்தமான 200 வீடுகளில் குடியிருப் பவர்கள் எல்லாரும், இந்த ஏப்ரல் மாத வாடகைப் பணத்தை செலுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அவர்களில் பெரும்பாலானோர், வேலைகளை இழந்த இளைஞர்கள்.

 இந்த நற்செயலுக்கு அவரிடம் காரணம் கேட்ட போது, அவர்கள் எல்லாரும் மன அமைதியோடு வாழ வேண்டுமென்று விரும்புகிறேன்,

அவர்களுக்கு உணவு கிடைக்க வேண்டும்,

எனக்குப் பணத்தைப் பற்றிக் கவலை இல்லை. அதைப் பற்றி நினைப்பதற்கு இதுவல்ல நேரம்.

மனித வாழ்வின் மதிப்பிற்குமுன் இது ஒன்றுமே இல்லை. மனித வாழ்வை மதிக்கிறேன் என்று, அவர் கூறியுள்ளார்.

இப்போது உலகெங்கும் நிலவும் இந்த அசாதாரண சூழலை மாற்றியமைக்கக்கூடிய தன்மை நம் எல்லாருக்குள்ளும் இருக்கின்றது.

நம் மனத்தளவில் எந்தவொரு சூழலை எதிர்த்தாலும், அது விடாப்பிடியாக நம்மில் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும் என்று உளவியல் மருத்துவர்கள் சொல்கின்றனர்.

எனவே, இந்த தொற்றுக்கிருமி சூழலை முதலில் நாம் மனத்தளவில் ஏற்போம்.



பரந்த இந்தப் பூமியில், நம் நாட்டில், நம் சமுதாயத்தில், நம் குடும்பங்களில் எல்லாரும், உடல்நலத்தோடும் மன அமைதியோடும் உள்ளனர் என்ற நேர்மறை உணர்வலைகளை அனுப்புவோம்.

அப்போது நேர்மறை அதிர்வலைகளை அவை வெளிப்படுத்தும்.

நம்மை இந்நிலையில் வைத்திருக்கும் கடவுளிடமும் நன்றியுணர்வோடு இருப்போம்.

நல்லதையே நினைத்து, நல்லதையே செய்வோம். நல்லதையே பேசுவோம். அப்போது இறந்தாலும் நாம் வாழலாம்.

இந்த தத்துவத்தை "நூறாவதுகுரங்கின் விளைவு" (Hundredth Monkey Effect) என்ற புத்தகத்தை கென் கேயஸ் (Ken Keyes) என்பவர் எழுதி பிரபலமாக்கி னார்.

இதே கருத்தை வாழ்க்கை அலை (Lifetide)என்ற புத்தகத்தில் லயால் வாட்சன் (LyallWatson) உதாரணங்களுடன் கூறுகிறார்


Best regards,

Thursday, 14 May 2020

ஆபாவாணனை மறந்த தமிழ்த்திரையுலகம்!

ஆபாவாணனை மறந்த தமிழ்த்திரையுலகம்!




"சொஸைட்டியில நல்ல பேரு உள்ளவங்களுக்கு மட்டும்தான் ரோல்ஸ் ராய் கார்கள் விற்கப்படும்" என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நானும் உண்மை என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.
அந்தளவுக்கு நான் அப்பாவியாக இருந்ததையும் இதை என்னிடம் சொன்னவர்கள் பொய் உரைக்காத உத்தமர்கள் போல வலம் வந்ததையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்!

இப்படித் தான்,
உலகில் பலவிதமான அபத்தங்கள் உண்மையின் அச்சு அசல் போலவே சமூக இடைவெளியின்றி பரவிக் கொண்டிருக்கின்றன....

அந்த வகையில்,
நான் சந்தித்த அபத்த களஞ்சியங்களில் முக்கியமானதிலும் மோசமானது,
எது தெரியுமா?

மணிரத்னத்திற்கு முன்பு வரை இளையராஜா பாடல்களை யாருமே அவ்வளவு சிறப்பாகப் படமாக்கவில்லை என்பதுதான்!...

அது மட்டுமா?
தமிழ் சினிமாவிற்கு பிரமாண்டம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியதே ஷங்கர்தான் என்று
ஏதோ....  சந்திரபாபு நாயுடு திருப்பதியில் லட்டுக்குப் பதில் ஜிலேபி போட்ட கதையாக அளந்து விடுகிற கொடுமை இன்று வரை தொடர்வதை எங்கே போய் முட்டிக் கொள்வது?.

நமது ஜெமினி வாசன் அவர்கள் தயாரித்த 'சந்திரலேகா' படம் பற்றி தெரியுமா இவர்களுக்கு?
இப்படி... "காலம் காலமாக சினிமாவில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்ட உடான்ஸ்களை அடித்துத் துவைத்து தொங்க விட்டால் என்ன?"

என்று இந்த "லாக் டவுனில்" குப்புறப்படுத்து யோசித்துக் கொண்டிருந்த போது குபீரென்று ஒரு ஐடியா உதித்தது!

முதலில் பிரமாண்டத்திற்கு வருவோம். பழங்கதைகள் தற்போது நமக்கு வேண்டாம்.

இப்போது நாம் வாழும் காலத்துக்கே வருவோம்
தமிழ்த் திரை ரசிகர்களுக்கு திரைப்படக் கல்லூரி என்று ஒன்று சென்னையில் இருப்பதை பேரெழுச்சியோடு  அறிமுகப்படுத்தியதே 'ஊமை விழிகள்' என்ற பிரமாண்டப் படம்தான். 

விஜயகாந்த் அவர்கள் அதுவரையில் பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும்,
தமிழ்ச்சினிமாவில் தனக்கான இடம் எது?
ஒரு நிலையான ஹீரோ பாணி
எதுவென்றே தெரியாமல் இருந்த நம் விஜயகாந்த் அவர்களுக்கு.....
மிக தெளிவாக.... அவருக்கான ராஜபாட்டையை அமைத்துக் கொடுத்தது இந்த ஊமை விழிகள் படம்தான்.

இதில்....
விஜயகாந்த், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கார்த்திக், சந்திரசேகர், சரிதா,
அருண் பாண்டியன் என ஊமைவிழிகள் படம் நெடுகிலும் நட்சத்திரப் பட்டாளங்கள்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி, இணை இசையமைத்து படத்தை தயாரித்தது, திரைப்படக் கல்லூரி மாணவர் ஆபாவாணன்.
இவரைத் தவிர்த்து தமிழ் சினிமா வரலாற்றை எழுதினால் அதைவிட அயோக்கியத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஊமை விழிகளுக்குப் பின்புதான்,
சினிமாஸ் கோப் என்ற தொழில் நுட்பத்தை தமிழ் சினிமா மிகச்சரியாகப் பயன்படுத்தத் தொடங்கியது என்றால் அது மிகையல்ல!

இளையராஜா கொடி கட்டிப் பறந்த நேரத்தில்......
அவர் இசையமைத்தால்
ஒரு படத்தின் பாடல்கள் மாபெரும் வெற்றி என்றால் அது இந்த படம் தான்!

ஆம்....
ஊமை விழிகளில்  அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட். "தோல்வி நிலையென நினைத்தால்...."
எனும் பாடல் ஈழத் தமிழர்களின் தேசிய கீதமானது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், இயக்கத்தினர் உற்சாகமாக இருக்க வேண்டும் என எண்ணும் பொழுதெல்லாம் இந்த பாடலை கேட்க சொல்வாராம்!

ஆபாவணனுக்கு முன்பு,
 "அவள் அப்படித்தான்"
திரைப்படத்தின்  இயக்குநர் திரு:"ருத்ரய்யா" போன்ற ஒருசிலரே திரைப்படக் கல்லூரியில் இருந்து வந்து கவனிக்கப்பட்டவர்கள்.

ஆபாவாணன் அமைத்துக் கொடுத்த அந்த ராஜபாட்டையில் எந்த சிரமமும் இன்றி
ஆர்.அரவிந்தராஜ்,
ஆர்.கே செல்வமணி, ஆர்.வி. உதயகுமார்
என பல படைப்பாளிகள் தொடர்ந்து  இன்றுவரை முத்திரை பதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆபாவாணனின் 'செந்தூரப் பூவே' படம் தமிழ் சினிமாவின் மைல்கல். இந்தப்படத்தின் 'ஸ்பெஷல் எஃபேக்ட்ஸ்'க்காக சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் பல மணி நேரங்கள் செலவிட்டு ரயில் வரும் சத்தத்தைப் பதிவு செய்து படத்தில் பயன்படுத்தியிருப்பார்கள்.

ஆபாவாணனுக்குப் பின்புதான் தமிழ் சினிமாவில் 'ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்'க்கு ஸ்பெஷல் இடம் கிடைத்தது. 'சத்தமே' இல்லாமல் இருந்த சவுண்ட் இன்ஜினியர்களின் பணி,  வெளியுலகத்துக்குத் தெரியத் தொடங்கியது, ஆபாவாணனின் வருகைக்குப் பின்புதான்.

ஆஸ்கர் வென்ற "ரசூல் பூக்குட்டி" போன்றோர் ஆபாவாணனுக்கு  பெரும் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள்.

'செந்தூரப் பூவே' படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர்களை வைத்து ஆபாவாணன்  தயாரித்த 'இணைந்த கைகள்' பிரமாண்டத்தின் உச்சம்.
படத்தின் இடைவேளைக்காக எடுக்கப்பட்ட ஷாட்கள் தமிழ் சினிமாவின் வரலாற்றில்  மறக்க முடியாத முத்திரை.

'இணைந்த கைகள்' வெளியான மும்பை "ட்ரைவ் இன்" தியேட்டரில் கட்டுக் கடங்காத ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவால், தியேட்டரையே மூடும் நிலை வந்தது.

கோவை சாந்தி தியேட்டரில் இந்தத் திரைப்படம் வெளியான போது ஏற்பட்ட நெரிசலில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவத்தை என் அண்ணன்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.
இன்று ஓவர்சீஸ் உரிமம் பற்றி பல மேதாவிகள் வாய் கிழியப் பேசுகிறார்கள். 'இணைந்த கைகள்' தமிழ்நாட்டில் வெளியான அதே நாளில் வெளிநாடுகளிலும் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஊமை விழிகளுக்குப் பின் ஆபாவாணன் தொடர்ந்து பிரமாண்டமான கதைகளை கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் 'உழவன் மகன்' முக்கியமான படம். அவர் எழுதி தயாரித்த 'கருப்பு ரோஜா'தான், பிளாக் மேஜிக்கை மையமாக வந்து வெளியான முதல் தமிழ்ப்படம். 

இந்தியாவில் டிடிஎஸ் (DTS) ஒலி தொழில் நுட்பத்தில் வெளியான முதல் படமும் 'கருப்பு ரோஜா'தான்.
அச்சமையத்தில்..... ரசிகர்களால் மறந்தே போயிருந்த பலம்பெறும் பாடகர்களான பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் டிஎம் சௌந்தரராஜன் போன்றோரையும் தம் படங்களில் பாட வைத்தார்.

"தோல்வி நிலையென நினைத்தால்....."
பாடலை எழுதியது இவர்தான்.
இந்தப் பாடல் தமிழ்த் திரையுலகம் இருக்கும் காலம் வரை ரசிகர்களால் ரசிக்கப்படும்.
கொண்டாடப்படும்!

அத்துடன்.....
இப்பொழுதும் கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வசீகரப்படுத்தும் பாடல் ஒன்றாகவும்,  இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் பாடலாகவும் இருக்கின்ற "வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே......." எனும் பாடலும் இவர் எழுதியதுதான்.
அந்தப் பாடலை பாடியவரும் இவரே தான்!

தமிழ்ச் சினிமாவுக்கு இவர் அளவுக்கு புதுமைகளை அறிமுகப்படுத்தியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

சில பல தோல்விகளுக்குப் பின்,
ஆபாவாணன் சின்னத் திரைப் பக்கம் சென்றார்.

இவர் தயாரித்த 'கங்கா யமுனா சரஸ்வதி' நெடுந்தொடர் அந்த காலகட்டத்தில் பெரும் வெற்றி பெற்றது.
ராஜ் டிவியில் வெளியாகி......
 நெடுந்தொடர்களுக்கு பெயர் போன
சன் டிவிக்கு  "டஃப் ஃபைட்" கொடுத்த தொடர் இது.

ஆபாவாணன் பிசியாக வலம் வந்து கொண்டிருந்த போது தன் புகைப்படம் ஒன்று கூட  பத்திரிகைகளில் வராமல் பார்த்துக் கொண்டார்.

ரசிகர்கள் அவர் முகம்
அறியாமலேயே அவரை கொண்டாடித் தீர்த்தார்கள். 'இணைந்த கைகள்' படத்தில் திரையில் ஆபாவாணன் பெயர் வரும் போது பூக்களையும் சில்லரை காசுகளையும் ரசிகர்கள் வீசியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் இந்தளவுக்கு வரவேற்பைப் பெற்ற ஒரே படைப்பாளி ஆபாவாணன் மட்டுமாகத்தான் இருக்க முடியும்.

காலம் கொரனாவைவிட கொடூரமானது. வெற்றிகளின் உச்சாணிக் கொம்பில் வைத்துக் கொண்டாடப்பட்ட ஆபாவாணன்  இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
எந்த நிலையில் இருக்கிறார்? என்பதைப் பற்றி கவலையே இல்லாமல் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.

சினிமாவை நெஞ்சில் நிறுத்திப் பயணிக்கும் ஒவ்வொருவரும் ஆபாவாணன் பெயரை மனதில் நிறுத்துவோம்



(நன்றி:-வெற்றி
15/05/20.)Best regards,

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது.○

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது.○



1) பெண் சாபம்,
2) பிரேத சாபம்,
3) பிரம்ம சாபம்,
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம்,
6) கோ சாபம்,
7) பூமி சாபம்,
8) கங்கா சாபம்,
9) விருட்ச சாபம்,
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்,
13) குலதெய்வ சாபம்

அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்...

1) பெண் சாபம் :*

இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

2) பிரேத சாபம் :*

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3) பிரம்ம சாபம்:

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

4) சர்ப்ப சாபம்:

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத்தடை ஏற்படும்.

5) பித்ரு சாபம்:

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

6) கோ சாபம்:

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக்கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது, போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ, வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7) பூமி சாபம்:

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

8) கங்கா சாபம்:

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9) விருட்ச சாபம்:

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10) தேவ சாபம்:

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11) ரிஷி சாபம்:

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12) முனி சாபம்:

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது, முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13) குலதெய்வ சாபம் :*

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும். சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.



🙏 ஓம் நமசிவாய 🙏


Best regards,

Wednesday, 13 May 2020

பல வகை துறைகளின் அறிவியல் பெயர்கள்:

பல வகை துறைகளின்  அறிவியல் பெயர்கள்:

1. அகச்சுரப்பியியல் – Endocrinology
2. அடிசிலியல் – Aristology
3. அடையாளவியல் – Symbology
4. அண்டவியல் – Universology
5. அண்டவியல் – Cosmology
6. அணலியல் – Pogonology
7. அருங்காட்சியியல் – Museology
8. அருளரியல் – Hagiology
9. அளவீட்டியல் – Metrology
10. அற்புதவியல் – Aretalogy
11. ஆடவர் நோயியல் – Andrology
12. ஆய்வு வினையியல் – Sakanology
13. ஆவணவியல் – Anagraphy
14. ஆவியியல் – Spectrology
15. ஆறுகளியல் – Potamology
16. இசையியல் – Musicology
17. இந்தியவியல் – Indology
18. இயற்பியல் – Physics
19. இரைப்பையியல் – Gastrology
20. இலக்கிலி இயல் – Dysteleology
21. இறை எதிர் இயல் – Atheology
22. இறைமையியல் – Pistology
23. இறைமையியல் – Theology
24. இன உறுப்பியல் – Aedoeology
25. இன்ப துன்பவியல் – Algedonics
26. இனப் பண்பாட்டியல் – Ethnology
27. இனவியல் – Raciology
28. ஈரிடவாழ்வி இயல் – Herpetology
29. உடலியல் – Physiology
30. உடற் பண்டுவஇயல் – Phytogeography
31. உடற்பண்பியல் – Somatology
32. உடுவியக்கவியல் – Asteroseismology
33. உணர்வகற்றியல் – Anesthesiology
34. உயிர் மின்னியல் – electro biology
35. உயிர்ப்படிமவியல் – Paleontology
36. உயிர்ப்பொருளியல் – Physiology
37. உயிர்மியியல் – Cytology
38. உயிரித் தொகை மரபியல் – Population Genetics
39. உயிரித்தொகை இயக்க இயல் –
...................... .......................... Population Dynamics
40. உயிரிய இயற்பியல் – Biophysics

41. உயிரிய மின்னணுவியல் – Bioelectronics
42. உயிரிய வேதியியல் – Biochemistry
43. உயிரிய வேதிவகைப்பாட்டியல் – ..........................................Biochemical taxonomy
44. உயிரியத்தொழில் நுட்ப இயல் – Biotechnology
45. உயிரியப் பொறியியல் – Bioengineering
46. உயிரியல் – Biology
47. உயிரினக் காலவியல் – Bioclimatology
48. உயிரினச் சூழ்வியல் – Bioecology
49. உருவகவியல் – Tropology
50. உருள்புழுவியல் – Nematology
51. உரைவிளக்கியல் – Dittology
52. உளவியல் – Psychology
53. ஊட்டவியல் – Trophology
54. எகிப்தியல் – Egyptology
55. எண்கணியியல் – Numerology
56. எரிமலையியல் – Volconology
57. எலும்பியல் – Osteology
58. எலும்பு நோய் இயல் – Osteo pathology
59. எறும்பியல் – Myrmecology
60. ஒட்பவியல் – Pantology
61. ஒப்பனையியல் – Cosmetology
62. ஒலியியல் – Phonology
63. ஒவ்வாமை இயல் – Allergology
64. ஒழுக்கவியல் – Ethics
65. ஒளி அளவை இயல் – Photometry
66. ஒளி இயல் – Photology
67. ஒளி உயிரியல் – Photobiology
68. ஒளி விளைவியல் – Actinology
69. ஒளி வேதியியல் – Photo Chemistry
70. ஒளித்துத்த வரைவியல் – Photozincography
71. ஓசையியல் – Acoustics
72. கசிவியல் – Eccrinology
73. கட்டடச்சூழலியல் – Arcology
74. கடப்பாட்டியல் – Deontology
75. கடல் உயிரியல் – Marine biology
76. கடற் பாசியியல் – Algology
77. கண்ணியல் – Opthalmology
78. கணிப்பியல் – Astrology
79. கதிர் மண்டிலவியல் – Astrogeology
80. கதிர் விளைவியல் – Actinobiology

81. கரிசியல் – Hamartiology
82. கரிம வேதியியல் – Organic Chemistry
83. கருத்தியல் – Ideology
84. கருதுகை விலங்கியல் – Cryptozoology
85. கருவியல் – Embryology
86. கருவியல் – Embryology
87. கல்வி உளவியல் – Educational Psychology
88. கலைச்சொல்லியல் – Terminology
89. கழிவியல் – Garbology
90. கனி வளர்ப்பியல் – Pomology
91. கனிம வேதியியல் – inorganic chemistry
92. கனியியல் – Carpology
93. கனியியல் – Pomology
94. காளானியல் – Mycology
95. காற்றழுத்தவியல் – Aerostatics
96. காற்றியக்கவியல் – Aerodynamics
97. காற்றியல் – Anemology
98. கிறித்துவியல் – Christology
99. குடல் புழுவியல் – Helminthology
100. குருட்டியல் -Typhology
101. குருதி இயல் – Haematology / Hematology
102. குளுமையியல் – Cryology
103. குற்றவியல் – Criminology
104. குறிசொல்லியல் – Parapsychology
105. குறிப்பியல் – Cryptology
106. குறியீட்டியல் – Iconology
107. கெல்டிக் சடங்கியல் – Druidology
108. கேட்பியல் – Audiology
109. கைம்முத்திரையியல்(செய்கையியல் /
 .................... சைகையியல்) -Pasimology
110. கையெழுத்தியல் – Graphology
111. கொள்ளை நோயியல்- Epidomology
112. கோட்பாட்டியல் – Archology
113. கோளியல் – Uranology
114. சங்குஇயல் – Conchology
115. சமயவிழாவியல் – Heortology
116. சரி தவறு ஆய்வியல் – Alethiology
117. சாணவியல் – Scatology
118. சிலந்தி இயல் – Araneology
119. சிலந்தியியல் – Arachnology
120. சிறப்புச் சொல் தோற்றவியல் – Onomatology

121. சீனவியல் – Sinology
122. சுரப்பியியல் – Adenology
123. சூழ் வளர் பூவியல் – Anthoecology
124. சூழ்நிலையியல் – Ecology
125. செதுக்கியல் – Anaglyptics
126. செய்கை இயல் – Dactylology
127. செல்வ வியல் – Aphnology
128. செல்வவியல் – Plutology
129. செவ்வாயியல் – Areology
130. செவியியல் – Otology
131. சொல்லியல் – Lexicology
132. சொல்லியல் – Accidence
133. சொற்பொருளியல் – Semasiology
134. தசையியல் – Myology
135. தண்டனையியல் – Penology
136. தமிழியல் – Tamilology
137. தன்மையியல் – Axiology
138. தன்னியல் – Autology
139. தாவர உள்ளியல் – Phytotomy
140. தாவர நோய் இயல் – Phytopathology
141. தாவர வரைவியல் – Phytography
142. தாவரஊட்டவியல் – Agrobiology
143. தாவரவியல் – Botany
144. திணைத் தாவர இயல் – Floristics
145. திணையியல் – Geomorphology
146. திமிங்கில இயல் – Cetology
147. திருமறைக் குறியீட்டியல் – Typology
148. திருமனையியல் – Naology
149. திரைப்படவியல் – Cinimatography
150. தீவினையியல் -Ponerology
151. துகள் இயற்பியல் – Particle physics
152. துகளியல் – Koniology
153. துதிப்பாவியல் – Hymnology
154. துயிலியல் – Hypnology
155. தூய இலக்கியல் – Heirology
156. தூள்மாழை இயல் – Powder Metallurgy
157. தேர்தலியல் -Psephology
158. தேவதை இயல் – Angelology
159. தேவாலயவியல் – Ecclesiology
160. தேனீ இயல் – Apiology

161. தொடர்பிலியியல் – Phenomenology
162. தொண்டை இயல் – Pharyngology
163. தொல் அசீரியர் இயல் – Assyriology
164. தொல் உயிரியல் – Palaeontology
165. தொல் சூழ்நிலையியல் – Paleo ecology
166. தொல் பயிரியல் – Paleobotany
167. தொல் மாந்தவியல் – Paleoethnology
168. தொல் மீனியல் – Paleoichthylogy
169. தொல் விலங்கியல் – Palaeozoology
170. தொல்தோற்ற இனவியல் (மாந்த –
மாந்தக்குரங்கினவியல்) – Anthropobiology
171. தொல்லிசையியல் – Ethnomusicology
172. தொல்லியல் – Archaeology
173. தொல்லினவியல் – Paleethnology
174. தொல்லெச்சவியல் – Archaeozoology
175. தொழில் நுட்பச் சொல்லியல் – Orismology
176. தொழில் நுட்பவியல் – Technlogy
177. தொழிற்சாலை வேதியியல் – industrial chemistry
178. தொழு நோயியல் – Leprology
179. தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் – Pestology
180. தொன்மவியல் – Mythology
181. தோட்டுயிரியியல் – Astacology
182. தோல்நோயியல் – Dermatology
183. நச்சியியல் – Virology
184. நடத்தையியல் – Praxeology
185. நரம்பியல் – Neurology
186. நல்லுயிரியல் – Pneumatology
187. நலிவியல் – Astheniology
188. நன்னியல் – Agathology
189. நாடி இயல் – Arteriology
190. நாணயவியல் – Numismatology
191. நாளவியல் – Angiology
192. நிகழ்வியல்- Chronology
193. நிலத்தடி நீரியல் – Hydrogeology
194. நிலநடுக்கவியல் – Seismology
195. நிலாவியல் – Selenology
196. நிலை நீரியல் – Hydrostatics
197. நீத்தாரியல் – Martyrology
198. நீர் வளர்ப்பியல் – Hydroponics
199. நீர்நிலைகளியல் – Limnology
200. நீராடல் இயல் – Balneology

201. நுண் உயிரியல் – Microbiology
202. நுண் வேதியியல் – Microchemistry
203. நுண்பொருளியல் – Micrology
204. நுண்மி இயல் – Bacteriology
205. நுண்மின் அணுவியல் – Micro-electronics
206. நூல் வகை இயல் – Bibliology
207. நெஞ்சக வியல் – Cardiology
208. நெடுங்கணக்கியல் – Alphabetology
209. நெறிமுறையியல் – Aretaics
210. நொதி இயல் – Enzymology
211. நொதித் தொழில் நுட்பவியல் – Enzyme tecnology
212. நோய் இயல் – Pathology
213. நோய்க்காரணவியல் – Aetiology
214. நோய்க்குறியியல் – Symptomatology
215. நோய்த்தடுப்பியல் – Immunology
216. நோய்த்தீர்வியல் – acology
217. நோய்நீக்கியல் – Aceology
218. நோய்வகையியல் – Nosology
219. நோயாய்வியல் – Etiology
220. நோயியல் – Pathology
221. படஎழுத்தியல் – Hieroglyphology
222. படிகவியல் – crystallography
223. பணிச்சூழ் இயல் – Ergonomics
224. பத்தியவியல் – Sitology
225. பயிர் மண்ணியல் – Agrology
226. பயிரியல்-Phytology
227. பரியியல் – Hippology
228. பருப் பொருள் இயக்கவியல் – kinematics
229. பருவ இயல் – Phenology
230. பருவப் பெயர்வியல் – Phenology
231. பல்லியல் – Odontology
232. பழங்குடி வழக்கியல் – Agriology
233. பழம்பொருளியல் – Paleology
234. பற் கட்டுப்பாட்டியல் – Contrology
235. பறவை நோக்கியல் – Ornithoscopy
236. பறவையியல் – Paleornithology
237. பனிப்பாளவியல் – Glaciology
238. பாசி இயல் – Phycology
239. பாப்பிரசு சுவடியியல் – Panyrology
240. பாம்பியல் – Ophiology

241. பார்ப்பியல் Neossology
242. பாலூட்டியல் – Mammalogy
243. பாறைக் காந்தவியல் – Palaeo Magnetism
244. பாறையியல் – Lithology
245. பாறை அமைவியல் – Petrology
246. பிசாசியல் – Diabology
247. பிளவையியல் – Oncology
248. புத்த இயல் – Buddhology
249. புத்தியற்பியல் – New physics
250. புதிரியல் – Enigmatology
251. புதைபடிவ இயல் – Ichnology
252. புல உளவியல் – Faculty Psychology
253. புல்லியல் – Agrostology
254. புவி இயற்பியல் – Geo physics
255. புவி உயிர்ப் பரவியல் – Biogeography
256. புவி வடிவ இயல் – Geodesy
257. புவி வளர் இயல் – Geology
258. புவி வேதியியல்- Geo-chemistry
259. புவியியல் – Geography
260. புவிவெளியியல் – Meteorology
261. புள்ளியல் – Ornithology
262. புறமண்டிலவியல் – Exobiology
263. புற்று நோய் இயல் – Cancerology
264. பூச்சி பொட்டு இயல் – Acarology
265. பூச்சியியல் – Entomology
266. பூச்சியியல் – Entomology
267. பூச்சியியல் – Insectology
268. பெயர்வன இயல் – Acridology
269. பெரு வாழ்வியல் – macrobiotics
270. பேயியல் – Demonology
271. பொதுஅறிவு இயல் – Epistemology
272. பொருள்சார் வேதியியல் – Physical Chemistry
273. போட்டியியல் – Agonistics
274. போதனையியல் – Patrology
275. மகளிர் நோய் இயல் – Gynaecology/ Gynecology
276. மண்டையோட்டியல் – Craniology
277. மண்ணியல் – Pedology
278. மண்புழையியல் – Aerology
279. மணி இயல் – Campanology
280. மணிவியல் – Gemolog

281. மதுவியல் – Enology (or Oenology)
282. மர ஒளி வரைவியல் – Photoxylography
283. மரபு இயைபியல் – Genecology
284. மரபு வழியியல் – Geneology
285. மரவரியியல் – Dendrochronology
286. மரவியல் – Dendrology
287. மருத்துவ அளவீட்டியல் – Posology
288. மருத்துவ நோயியல் – Clinical pathology
289. மருத்துவ மரபணுவியல் – Clinical genetics
290. மருந்தாளுமியல் – Pharmacy
291. மருந்தியல் – Pharmacology
292. மருந்து வேதியியல் – Medicinal chemistry
293. மலையியல் – Orology
294. மழையியல் – Ombrology
295. மனக்காட்சியியல் – Noology
296. மனநடையியல் – Nomology
297. மன்பதை உளவியல் – Social Psychology
298. மன்பதையியல் – Sociology
299. மனைவளர்உயிரியல் – Thremmatology
300. மாந்த இனவியல் – Ethnology
301. மாவியல் – Morphology
302. மானிடவியல் – Anthropology
303. மின் ஒலியியல் – Electro-acoustics
304. மின்வேதியியல் – Electrochemistry
305. மின்னணுவியல் – Electronics
306. மீனியல் – Ichthyology.
307. முகிலியல் – Nephology
308. முட்டையியல் – Oology
309. முடியியல் – Trichology
310. முதற்கோட்பாட்டியல் – Archelogy / Archology
311. முதியோர் கல்வியியல் – Andragogy
312. முதுமையியல் – Gerontology
313. முரண் உயிரியல் – Teratology
314. முரணியல் – Heresiology
315. முறையியல் – Systomatology
316. முனைப்படு வரைவியல் – Polarography
317. மூக்கியல் – Rhinology
318. மூதுரையியல் – Gnomology
319. மூப்பியல் – Gerontology
320. மூலக் கூறு உயிரியல் – Molecular biology

321. மெய் அறிவியல் – Philosophy
322. மெய்ம்மி நோயியல் – Histopathology
323. மெய்ம்மியியல் – Histology
324. மேகநோயியல் – Syphilology
325. மொழியியல் – Philology
326. மோப்பவியல் – Olfactology
327. ரூனிக்கியல் – Runology
328. வகையியல் – Taxology
329. வண்ணவியல் – Chromatology
330. வழக்குப் பேச்சியல் – Dialectology
331. வழிபாட்டியல் – Liturgiology
332. வளி நுண்மியல்- Aerobiology
333. வளிநுகரியியல் – Aerobiology
334. வாந்தியியல் – Emetology
335. வாய்நோயியல் – Stomatology
336. வாலில்லாக் குரங்கியல் – Pithecology
337. வான இயற்பியல் – Astrophysics
338. வானஞ்சலியல்
...............(வானஞ்சல்தலையியல்) –Aerophilately
339. வானியல் – Astronomy
340. வானிலை இயல் – Neteorology/Astrometeorology
341. வானோடவியல் – Aerodonetics
342. விசை இயக்க இயல் – Kinetics
343. விண்கற்களியல் – Aerolithology
344. விண்ணுயிரியியல் – Astrobiology
345. விண்பொருளியல் – Astrogeology
346. விந்தையியல் – Thaumatology
347. விலங்கியல் – Zoology
348. விளைச்சலியல்
........................(வேளாண் பொருளியல்) –Agronomics
349. வெளிற்றியல் – Agnoiology
350. வேதியியல் – Chemistry
351. வேதிவகைப்பாட்டியல் – Chemotaxonomy
352. வேர்ச்சொல்லியல் – EtymologyBest regards,